Thursday, December 20, 2007

உலக (அமெரிக்கா[!!]) பொருளாதாரம்: சில கணிப்புகள்

என்னதான் ஒரு பக்கம் அமெரிக்க அதிபர் (அமெரிக்கா) பொருளாதாரம் நல்ல நிலையில் இருக்கிறதுனு (எல்லாருக்கும் தெரிந்த) பொய்யை சொல்லி கொண்டிருந்தாலும்...... பொருளாதார வல்லுநர்கள். அமெரிக்கா ரிசர்வ் வங்கி வட்டி விகித குறைப்பு, அமெரிக்காவின் GDP வளர்ச்சி (2.2%) இருந்து எந்தவொரு சமானியனும் எளிதில் கூறிவிட முடியும்.

சரி....வருட கடைசியினால் எல்லாரும் டாப் 10 சொல்ற மாதிரி... சில கணிப்புகள் (நான் பார்த்ததில், படித்ததில்,கேட்டதில்.....)

1.அமெரிக்காவின் GDP: 2002ல் 1.6 சதவீதமும், 2003ல் 1.9 சதவீதமும் இருந்தது. அதேபோல் 2008ன் முதல் பாதி 1.3% ஆகவும் இரண்டாவது பாதி 2.7%க்கு உயரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

2. உலக பொருளாதாரம், எண்ணைய் விலை, ஈரோவின் மதிப்பு போன்றவைகள் ஐரோப்பாவுக்கு 2008 சாதகமான வருடமாக அமையலாம்.

3. சீனாவின் 2008ன் GDP 10.8% (இந்த வருடம் 11.5 % !!) ஆகவும்.. குறிப்பாக, ஆகஸ்டில் சீனாவில் நடக்கும் ஒலிம்பிக்குபின் சீனாவிம் பொருளாதாரம் சிறிது சரிய வாய்ப்புள்ளது. நமது GDP 8.5% வரை போகலாம்.

4. உலக சந்தையில் கச்சா எண்ணைய் விலை குறைய வாய்ப்பில்லை. குறைந்தபட்சமாக(!) $75 டாலர்வரை போகலாம்.

5. கச்சா எண்ணையில் விலை உயர்வின் தாக்கம், இந்த வருடத்தைபோல் அமெரிக்காவின் பொருளாதாரம் மோசமாக இருக்காது.

6.அமெரிக்கா ரிசர்வ் வங்கி மேலும் வட்டி விகிதத்தை குறைக்கும். சனவரி கடைசி வாரத்தில் ஒரு 50 புள்ளிகளும், மார்ச்சில் 25 புள்ளிகளும் குறைக்க வாய்ப்புள்ளது.

7.அமெரிக்காவின் ரியல் எஸ்டேட் சந்தை (மேலும்) கடுமையான விலை சரிவை சந்திக்க வாய்ப்புள்ளது.

8. டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு உயரும் [ஒரு டாலருக்கு 36ரூ ??! ] . அதேபோல் ஜப்பான், சீனா, கனடா டாலரின் மதிப்பும் உயரும்.

Thursday, December 13, 2007

தபால் அலுவலக சேமிப்புக்கு வரி விலக்கு

"ஒரு காலத்தில்" தபால்துறையில் இருந்து இந்திர விகாஷ் பத்திரம் ஒரு திட்டம் இருந்தது. அதாவது 5 வருடத்தில் நமது சேமிப்பு இரட்டிப்பாகும். பத்தாயிரம் ரூபாய் இந்த திட்டத்தில போட்டா ஐந்து வருடத்தில இருபதாயிரம் ரூபாய் ஆகும். கொஞ்ச நாள்ல 5 வருடத்தை... 5 1/2 வருடமா மாத்தினாங்க... இப்ப அந்த திட்டமே இல்ல..;(

சமீபத்தில் தபால் அலுவலக சேமிப்பை ஊக்கப்படுத்த, 5 ஆண்டுக்கும் மேலான சேமிப்புகள் மற்றும் மூத்த குடிமகன்களுக்கள் வைத்துள்ள தபால் கணக்குகளுக்கு வரிவிலக்கு அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதே போல் ஆண்டு சேமிப்புக்கான வட்டி விகிதத்தை 8.3 சதவீதத்தில் இருந்து 8.9 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது.

ஒரு நல்ல முயற்சிதான். தபால்துறைல எவ்வளவோ முன்னேற்த்துக்கான வழிகள் இருக்கு. வழக்கம்போல மத்திய அரசு இந்த துறையை கண்டுக்கிறதே இல்ல.


  • முதலில் தபால் அலுவலகம் இருக்குமிடம் கொஞ்சம் சுத்தமா வைச்சிருக்கலாம்.
  • ஒரு சோதனை முயற்சியா பெரிய Mall களில் தபால் அலுவலகம் ஆரம்பிக்கலாம்.
  • இணையதளத்த வியாபார ரீதியாக பயன்படுத்தலாம்.
  • எல்லாத்துக்கும் மேலாக கொஞ்சம் புன்னைகையோடு வேலை செய்ய சொல்லி கொடுக்கலாம். சில தனியார் நிறுவனங்களைப் பாத்து சில நல்ல விசயங்களை இப்பகூட கத்துக்கலைனா (உ.தா.: SBI) அப்புறம் எப்பதான் பண்றது.....
ஒரு வேளை நம்ம லாலுகிட்ட கொடுத்தா.... ஏதாவது நல்லது நடந்தாலும் நடக்கும்.

~~~~~~~

ஒரு கொசுறு செய்தி:

NRE deposits are tax free

Q: I was working in Malaysia and having my savings in NRE account and FCNR deposits. Now that I have come back to India, I am advised by the manager of the bank that these deposits cannot be treated as exempt NRI deposit after 60 days of my permanent arrival in India. The deposits have now been converted into Indian rupees, but for interest paid to me till date of conversion, no tax has been deducted. Am I free from such liability in respect of such interest?

A: Tax was rightly not deducted. Interest in NRE account, whether held in foreign currency or Indian rupees or whether kept in NRE account or deposits, the income is exempt under Sec. 10(4)(ii) of the Act.

Since the deposits were apparently kept in accordance with Foreign Exchange Regulation Act, 1973, and the regulations of the Reserve Bank of India under the provisions, there is no liability to tax.


Courtesy: 'The Hindu'

Sunday, December 2, 2007

‘ஷேர்’ கில்லாடிகள்!!

"மூணு மாசந்தான் ஆகுது... இப்போ என்னோட ஷேர் வேல்யூ கிறு கிறுன்னு எகிறியாச்சு. வித்துரலாமா...?’’

‘‘ஐயோ... அப்படியெதுவும் பண்ணிராதே... மும்பையில் சென்செக்ஸ் இப்போ செம ஹை ஸ்பீடு. கொஞ்சநாள் விட்டுப்பிடிக்கலாம். நிதானமா விளையாடித்தான் பார்ப்போமே...’’ நாற்பது வயது ஆசாமிகள் இப்படிப் பேசிக்கொண்டால் அது நார்மலான விஷயம்தான். அதுவே இரண்டு இளம்பெண்கள் பேசினால்...? யெஸ். செஸ் போர்டில் காய் நகர்த்துவது போல ஷேர் மார்க்கெட்டிங்கில் கில்லி அடிப்பதுதான் இப்போதைய இளசுகளின் லேட்டஸ்ட் டிரெண்ட்.

‘‘ஷேர் மார்க்கெட்டிங்கா...? அது புலிவாலைப் புடிக்கிற மாதிரியான சமாச்சாரமாச்சே?’’

‘‘ச்சேச்சே, அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல. குறுகிய காலத்துல பணம் சம்பாதிக்கணும்ன்னா அதுக்கு ஷேர் வாங்கறதுதான் ஒரே வழி. பேங்குல பணத்தைப் போட்டா அது வட்டி போட்டு குட்டிப்போடுறதுக்குள்ள நமக்கு வயசு முடிஞ்சுடும். ஆனா, ஷேர் மார்க்கெட்டிங்குல துணிஞ்சு இறங்கலாம். என்னோட அப்பா பாங்க் மானேஜரா இருக்கார். காலேஜ் போற சமயத்துல நிறைய்ய பாக்கெட் மணி கிடைக்கும். எவ்வளவு பணத்தைத்தான் செலவு பண்றது? அதான் நானும் ஷேர் வாங்க ஆரம்பிச்சேன். இப்போ ஒரு வருஷமாச்சு. மளமளன்னு பணமும் பெருகிடுச்சு...’’

கல்லூரி மாணவியான ரங்கமணியின் பேச்சில் சந்தோஷப் படபடப்பு. இருபத்து இரண்டே வயதில் ஷேர் நுணுக்கங்களை விரல் நுனியில் அளந்து வைத்திருக்கிறார்.

பரணிக்கு வயது இருபத்தாறு. பிரபல பில்டிங் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியில் நல்ல வேலை. அதுவும் கைநிறைய சம்பளத்தோடு. ‘‘என்னோட மாதச் சம்பளம் முப்பதாயிரம். மத்தவங்க மாதிரி வீக் என்ட் பார்ட்டியில செலவு செய்யறதெல்லாம் வீண் காரியம்ன்னு தோணுச்சு. ஷேர் வாங்கறது, விக்கறதுல நிறைய விஷயங்களை, என் தம்பி சொல்லிக் கொடுத்தான். ரிலையன்ஸ், இன்ஃபோசிஸ், டி.சி.எஸ்.ன்னு ஒரு லட்ச ரூபா வரைக்கும் இப்போ என்னோட பணம் புழங்கிட்டிருக்கு. இதுதவிர, ஒவ்வொரு மாசமும் சம்பளம் வாங்கின அடுத்த நிமிசமே ஒரு குறிப்பிட்ட தொகையை ஷேர் வாங்கறதுக்காக ஒதுக்குவேன். சிரித்துக் கொண்டே சொல்கிறார் பரணி.

என்னோட ஃப்ரெண்ட்ஸ§ங்க எல்லாருமே ஷேர் ஹோல்டர்ஸ்தான். சி.என்.பி.ஸி., எக்னாமிக் டைம்ஸ், இண்டர்நெட்னு மாய்ஞ்சு மாய்ஞ்சு ஷேர் விவகாரங்களை உன்னிப்பா கவனிப்போம். மொதல்ல 50 ஆயிரம் முதலீடு செஞ்சேன். அஞ்சு வருஷமாச்சு. இப்போ வேலைக்கு போறேன். அதுல வர்ற சம்பளத்துல ஒரு பகுதியும் ஷேர்.. ஷேர்... எல்லாமே ஷேர் வாங்கறதே வேலையாயிடுச்சு.’’ பூரிப்பாக முடிக்கிறார் திவ்யா. வயது என்னான்னு கேட்கறீங்களா...? வெறும் இருபத்திநாலுதான்.

கால்சென்டர் ஊழியரான முருகனுக்கு நிறைய எதிர்காலக் கனவுகள். ‘‘கனவு கண்டு என்ன சார் பிரயோசனம்...? பணம் வேணுமே... நாம செய்யுற வேலையோட இன்னொரு பிஸினசையும் சேர்த்து ஆரம்பிக்க முடியுமா...? உட்கார்ந்த இடத்துலர்ந்தே இப்போ பணத்தை அள்ள முடியுதுன்னா அதுக்கு காரணம் ஷேர் மார்க்கெட்தான். டீலர்களோட உதவியில எந்த கம்பெனி முன்னணியில ஓடிட்டிருக்குன்னு தெரிஞ்சுடுது. விக்குற நேரம் வந்தா சுலபமா வித்துட்டு தப்பிச்சிடலாம். ஆனா, எச்சரிக்கையா விளையாடணும்’’ என்கிறார் இந்த பொறுப்பான வாலிபர்.

‘‘ஷேர் மார்க்கெட்டிங்ன்னா ஏதோ பிஸினஸ்மேன்களின் விவகாரம்ன்னு பலபேரு நினைக்கிறாங்க. ஆனா, இதுல அதிகம் ஜெயிக்கறது இளைஞர்கள்தான். ஆங்கில அறிவு, கொஞ்சம் கம்ப்யூட்டர் பழக்கம், வரவு, செலவை கணக்கு வைச்சுக்குற பொறுப்பான மனமிருந்தா பள்ளிக்கூடப் பசங்ககூட இதுல கலக்கலாம்...’’ அதிரடியாக விளக்குகிறார் ராஜ்குமார். தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் இருபத்தி நாலு வயது இளம்புலிதான் இவர்.

‘‘அது சரி... பந்தயத்துல இந்தக் குதிரைதான் ஜெயிக்கும்ன்னு எப்படி முடிவு பண்றீங்க...? கொஞ்சம் ஷேர் டிப்சுகளை அள்ளிவிடுங்களேன்...’’ ஐவரிடமும் கேட்டோம்.

‘‘எந்த கம்பெனியோட ஷேரை வாங்கப் போறோமோ அதுபத்தின விவரங்களை முழுசா தெரிஞ்சுக்கணும். ஒரே கம்பெனி பேர்ல மொத்த பணத்தையும் கொட்டறதுக்குப் பதிலா அதை மூணு விதமா பிரிச்சுக்கலாம். ஐம்பது சதவிகித தொகையை நீண்ட நாளைக்கு விட்டுவைப்பது (Long Term), இருபத்தைந்து சதவிகித தொகையை மூன்று அல்லது ஆறு மாத காலத்திற்குள்(Short Term) விற்றுவிடலாம். மற்ற இருபத்தைந்து சதவிகிதத்தை நீங்கள் விருப்பம்போல விளையாடலாம். அதாவது, காலையில் வாங்கி மாலையில் விற்பது. நீங்கள் 50 ஆயிரத்தை முதலீடு செய்திருக்கிறீர்களா...? அந்தத் தொகை 80 ஆயிரத்தை எட்டியிருக்குமே...? உடனே 50 ஆயிரத்துக்கான ஷேரை விற்றுவிட்டு மீதி 30 ஆயிரத்துடன் புதிய ஆட்டத்தை மீண்டும் தொடங்கலாம். எல்லாத் தொழிலிலும் இருப்பதுபோல இதிலும், இழப்பு ஏற்படலாம். எப்போதாவது. சஞ்சலப்படாம சாதுர்யமா காய் நகர்த்தினா நிச்சயம் நீங்களும் ‘ஷேர்’ கில்லாடிதான்..

நன்றி: குமுதம்