Friday, July 18, 2008

பெட்ரோல், டீசல் விலை குறையுமா?

கச்சா எண்ணெய் பேரலுக்கு $129 க்கு கீழ வந்துள்ளது. இது போன வாரத்தைவிட 13% சரிவு! ஒரே வாரத்தில $15 குறைஞ்சிருக்கு. அதுவும் ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் (இஸ்ரேல்..?) இருக்கும் 'tension' அதிகமாயிருக்கும் நேரத்தில்...
'தீடீரென' சீனாவும், இந்தியாவும் தன்னுடைய தேவையை குறைச்சதானலதான் இந்த விலை குறைவுக்கு காரணம்னு ஒரு செய்தி!

அதலாம் சரி.. பெட்ரோல் பஃங்கில எப்ப விலை குறையும்...?

கச்சா எண்ணெய் ரிபைனரிக்கு போய் அங்கிருந்து அது பெட்ரோல் மற்றும் இதர பொருட்களா பிரிச்சி அப்புறம் அங்கிருந்து பெட்ரோல் பஃங்குக்கு வரணும். எப்படியும் 2-3 வாரமாவது ஆகாது..?

Wednesday, July 16, 2008

Bear Stearns, Fannie Mae & Freddie Mac, IndyMac: தொடரும் சோகங்கள்

Bear Stearns  தொடர்ந்து Fannie Mae (FNM)  & Freddie Mac (FRE) ம் பொருளாதார சுனாமியால் தத்தளித்து கொண்டிருக்கிறது...FNM & FRE ஒரு வகையான சோகம்ன்னா, Bear Stearns அதவிட கொடுமை.85 வருட அனுபவம். ஐந்தாவது பெரிய வங்கி.. போன வருடம் (வரை) அமெரிக்க பங்குச்சந்தையில் ஒரு பங்கின் விலை $ 170 என நல்ல நிலையில் இருந்தது.ஒரே வருடத்தில் வங்கியை இழுத்து மூடும் அளவுக்கு நிலமை பரிதாபமானது. ஒரு பங்கின் விலை $2 னாலும் பரவாயில்லை என JP Morgan னிடம் 'பேரம்' பேச... இறுதியில் JP Morgan 'பெருந்தன்மையாக' $10 என வாங்கியது. இவர்களுக்கு பக்கபலமாக அமெரிக்க அரசாங்கம் இருந்தது.Beat Stearns, Fannie Mae & Freddie Mac வரிசையில்... IndyMac. ஒரு காலத்தில் $50வரை இருந்த IndyMacகின் பங்கு, இந்த வாரம் 10 cent! வாடிக்கையாளர்கள் தாங்கள் போட்ட பணத்தை எடுக்க காலை 5 மணிக்கெல்லாம் வரிசையில் காத்திருந்தார்கள்.ஒரு வங்கி FDIC (Fedral Deposit Insurance Corp.) ல் member னா நாம் போட்ட பணத்திற்கு $100,000 வரைக்கும் இன்சூரன்ஸ் உண்டு. IRS (Individual Retirement Accounts) கணக்குனா $250,000 வரைக்கும் பாதுகாப்பு உண்டு.உதாரணத்துக்கு IndyMac மாதிரி ஒரு வங்கியில $120,000 சேமிப்பு இருக்குனு வைச்சுக்குவோம். அந்த வங்கி திவால் ஆயிடுச்சினா  நமக்கு  $100,000 வரைக்கும் நமக்கு கிடைக்கும் வாய்ப்புண்டு.மேலும் விரிவான விவரங்கள் இங்கே... 

Saturday, July 12, 2008

புதிய முறையில் பணவீக்க கணக்கீடு!

  
மத்திய அரசு தற்போது பணவீக்கத்தை கணக்கிடும் முறைக்கு பதிலாக புதிய முறையை அறிமுகப்படுத்த உள்ளது.

மொத்த விலை குறீயீட்டு எண்ணை கணக்கிடும் இந்தப் புதிய முறை டிசம்பர் மாதத்தில் வெளியிடப்படும்.

தற்போது 1993-94ஆம் ஆண்டில் இருந்த விலையை அடிப்படையாகக் கொண்டு பொருட்களின் விலை உயர்ந்துள்ளதா, குறைந்துள்ளதா என்று கணக்கிடப்படுகிறது. இனி 2004-05 ஆம் ஆண்டின் விலைகள் அடிப்படையில் பணவீக்கம் கணக்கிடப்படும்.

தற்போது 435 தொழில் துறை பொருட்களின் விலைகளை இந்த கணக்கீட்டிற்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. இனி 980 தொழில் துறை உற்பத்தி பொருட்களின் விலையின் அடிப்படையில் பணவீக்கம் கணக்கிடப்படும்.

இதே போல் தற்போது 1,918 பொருட்களுக்கு பதிலாக, 6 ஆயிரம் பொருட்களின் விலைகளின் அடிப்படையில் கணக்கிடப்படும்.

பணவீக்கம் பற்றிய தகவல் வாரத்திற்கு ஒரு முறைக்கு பதிலாக, மாதத்திற்கு ஒரு முறை வெளியிடப்படும்.

அதே நேரத்தில் விவசாய விளைபொருட்கள், மற்ற அத்தியாவசிய பொருட்களின் விலை மாற்றம் குறித்த தகவல்கள் வாரத்திற்கு ஒரு முறை வெளியிடப்படும் என்று தெரிகிறது.

[நன்றி: வெப்துனியா]

Friday, July 11, 2008

விலைவாசி உயர்வு ..... சமாளிக்க சில டிப்ஸ்...

1) சேமிப்பை கைவிடாதீர்கள்

சேமிப்பைக் குறைக்காமல் செலவுகளைக் கட்டுப்படுத்த முயற்சி செய்யுங்கள். சேமிப்பையும் இதுபோன்ற நேரத்தில் தங்கமாகச் சேர்ப்பதுதான் சரியானதாக இருக்கும்.

2) பெட்ரோல் செலவை மிச்சப்படுத்துங்கள்

முடிந்தவரையில் பொது வாகனங்களைப் பயன்படுத்துங்கள். சொந்த வாகனங்களைப் பயன்படுத்தும்போதும் தனித்தனியே போகாமல் நேரத்தைத் திட்டமிட்டுக் கொண்டு ஒரே வாகனத்தில் செல்வதால் பெட்ரோல் செலவை மிச்சப்படுத்தலாம்.

3) ஓட்டல் பில் வேண்டாமே

மாதத்துக்கு நான்கு தடவை குடும்பத்துடன் வெளியில் ஓட்டலுக்குச் சாப்பிடச் செல்வது வழக்கம் என்றால், அதை இரண்டு தடவையாகக் குறைத்துக் கொள்ளலாம்.

4) வீட்டுக் கடனை மாற்றுங்கள்

வீட்டுக் கடன் வாங்கியவராக இருந்தால் உங்கள் வங்கியின் மாறுபடும் வட்டிவிகிதம் என்னவென்பதைப் பாருங்கள். 11 சதவிகிதத்துக்கு மேல் இருந்தால் உடனடியாக 9.50% வட்டிவிகிதம் உள்ள வங்கிக்கு உடனடியாக மாறுவதன் மூலம் கணிசமான தொகையை மிச்சப்படுத்தலாம். அல்லது கணிசமான தொகை கையில் இருந்தால், அதைக்கொண்டு கடனில் ஒருபகுதியை அடைத்துவிடலாம். கழுத்தை நெறிக்கும் கடன் தவணையில் இருந்து தப்பமுடியும்.

5) எண்ணெய் குறையுங்கள்

ஆரோக்கியத்துக்கும் பட்ஜெட்டுக்கும் நல்லது. அதேபோல விரைவில் கெட்டுப்போகாத பருப்பு வகைகளை மொத்த விலைக்கடையில் வாங்குவது லாபகரமானது.

6) செல்போன் பில்லை கவனியுங்கள்

சுருக்கமாகப் பேசி முடிப்பது, தகவல்களைச் சொல்ல எஸ்.எம்.எஸ்-ஐ பயன்படுத்துவது போன்ற நடவடிக்கைகளால் செல்போன் செலவை நன்றாகவே குறைக்கமுடியும்.

7) மின்சாரத்தை மிச்சப்படுத்துங்கள்

அதிக மின்சாரம் குடிக்கும் பொருட்களை தேவையான அளவுக்கு மட்டும் பயன்படுத்துவதன் மூலம் மின்சாரச் செலவைக் குறைக்கலாம்.

8) கிரெடிட் கார்டை சரியாகப் பயன்படுத்துங்கள்

கிரெடிட் கார்டு மூலம் வாங்கும் பொருட்களுக்கு, குறிப்பிட்ட நாட்களுக்குள் பணத்தைச் செலுத்தும்பட்சத்தில் வட்டி எதுவும் கிடையாது. இந்த வசதியைப் புத்திசாலித்தனமாகவும், கவனமாகவும் பயன்படுத்தினால் நல்ல லாபம் உண்டு. நம் சேமிப்புப் பணத்துக்குக் கிடைக்கும் குறைந்தபட்சமான 3.5% வருமானம் லாபமான ஒன்றுதானே!

9) பார்ட்டைம் வேலை

இல்லத்தரசிகளும் டியூஷன் போன்ற பகுதிநேர வேலை செய்வதன் மூலம் குடும்பச் சுமையைப் பகிர்ந்துகொள்ள முடியும்.

[நன்றி: நாணய விகடன்]

Questions and answers about Fannie, Freddie

NEW YORK (AP) — Some questions and answers about Fannie Mae and Freddie Mac and their role in the mortgage market:
Q: What are Fannie Mae and Freddie Mac?
A: Fannie Mae and Freddie Mac are the largest purchasers and insurers of mortgages in the country.

Q: What do they do?
A: They buy and guarantee mortgages from banks. Some of the mortgage debt bought by Fannie and Freddie is pooled and sold to investors. In this case, Fannie and Freddie essentially act as middlemen between banks and investors. Fannie and Freddie hold or back more than $5 trillion in mortgages, about half the outstanding mortgage debt in the United States.

Q: Why were they created?
A: To provide low- and middle-income Americans the opportunity to purchase houses with a reasonable interest rate by adding to the available cash banks can loan people. The money they provide is also supposed to help stabilize the mortgage market in times of stress. Fannie Mae was created in 1938 by the government, while Freddie Mac was established in 1970.

Q: So they are owned by the government?
A: No. Both Fannie and Freddie are now publicly owned and their stock traded on the open market.

Q: What problems do they currently face?
A: Over the past year, mortgages have defaulted at a faster rate, and companies have had to take billions of dollars in losses. Fannie and Freddie are required by their government regulator to have a financial cushion — cash or securities to fall back on. With losses rising, that cushion has been dwindling. That has forced them to raise new money during a time where it has been expensive and difficult to do so.
Most of the mortgages Fannie and Freddie insure or own are traditional, prime mortgages that are among the safest in the market. The pair backed very few of the exotic subprime mortgages that have caused the most problems over the past year.

Q: What happens in a government bailout?
A: In a bailout scenario, called a conservatorship, Fannie and Freddie's regulator — the Office of Federal Housing Enterprise Oversight — would take control of the companies and oversee their operations. Treasury Secretary Henry Paulson says the government wants to keep the companies operating in their current form without a government takeover.

Q: What has the Federal Reserve done to help Fannie and Freddie?
A: Sen. Christopher Dodd, D-Conn., said the Federal Reserve was considering opening up its discount borrowing window to Fannie or Freddie. He cited conversations with Fed Chairman Ben Bernanke and Paulson. But a Fed spokeswoman said the central bank had not talked with Fannie and Freddie about the emergency lending program. The spokeswoman declined to discuss any other options being considered.

Q: Can they fail?
A: If they did, says Brad Neigel, a senior analyst at Aite Group, a financial services research firm, "It would be the collapse of the entire mortgage industry as we know it." A government takeover would be the last option of choice, Neigel added.

Q: How do Fannie and Freddie's current problems affect borrowers?
A: If the government were to step in to help the pair, it would likely lead to lower interest rates on mortgages because investors would be assured of repayment, said Dan Green, a certified mortgage planning specialist and author of TheMortgageReports.com. But those declines in rates would probably be offset by an increase in fees, Green added.
Copyright © 2008 The Associated Press. All rights reserved.

Wednesday, July 9, 2008

இந்தியாவின் பொருளாதாரம்: சில நம்பிக்கைகள்....

  • பங்குச்சந்தையில் அந்நிய முதலீட்டாளர்களின் முதலீடு குறைவு
  • அமெரிக்காவின் சப்-ப்ரைம் விவகாரம்
  • கச்சா எண்ணெய் விலை உயர்வு
  • நமது நாட்டில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு
  • விளைப்பொருட்களின் உற்பத்தியை  குறைவு
  • ஒரு பக்கம் தங்கம் விலை போல பணவீக்கமும் ஏறி கொண்டிருக்கிறது.

என ஒரு பெரிய பட்டியலே போடலாம்.

அமெரிக்காவை போன்று தினமும் பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தில் மாற்றம் இருந்ததைப்போல நமது நாட்டிலும் இருந்திருந்தால் நமது அரசாங்கத்திற்கும் பெரும் சுமையாக வந்து நம்மைப்போன்ற சாமானியர்களின் வாழ்க்கையில் பணவீக்கம் என்ற ரூபத்தில் வந்து ஆட்டம் போடுவதை ஓரளவதாவது தடுத்திருக்க முடியும்.

இதலாம் ஒருபுறம் இருக்க,  ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் தலைவர் கே.வி.காமத் '''இந்தியாவின் வளர்ச்சியை யாரும் தடுத்து நிறுத்த முடியாது. பெரிய அளவில் பொருளாதாரத் தவறுகள் ஏதும் செய்யாவிட்டால் வளர்ச்சி என்பது அடுத்த 20 ஆண்டுகளுக்குத் தொடர்வது நிச்சயம்."  நியூயார்க்கில் கூறிய அவருடைய கருத்து...

நமது நிதி அமைச்சர், "2007-08 ஆண்டுக்கான நமது வளர்ச்சி விகிதம் 9% ஆக இருக்கிறது." என்ற நம்பிக்கையான பேச்சு ...

இந்தியாவில் வளர்ந்து வரும் திட்டங்கள் ..

என இந்தியாவின் பொருளாதாரம் வலுவாக இருப்பதாகவே நம்புவோம். 

ஆனால் என்ன பிரச்சனை என்றால், நமது அரசின் பொருளாதாரக் கொள்கைகளில் அரசியலைக்  கொண்டு வந்து,  மத்தியில் இரு பொருளாதார நிபுணர்கள் பதவியில் இருந்தும் நம்மைப்போலவே அவர்களும் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறார்கள் என்பதுதான்....!!.