Wednesday, July 9, 2008

இந்தியாவின் பொருளாதாரம்: சில நம்பிக்கைகள்....

  • பங்குச்சந்தையில் அந்நிய முதலீட்டாளர்களின் முதலீடு குறைவு
  • அமெரிக்காவின் சப்-ப்ரைம் விவகாரம்
  • கச்சா எண்ணெய் விலை உயர்வு
  • நமது நாட்டில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு
  • விளைப்பொருட்களின் உற்பத்தியை  குறைவு
  • ஒரு பக்கம் தங்கம் விலை போல பணவீக்கமும் ஏறி கொண்டிருக்கிறது.

என ஒரு பெரிய பட்டியலே போடலாம்.

அமெரிக்காவை போன்று தினமும் பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தில் மாற்றம் இருந்ததைப்போல நமது நாட்டிலும் இருந்திருந்தால் நமது அரசாங்கத்திற்கும் பெரும் சுமையாக வந்து நம்மைப்போன்ற சாமானியர்களின் வாழ்க்கையில் பணவீக்கம் என்ற ரூபத்தில் வந்து ஆட்டம் போடுவதை ஓரளவதாவது தடுத்திருக்க முடியும்.

இதலாம் ஒருபுறம் இருக்க,  ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் தலைவர் கே.வி.காமத் '''இந்தியாவின் வளர்ச்சியை யாரும் தடுத்து நிறுத்த முடியாது. பெரிய அளவில் பொருளாதாரத் தவறுகள் ஏதும் செய்யாவிட்டால் வளர்ச்சி என்பது அடுத்த 20 ஆண்டுகளுக்குத் தொடர்வது நிச்சயம்."  நியூயார்க்கில் கூறிய அவருடைய கருத்து...

நமது நிதி அமைச்சர், "2007-08 ஆண்டுக்கான நமது வளர்ச்சி விகிதம் 9% ஆக இருக்கிறது." என்ற நம்பிக்கையான பேச்சு ...

இந்தியாவில் வளர்ந்து வரும் திட்டங்கள் ..

என இந்தியாவின் பொருளாதாரம் வலுவாக இருப்பதாகவே நம்புவோம். 

ஆனால் என்ன பிரச்சனை என்றால், நமது அரசின் பொருளாதாரக் கொள்கைகளில் அரசியலைக்  கொண்டு வந்து,  மத்தியில் இரு பொருளாதார நிபுணர்கள் பதவியில் இருந்தும் நம்மைப்போலவே அவர்களும் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறார்கள் என்பதுதான்....!!.

2 comments:

said...

என இந்தியாவின் பொருளாதாரம் வலுவாக இருப்பதாகவே நம்புவோம்.


ரொம்ப நாள் லாங் லீவ் அடிச்சிட்டீங்க போல !?

said...

/ரொம்ப நாள் லாங் லீவ் அடிச்சிட்டீங்க போல !?/

அலைச்சல் வேற.. அதான்!!