Friday, February 29, 2008

மத்திய நிதி அறிக்கை 2008 - 3 [ஒதுக்கீடு ]

 • மண் பரிசோதனை மையங்களுக்கு 75 கோடி ரூபாய்.
 • தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு 50 கோடி ரூபாய். [சிரிக்காதீங்க... அமைச்சர் சீரியசாதான் சொன்னாரு...!]
 • பொது விநியோக திட்டத்துக்காக ரூ 32,676 கோடி மானியம்.
 • தேசிய தோட்டக்கலை அமைப்புக்கு 1100 கோடி ரூபாய்.
 • தேயிலை ஆராய்ச்சி அமைப்புக்கு சிறப்பு ஒதுக்கீடாக 20 கோடி ரூபாய்.
 • தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சித் திட்டத்திற்கு 12,966 கோடி ரூபாய். [நீங்க பண்ற வளர்ச்சி திட்டங்களின் விவரங்களை அறிவிப்பு பலகையாக வைத்தால் அந்தப் பக்கம் போற வர்ற எங்களுக்கும் புரியுமில்லை.... எதுக்கெதுக்கோ தோரணங்களாம் வைக்கிறீங்க. ஒரு திட்ட வளர்ச்சியை பத்தி ஒரு அறிவிப்பு பலகை வைக்கமாட்டீங்களா?]
 • குழந்தைகள் மேம்பாட்டுக்காக அரசு இந்த ஆண்டு 24 சதவீதம் உயர்த்துகிறது. [ஓ... அப்பனா போன வருடமும் இதுமாதிரி ஒரு திட்டம் இருந்ததா?]
 • பள்ளிகளில் குடிநீர் வசதியை ஏற்படுத்த ரூ 200 கோடி.
 • துப்புரவு திட்டங்களுக்கு ரூ. 1200 கோடி.
 • தேசிய சிறுபான்மையினர் மேம்பாட்டு கழகத்துக்கு ரூ 75 கோடி.
 • தேசிய ஊனமுற்றோர் மேம்பாட்டு கழகத்துக்கு ரூ 9 கோடி.
 • சென்னை அருகே கடல்நீரை குடிநீராக்கும் தொழிற்சாலை நிறுவ ரூ 300 கோடி.
 • கல்வி நிலையங்களில் செயல்படுத்தப்பட்டுவரும் மதிய உணவு திட்டத்திற்கு ரூ. 8,000 கோடி.
 • பாரத் நிர்மாண் திட்டத்துக்காக ரூ 31,280.
 • நாட்டின் பாதுகாப்புத் துறைக்கு இந்த பட்ஜெட்டில் மொத்தம் 1,05,600 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 10 சதவீதம் அதிகம்.


2007-2008 ஆண்டில் நிறைவேறிய/நிறைவேற போகும் திட்டங்கள் இங்கே!!

முழு உரை

ஒண்ணும் புரியலைப்பா... நிதி அமைச்சர்கிட்ட நேரா கேள்விகேட்டாதான் புரியும் நினைக்கிறவங்க இங்க போய் முயற்சி செய்து பார்க்கலாம்.

மத்திய நிதி அறிக்கை / திட்டமிடல் 2008 - 2


 • சிறிய கார்கள் மீதான கலால் வரி 2 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இந்த வரி குறைப்பால் ரூ. 10,000 முதல் ரூ. 15,000 வரை விலை குறைய வாய்ப்புள்ளது.


 • இரு சக்கர வாகனங்களுக்கான வரி 16 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக குறைக்கப்படுகிறது. இதனால் இரு சக்கர வாகனங்களின் விலை குறையும்.


 • ஏடிஎம் மற்றும் வங்கிகளில் பணம் கையாள்வதற்கான வரி [Banking Cash Transaction Tax: (BCTT) ] ஏப்ரல் 1, 2008ம் தேதியிலிருந்து கிடையாது. ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ரூ 25,000 மேல் இனிமேல் எடுக்கலாம்.


 • கடலூர், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், ஆண்டிப்பட்டி(!) போன்ற இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரப் பகுதிகளில் மருத்துவமனை துவங்கினால் 5 ஆண்டுகளுக்கு வரி இல்லை.


              • அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வு சம்பந்தமாக ஆறாவது ஊதியக் குழு அடுத்த மாதம் (மார்ச் 2008) தனது அறிக்கையை தாக்கல் செய்யப்போகிறார்கள். அதன்பின் அதை ஆராய்ந்து அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்கபடும். [ அதுவரை விலைவாசி கட்டுப்படுத்துவீங்களா? ]

              • ஆந்திரப்பிரதேசம், பிகார் மற்றும் ராஜஸ்தானில் மூன்று ஐஐடிக்கள் நிறுவப்படும். மேலும் நாடு முழுவதும் 16 மத்திய பல்கலைக்கழகங்கள் அமைக்கப்படும்.

              • போபால், திரிபுராவில் அகில இந்திய அறிவியல் கழகங்கள் (IISc) உருவாக்கப்படும்.

              • நாடு முழுவதும் அடுத்த ஆண்டில் 6,000 பள்ளிகளைக் கட்ட திட்டம். கல்விக்கான ஒதுக்கீடு 20 சதவீதம் அதிகரிக்கப்படுகிறது.

              மத்திய நிதி அறிக்கை / திட்டமிடல் 2008 - 1

              இன்று (பெப்ரவரி 29,2008) காலை 11 மணி அளவில் நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் [7 வது முறை] நிதி அறிக்கை மற்றும் 2008 ஆண்டுகான திட்டமிடலை தாக்கல் செய்தார்.

              நான்கு வருடங்களாக எதிர்பார்த்த வரி விலக்கிற்கான வருமான அளவு இந்தாண்டுதான் உயர்த்தப்பட்டுள்ளது.

              விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது (நீங்களுமா ப.சி..?) .

              நல்ல செய்தி முதலில்....;)

              • வரி விலக்கிற்கான வருமான அளவு 1,10,000 ரூபாயிலிருந்து 1,50,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, இனி ரூ. 1,50,000 வருமானம் வரை வரி இல்லை.

              • பெண்களுக்கு வரி விலக்கிற்கான வருமான அளவு 1,45,000 ரூபாயிலிருந்து 1,80,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இனி 1,80,000 ரூபாய் வரை வருமானம் வரை வரி இல்லை.

              • மூத்த குடிமகன்களுக்கு வரி விலக்கிற்கான வருமான அளவு 1,95,000 ரூபாயிலிருந்து 2,25,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இனி அவர்கள் 2,25,000 ரூபாய் வரை வருமானம் வரை கட்ட தேவையில்லை.

              விரிவான அட்டவணை, எவ்வளவு சேமிப்பு போன்ற தகவல் இங்கே...

              Tuesday, February 26, 2008

              வரி விலக்கு: பரஸ்பர நிதி முதலீட்டில்

              பரஸ்பர நிதி முதலீட்டின் மூலம் வரி விலக்கு கிடைக்க சில வழிமுறைகள் இருக்கிறது. தெரிந்த விடயமாக இருந்தாலும், வரி கட்டும் நேரம் அல்லவா! அதனால் நம் நினைவுக்காக....

              ஈ.எல்.எஸ்.எஸ் [E.L.S.S - Equity Linked Saving Schemes]: வரிச் சேமிப்பை அடிப்படையாகக் கொண்ட திட்டம்

              வங்கிகளில் ஐந்தாண்டுகள் நிரந்தர முதலீடு செய்தாலும் வரிச்சலுகை கிடைக்கும்பொழுது இந்த திட்டத்தில் முதலீடு பண்ணவேண்டிய அவசியம் என்ன?

              என்ன கொஞ்சம் ஆசைதான்!

              வங்கிகளில் பண்ற முதலீடு 8 அல்லது 9 சதவீத வட்டி(தான்)! கடந்த வருடத்தில் ஈ.எல்.எஸ்.எஸ் திட்டங்கள் 25லிருந்து 30 சதவீதம் வருமானத்தை தந்துள்ளது. நல்ல வருமானம். அதற்கும்மேல் டிவிடெண்ட்!!

              • ஈ.எல்.எஸ்.எஸ் திட்டத்தில் செய்யும் முதலீட்டை மூன்று ஆண்டுகளுக்கு எடுக்க முடியாது.

              • மற்ற பரஸ்பர நிதிகளில் இருப்பதைப்போல இந்த திட்டத்திலும் வளர்ச்சி (Growth) மற்றும் டிவிடெண்ட் (Divident option)என்று இரண்டு வகையுண்டு.

              • இதிலும் எஸ்.ஐ.பி (S.I.P) திட்டம் இருக்கிறது. மாதத்திற்கு 500 ரூபாயிலிருந்து தொடங்கலாம்.

              • ஆனாலென்ன மற்ற திட்டங்களைப்போல வளர்ச்சிக்கும், டிவிசெண்ட்க்கும் மாற முடியாது.

              வைப்பு நிதி (PF) போல் கடைசி நேரத்தில் முதலீடு செய்யாமல், நிதி ஆண்டின் தொடக்கத்திலேயே முதலீட்டு செய்வது நல்லது. பங்குச்சந்தைகள் 'காளை'யாகும் பொழுது இந்த திட்டத்திலிருந்து சில வருமானங்களும் வர வழியுண்டு.

              இது வரி விலக்கில் 80C கீழ் வரும்.

              அதலாம் சரி... எந்த ஈ.எல்.எஸ்.எஸ் திட்டங்களில் முதலீடு செய்வது?

              இதுக்கு பதில் சொல்றதுதான் கஷ்டம்! வழக்கம்போல் பரஸ்பர நிதி இணையதளத்தில் விவரங்களை தேடலாம். கடந்த காலகட்டத்தில் இதில் இருக்கும் திட்டங்களின் செயல்பாடுகளைக் கருத்தில் கொண்டு முடிவு செய்யலாம்.

              அப்படி பார்த்த சில திட்டங்கள்:

              1. HDFC Tax saver

              2. Magnum Tax gain

              3. Birla Sun Life Tax Relief '96

              4. Sundaram BNP Paribas Taxsaver

              இதில் சேரும் புதிய பரஸ்பர நிதி: SBI TAX Advantage Fund - Series I. மார்ச் 3, 2008ம் தேதியுடன் முடிவடைகிறது. 10 வருடம் காலவரையுள்ள திட்டம் (Closed Ended Fund Type). இப்பொழுதுதான் புதுசாக சந்தைக்கு வரப்போவதால் உள்ளே 'நுழைய' (entry load) கட்டணமில்லை. 'வரலாறு' இல்லாததால் இப்பொழுது இதை தவிர்ப்பது நல்லது.              Monday, February 25, 2008

              பெடரல் ரிசர்வ் அமைப்பு - நம்பகத்தன்மையும், சந்தேகங்களும்...

              இப்பொழுதுலாம் "நமீதா", "தசவராதம்"க்கு நிகராக அதிகம் செய்திதாள்கள், தொலைக்காட்சிகளில் வருவது "அமெரிக்கா - பெடரல் ரிசர்வ் வங்கி" பற்றிய செய்திகள்தான்.

              அமெரிக்கா ... ஏன் உலக பொருளாதாரத்தையே ஆட்டி படைக்கும் அந்த அமைப்பே ஒரு பித்தலாட்டம் னு யாராவது சொன்னா இதலாம் சும்மா stuntக்கு சுப்பிரமணி சுவாமி சொல்றத போலதான் நம்ம நினைக்கலாம். அதையே கொஞ்சம் விளக்கத்தோட, விஜயகாந்த் பாணியில புள்ளி விவரங்களுடன் சொன்னா....??


              * பெடரல் ரிசர்வ் அமைப்புனா என்ன? எப்பொழுது ஆரம்பிக்கபட்டது? எதனால்?

              * அதில் இருக்கும் உறுப்பினர்கள் யார் யார்? இது அமெரிக்கா ஜனாதிபதிக்கே தெரியாத இரகசியமாமே!!

              * இந்த நிமிடம் வரை அமெரிக்காவின் கடன் 9 டிரில்லியன் அமெரிக்க வெள்ளிகளுக்கும் மேல் [ஒன்பதுக்கு அப்புறம் 12 பூஜ்ஜியங்கள் !!?].

              * Why the Federal Reserve Violates the U.S. Constitution?

              இப்படி பல கேள்விகளுக்கு அதிர்ச்சிதரகூடிய பதில் சொல்கிறார்கள் 'Fiat Empire' என்ற இணையதளத்தில்!

              அவர்கள் தயாரித்த குறும்படத்தின் பெயர், "Fiat Empire". இவர்களும் மைக்கேல் மூரையை போல புள்ளி விவரங்களுடன் பெடரல் ரிசர்வ் அமைப்பையே கிழி கிழியென்று கிழிக்கிறார்கள்!

              குறும்படம்: Fiat Empire
              [கொஞ்சம் பொறுமையா பார்க்கணும்.. ;) ]

              இன்னும் விரிவாக தெரிந்து கொள்ள .......

              1) Ed Griffin எழுதிய “The Creature from Jekyll Island : A Second Look at the Federal Reserve”

              2) Dr. Edwin Vieira, Ph.D., J.D. ன் "Pieces of Eight "              நன்றி: செல்வராஜ், டைனோ மற்றும் surveysan.

              Friday, February 22, 2008

              கணக்கியல் கலைச்சொற்கள் -- 1

              கணக்கியல் - Accounting

              நிதிநிலை கணக்கியல் - Financial Accounting

              அடக்க விலை கணக்கியல் - Cost Accounting

              மேலாண்மை கணக்கியல் - Management Accounting

              நடவடிக்கைகள் - Transactions

              ரொக்க நடவடிக்கை - Cash Transaction

              கடன் நடவடிக்கை - Credit Transaction

              உரிமையாளர் - Proprietor

              முதல் - Capital

              சொத்துகள் - Assets

              பொறுப்புகள் - Liabilities

              எடுப்புகள் - Drawings

              கடனாளிகள் - Debtors

              கடனீந்தோர் - Creditors

              கொள்முதல் - Purchases

              கொள்முதல் திருப்பம் (அ) வெளித் திருப்பம் - Purchases Return Or Purchases Outward

              சான்று சீட்டு - Voucher

              இடாப்பு - Invoice

              பற்றுச்சீட்டு - Receipt

              செலுத்துச் சீட்டு - Pay-in-slip

              பங்காளர்கள் - Equaities


              நடைமுறையில் invoiceக்கு 'இடாப்பு'னா சொல்றோம்...ம்ம்ம்... ;(


              ** 11ம் வகுப்பு கணக்கியல் பாடப் புத்தகத்தில் படித்தது. படிக்க படிக்க இங்கே சேர்க்கலாம் என்பது எண்ணம்.
              ** மா.சி பதிவில் எங்கேயோ பார்த்ததாக நினைவு. இப்பொழுது கண்டுபிடிக்க முடியவில்லை.

              Monday, February 11, 2008

              மைக்ரோசாஃப்ட் & யாஹூவா அல்லது யாஹூ & AOLஆ?

              யாஹூ நிறுவனத்தை மைக்ரோசாஃப்ட் வாங்கபோவதாக வந்த செய்தி தெரிந்ததுதான். யாருக்கு பலனோ... யாஹூ நிறுவனப் பங்குகள் 18,19 அமெரிக்க வெள்ளிகளிலிருந்து 29.65 வரை சென்றது. (1999-2000ல் யாஹூ பங்கின் விலை 120 $ )

              முன்கதை சுருக்கம் இங்கே..

              இட்லிவடை

              சற்றுமுன் ...

              போன வருடமே 'இரகசியாமாய்' கேட்டுப்பார்த்த, மைக்ரோசாஃப்ட்... இந்தமுறை 'அதிரடியாய்'! இது நடந்திருந்தால் தகவல் தொழில்நுட்ப உலகில் மிகப்பெரிய வியாபரமாய் இருந்திருக்கும். அதற்கான அறிகுறி இப்பொழுது பிரகாசமாய் இருப்பதாக தெரியவில்லை. NBC, பத்திரிக்கை உலகின் சக்ரவர்த்தி Rupert Murdoch போன்றவர்களும் யாஹூவை வாங்க 'களம்' இறங்குவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

              இரண்டு நாட்களுக்கு முன்பு - யாஹு மைக்ரோசாஃப்டின் கோரிக்கையை ஆராய்ந்து, " 'ரொம்ப கம்மி' - பங்கொன்றிற்கு 40 அமெரிக்க வெள்ளிக்கு மேலன சொல்லு. மறுபடியும் consider பண்றோம்' சொல்லிருக்கு.

              இப்ப யாஹூ AOLயை வாங்கப் போவதாக இன்னொரு செய்தியும் வந்திருக்கு.

              இதுக்கெடையில் ஒருபக்கம் கூகிள் மைக்ரோசாஃப்ட்யை கொஞ்சம் கடுமையாகவே தாக்க..... இந்தப்பக்கம் யாஹூவிடம் 'நாங்கனா உன்னோட Search engine க்கு உதவுறோம்.' னு ஆசை காட்ட... யாஹூ கொஞ்சம் குழம்பி போய்தான் இருக்கு.

              இதுமாதிரி திமிலங்கள் திமிலங்களை விழுங்குவது ஒன்றும் புதிதில்லை.

              AT&T Cingular ஆவதும் மீண்டும் சில பில்லியன் அமெரிக்க வெள்ளிகள் செலவழித்து Cingular AT&T ஆகும் காமெடியும் நடக்கும்.

              2000ல் ஜெர்மனியின் மிகப்பெரிய கைதொலைபேசி நிறுவனமான Mannesmann AGயை Vodafone 175 பில்லியன் அமெரிக்க வெள்ளிக்கும், 2001ல் AOLல் Time Warnerயை 124 பில்லியன் அமெரிக்க வெள்ளிக்கும் வாங்கியது.

              PeopleSoft, Siebel, BEA போன்ற நிறுவனங்கள் இப்பொழுது Oracle கைவசம்.

              சமீபத்தில்தான் மைக்ரோசாஃப்ட் 6 பில்லியன் அமெரிக்க வெள்ளிக்கு AQuantive Inc. என்ற நிறுவனத்தை 'கைப்பற்றியது'

              ம்ம்ம்... யாஹூவுக்கு பதில் சொல்ல மைக்ரோசாஃப்ட்க்கு இன்னும் ஒரு மாதம் அவகாசம் இருக்கிறது.

              யாரை யார் வாங்கினனலும் நம்மைபோல மக்களுக்கு இன்னும் பல (இலவச)சேவைகள் கிடைக்கும். அதுவும் நல்லதுதான்....