Showing posts with label RD Calculator. Show all posts
Showing posts with label RD Calculator. Show all posts

Thursday, June 14, 2007

24. ஆசியாவிலேயே முதல் மிகப் பெரிய, அதி நவீன மருத்துவமனை


  • தபால் துறையின் 'Speed Post' கட்டணத்தை 40 % குறைத்துள்ளது. இதனால் தபால்துறைக்கு 1400 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும். போன வருடம்தான், கொரியர் நிறுவனங்களின் போட்டியை சமாளிக்க 50% குறைக்கப்பட்டது. [வரும் வாடிக்கையாளர்களை கொஞ்சம் சிரித்த முகத்துடன் சேவை செய்ய ஆரம்பித்தாலே, இலாபத்திற்கான முதல் முயற்சியாக இருக்கும்.]

  • ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை GDP [Gross Domestic Product] மூலமாக கணக்கிடுவார்கள். வரும் நாட்களில், நம் நாட்டின் பொருளாதாரம் 10 சத வீத வளர்ச்சி அடைய வாய்ப்பு உள்ளதாக சொல்கிறார்கள். [மகிழ்ச்சியான செய்திதான்! ஆனா, இப்பொழுது இருக்கிற அரசியல் சூழ்நிலையில உண்மையிலேயே இது சாத்தியமானு தெரியலை. டாக்டர். மன்மோகன் சிங், ப.சி மாதிரி மக்கள் ரொம்பவே எதிர்பார்க்கிற team இருந்தும், ஒண்ணும் பெரிசா பண்ண மாட்டேங்கிறாங்க! விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் அவலம் நம் நாட்டில் மட்டுமே நடக்கும்!]

  • உலகம் முழுவதும் விவசாயத் துறையில் 13 கோடிக்கும் அதிகளவில் குழந்தைத் தொழிலாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். ஐந்து வயதில் இருந்தே, குழந்தைகள் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். வரும் 2016ம் ஆண்டுக்குள், உலகம் முழுவதும் குழந்தைத் தொழிலாளர்களே இல்லாத நிலையை ஏற்படுத்த சர்வதேச அமைப்புகள் திட்டமிட்டுள்ளன. [தீப்பெட்டி, பட்டாசு தொழில்சாலைகளில் வேலை செய்யும், எங்க ஊரு குழந்தை தொழிலாளர்களையும் சேர்த்தா.....?].

  • தைவானில் உள்ள தாய்பேவில், "கம்ப்யூடெக்' என்ற நிறுவனம், ஒன்பதாயிரம் ரூபாய்க்கு (~ $200) மடி கணினி (Laptop Computer) யை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. [ஒன்னு வாங்கினா, ஒன்னு இலவசம்னு கொஞ்சம் நாள்ல சொன்னலானும் சொல்லுவாங்க!]

  • 300 படுக்கை வசதியுள்ள மிகப் பெரிய, அதி நவீன மருத்துவமனையை அப்போலோ மருத்துவமனை ஹைதராபாத்தில் கட்ட திட்டமிட்டுள்ளது. அதற்கு 'Apollo Health City' என்ற பெயரிட்டு உள்ளார்கள். 33 ஏக்கர் நிலம் - 11 மாடி கட்டிடம் - 100 கோடி ரூபாய் முதலீடு போன்ற மெகா திட்டம் உள்ளதாம்.
  • DLF IPO வந்த இரண்டே நாட்களில் சிறு முதலீட்டாளர்கள் 'எதிர்பார்த்ததை விட' அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர்.

*************

"மனிதர்கள் காலில் போட்டுக்கொள்ளும் செருப்புகளும் பூட்ஸ்களும் ஏர்-கண்டிஷன் செய்யப்பட்ட கடைகளில் விற்கப்படுகின்றன; வேளாண்துறையில் விளையும் தானியங்கள், பருப்பு வகைகள், பழங்கள், காய்கறிகள் போன்றவை மண்டிகளிலும், வெயிலும் தூசும் நிரம்பிய சந்தைகளிலும், வீதிகளிலும் கோணியைப் பரப்பி விற்கப்படுகின்றன"

-- ரயில்வே துறை அமைச்சர் லாலு பிரசாத் யாதவ்

**************

RDல் முதலீடு செய்திருந்தால்..... எத்தனை மாதங்கள், எவ்வளவு வட்டி ஆகியவற்றைப் பொறுத்து கணக்கிட்டு கொடுக்கும் ஒரு எளிதான கருவி ( tool) :

RD Calculator

நம் அனைவருக்கும் பயன்படும் எனற நம்பிக்கையில்...

@