Wednesday, January 30, 2008

டாடாவின் அடுத்த முயற்சி

டாடாவின் குட்டி மகிழுந்து(!) Nano க்கு அடுத்து மற்றுமொரு வெற்றியாக ஃபோர்ட் (Ford) மோட்டரிடமிருந்து Jaguar மற்றும் Land Rover வாங்க போகிறது. தோராயமான விலை 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இதற்கு மகேந்திரா & மகேந்திரா மற்றும் அமெரிக்காவின் தனியார் நிறுவனமான One Equity Partners LLC. வின் முயற்சி செய்தன.

1989ல் ஃபோர்ட்(Ford) நிறுவனம் Jaguar யை 2.5 பில்லியன் அமெரிக்க டாலருக்கும், 2000ல் Land Rover யூனிட்டை 2.7 பில்லியன் அமெரிக்க டாலர் கொடுத்தும் வாங்கியது. ஆனால் இந்த இரண்டு யூனிட்லும் பெரிய இலாபம் ஏதும் கிடைக்கவில்லை...

போன வருடம் 2.7 பில்லியனும், 2006ல் 12.6 பில்லியன் அமெரிக்க டாலர்களும் ஃபோர்ட் நிறுவனத்துக்கு இழப்பு. இப்பொழுது அதைதான் டாடா வாங்க முடிவு செய்துள்ளது.

ஃபோர்ட்(Ford) நிறுவனம் சாதிக்க முடியாததை டாடா சாதிக்குமா?

பி.கு: காருக்கு சரியான தமிழ் சொற்பிரயோகம்: "மகிழுந்து" .
சமீபத்தில் படித்தது !! ;)

Tuesday, January 22, 2008

கறுப்பு திங்கள்/செவ்வாய் மற்றும் சில நம்பிக்கைகள்

என்னத்தை சொல்ல......

கொஞ்சம் கொஞ்சமா ... 20 நாள்கள், 30 நாள்கள்னு மேல வந்து புதிய சிகரத்தை தொட்ட நம் பங்குச்சந்தை ஒரே நாளில்... இல்ல.. இல்ல சில மணி நேரங்களில் அதல பாதளத்தில் இருக்கிறது (இதை எழுதும் பொழுது....). 2000 புள்ளிகள் வரை சரிந்திருக்கிறது....[~ 15888]. கஷ்டப்பட்டு சிறிது சிறிதாக சேர்ந்து வந்த லாபங்கள் அனைத்தும் ஒரே நாளில் காணாமல் போய்விட்டன...Ground Zero!!

இதற்கு முன்னர் 2006-ம் ஆண்டு மே 18-ம் தேதி ஒரே நாளில் 826 புள்ளிகள் சரிந்ததுதான் மிகப் பெரிய சரிவாகும். அதையும் மிஞ்சி விட்டோம்.

அதேபோன்று முதலீட்டாளர்களுக்கு இன்று ஒரே நாள் வர்த்தகத்தில் ஏற்பட்ட இழப்பு மட்டும் 6,63,975 கோடி ரூபாயாகும். அதேபோன்று கடந்த வாரத்தில் ஐந்து வர்த்தக தினங்களில் முதலீட்டாளர்களுக்கு ஏற்பட்ட இழப்பு 5,21,310 கோடி ரூபாய்!! இதுதான் மரண அடிகிறதோ..?

நேற்று (சனவரி 21) மும்பை பங்குச் சந்தை (Dalal St) மட்டுமில்லாமல், எல்லா பங்கு சந்தையும் பெரும் வீழ்ச்சியை சந்தித்தது. ஜப்பான் 4.4%, ஹாங்காங் 5.5%, பிரிட்டன் 5.5%, பிரான்ஸ் 6.8%,, ஜெர்மனி 7.2%, அமெரிக்கா 3.6%, கனடா, ஆஸ்திரேலியா என நமக்கு தெரிந்த எல்லா பங்கு சந்தைக்கும் பெரிய அடிதான். ஆனால் நமக்குதான் 7 சதவீதம் அளவு விழுந்து ஒரு பெரிய அடியைத் தந்தது. (அதுக்கூட பரவாயில்லை என்று சொல்லக்கூடிய அளவு இன்று, [செவ்வாய்] 15% வரை கீழே போனது)

அமெரிக்க பங்குச்சந்தை சரிவுக்காவது ஏதோ 'நம்பக்கூடிய' நமக்கு புரியக்கூடிய காரணங்களான - ஃபெடரல் வங்கி, டெபாசிட்டுக்கான வட்டி விகிதத்தை மேலும் குறைக்க முடிவு, recession பயம், sub-prime பிரச்சனை... இதையும் தாண்டி "பெரிதான வரவேற்பு பெறாத" புஷ் அறிவித்த 145 பில்லியன் டாலர் வரி விலக்கு திட்டம்னு ஒரு பட்டியல் போடுறாங்க...

ஆனல் நம் பங்குச்சந்தையோ ... அடிப்படை நன்றாக இருக்கிறது, GDPயும் நம்பிக்கை தரும்படியாகவே இருக்கிறது. நம் மன்மோகன் சிங்கும், ப.சியும் அதே நம்பிக்கையை வலியுத்துகிறார்கள். அப்புறம் ஏன் இப்படி ஒரு சரிவு?

உலக பங்குச்சந்தையில் ஏற்பட்ட சரிவு அதன் தாக்கம் நம் பங்குச்சந்தையில் எதிரொலிக்கிறதா .. இல்லை .. பயத்தின் காரணமாக சிறு முதலீட்டாளர்கள் தங்களது பங்குகளை மிக அதிக அளவில் விற்றதன் காரணமாக ....... ஒன்றும் புரியவில்லை.

ஆனால் இவ்வளவு சோகத்திற்கும் பின் சில நம்பிக்கைகள் இருக்கதான் செய்கிறது.... சிறு முதலீட்டாளர்கள் பங்கு சந்தையில் நுழைய சரியான தருணம்....என்ன "கொஞ்சம்" பொறுமையும், நிதானமும் தேவை..
  • இன்னும் சில நாட்கள் இது போல இருக்கலாம் என்று சில கணிப்புகள்...
  • பங்குச் சந்தைக்குள் வெளிநாட்டு நிறுவனங்களும், மியூச்சுவல் பண்டுகள், நிதி நிறுவனங்கள் ஆகியவை சந்தைக்கு மறுபடி வர வாய்ப்புகள்.....


இந்த நேரத்தில் நாம் என்ன செய்யலாம்...அல்லது என்ன கற்றுக் கொள்ளலாம்?

  • அமெரிக்கா பங்குச்சந்தையின் வரலாற்றின் படி பார்த்தால், பொதுவாக காளையின் ஓட்டம் 10-12 ஆண்டுகள் இருக்கும் என்றும், அதன்படி பார்த்தால் நம் பங்குச்சந்தைக்கு இன்னும் 'ஒளிமயமான எதிர்காலம்' இருக்கிறது என்றும் ஒரு சாரரின் கருத்து.
  • சிறிய முதலீட்டாளர்கள் முதலீடு முழுவதும் பங்குச் சந்தையில் போடாமல், எவ்வளவு எடுக்க முடியுமோ அவ்வளவு மட்டும் முதலீடு செய்யலாம்.
  • கம்பெனிகளை நன்கு தெரிந்து முதலீடு செய்யலாம்.
  • நல்ல கம்பெனிகள் கீழே சென்றாலும் மேலே வந்துவிடும். அதனால் அந்த மாதிரியான பங்குகளை தேர்வு செய்யலாம்.
  • அதிக லாபம் கண்ட பங்குகளை சிறிது விற்கலாம்.
  • நல்ல பங்குகள் குறைந்த விலைக்கு கிடைத்தால், சிறிது அளவில் வாங்கலாம்.

வாழ்க்கையே நம்பிக்கைலதான இருக்குது ! நம்புவோம்!!

Thursday, January 17, 2008

பொறுமை காக்கும் நேரம்

  • சந்தையில் பொறுமை காக்க வேண்டிய நேரம் இது.
  • பங்குச் சந்தை என்பது முதலீடு செய்யும் இடம்; சூதாட்டம் அல்ல.
  • கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை சிறப்பான முறையில் முதலீடு செய்ய கற்றுக் கொள்ள வேண்டும்;
  • முதலீடு என்பது கலை; அதை நிறையப் படித்து அறிந்து கொள்ள வேண்டும்.

@

  • பியூச்சர் கேபிடல், ரிலையன்ஸ் பவர் அப்ளிகேஷன் போட எல்லா இடங்களிலும் பெரிய வரிசைகளில் மக்கள் நின்று கொண்டிருந்தனர்.
  • 1993ல் மோர்கன் ஸ்டான்லி கம்பெனி மியூச்சுவல் பண்டு துவங்கிய போது அவர்களின் முதல் வெளியீட்டிற்கு மக்கள் இரண்டு கி.மீ., தூர வரிசையில் நின்று அப்ளிகேஷன் போட்டனர். அதன் பிறகு அதுபோல பெரிய ஒரு அலை இப்போது தான் அடிக்கிறது.
  • சென்ற வாரத்தில் மட்டும் 2,00,000க்கும் மேற்பட்ட டிமேட் அக்கவுண்டுகள் ஓபன் செய்யப்பட்டதாக செய்திகள் வருகின்றன. இது பங்குச் சந்தையில் உள்ள ஆர்வத்தை காட்டுகிறதா? அல்லது பங்குச் சந்தையின் மீது மக்களுக்கு திடீரென ஏற்பட்டுள்ள மோகத்தை காட்டுகிறது. ஆசை 60 நாள், மோகம் 30 நாள்.

@

  • எம்மார் எம்.ஜி.எப்., கட்டுமானத் துறை கம்பெனியின் வெளியீடு பிப்ரவரி 4ம் தேதி துவங்கி 7ம் தேதி வரை முடிவடைகிறது. இது உலகத்தின் பெரிய கட்டுமானத் துறை கம்பெனிகளில் ஒன்று. ரூபாய் 725 முதல் ரூ.850 வரை விலை.

@

  • இந்தியாவில் கம்பெனிகள் நன்கு செயல்பட்டாலும் பல நாடுகளின் பங்குச் சந்தைகள் இன்னும் அமெரிக்காவின் போக்கை வைத்து தான் உள்ளன.

  • இதுவரை வந்துள்ள காலாண்டு முடிவுகள் நன்றாகவே உள்ளது. ஆகவே, அடிப்படைகளில் சந்தேகம் இல்லை. சந்தை மறுபடி வீறு கொண்டு எழும்.

[நன்றி:தினமலர் வர்த்தகம்]

Tuesday, January 15, 2008

பரஸ்பர நிதி - புதிய வலைதளம் மற்றும் "மியூச்சுவல் ஃபண்ட்" - புத்தக விமர்சனம்

இரண்டு விசயங்களை பகிர்ந்து கொள்ள விருப்பம்.

முதலில்....

மற்றும் ஓர் அன்பர்...
பரஸ்பரநிதி ஆலோசகர்/விநியோகிப்பாளர். சிங்கப்பூரிலிருந்து...

அவருடைய எண்ணங்கள், அனுபவங்களை பகிர்ந்து கொள்ள புதிய(!) வலைதளம் தொடங்கியுள்ளார். ஆனால் வலையுலகிற்கு புதியவரல்ல. 2004ல் இருந்தே வலையுலகத்தில் இருப்பவர்.

வலைப்பூவின் பெயர்: http://parasparfund.blogspot.com/
இதற்கு சொந்தக்காரர் அன்பு என்ற சேது. அன்புச்செழியன்.

அவருக்கு நமது வாழ்த்துகள்!


எப்படியாவது ஒருவரிடம் இருந்தாவது எனக்கு வரும் ஒரு மின்அஞ்சல்...

வெளிநாடுவாழ் இந்திய (NRI) மற்றும் இந்திய வம்சாவழியினர் (PIO) இந்திய பங்குச்சந்தையில் எவ்வாறு முதலீடு செய்வது?

அதற்கு பதில் அளிக்கும் விதமாக அன்பின் பதிவு இங்கே.

அவருடைய 'மறுபக்கத்திற்கு' இங்கே சுட்டவும்...


@

ஆர். வெங்கடேஷ் எழுதிய "மியூச்சுவல் ஃபண்ட்" என்ற புத்தகத்தை கிழக்கு பதிப்பகம் வெளியுட்டுள்ளது. இந்த புத்தகத்தைப் பற்றி விமர்சனம் ஜயராமன் என்பவர் திண்ணையில் எழுதியுள்ளார். சுட்டி இங்கே!



@@

அமெரிக்கா பங்குச் சந்தை, ரிலையன்ஸ் பவர் IPO மற்றும் சில செய்திகள்

இனிய தமிழர் தின திருநாள் வாழ்த்துகள்……!!

@

Recession பயம் மற்றும் Citigroup Incன் காலாண்டு முடிவு அமெரிக்கா பங்குச் சந்தையில் பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தி இருக்கிறது.

இன்று (சனவரி 15, 2008) முடிந்த பங்குச்சந்தையில் DOW 277 புள்ளிகளும் (2.17 %), NASDAQ 60 புள்ளிகளும் (2.45) இழந்திருக்கிறது.

கடந்த காலாண்டு முடிவில் Citigroup Inc கிட்டதட்ட 10 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்பு என்று கணக்கு காட்டியுள்ளது. அந்த குழுமத்தின் 196 வருட வரலாற்றில் இது ஒரு பெரிய அடி.

இந்த ஆண்டு (2008) பத்து நாட்களில் (trading days), DOW 5.76 சதவீதமும், S&P 500 5.95 சதவீதமும், NASDAQ 8.85 சதவீதமும் இழப்பை சந்தித்து இருக்கிறது.

பங்குவணிகம் அவருடைய பதிவில் குறிப்பிட்டதை மீண்டும் நினைவுபடுத்த விரும்புகிறேன்..

"அமெரிக்க சந்தைகளில் ஏற்பட்டுள்ள பின்னடைவுகள் மேலும் பெரிய அளவில் தொடராமலிருக்க அமெரிக்க பெஃடரல் வங்கி உடனடியாய் நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. மேலும் வட்டி விகிதங்கள் குறைக்கப்படும் பட்சத்தில் பெருமளவு முதலீட்டாளர்கள் சந்தையினை விட்டு வெளியேற வாய்ப்பிருக்கிறது…. அவ்வாறு நிகழும் பட்சத்தில் அவர்களின் அடுத்த இலக்கு ஆசிய சந்தைகளாய்த்தான் இருக்கும்….இதனை எதிர்பார்த்தே அடிப்படை வலுவான பங்குகளை வாங்கிச்சேர்க்க வலியுறுத்துகிறேன்."

@

அனில் அம்பானியின் ரிலையன்ஸ் பவர் நிறுவனம், பொதுப் பங்குகளை வெளியிட உச்ச நீதிமன்றத்தின் அனுமதியுடன் இன்று (சனவரி 15, 2008) வெளியாகியுள்ளது. இந்திய பங்கு வரலாற்றில் மிகப்பெரிய பங்கு (அப்படியா!!) வெளியிடப்பட்ட ஒரு மணி நேரத்திலேயே 6 மடங்கு பங்குகளுக்கு மனு செய்யப்பட்டு விட்டது.

பங்கின் விலை: 405 ரூ - 450 ரூ
ஆரம்ப நாள்: சனவரி 15, 2008
கடைசி நாள்: சனவரி 18, 2008

26 கோடி பங்குகள் வெளியீடு மூலம் ரூ.11 ஆயிரத்து 700 கோடி (2.97 பில்லியன் அமெரிக்க டாலர்) திரட்ட ரிலையன்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ரிலையன்ஸ் பவர் நிறுவனம், நாட்டின் பல மாநிலங்களில் மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்காக இந்த நிதியை திரட்டுகிறது.
அதில் 11 திட்டங்களும் அடங்கும். அவை
  • 7 coal based projects - 14,620 MW
  • 2 gas bsed - 10,280 MW from KG basin
  • 4 Hydroelectric projects – 3300 MW

இதுவரை 10.52 மடங்கு இந்த பங்குக்கு மனு செய்யப்பட்டு விட்டது. இன்னும் மூன்று நாட்கள் இருக்கிறது. புதிய சாதனை தொட்டு விடுமோ?!

@


பணவீக்கம் 3.5 சதவிகிதமாக நீடிப்பு

2007-ல் பணவீக்கம் 5 சதவிகிதமாக இருக்கும் என ரிசர்வ் வங்கி கணித்திருந்தது நமக்கு நினைவிருக்கலாம். ஆனால், ஆண்டில் தொடக்கத்தில் எதிர்பார்த்தது போல் இல்லையென்றாலும், ஆண்டின் இறுதியில் (டிசம்பர் 8, 2007) 3.65 சதவிகிதமாக குறைந்தது.

நாட்டின் பண வீக்கம் டிசம்பர் மாதம் 29-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், எவ்வித மாற்றமும் இன்றி 3.50 சதவீதமாக இருக்கிறது. 2006ம் ஆண்டின் இதே காலக்கட்டத்தில் இருந்ததைவிட (5.89 சதவீதம்) 'திடமாகவே' இருக்கிறது.

ஆனால் வரும் நாட்களில் எண்ணெய்ப் பொருட்களின் விலை மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வினால் இதே நிலைமை நீடிக்குமா என்பது சந்தேகமே!


@

லாபத்தை குவிக்கும் பரஸ்பர நிதி முதலீடு

சென்ற வருடம் பங்குச் சந்தையில் நேரடியாக மூதலீடு செய்ததை விட, பரஸ்பர நிதி நிறுவனங்கள் மூலமாக செய்த மூதலீட்டிற்கு அதிக வருவாய் கிடைத்திருப்பது ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

அதாவது மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 47.1 சதவீதமும், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 54.8 சதவீதமும் அதிகரித்துள்ளது. ஆனால் 152 பரஸ்பர நிதிகளின் வருவாய், பங்குச் சந்தை குறியீட்டு எண்களின் வருவாயை விட அதிகமாக உள்ளது என ' வேல்யூ ரிசர்ச் ' என்ற பங்குச் சந்தை ஆய்வு நிறுவனத்தின் ஆய்வில் இருந்து தெரிய வந்துள்ளது.

2007 ஆம் ஆண்டில் 209 பரஸ்பர நிதிகளில், 13 முதலீடு திட்டங்களில் முதலீடு செய்யும் யூனிட்டுகளை வாங்கியவர்களின் முதலீட்டின் மதிப்பு 90 முதல் 112 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

வரி சேமிப்புடன், பங்குச் சந்தை மற்றும் நிதிச் சந்தையில் முதலீடு செய்யும் 209 பரஸ்பர நிதி திட்டங்களில், 57 திட்டங்கள் மட்டுமே சென்செக்ஸ், நிஃப்டி குறியீடுகளை விட குறைவான வருவாய் கிடைத்துள்ளது.

இந்த ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 209 பரஸ்பர நிதி திட்டங்களில் 139 திட்டங்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமாக வருவாய் கிடைத்துள்ளதும் தெரிய வந்துள்ளது.

[நன்றி: வெப்துனியா]


@@@

Tuesday, January 1, 2008

ஆசிய பங்குச்சந்தைகள்

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....!!

2007ம் ஆண்டு ஆசிய பங்குச் சந்தைகள் பல சாதனைகளோடும் 2008ல் பெரிய எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக சீனா...

வருட இறுதிநாளில் ஜப்பான், நியூசிலாந்து பங்குச்சந்தைய தவிர ஆசியாவில் உள்ள மற்ற பங்குச்சந்தைகள் 'நல்ல நிலை'யிலேயே முடிந்துள்ளது.

கச்சா எண்ணைய் விலை, சீனா மற்றும் சில ஆசிய (இந்தியா) பங்குச் சந்தைகளின் வளர்ச்சி 2008ல் ஒரு கேள்விகுறியா அல்லது ஆச்சரியக்குறியா என்று போக போகத்தான் தெரியும்.

2007ல், சாங்காய் (Shanghai) பங்குச் சந்தை 96.7 சதவீத இலாபத்தை கொடுத்துள்ளது. ஜகார்டா (Jakarta) 52.1 சதவீதமும், மும்பை 47.1 சதவீதமும், ஹாங்காங் (Hong Kong) 39.2 சதவீதமும் இலாபத்தை எட்டியுள்ளது.

[சீனாவுடன் நம்மை "ஒரு பேச்சுக்காக ஒப்பிட்டு" பார்க்கலாம்தவிர... நாம் (அவர்கள்போல்) போகும் தூரம் வெகு அதிகம்! எந்தளவுக்கு சீனாவைப்போல் உலக பொருளாதாரத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பது மில்லியன் 'ஈரோ(!)' கேள்வி!! ]

சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியா பங்குச்சந்தை 16.6%, 11.8% முறையே முன்னேறியுள்ளது.

கராச்சி (Karachi) பங்குச்சந்தை சொல்லவே தேவையில்லை. தற்பொழுதைய அரசியல் சூழ்நிலைகளால் கடந்த திங்களன்று ஒரே நாளில் 694 புள்ளிகள் (4.7 சதவீதம்) இறங்கி பேரிடியை சந்தித்துள்ளது. இருப்பினும் 2006ம் ஆண்டைவிட 2007ம் ஆண்டு நல்ல நிலையில் முடிந்துள்ளது.

அமெரிக்க பொருளாதார வல்லுநர்கள் சீனா, இந்தியா பங்குச்சந்தைகளில் ஆர்வமாக இருந்தாலும் 2007 ஆண்டைப்போல இமாலாய சாதனைகள் புரியுமா? என்ற கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

வழக்கம்போல, காலம்தான் பதில் சொல்லும்!