Showing posts with label நிகர சொத்து மதிப்பு. Show all posts
Showing posts with label நிகர சொத்து மதிப்பு. Show all posts

Wednesday, May 2, 2007

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு - 3

முதலில் எந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யலாம்?
இப்போதைய நிலையில், நான் முதலீடு செய்ய போறேன்னா கீழே உள்ள ஏதாவது ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்வேன்...

1. DSP ML Technology.com - Dividend (43.87%)
2. SBI Magnum Sector Funds Umbrella-IT - Growth (34.66%)
3. ICICI Prudential Technology Fund - Dividend (34.18%)
4. Birla Sun Life - New Millenium Fund - Dividend (32.95%)
5. UTI Growth Sector Fund - Software - Growth %29.42%)
6. Reliance Media & Entertainment Fund Growth Plan - Growth (28.29%)
7. ICICI Prudential Services Industries Fund - Dividend (24.96%)
8. Sundaram BNP Paribas Floating Rate Fund - Long Term - Institutional Plan - Growth (24.92%)
9. Franklin Infotech Fund - Growth (23.61%)
10.Reliance Diversified Power Sector Fund - Growth (23.55%)

'எத்தனை மியூச்சுவல் ஃபண்ட் இருக்கு. இத தேர்வு செய்ய ஏதும் காரணம் உண்டா?-னு கேட்டா .....

நமக்கு 'உலகம் சுற்றும் வாலிபனும்' பிடிக்கும். 'பாவ மன்னிப்பு'ம் பிடிக்கும். தலைவரு படத்துக்கு போனோமா..... ஜாலியா பார்த்தோமோ-னு வந்துருறனும். ஒரு வாரத்துக்கு அப்புறம் அந்த படத்தை பத்தி கேட்டா, ஏதும் நினைவுக்கு வருமாகிறது சந்தேகம்தான். ஆனா, 'பாவ மன்னிப்பு' படத்தைப் பார்த்தாட்டு இன்னும் சில காட்சிகள், பாடல்கள் நினைவுல இருக்கு (குறிப்பா முதன் முறையா சிவாஜி-தேவிகா சந்திக்கிற காட்சி ;) ]. அது மாதிரிதான் ஒவ்வொருவரின் தேவைக்கு/ரசனைக்கு(!) ஏற்ப மியூச்சுவல் ஃபண்ட் தேர்வு செய்றோம்.

பொழுது போக்கு சாதனங்களேயே எப்படி மசாலா, காமெடி.... பிரிவுகள் இருக்குதோ அதே மாதிரி மியூச்சுவல் ஃபண்ட்-லேயும் உண்டு. அதைப்பத்தி கண்டிப்பா நாம தெரிஞ்சிக்கணும். அப்பத்தான் அதற்கு ஏற்றார்போல் முதலீடு செய்ய முடியும். சில ஏமாற்றங்களையும் தவிர்க்கலாம். அது என்னனு அப்புறம் பார்ப்போம்...

சில மியூச்சுவல் ஃபண்ட்கள் 6-12 மாதங்களில் இலாபம் கிடைக்கும். சில மியூச்சுவல் ஃபண்ட்களில் நீண்ட நாள் முதலிடு செய்வது நல்லது. சில மியூச்சுவல் ஃபண்ட்களில முதலீடு செய்தால் வருமான வரி விலக்கு உண்டு. அதனால நம் தேவைக்கேற்ப மியூச்சுவல் ஃபண்ட் களை தேர்வு செய்தல் நல்லது.

[மற்ற வலை தளங்களிலும், இந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை நன்றாக ஆராய்ந்து நம்ம தேர்வு செய்யலாம்.]

சரி... இப்ப அதற்குரிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, செக் (Cheque) அல்லது DD ஆகவோ ஏஜென்ட்-ம் கொடுங்கள். ஒரிரு தினங்களில் அக்னாலெட்ஜ்மென்ட் ஸ்லிப்பைக் (Acknowledge Slip) கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள். ஒரிரு வாரங்களில் AMC -யில் இருந்து உங்கள் கணக்கு எண், எத்தனை யூனிட், அதன் விலை போன்ற தகவல்கள் அடங்கிய கடிதம் நமக்கு வரும்.





Monday, April 30, 2007

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு - 2

மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யவதற்கு முன் ....
மியூச்சுவல் ஃபண்ட் சம்பந்தமான சில முக்கியமான வார்த்தைகளை தெரிந்து கொள்ளலாம்.....

1. அசெட் மேனேஜ்மென்ட் கம்பெனி ~ Asset Management Companies (AMC) - மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை வெளியிடும் கம்பெனிகள். உதாரணத்துக்கு ரிலையன்ஸ் (Reliance), SBI, HSBC, ஃப்ராங்க்ளின் டெம்பிள்டன் ...... மியூச்சுவல் ஃபண்ட் நிர்வகிப்பர்கள். இந்த ஏ.எம்.சி\யின் நிகர சொத்து மதிப்பு 10 கோடி ரூபாய்க்குமேல்(!) இருக்கவேண்டும் என்று செபி வலியுறுத்தியுள்ளது.

2. நிகர சொத்து மதிப்பு ~ Net Asset Value (NAV) : ஒவ்வொரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களின் அன்றாட நிகர சொத்து மதிப்பு(என்.ஏ.வி). அத்திட்டத்தின் கீழ் உள்ள மொத்த யூனிட்களால் வகுத்தால், அதுதான் ஒரு யூனிட்டின் நிகர சொத்து மதிப்பு. [இந்த NAV மதிப்பை, அதே நாள் இரவு எட்டு மணிக்குள் இந்தியாவில் உள்ள அனைத்து மியூச்சுவல் ஃபண்ட்களின் கூட்டமைப்பான ‘ஆம்ஃபி'யின் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று செபி வலியுறுத்தியுள்ளது. The Hindu Business Line, Economic Times போன்ற தினசரிகளில் ஒவ்வொரு மியூச்சுவல் ஃபண்ட் NAV (ஒரு யுனீட்டின் விலை)யும் தினமும் வெளியாகும். ]

3. 'நியூ ஃபண்ட் ஆஃபர்' (New Fund Offer/N.F.O.) : மியூச்சுவல் ஃபண்ட் திட்ட யூனிட் வெளியீட்டை முதன் முதலில் பொதுமக்களுக்கு விற்க வரும்போது குறிப்பிடுவது.

4. என்ட்ரி லோட் (Entry Load): ஆரம்ப கட்டத்தில் மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தினுள் நுழைவதற்கான முதலீட்டுக் கட்டணம். 'நியூ ஃபண்ட் ஆஃபர்' (New Fund Offer/N.F.O.) ன் பொழுது இந்தக் கட்டணம் இருக்காது.

5. எக்ஸிட் லோட் (Exit Load): ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்திலிருந்து வெளியேற நினைக்கும்போது, அதற்குச் செலுத்த வேண்டியிருக்கும் கட்டணம்.

சரி... இப்ப விசயத்துக்கு வருவோம் ....
மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய ....

1. பான் கார்டு (PAN CARD) **

2. தெரிந்த மியூச்சுவல் ஃபண்ட் ஏஜென்ட் (Agent) உதாரணத்துக்கு.... கார்வி (Karvy), UTI

3. துவக்கத்தில் குறைந்தபட்ச முதலீடு 5,000 ரூபாய். பின்னர் மாதாமாதமோ அவ்வப்போதோ 1,000 ரூபாய் அல்லது அதன் மடங்குகளில் முதலீடு செய்யலாம்.

அவ்வளவுதான்! Done. Best Of Luck !!

தருமி அவர்கள் சொன்னது போல, "இதான் எனக்குத் தெரியுமே"! அப்படிகிறீங்களா..?

சரி....எந்த மியூச்சுவல் ஃபண்ட்-ல முதலீடு செய்றது, ஏஜென்ட் -கிட்டபோய் என்ன கேட்கிறது?, மியூச்சுவல் ஃபண்டில் மாதாந்திர வருமானத் திட்டம் (MIP) எதுவும் இருக்கா? குறுகியகால முதலிடுகள் (Fixed Matured Plan), Systametic Investment Plan ............. இப்படி எனக்கு தெரிந்ததை அடுத்த பதிவில்....

** மியூச்சுவல் ஃபண்டில் ஒவ்வொரு விண்ணப்பத்திற்கும் 50 ஆயிரத்துக்கும் மேல் முதலீடு செய்தால் மட்டுமே பான் கார்ட் எண் தேவை. வேற வேற நாள்-ல வெவ்வேறு விண்ணப்பங்கள் மூலம் குறைந்த தொகையை முதலீடு செய்தால் பான்கார்ட் அவசியம் இருக்காது. ஏன் இந்த 50 ஆயிரம் ரூபாய்க்கு மேலனா பான் கார்ட் தேவை? ஏன்னா.....வருமான வரி கட்டணும்னா பான் கார்ட் தேவை... நம்ம 50 ஆயிரம் ரூபாய் "முதலீடு" செய்றோம்னா நம்ம வருமான வரி கட்டக்கூடிய ஆளாத்தான இருப்போம்...அதனாலதான் பான் கார்டு அவசியம்.

** ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தால், விண்ணப்பத்தோடு நம் அடையாள அட்டை மற்றும் விலாசத்துக்கான சான்றின் நகல் (Address Proof) ஒன்றை இணைக்க வேண்டும். எப்பொழுதும் பணத்தை ஏஜென்ட் (Agent) ரொக்கமாகச் (Cash) கொடுக்க கூடாது. எப்பொழுதும் கிராஸ் செய்யப்பட்ட காசோலை (Cheque) அல்லது டி.டி (DD) மூலமாகத்தான் பணத்தைச் செலுத்தவேண்டும். [நமக்கும் ஒரு record இருக்கும் இல்லையா!] விண்ணப்ப படிவத்தில் வங்கியின் எம்.ஐ.சி.ஆர் (M.I.C.R) கோட் எண் ணைக் குறிப்பிட வேண்டும்.
[எம்.ஐ.சி.ஆர் (M.I.C.R) கோட் எண்ணா செக்கின் (Cheque) கீழே, செக் நம்பருக்குப் பக்கத்தில் இருக்கும் ஒன்பது இலக்க எண்].

எதுக்கு இந்த எம்.ஐ.சி.ஆர் (M.I.C.R) கோட் எண்?

நாம் முதலீடு செய்யும் மியூச்சுவல் ஃபண்டில் டிவிடெண்ட் கொடுக்கும்பட்சத்தில் அந்த தொகையை நேரடியாக நம் வங்கிக் கணக்கில் transfer செய்து விடுவார்கள். வங்கிக்கு போற வேலை மிச்சம்.