Thursday, May 24, 2007

இணையத்தில் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களின் தரம் தெரிந்து கொள்ள

ஆரம்பத்தில் ஏஜண்ட்டிடம், 'எந்த திட்டம் சிறந்தது?' னு கேட்கிறதுல எனக்கு ஒரு சலிப்பு இருந்தது மட்டுமில்லை.... ஒவ்வொருவரின் தேவைக்கேற்ப எந்த திட்டத்தில முதலீடு செய்யலாம்கிற அளவுகோலும் மாறும் இல்லையா?

சரி... கண்டிப்பாக இணையதளங்களில் நமக்கு தேவையான தகவல்கள் இருக்கும் நம்பிக்கைல Googleலே வாழ்க்கை ஆவதற்குமுன்னாள் தேடினது......

அப்படி கண்டுபிடித்து..... மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களில் சிலபேர் நண்பர்கள் ஆனதுக்கபுறம் அவர்கள் மூலமும் சில இணையதளங்கள் அறிமுகம் ஆனது.

அதபத்திதான் இங்க...

இந்த மியூச்சுவல் ஃபண்ட்களின் தரத்தை ஆராய்ந்து.... அக்கு வேறா..ஆணி வேறா..... தருவதற்கென்றே சில தர மதிப்பீடு நிறுவனங்கள் இருப்பது தெரிய வந்தது...

அதில் எனக்கு தெரிந்தது...

1. CRISIL (Credit Rating Information Services of India)

2. Value Research Online

க்ரைசில்(CRISIL) நிறுவனம் மியூச்சுவல் ஃபண்ட்களைப் பற்றிய மதிப்பீடு மட்டுமில்லாமல் Credit Rating, Fund Rating , Fund Rankings பல வகையான சேவைகளை தர்றாங்க.

இவர்கள் மியூச்சுவல் ஃபண்ட்களை ஐந்து விதமாக பார்க்கிறாங்க... இதற்கு சி.பி.ஆர் (C.P.R - Composite Performance Ranking ) பெயர்.

CRISIL CPR~1: இதுவரை நல்ல வருமானம் கொடுத்துள்ள நல்ல திட்டம் இந்த வகையைச் சார்ந்தவை. இப்பொழுது நடைமுறையில் உள்ள ஃபண்ட்களில் முதல் பத்து தரமானவைகளை இங்கு பார்க்கலாம்.

CRISIL CPR~2 : இந்த வகையில் வருபவை - நல்ல திட்டங்கள்.... நம்பிப் பணம் போடலாம். ஆனால் நடைமுறையில் உள்ள ஃபண்ட்களில் அடுத்த 20% தரத்தில் உள்ளவை.

CRISIL CPR~3: பரவாயில்லை....... சராசரியான இரகம் என்றால் இந்த மூன்றாவது வகையில் வரும். அடுத்த 40% ஃபண்ட்கள் இந்த மத்திய தரவரிசையில் வரும்.

CRISIL CPR~4: சுமாரான ரகங்கள். இதுல வர ஃபண்ட்களை விட்டு ஒதுங்கியே இருப்பது ரொம்ப நல்லது. சராசரியை விட கீழான 20% ஃபண்ட்கள் இந்த தரவரிசையில் வரும்.

CRISIL CPR~5: படு சுமார்! 'துஷ்டனைக் கண்டா தூற விலகு'கிற வகையை சார்ந்தவை. கடைசி 10% ஃபண்ட்கள் இவை.

'இதுபோல தினமுமா அறிவிக்கிறாங்களா?' இல்லை... காலாண்டுக்கு ஒரு முறை, பங்குகளின் தரத்தைப் பிரித்து இந்த இணையதளத்தில் அறிவிக்கின்றனர்.

இப்ப போய் பாத்திங்கனா, 2007 மார்ச் மாதத்தில் ஆராய்ந்த ஃபண்ட்களின் தர வரிசை விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம். [அந்த இணைய தளத்திற்கு சென்று, இடது பக்கத்தில் உள்ள Fund Rankings - CPR யை கிளிக் செய்யுங்கள்.]

இவர்கள் N.F.O லாம் கணக்குல எடுத்துக்க மாட்டாங்க. குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளாவது நடைமுறையில் உள்ள திட்டமாக இருக்கிறத மட்டும்தான் ஆராய்வாங்க...

ஆராய்ச்சினா? எந்த மாதிரி..?

இப்போதைக்கு இந்த இணைய தளத்தில போய் நீங்க கொஞ்சம் ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருங்க.... இதோ வந்துறேன்....

Wednesday, May 23, 2007

NRI & PIO- ஒரு விளக்கம்

இந்திய குடிமகள்(ன்) [ம்ம்....இந்திய பாஸ்போர்ட் வைத்திருக்கும் நபர்னு சொல்லலாமா..], வேலையின் காரணமாகவோ அல்லது சுற்றுலாவிற்காகவோ ஆறு மாதம் (182 நாட்கள்) காலம் இந்தியாவில் இல்லையென்றால் நீங்கள் NRI [Non-Resident Indian] - வெளிநாட்டில் வாழும் இந்தியர்.

வெளிநாட்டு குடிமகள்(ன்)** [அல்லது வெளிநாடு பாஸ்போர்ட் வைத்திருக்கும் ஒருவர்], இந்திய பாஸ்போர்ட் வைத்திருந்தவர் அல்லது

அவரின் பெற்றோர்கள் (அ) தாத்தா-பாட்டி ஒரு காலத்தில் இந்திய குடிமக்கள் அல்லது

மனைவியோ (அ) கணவனோ இந்திய குடிமகள்(ன்)

--- இதில் ஏதாவது ஒன்று உறுதியாகும் பட்சத்தில் நீங்கள் PIO [Person of Indian Origin].

[** பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, ஆப்கானிஸ்தான், சீனா, இரான், நேபாள், பூட்டான் நாடுகளைத் தவிர்த்து. ]

PIOஆக இருக்கும் பட்சத்தில் விவசாய நிலங்கள், பண்ணை வீடுகள் தவிர்த்து இந்தியாவில் மற்ற நிலங்களை வாங்கலாம், விற்கலாம். ஏற்கனவே விவசாய நிலங்கள், பண்ணை வீடுகள் அவர்கள் பேரில் இருந்தால் இந்திய குடியுரிமையுள்ளவருக்கு விற்கலாம் அல்லது அன்பளிப்பாக கொடுக்கலாம்.

Monday, May 21, 2007

மியூச்சுவல் ஃபண்டில் போட்ட பணத்தைத் எப்படி திரும்பப் பெறுவது ?

சரி... மியூச்சுவல் ஃபண்டில முதலீடு செய்த பணத்தை நமக்கு தேவையான நேரத்தில் பணத்தை எப்படி திரும்பப் பெறுவது ?

இரண்டு வழி இருக்கிறது.

ஆன்லைனில் வாங்கிருந்தா விற்பது எளிது. இ.சி.எஸ் (Electronic Clearing Service) எனப்படும் எலெக்ட்ரானிக் கிளியரிங் முறையில் எந்த கமிஷன் இல்லாமல் பணத்தைத் நம்முடைய வங்கி கணக்கின மூலம் திரும்பப் பெறலாம்.

மற்றொரு வழி.... இப்போலாம் எல்லா நகரங்களில் மியூச்சுவல் ஃபண்ட்களின் கிளை அலுவலகங்கள் வர ஆரம்பித்துள்ளன. அவர்களை அணுகியனால் மூன்று நான்கு நாட்களில் நமக்கு பணம் கிடைக்கும்.

நான் முதன் முதலில் ... மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்த பொழுது செக் கொடுத்து கொஞ்ச நாட்கள் கழித்துதான் அந்த யூனிட்கள் கிடைத்தன.

உதாரணத்துக்கு, ரூ10,000/- செக் கொடுக்கும் போது ஒரு யூனிட்டின் விலை ரூ20/- என்று வைத்துக் கொள்ளுங்கள். கணக்கின்படி 500 யூனிட்கள் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருப்போம். ஆனால், யூனிட்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட பொழுது 500 யூனிட்களைவிட கம்மியாகதான் கிடைத்தது.

குறைவாக கிடைத்துக்கு ஒரு காரணம் Entry Load. மற்றொரு காரணம், கொடுத்த செக்கை அவர்கள் வங்கியில் கொடுத்து , பணம் சம்பந்தப்பட்ட மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் 'கையில்' கிடைத்தால்தான் நமக்கு யூனிட்களை ஒதுக்கீடு செய்வார்கள். இந்த இடைப் பட்ட காலத்தில் நாம் விரும்பிய மியூச்சுவல் ஃபண்ட்களின் நிகர சொத்து மதிப்பு (NAV) குறையலாம் அல்லது கூடலாம்.

அப்ப பணம் செலுத்திய அன்றே நமக்கு யூனிட் கிடைக்கவேணும்-னா, டிமாண்ட் டிராஃப்ட்டாக (DD) கொடுக்கலாம். இல்லையென்றால், ஆன்லைனில் வாங்கலாம்.

இன்னொரு குழப்பமும் எனக்கு இருந்தது... ‘N.F.O. வின் மூலம் வெளியிடும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தை வாங்குவதா இல்லை புழக்கத்தில் உள்ள திட்டத்தில் முதலீடு செய்யலாமா? எதுல நல்ல லாபம் கிடைக்கும்?'

ஏன்னா... புதிய வெளியீடு-னா, 10 ரூபாய் மதிப்புக்கு யூனிட்கள் கிடைக்கும். புழக்கத்தில் உள்ள திட்டத்தின் யூனிட் என்றால், அதன் NAV மதிப்புபை பொருத்து நமக்கு யூனிட்கள் கிடைக்கும்.

என்னுடைய அனுபத்தின்படி, ரொம்ப பெரிய வித்தியாசம்லாம் இல்லை. ஏன்?

இரண்டிலுமே நம் பணத்தை பங்கு சந்தையில்தான் முதலீடு செய்யப்போறாங்க. அதனால பங்குசந்தை வளர்ச்சியைப் பொறுத்துதான நாம் முதலீடு பண்ணிய திட்டங்களின் யூனிட்கள் வளர்ச்சி இருக்கும். அதனால மியூச்சுவல் ஃபண்ட் மேனஜர் எடுக்கும் முடிவுதான், அந்த திட்டம் இலாபமோ, நஷ்டமோ அடையும்.

ஆனா, நடப்பில் உள்ள திட்டம்-னா ‘கடந்த கால வரலாறு', அதனுடைய வளர்ச்சி எப்படினு தெரிஞ்சி முதலீடு பண்ணலாம். N.F.O. திட்டதில் அப்படி இருக்க வாய்ப்பில்லை என்பதால் முடிவெடுப்பதில் கொஞ்சம் ரிஸ்க் இருக்கத்தான் செய்கிறது.

எந்தந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்யலாம்? அதனோட rating-லாம் எப்படி தெரிஞ்சிக்கலாம்-கிறதை அடுத்ததில் .......

Thursday, May 17, 2007

தமிழில் எனக்கு பிடித்த வார்த்தை...

நன்றி!

ஆமா... இந்த blog, தொடர்(!) லாம் சும்மா எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமதான் எட்டிப் பார்த்தது. 'பின்னூட்டம் மட்டுமே போடலாம்'-கிற எண்ணங்களில் வந்த பல பதிவர்களில் நானும் ஒருவன். (பராசக்தி வசனம்-லாம் பேச மாட்டேன்.... பயப்படாதீங்க......)

மியூச்சுவல் ஃபண்ட் தொடர் பத்தி எந்த வித திட்டமும் இல்லாம.... எனக்கு தெரிந்தத, படித்ததை, மியூச்சுவல் ஃபண்ட் கம்பெனி-யில் (நமக்கு கணிப்பொறி-ல தான் வேலைனாலும் கம்பெனி business flowல் இருந்த ஆர்வமாக இருக்கலாம்.. ) வேலை பார்த்த பொழுது கத்துகிட்ட விசயங்களும் ... அப்புறம் பங்குச் சந்தையில் 'அடி'பட்ட அனுபவமும் இதை எழுத காரணமாக இருக்கலாம்.

'சரி.. ஏதோ எழுதிறான்... ஒரு வார்த்தை சொல்லிட்டு போலாம்'-னு நினைச்சாங்களோ என்னமோ ...

பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் சொன்ன - செல்வநாயகி, பங்காளி, தருமி, Boston Bala, CVR, Elanoraj, மணிகண்டன், வடுவூர் குமார், ஆழியூரான், காட்டாறு, ...

எப்பவும் சூடா எழுதிற சூடான தமிழன்...ம்ம்.... உண்மைத் தமிழன்

வலைசரத்தில் குறிப்பிட்ட மங்கை,

அக்கறையா வந்து விளக்கமளித்த மா. சிவகுமார், ஜோசப் சார்....

தனிப்பட்ட முறையில், 'நல்லா இருக்கு'... (!)... 'ஒண்ணும் புரியலை' -னு (?) - மின் அஞ்சல் மூலமாக கருத்து சொன்ன அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள் பல...

தேன்கூடு, தமிழ் வெளி, தமிழ் பதிவுகள்.... துறை சார்ந்த பதிவுகள்-னு தனியாக 'பட்டா' போட்டு தெரியவைத்த தமிழ் மணத்துக்கும் நன்றி!

நாம சொல்றதும்... 'நாலு' பேருக்கு புரிஞ்சிருக்கு-னு நினைக்கிறப்ப சந்தோஷமாதான் இருக்கு.

அதுக்கும் மேல...எனக்கு மகிழ்ச்சியானது.... இதன் வழியாக கிடைத்த நட்பு. முற்றிலும் நான் எதிர்பாரதது.

தனிப்பட்ட முறையில்... நட்புடனும், உரிமையுடனும் சில நண்பர்கள் இது சம்பந்தமாக கேட்ட கேள்விகளுக்கு எனக்கு தெரிந்த வரை Google மேல பாரத்தை போட்டு... விளக்கம் தர முயற்சி செய்கிறேன்....குட்டுவதற்கும் இங்க ஆள் இருக்காங்க என்கிற எண்ணத்தில்....

மீண்டும் ஒரு முறை நன்றி! வணக்கம்!!

Wednesday, May 16, 2007

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு - 6

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு - 5
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு - 4
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு - 3
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு - 2
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு - 1

டெப்ட் ஃபண்ட் ல் வருமானம் கம்மியாக கிடைத்தாலும், அதிலுள்ள பிக்ஸட் மெச்சூரிட்டி பிளான் [Fixed Maturity Plan - FMP] மற்றும் ‘லிக்விட் ஃபண்ட்'ல் நல்ல வருமானம் கிடைக்கும்.பிக்ஸட் மெச்சூரிட்டி பிளான் [FMP]: இது ஒரு closed-end டெப்ட் ஃபண்ட். 3 அல்லது 5 வருட கால வரைமுறை உண்டு. FD போல குறிப்பிட்ட வருடத்திற்கு பணத்தை எடுக்காமல் இருந்தால் நல்லது.

வங்கியின் FD விட நல்ல திட்டம். FDல் வரிபோக 6 சதவீதம் கிடைக்குமென்றால், இந்த திட்டங்களில் 9 சதவீதம் வரை கிடைக்கு வாய்ப்பு உள்ளது.

நம் தேவைக்கு ஏற்ப முதலீடு செய்ய இதில் 3 மாதம், 6 மாதம் அல்லது 1 வருடம் என பல கால அளவுகளில் முதலீடு செய்யலாம்.

அதிக வருமான வரி (33.99% slab) கட்டுபவர்களுக்கு மேலே சொன்ன இரண்டு திட்டங்களும் சிறந்ததாகும்.

வட்டி விகிதம் அதிகமாக இருக்கும் இந்த கால கட்டத்தில், கில்ட் ஃபண்ட் போன்ற திட்டங்களை தற்சமயம் தவிர்ப்பது நல்லது.

வரிச் சேமிப்பை அடிப்படையாகக் கொண்ட திட்டம் ஈ.எல்.எஸ்.எஸ் [E.L.S.S - Equity Linked Saving Schemes]. இந்த திட்டத்தில் கிடைக்கும் டிவிடெண்ட்(Dividend)க்கும் மட்டுமல்லாமல், இத்திட்டத்தில் முதலீடு செய்யும் ஒரு லட்ச ரூபாய் வரை வரி விலக்கு உண்டு.

ஆமாம்.. ரொம்ப கவர்ச்சிகரமான திட்டம்தான்.இந்த மாதிரி (வரி சேமிப்புத்) திட்டங்களில் முதலீடு செய்த பணத்தை மூன்றாண்டுகளுக்கு வெளியில் (lock-in period) எடுக்கமுடியாது.

இதுபோன்ற நீண்டகால முதலீடுகள்தான் நாட்டின் அடிப்படை கட்டமைப்புத் திட்டங்களில் பயன்படுத்தப்படுகின்றது. நாட்டின் வளர்ச்சியில் முக்கியப் பங்கு இருப்பதால்தானோ என்னமோ, இதில் செய்யப்படும் முதலீடுகளுக்கு வரிச்சலுகை தருகிறது நம் அரசாங்கம்.

இதில் கவனிக்ககூடிய மூன்று திட்டங்கள் **:i. Franklin India Taxshieldii. HDFC Tax Saveriii Prudential ICICI Tax Plan(இந்த மூன்று திட்டங்களை உங்கள் portfolio tracker மூலமாகவும் கவனித்து முதலீடு செய்யலாம்.)சரி... ஒரு சின்ன கணக்கோட முடிச்சிக்கலாம்.நீங்க வருமான வரி கட்ட வேண்டிய தொகை ரூ. 20,000 ம் வைச்சிக்குங்க.ELSS திட்டத்துல ரூ.10,000 முதலீடு பண்ணிருந்தீங்கனா..... ரூ.2,000 சேமிக்கலாம். எப்படி?ELSSக்கு 20% rebate உண்டு. 10,000 ரூ-ல 20% = ரூ. 2,000/-நீங்க வரி கட்ட வேண்டிய ரூ. 20,000யில இருந்து ரூ 2,000 கழிச்சா கிடைப்பது ரூ. 18,000. இந்த தொகை மட்டும் வரி கட்டினா போதும்.முதலில் குறிப்பிட்டதுபோல, இத்திட்டத்தில் முதலீடு செய்யும் ஒரு லட்ச ரூபாய் வரை வரி விலக்கு உண்டு.இப்பொழுதே திட்டம் போட்டு முதலீடு செய்தால், சேமிப்புக்கும் வழி வகுக்கும், வருமான வரியும் ["நமீதா போல"] கம்மியா .......... "கட்டலாம்".

நன்றி: http://www.appuonline.com

Monday, May 14, 2007

எஸ்.பி.ஐ. இன்பராஸ்டச்சர் ஃபண்ட் [SBI Infrastructure Fund-Series I] வாங்கலாமா?

திட்டத்தின் பெயர்: எஸ்.பி.ஐ. இன்பராஸ்டச்சர் ஃபண்ட் [SBI Infrastructure Fund]

குறைந்தபட்ச முதலீடு: ரூ. 5,000

ஃபண்ட் முதலீடு செய்யும் விதம்: Equity Diversified

வகை: குளேஸ்ட் எண்டட் [Closed Ended] (3 ஆண்டுகள்)

வாங்க கடைசி நாள்: ஜீன் 8, 2007

65 சதவீதம் பங்குச் சந்தையிலும் மற்றும் டெஃப்ட், money marketingலிம் முதலீடு செய்ய திட்டம் உள்ளதாக ஃபண்ட் மேலாளர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டில்[2006], இன்பராஸ்டச்சர் ஃபண்ட் [Infrastructure Fund]ல் நல்ல இலாபத்தை தந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இணையதளம்: http://www.sbimf.com

பரிந்துரை: வாங்கலாம். :)

Sunday, May 13, 2007

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு - 5

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு - 4
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு - 3
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு - 2
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு - 1

' ஏஜண்ட்-டை பார்த்துட்டு வந்தாச்சா?'

'ம்ம்... இப்ப அதோட NAV மதிப்பை எப்படி தினமும் கவனிக்கிறது? தினமும் செய்திதாள்களில் பார்க்கலாம். வேற ஏதாவது வழி இருக்கிறதா... ...?'

இதுக்கு ஒரு எளிய வழி இருக்கு....

'ஆன் ஃலைன் டிரேடிங் (on-line trading). ஏஜண்ட் யை போய் பார்க்காம, நம்மளே மியூச்சுவல் ஃபண்ட் வாங்கலாம்... விக்கலாம். என்ன ஏஜண்ட் பண்ற "வேலை"ய நம்ம செய்யணும். எந்த மியூச்சுவல் ஃபண்ட் அதிக லாபம் தரக் கூடியது, எதில நீண்ட நாள் முதலீடு செய்யலாம்? போன்றவைகள்....

அதுவும் ரொம்ப எளிதுதான். '

ICICI Direct, Sharekhan, India Bulls .... போன்றவைகள் ஆன் ஃலைன் டிரேடிங் (on-line trading) வசதியை செய்கிறது. இதில ஒரு கணக்கு ஆரம்பிக்கணும். தனிப்பட்ட முறையில் ICICI Direct-ல் எனக்கு திருப்தில்லை. கமிசனும் கொஞ்சம் அதிகம்.

ஆன் ஃலைன் டிரேடிங் (on-line trading) கணக்கு ஆரம்பிச்சிட்டீங்கனா தினமும் NAV மதிப்பை கவனிக்க முடியும். அது போக ஒவ்வொரு ஃபண்ட் பத்தியும் பல விதத்தில 'ஆராய்ச்சி' பண்ணின தகவலும் கிடைக்கும்.

'நான் முதலீடு செய்றதே இரண்டோ, மூணோ ஃபண்ட்கள்தான். அதுக்குபோய் கமிசனும், வருடம் வருடம் ஒரு தொகையும் குடுக்கனுமா? வேற ஏதாவது வழி இருக்கா...'

நல்ல கேள்வி. அதுக்கும் வழி இருக்கு. Portfolio Tracker.

1. Money Control
2. Value Search Online
3. Rediff Business

மேலே குறிப்பிட்ட ஏதேனும் ஒரு வலைதளங்களில் ஒரு கணக்கு துவங்குங்க (இப்போதைக்கு இலவசம்தான்) . நம்ம வாங்கின, வாங்கப்போற மியூச்சுவல் ஃபண்ட்யை குறிப்பிடுங்க. தினமும் இதில மியூச்சுவல் ஃபண்ட் வளர்ச்சியைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

சரி.. இப்ப மத்த ஃபண்ட்களைப் பத்தி பார்க்கலாமா?

இதுவரை பார்த்த மூன்று ஃபண்ட்களும் நேரிடையா பங்குச் சந்தையில முதலீடு செய்வாங்க. அதனால பங்குச் சந்தையின் தாக்கம் இருக்கும்.

இன்னும் கொஞ்சம் பாதுகாப்பானது-னா அது ‘டெப்ட் ஃபண்ட்' (Debt Fund). அதேபோல் அரசு கடன் பத்திரங்களில் மட்டுமே முதலீடு செய்யும் திட்டம், 'கில்ட் ஃபண்ட்' (Gilt Fund). கடன் சந்தையில் முதலீடு செய்யும் திட்டம் 'லிக்விட் ஃபண்ட் ' (Liquid Fund).

வருமானம்.... ? கொஞ்சம் குறைவாகவே இருக்கும்.

ஆனா, நாம் முதலீடு செய்த தொகை ரொம்பவே பாதுகாப்பாக இருக்கும். வங்கிகளில் போடும் ஃபிக்சட் டெபாசிட்டுகளுக்கு (Fixed Deposit) பதிலாக இது போன்ற ஃபண்ட்களை கவனத்தில் கொள்ளுதல் நல்லது. இன்னொரு முக்கியமான விசயம்-னா இந்த தொகைக்கு வரிச் சலுகையும் உண்டு.

இந்த திட்டங்களில் இருக்கும் கவனிக்கதக்க மூன்று ஃபண்ட்கள் **:

'கில்ட் ஃபண்ட்' (Gilt Fund):
---------------------------------
1.Escorts Mutual Fund Unclaimed Dundee Sovereign Trust (7.28%)
2.Birla Sun Life - G-Sec Short Term (7.19%)
3.ICICI Prudential Gilt Fund (Investment) (7.15%)

'லிக்விட் ஃபண்ட் ' (Liquid Fund):
---------------------------------------
1. Franklin Templeton Fixed Tenure Fund - Series 4 (8.54%)
2. Birla Fixed Term Plan - Series H (8.51%)
3. Tata Fixed Horizon Fund Series 3 Plan G (8.46%)

இது மூத்த குடிமக்களுக்கு (senior citizen) ஏற்ற ஃபண்ட்கள்.

என் நண்பர் கேட்ட கேள்விக்கு பதிலான வருமான வரி விலக்குள்ள ஃபண்ட்-களையும், ஈ.எல்.எஸ்.எஸ் திட்டம் (ELSS - equity linked savings scheme) பத்தியும் அடுத்ததில் பார்க்கலாம்.

** இந்த மியூச்சுவல் ஃபண்ட்-களாம் இன்றைய தேதிக்கு நல்ல முதலீடு. நாளை மாறலாம்...?

Thursday, May 10, 2007

என் நண்பர் கேட்ட கேள்வி .....

என் நண்பர் ஒருவர், 'மியூச்சுவல் ஃபண்ட்-ல போடுவதற்கு பதிலாக Fixed Deposit [FD]ல போடலாமே. இப்பலாம் 9....10....11 சத வீதம் வரை வட்டி குடுக்கிறதா விளம்பரம் குடுக்கிறாங்களே?'.

நல்ல கேள்விதான்... எதுக்கு ரிஸ்க் எடுத்து மியூச்சுவல் ஃபண்ட்-ல போட்டுகிட்டு. Fixed Deposit [FD]ல போட்டா பணமும் பாதுகாப்பா இருக்கும். உறுதியா நல்ல வட்டியோட நம்ம பணம் கையில கிடைக்கும்.

உண்மைதான். இப்பலாம் வங்கிகளும் சினிமா விளம்பரத்துக்கு இணையாக விளம்பரங்கள் கொடுத்து வாடிக்கையாளர்களை 'பிடிக்க' ஏகப்பட்ட உத்திகள். ஒரு ஃபோன் பண்ணினா போதும்... வங்கில இருந்தே வீட்டுக்கு வந்து நமக்கு 'சேவை' செய்ய தயாராக இருக்கிறார்கள். நாம வங்கிக்குகூட போக வேண்டாம்...

என் நண்பர் கேட்ட கேள்விக்கு பதிலை ஒரு சின்ன கணக்கு போட்டு பார்த்தா எளிமையா புரியும்-னு நினைக்கிறேன்....

இதில நாம கவனிக்க மறந்தது இரண்டு விசயங்கள்:
1. கிடைக்கும் வட்டிக்கு வருமான வரி கட்ட வேண்டும்.
2. பண வீக்கம்

உதாரணத்துக்கு, ஒரு வருடத்திற்கு, ஒரு இலட்ச ரூபாயை [Rs. 1,00,000] Fixed Deposit [FD]ல பத்து சதவீத வட்டில போடுறோம்-னு வைச்சுக்குங்க....

FD தொகை : Rs. 1,00,000 ; 1 வருட வட்டி 10%: Rs. 10,000 (+) .
கிடைக்ககூடிய தொகை: Rs. 1,10,000 [1,00,000+ 10,000 ]

வட்டிக்கு 30% வருமான வரி: Rs. 3,000 (-)

கழித்தால், கிடைக்ககூடிய தொகை: Rs. 1,07,000 [1,10,000 - 3,000 ]

பணவீக்கம் 5% of 1,10,000 = Rs. 5,350 (-)

கழித்தால், கிடைக்கும் தொகை: Rs. 1,01,650 [ 1,07,000 - 5,350 ]

கணக்கு சரியா..?

ஆக... Fixed Deposit-ல போட்டா ஒரு வருடத்திற்குபின் நமக்கு கிடைப்பது 1,01,650 ரூபாய். அதாவது 1,650 ரூபாய்தான் அதிகம்.

அப்ப... மேலே சொன்ன இரண்டு விசயங்கள் இல்லாம முதலீடு பண்ண முடியுமா? பண வீக்கத்தை தடுக்க முடியாது. ஐந்து சதவீதகிறது கொஞ்சம் கூடலாம்... குறையலாம். அதை தவிர்க்க முடியாது.

ஆனா, வருமான வரி கட்டாமா வேறு திட்டங்கள்-ல முதலீடு பண்ண வழி இருக்கா?

இருக்கு.....!

Tuesday, May 8, 2007

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு - 4

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு - 3
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு - 2
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு - 1

நாம் ஏற்கனவே அறிந்தது போல பங்குச் சந்தையைப் பொறுத்தே மியூச்சுவல் ஃபண்ட்-ன் இலாப, நஷ்டம் அமையும். அதிக பாதிப்பு இல்லாமல் இருக்க, நாம் தேர்ந்தெடுக்கும் திட்டத்தில் மிகவும் கவனமாக இருக்கவேண்டும்.

எவ்வாறு கவனமாக இருப்பது..? அதற்கு, சில விசயங்களை தெரிந்து கொள்ளுதல் நலம்.

நான் சென்ற பகுதியில் குறிப்பிட்டது போல முதலில் என்னன்ன திட்டங்கள் இருக்குனு பார்க்கலாம்.

ரொம்ப போரடிக்காம, சுருக்கமா சொல்ல முயற்சி பண்றேன்.....

1. செக்டோரல் ஃபண்ட் (Sectoral Fund)

2. டைவர்சிஃபைடு ஃபண்ட் (Diversified Fund)

3. பாலன்ஸ்டு ஃபண்ட் (Balanced Fund)

4. டெப்ட் ஃபண்ட் (Debt Fund)

5. கில்ட் ஃபண்ட் (Gilt Fund)

6. லிக்விட் ஃபண்ட் (Liquid Fund)

7. ஈ.எல்.எஸ்.எஸ் திட்டம் (ELSS - equity linked savings scheme)

செக்டோரல் ஃபண்ட் (Sectoral Fund)ல ஏதாவது ஒரு துறையில் மட்டுமே பங்குகளை முதலீடு செய்வாங்க...உதாரணத்துக்கு....
  • டெக்னாலஜி (IT) துறைனா - Infosys, TCS, Satyam ...
  • ஆட்டோ (Auto)னா - Maruthi, Tata, Mahindra.... மாதிரி
  • வங்கித்துறை (Banking)னா - SBI, ICICI, IOB....

இப்படி ஒரே மாதிரியான துறைகளில மட்டுமே பங்குகளை வாங்குவாங்க.

இந்த திட்டத்தில் இருக்கும் கவனிக்கதக்க மூன்று ஃபண்ட்கள் ** :

1. DSP ML Technology.com (42.19%)

2. SBI Magnum Sector Funds Umbrella-IT (34.66%)

3. Birla Sun Life - New Millenium Fund (32.95%)

ஆமா....ரிஸ்க் அதிகம். அதேபோல், வருமான வாய்ப்பும் அதிகம்.

"சரி.... அப்ப.... எல்லாத் துறை பங்குகளிலும் முதலீடு செய்யும் பண்ட் இருக்கா?"

ஆமாங்க ...அதான் டைவர்சிஃபைட் ஃபண்ட் (Diversified Fund)

பல வேறு துறைகளில் ஈடுபட்டுள்ள பல நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்வது. உதாரணத்துக்கு.... Infosys, Maruthi, Tata, SBI..... இப்படி எல்லா துறைகளிலும் பங்குகளை வாங்குவாங்க.

இந்த திட்டத்தில் இருக்கும் கவனிக்கதக்க மூன்று ஃபண்ட்கள் **:

1. Reliance NRI Equity Fund (22.22%)

2. Birla Sun Life - Frontline Equity Fund (20.76%)

3. DBS Chola Opportunities Fund (20.48%)

ரிஸ்க் குறைவு, வருமானம் பரவாயில்லாம இருக்கும்!

பங்குச் சந்தையில் முதலீடு செய்யுறதே ரிஸ்க்தான். அந்த ரிஸ்க்கை குறைக்க நம்ம பணத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியை உத்தரவாதமான கடன் பத்திரங்களில் முதலீடு செய்வது பாலன்ஸ்டு ஃபண்ட் (Balanced Fund) திட்டம்.

இந்த திட்டத்தில என்ன நல்லதுனா, பங்குச் சந்தையில இருந்தும் வருமானம் இருக்கும்.... பாதுகாப்பான கடன் பத்திரங்கள் மூலம் வருமானம் இருக்கும்.

இந்த திட்டத்தில் இருக்கும் கவனிக்கதக்க மூன்று ஃபண்ட்கள் **:

1. Equity - Balanced Fund (16.99%)

2. Birla Sun Life 95 Fund (9.82%)

3. FT India Balanced Fund (9.06%)

இது நல்ல திட்டமா தெரியுதா?

என்னது... ஏஜெண்ட்-யை பார்க்க கிளம்பிட்டீங்கள்ளா? சரி...சரி.. மற்ற ஃபண்ட்களை அப்புறம் பார்க்கலாம்.

** இந்த மியூச்சுவல் ஃபண்ட்-களாம் இன்றைய தேதிக்கு நல்ல முதலீடு. நாளை ...?

Friday, May 4, 2007

கேரன்டி, வாரன்டி...?

கேரன்டி (Guaranty)-கிற வார்த்தை U.K. வில் அதிகம் பயன் படுத்திகிறார்கள். அவங்க பயன்படுத்திற வார்த்தை எதுவும் அமெரிக்காவுல பயன்படுத்த மாட்டடங்களே.. இவுங்க புதுசா கண்டுபிடிப்பாங்க.... ;)
.. வாரன்டி (warranty) என்பது அமெரிக்காவில் உபயோப்படுத்தும் வார்த்தைப் பிரயோகம்.


இன்றைய நடைமுறையில் வித்தியாசம் என்னென்னா..

குளிர்சாதரண பெட்டி வாங்க போறோம்-னு வைச்சிக்குங்க...

கடைக்காரர் ஒரு வருடம் 'கேரண்டி'-யும், மூன்று வருடம் 'வாரண்டி'-யும் இருக்குனு சொல்றாரு.


குளிர்சாதரண பெட்டி வாங்கி ஒரு வருடத்திற்குள்
பழுதானால் உதிரிபாகத்தை இலவசமாக மாற்றிக் கொடுப்பார்கள். அதுதான் கேரன்டி.


அதுவே, ஒரு வருடத்திற்கு அப்புறம் மூன்று வருடத்திற்குள் பழுதடைந்தால், உதிரி பாகத்துக்கான விலையை வாங்கிக்கொண்டு சேவையை மட்டும் வழங்குவார்கள். இது 'வாரன்டி'.

வாரன்டி வருடமும் முடிந்ததுனா பழுதுபார்க்கிற சேவைக்கும் கட்டணம் உண்டு.

பொதுவாக கேரன்டியை விட, வாரன்டி கொஞ்சம் கூடுதலான வருடங்களாகவே இருக்கும்.

Wednesday, May 2, 2007

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு - 3

முதலில் எந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யலாம்?
இப்போதைய நிலையில், நான் முதலீடு செய்ய போறேன்னா கீழே உள்ள ஏதாவது ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்வேன்...

1. DSP ML Technology.com - Dividend (43.87%)
2. SBI Magnum Sector Funds Umbrella-IT - Growth (34.66%)
3. ICICI Prudential Technology Fund - Dividend (34.18%)
4. Birla Sun Life - New Millenium Fund - Dividend (32.95%)
5. UTI Growth Sector Fund - Software - Growth %29.42%)
6. Reliance Media & Entertainment Fund Growth Plan - Growth (28.29%)
7. ICICI Prudential Services Industries Fund - Dividend (24.96%)
8. Sundaram BNP Paribas Floating Rate Fund - Long Term - Institutional Plan - Growth (24.92%)
9. Franklin Infotech Fund - Growth (23.61%)
10.Reliance Diversified Power Sector Fund - Growth (23.55%)

'எத்தனை மியூச்சுவல் ஃபண்ட் இருக்கு. இத தேர்வு செய்ய ஏதும் காரணம் உண்டா?-னு கேட்டா .....

நமக்கு 'உலகம் சுற்றும் வாலிபனும்' பிடிக்கும். 'பாவ மன்னிப்பு'ம் பிடிக்கும். தலைவரு படத்துக்கு போனோமா..... ஜாலியா பார்த்தோமோ-னு வந்துருறனும். ஒரு வாரத்துக்கு அப்புறம் அந்த படத்தை பத்தி கேட்டா, ஏதும் நினைவுக்கு வருமாகிறது சந்தேகம்தான். ஆனா, 'பாவ மன்னிப்பு' படத்தைப் பார்த்தாட்டு இன்னும் சில காட்சிகள், பாடல்கள் நினைவுல இருக்கு (குறிப்பா முதன் முறையா சிவாஜி-தேவிகா சந்திக்கிற காட்சி ;) ]. அது மாதிரிதான் ஒவ்வொருவரின் தேவைக்கு/ரசனைக்கு(!) ஏற்ப மியூச்சுவல் ஃபண்ட் தேர்வு செய்றோம்.

பொழுது போக்கு சாதனங்களேயே எப்படி மசாலா, காமெடி.... பிரிவுகள் இருக்குதோ அதே மாதிரி மியூச்சுவல் ஃபண்ட்-லேயும் உண்டு. அதைப்பத்தி கண்டிப்பா நாம தெரிஞ்சிக்கணும். அப்பத்தான் அதற்கு ஏற்றார்போல் முதலீடு செய்ய முடியும். சில ஏமாற்றங்களையும் தவிர்க்கலாம். அது என்னனு அப்புறம் பார்ப்போம்...

சில மியூச்சுவல் ஃபண்ட்கள் 6-12 மாதங்களில் இலாபம் கிடைக்கும். சில மியூச்சுவல் ஃபண்ட்களில் நீண்ட நாள் முதலிடு செய்வது நல்லது. சில மியூச்சுவல் ஃபண்ட்களில முதலீடு செய்தால் வருமான வரி விலக்கு உண்டு. அதனால நம் தேவைக்கேற்ப மியூச்சுவல் ஃபண்ட் களை தேர்வு செய்தல் நல்லது.

[மற்ற வலை தளங்களிலும், இந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை நன்றாக ஆராய்ந்து நம்ம தேர்வு செய்யலாம்.]

சரி... இப்ப அதற்குரிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, செக் (Cheque) அல்லது DD ஆகவோ ஏஜென்ட்-ம் கொடுங்கள். ஒரிரு தினங்களில் அக்னாலெட்ஜ்மென்ட் ஸ்லிப்பைக் (Acknowledge Slip) கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள். ஒரிரு வாரங்களில் AMC -யில் இருந்து உங்கள் கணக்கு எண், எத்தனை யூனிட், அதன் விலை போன்ற தகவல்கள் அடங்கிய கடிதம் நமக்கு வரும்.