Unit-Linked Insurance Plan (ULIP) ... தலைப்பே ஓரளவு சொல்லுது இல்லையா?
ULIPனா காப்பீடு மற்றும் முதலீடு. அதாவது நாம் இந்த திட்டத்தில் செய்யும் முதலீட்டில் ஒரு பகுதி காப்பீட்டுக்கும் மற்றொரு பகுதி மியூச்சுவல் ஃபண்டிலும் முதலீடு செய்வார்கள்.....இரண்டும் சேர்ந்த கலவை.....
என்னுடைய தனிப்பட்ட கருத்து....... மியூச்சுவல் திட்டத்தையும் ULIPயும் ஒப்பிட்டு பார்ப்பது சரியல்ல. இரண்டும் வேற வேற நோக்கத்திற்காக....
எம்.ஜி.ஆர், ரஜினி படங்களில் எப்படி சிவாஜி, கமல் படங்களில் இருக்கும் 'சில' விசயங்களை எதிர்பார்க்ககூடாதோ ... அல்லது கைதொலைபேசியில் படம் எடுத்தல், பாட்டு கேட்டல் போன்றவைகள் இருந்தாலும் நோக்கம் பேசுவது.. மற்றவைகள் முழு நிறைவாக இருக்காதோ.. அது போல...
'எப்பவுமே கடைசியிலதான் குழப்புவ.. இப்ப என்ன முதலேயே ...' னு யோசிக்காதீங்க.. சரி ...விசயத்துக்கு வருவோம்...
மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் ...
- முதலீடு.
- 30 நாட்களிலிருந்து 3 வருடம் மற்றும் அதற்கும் மேலாக... நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்யலாம்.
- ஒரு திட்டத்திலிருந்து மற்றொரு திட்டத்திற்கு மாறுவது எளிது.
- அதேபோல் விற்பதும் எளிது. ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் ATMகளில்லேயே நாம் காசாக்கி கொள்ளலாம் என்றளவுக்கு எளிதாகி விட்டது.
- எல்.எஸ்.எஸ் [E.L.S.S - Equity Linked Saving Schemes] திட்டங்கள் மட்டும்தான் வரிச் சேமிப்பை அடிப்படையாகக் கொண்டது (80C).
- பாதுகாப்பு மற்றும் முதலீடு.
- மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் போல் இல்லாமல் நீண்ட கால அடிப்படையில் மட்டுமே முதலீடு செய்தால் நல்லது. உ.தா. குழந்தைகளின் படிப்பு / கல்யாணம் செலவு, நமது ஓய்வுகால திட்டம் ......
- விற்பதற்கு முன் ஒரு குறிப்பிட்ட காலமாவது அந்த திட்டத்தில் இருக்க வேண்டும்.
- 80Cன் கீழ் வரிச் சேமிப்பை அடிப்படையாகக் கொண்டது.
என்னென்ன ULIP திட்டம் இருக்கிறது? உதாரணத்திற்கு....
HDFC Unit Linked Endowment Plus
நாம் தேர்ந்தெடுக்கும் ULIP திட்டத்தை பொறுத்து, முதலீடு செய்யும் பணத்தில் 'பிடித்தம்'போக 70-80 சதவீதம் வரைதான் முதலீடு செய்வார்கள். அதாவது திட்டத்தில் ஒரு இலட்சம் ரூபாய் முதலீட்டுக்காக் கொடுத்தால் அதில் 30, 000 ரூபாயிலிருந்து 80,000 ரூபாய்தான் முதலீடு செய்வார்கள்.
நம்மிடம் யாரவது (ICICI, Bajaj, HDFC...) ULIPல் 'மூணு வருசம் கட்டினா போதும்ங்க.. அதுக்கப்புறம் நல்ல முதலீடா நமக்கு திரும்பி கிடைக்கும்' சொன்னா ...அவர்களிடம் நாம் கேட்க வேண்டிய கேள்வி .....
நாம் செய்யும் முதலீடு தொகை, கால அளவு [3/10/20 வருடங்கள்] அந்த குறிப்பிட்ட கால அளவில் நமக்கு திரும்பி கிடைக்கும் தொகை - இவற்றை ஒரு ஒப்பீடு போடச் சொல்லுங்கள். வித்தியாசம் எளிதாக புரிந்து விடும்.
மியூச்சுவல் ஃபண்டில் entry load, exit load இருப்பதைப்போல ULIPல் ஏதேனும் கட்டணம் (Hidden charges) வசூலிக்கப்படுமா?
பொதுவாக, நிறுவனங்களைப் பொறுத்து இந்த கட்டணம் தொகை அளவு மாறும். அவை: Loading Charges , Fund Management Charge , Admin Charge, Loyalty Bonus..... இன்னும் ஏதும் இருக்கா..?
இந்த தொகையை கணக்கில் கொண்டால் நீண்ட வருட முதலீடு (அதாவது 15- 25 வருடம்) என்றால் மட்டும் ULIP திட்டத்தை தேர்ந்தெடுப்பது நல்லது.