Unit-Linked Insurance Plan (ULIP) ... தலைப்பே ஓரளவு சொல்லுது இல்லையா?
ULIPனா காப்பீடு மற்றும் முதலீடு. அதாவது நாம் இந்த திட்டத்தில் செய்யும் முதலீட்டில் ஒரு பகுதி காப்பீட்டுக்கும் மற்றொரு பகுதி மியூச்சுவல் ஃபண்டிலும் முதலீடு செய்வார்கள்.....இரண்டும் சேர்ந்த கலவை.....
என்னுடைய தனிப்பட்ட கருத்து....... மியூச்சுவல் திட்டத்தையும் ULIPயும் ஒப்பிட்டு பார்ப்பது சரியல்ல. இரண்டும் வேற வேற நோக்கத்திற்காக....
எம்.ஜி.ஆர், ரஜினி படங்களில் எப்படி சிவாஜி, கமல் படங்களில் இருக்கும் 'சில' விசயங்களை எதிர்பார்க்ககூடாதோ ... அல்லது கைதொலைபேசியில் படம் எடுத்தல், பாட்டு கேட்டல் போன்றவைகள் இருந்தாலும் நோக்கம் பேசுவது.. மற்றவைகள் முழு நிறைவாக இருக்காதோ.. அது போல...
'எப்பவுமே கடைசியிலதான் குழப்புவ.. இப்ப என்ன முதலேயே ...' னு யோசிக்காதீங்க.. சரி ...விசயத்துக்கு வருவோம்...
மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் ...
- முதலீடு.
- 30 நாட்களிலிருந்து 3 வருடம் மற்றும் அதற்கும் மேலாக... நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்யலாம்.
- ஒரு திட்டத்திலிருந்து மற்றொரு திட்டத்திற்கு மாறுவது எளிது.
- அதேபோல் விற்பதும் எளிது. ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் ATMகளில்லேயே நாம் காசாக்கி கொள்ளலாம் என்றளவுக்கு எளிதாகி விட்டது.
- எல்.எஸ்.எஸ் [E.L.S.S - Equity Linked Saving Schemes] திட்டங்கள் மட்டும்தான் வரிச் சேமிப்பை அடிப்படையாகக் கொண்டது (80C).
- பாதுகாப்பு மற்றும் முதலீடு.
- மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் போல் இல்லாமல் நீண்ட கால அடிப்படையில் மட்டுமே முதலீடு செய்தால் நல்லது. உ.தா. குழந்தைகளின் படிப்பு / கல்யாணம் செலவு, நமது ஓய்வுகால திட்டம் ......
- விற்பதற்கு முன் ஒரு குறிப்பிட்ட காலமாவது அந்த திட்டத்தில் இருக்க வேண்டும்.
- 80Cன் கீழ் வரிச் சேமிப்பை அடிப்படையாகக் கொண்டது.
என்னென்ன ULIP திட்டம் இருக்கிறது? உதாரணத்திற்கு....
HDFC Unit Linked Endowment Plus
நாம் தேர்ந்தெடுக்கும் ULIP திட்டத்தை பொறுத்து, முதலீடு செய்யும் பணத்தில் 'பிடித்தம்'போக 70-80 சதவீதம் வரைதான் முதலீடு செய்வார்கள். அதாவது திட்டத்தில் ஒரு இலட்சம் ரூபாய் முதலீட்டுக்காக் கொடுத்தால் அதில் 30, 000 ரூபாயிலிருந்து 80,000 ரூபாய்தான் முதலீடு செய்வார்கள்.
நம்மிடம் யாரவது (ICICI, Bajaj, HDFC...) ULIPல் 'மூணு வருசம் கட்டினா போதும்ங்க.. அதுக்கப்புறம் நல்ல முதலீடா நமக்கு திரும்பி கிடைக்கும்' சொன்னா ...அவர்களிடம் நாம் கேட்க வேண்டிய கேள்வி .....
நாம் செய்யும் முதலீடு தொகை, கால அளவு [3/10/20 வருடங்கள்] அந்த குறிப்பிட்ட கால அளவில் நமக்கு திரும்பி கிடைக்கும் தொகை - இவற்றை ஒரு ஒப்பீடு போடச் சொல்லுங்கள். வித்தியாசம் எளிதாக புரிந்து விடும்.
மியூச்சுவல் ஃபண்டில் entry load, exit load இருப்பதைப்போல ULIPல் ஏதேனும் கட்டணம் (Hidden charges) வசூலிக்கப்படுமா?
பொதுவாக, நிறுவனங்களைப் பொறுத்து இந்த கட்டணம் தொகை அளவு மாறும். அவை: Loading Charges , Fund Management Charge , Admin Charge, Loyalty Bonus..... இன்னும் ஏதும் இருக்கா..?
இந்த தொகையை கணக்கில் கொண்டால் நீண்ட வருட முதலீடு (அதாவது 15- 25 வருடம்) என்றால் மட்டும் ULIP திட்டத்தை தேர்ந்தெடுப்பது நல்லது.
21 comments:
Excellent Post!
Thanks
வாங்க சிவபாலன்!
MP3 பாடல்களின் சுட்டிக்கு நன்றி!!
ULIP பற்றி சொன்னது மட்டுமில்லாம... என்ன மாதிரி கேள்வி கேட்கனுமின்னு சொல்லியது அருமை. பல வேளைகளில் நாம் கேள்வி கேட்காததால் புரியாமல் விழிக்க நேரிடும். ஏண்டா முதல்ல சொல்லலன்னு கேட்டோமின்னா.... அது தான் பாரத்தில கீழே எழுதியிருக்குதேன்னு fine writing காமிப்பாங்க. நன்றி தென்றல்!
ULIP திட்டத்தின் சாதக பாதகங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. நான் மூன்றாண்டுகளுக்கு முன் பஜாஜ் அலயன்சின் ULIP திட்டத்தில் சேர்ந்தேன். இந்த ஆண்டு என் மூன்றாண்டு முதலீடுகளும் எவ்வளவு பணம் ஈட்டியிருக்கிறது என்று பார்க்கும் போது ஆண்டுக்கு 8 சதவிகிதத்தை தாண்டவில்லை. இத்தனைக்கும் நான் எனது ULIP முதலீட்டில் 80% பங்குச் சந்தையில் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்திருந்தேன். இந்த மூன்றாண்டும் பங்குச் சந்தை அபாரமாக வளர்ந்தும் எனது ULIP முதலீடு பெருகாததற்கு காரணங்கள்:
1. முதலாண்டில் எனது முதலீட்டில் 70 சதவிகிதம் முகவர் கமிஷனுக்கும் (30%), பஜாஜ் அலயன்ஸ் நிர்வாகச் செலவுகளுக்கும் போய் விட்டது.
2. ஒவ்வொரு மாதமும் எனது ஆயுள் காப்பிற்கான தொகை முதலீட்டிலிருந்து கழிக்கப்பட்டு விடுகிறது. அதாவது உங்களுக்கு ULIP ஆயுள் காப்பீடு 1 லட்சம் என்றால், அதற்கான மாதக் கட்டணம் மாதம் ரூ 200 இருக்கலாம். அதை நீங்கள் செலுத்தும் தொகையிலிருந்து கழித்து விட்டு மீதிப் பணம்தான் முதலீடு செய்யப்படுகிறது.
3. ULIP முதலீட்டிற்குள் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு திட்டத்திற்கும் 5% வருடாந்திர சேவைக் கட்டணம் வசூலிருக்கிறார்கள். இது தவிர, முதல் மூன்றாண்டுகளில் பஜாஜ் அலயன்ஸ் சேவைக் கட்டணமாக 3% வருடா வருடம் வசூலித்து விடுகிறது. பரஸ்பர நிதிகள் இந்த மாதிரி வசூலிப்பது 2% சதவிகிதத்தை தாண்டினாலே அது அதிகம் என்கிறார்கள். முதலீட்டில் ஆண்டொன்றுக்கு 5-8% இப்படி வீணாவது முறையன்று. அதிலும் முதலீடுகள் நஷ்டமடையும் ஆண்டுகளில், இந்த கட்டணங்கள் முதலுக்கே பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தும். நீங்கள் ஒரு ஆண்டு முதலீடே செய்யாவிட்டாலும் ஏற்கனவே உங்களது கணக்கில் இருக்கும் முதலில் இருந்து இந்தக் கட்டணங்களுக்கான பணத்தை எடுத்துக் கொள்வார்கள்.
4. ULIP திட்டத்தில் வரிச் சலுகை இருப்பது உண்மைதான். ஆனால், அந்த வரி சலுகை உங்களுக்கு வருமானம் 5 லட்சத்திற்கு கீழே இருந்தாலும், நீங்கள் ஆயுள் காப்பீட்டிற்காக செலுத்தும் தொகை 1 லட்சத்திற்கு கீழே இருந்தாலும் மட்டுமே.
எனது பஜாஜ் அலயன்ஸ் ULIP அனுபவத்தை வைத்துப் பார்த்தால், ULIP-ஐ விட பரஸ்பர நிதித் திட்டங்களில் மாதாமாதம் முதலீடு செய்வதுதான் சாலச் சிறந்தது. கடந்த மூன்றாண்டுகளில் எனது பரஸ்பர நிதி முதலீடுகள், ஆண்டொன்றுக்கு 20 முதல் 70 சதவிகிதம் பணம் ஈட்டியிருக்கின்றன. அவற்றை நான் என் விருப்பப்படி எப்போது வேண்டுமானாலும் விற்கலாம். சந்தையின் போக்குகளையும், எனது நிதி நிலைமையையும் வைத்து கூடுதலாகவோ, குறைவாகவோ முதலீடு செய்யலாம். இந்த வசதிகள் ULIP-ல் கிடையாது.
வாங்க, காட்டாறு!
ஏவிஎஸ், உங்களின் அனுபவத்தை பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி!
ULIP ஐ மற்ற முதலீட்டுத்திட்டங்களுடன்( Ex: Mutual Fund )ஒப்பிடுவதைவிட அதை மற்ற இன்சூரன்ஸ் திட்டங்களுடன் ஒப்பிடுவதே நல்லது.
என்னை பொருத்தவரை ULIP என்பது ஓர் ஃப்ராட் திட்டம்.
மக்கள் இன்சூரன்ஸ் காப்பீடு என்றால் என்ன. ஏன் வேண்டும். நமக்கு எவ்வளவு தேவை மற்றும் இன்வஸ்ட்மெண்ட் இரண்டையும் தனி தனியாக பிரித்து பார்க்க
கற்றுக்கொள்ள வேண்டும்.
எல்.ஐ.சி யின் அன்மோல் ஜீவன் தவிர எந்த ஒரு திட்டமும் ப்யூர் இன்சூரன்ஸே கிடயாது.
இதில் 5 லட்ச ரூபாய் காப்பீட்டுக்கு 30 வயது உடயவருக்கு வருடத்திற்கு ப்ரீமியம் சுமார் 1750 ரூபாய்தான்.
இதே அளவு காப்பீடுக்கு வேறு திட்டங்களில் மணி பேக் ஆகட்டும், யூலிப் ஆகட்டும் குறைந்த பட்சம் 20,000 முதல் 25,000 ரூபாய் கட்ட வேண்டும்.
5 லட்சத்திற்கு ஒரு அன்மோல் ஜீவனும் ப்ரீமியம் ரூ 1750 மீதி 17,250 ஐ பங்கு சந்தையில் நேரடியாகவோ அல்லது ம்யூசுவல் ஃபண்ட் திட்டங்களிலோ போட்டுவந்தால் முதலீட்டின் மேல் வருடததிற்கு 20 முதல் 25 சதவிகிதம் வருமானம் எதிர் பார்க்க முடியும்.
மற்றபடி உங்கள் பதிவை நான் தொடர்ந்து படித்து வருகிறேன். உங்களின் இந்த பதிவுக்கு வாழ்த்துக்கள்.
சில சில இடங்களில் சிறு சிறு பிழை என எனக்கு தோன்றினாலும் இதுவரை கமெண்ட் போடவில்லை.
ஏன்னா தமிழ்ல படிக்கிறது ஸ்டாங், டைப்பிங் வீக்.
மங்களூர் சிவா
/கல்வெட்டு (எ) பலூன் மாமா ...
ULIP ஐ மற்ற முதலீட்டுத்திட்டங்களுடன்( Ex: Mutual Fund )ஒப்பிடுவதைவிட அதை மற்ற இன்சூரன்ஸ் திட்டங்களுடன் ஒப்பிடுவதே நல்லது.
/
வாங்க, கல்வெட்டு!
என் எண்ணமும் அதுவே! நண்பர் ஒருவரிடம் பேசி கொண்டிருந்த போது தெரிந்து கொண்ட தகவல்கள்!
ம்ம்ம்... 'பலூன் மாமா' பேருக்கு ஏதும் காரணம் உண்டா?
வாங்க மங்களூர் சிவா!
உங்களின் கருத்துக்கு மிக்க நன்றி!
/மற்றபடி உங்கள் பதிவை நான் தொடர்ந்து படித்து வருகிறேன். உங்களின் இந்த பதிவுக்கு வாழ்த்துக்கள்./
நன்றி!
/சில சில இடங்களில் சிறு சிறு பிழை என எனக்கு தோன்றினாலும் இதுவரை கமெண்ட் போடவில்லை.
/
என்னனு சொல்லிருந்தா நல்லாருக்குமே......!
/ஏன்னா தமிழ்ல படிக்கிறது ஸ்டாங், டைப்பிங் வீக்./
டைப்பிங் வீக்னு சொல்லிட்டு உங்க வலைப்பூல பட்டைய கிளப்புறீங்க! வாழ்த்துக்கள்!!
// என் எண்ணமும் அதுவே! நண்பர் ஒருவரிடம் பேசி கொண்டிருந்த போது தெரிந்து கொண்ட தகவல்கள்!//
இன்சூரன்ஸ் மற்றும் Mutual Fund / பங்கு சந்தை... விசயங்களை கலந்துகட்டி ULIP ஆக கொடுக்கிறார்கள்.
***
இன்சூரன்ஸ்- என்று தேடினால் அதில் ULIP திட்டமும் ஒரு option ஆக பரிந்துரைக்கப்படுகிறது.
ஆனால் முதலீடு (பங்குகள்/ Mutual Fund) - என்று தேடினால் அதில் ULIP ஒரு option ஆக பரிந்துரைக்கப்படுவது இல்லை.
**
குபேரா சிட் பண்டு, அனுபவின் தேக்கு மரம், புளிய மரம் வளர்ப்பு திட்டங்கள் போல் இல்லாமல் ULIP நிச்சயம் ஒரு நம்பகமான திட்டம்தான். :-))
***
// வாங்க, கல்வெட்டு! //
// ம்ம்ம்... 'பலூன் மாமா' பேருக்கு ஏதும் காரணம் உண்டா?//
ஏங்க அநியாயமா இருக்கு :-)
கல்வெட்டு - க்கு பெயர்க்காரணம் கேட்காமல் அதை ஏற்றுக் கொண்டீர்கள் ஆனால் பலூன் மாமா- விற்கு மட்டும் விளக்கமா?
பலூன் மாமா -- > பார்க்க balloonmama.net
//குபேரா சிட் பண்டு, அனுபவின் தேக்கு மரம், புளிய மரம் வளர்ப்பு திட்டங்கள் போல் இல்லாமல் ULIP நிச்சயம் ஒரு நம்பகமான திட்டம்தான். //
@ பலூன் மாமா
ஐயா,
யூலிப்பை ம்யூச்சுவல் பண்டுடன் ஒப்பிட வேண்டாம் யூலிப்பை வேறு நிறுவனத்தின் யூலிப்புடன் ஒப்பிட வேண்டும் என சொல்லிவிட்டு தாங்கள் குபேரா சிட் பண்டு, அனுபவின் தேக்கு மரம், புளிய மரம் வளர்ப்பு போன்றவற்றுடன் ஒப்பிட்டு இதற்கு அது பரவாயில்லை என சொல்வது சரியா??.
அவைகளில் முதலீடு செய்துவிட்டு தலையில் துண்டு போட்டுக்கொண்டு பனகல் பார்க்கில் ஒரு கூட்டம் அலைந்ததை இன்னும் அலைவதை மக்கள் மறந்திறுக்க மாட்டார்கள் மறக்கவும் மாட்டார்கள்.
ஷேர் ட்ரேடிங்கில் பணத்தை தொலைத்தவர்கள் இல்லயா?
அப்போதும் இப்போதும் எப்போதும் ஒரே பாடம் தான் பேராசை பெரு நஷ்டம்.
@தென்றல்
//என்னனு சொல்லிருந்தா நல்லாருக்குமே......! //
அவை உங்களின் பழைய பதிவுகள். இனிமேல் ஏதும் இருந்தால் உடனுக்குடன் தெரிவிக்கிறேன்.
//டைப்பிங் வீக்னு சொல்லிட்டு உங்க வலைப்பூல பட்டைய கிளப்புறீங்க! வாழ்த்துக்கள்!! //
இன்னும் இ-கலப்பை பழகவில்லை. சில இணைய பக்கங்களின் உதவியுடன் தமிங்கிலிஷ் மூலம் சமாளித்து வருகிறேன்.
வாழ்த்துக்களுக்கு நன்றி.
மங்களூர் சிவா
/ஏங்க அநியாயமா இருக்கு :-)
கல்வெட்டு - க்கு பெயர்க்காரணம் கேட்காமல் அதை ஏற்றுக் கொண்டீர்கள் .../
நல்ல கேள்விங்க..;)!
முதன் முதலில் உங்க பதிவை படித்த பொழுது 'கல்வெட்டு' என்று 'அறிமுகம்' ஆனதாக நினைவு! பின்பு 'கல்வெட்டு என்ற பலூன் மாமா'வாக சில பின்னூட்டம் பார்த்ததால் வந்த சந்தேகம்.
விளக்கத்திற்கு நன்றி!
'பலூன் மாமா' [balloonmama.net ]
வலைப்பூவை இரசித்தேன்!
mglrssr ,
// யூலிப்பை ம்யூச்சுவல் பண்டுடன் ஒப்பிட வேண்டாம் யூலிப்பை வேறு நிறுவனத்தின் யூலிப்புடன் ஒப்பிட வேண்டும் என சொல்லிவிட்டு தாங்கள் குபேரா சிட் பண்டு, அனுபவின் தேக்கு மரம், புளிய மரம் வளர்ப்பு போன்றவற்றுடன் ஒப்பிட்டு இதற்கு அது பரவாயில்லை என சொல்வது சரியா??. //
நிச்சயம் தவறுதான்.
ஒரு இடத்தில் //என்னை பொருத்தவரை ULIP என்பது ஓர் ஃப்ராட் திட்டம். // என்று சொல்லப்பட்டு இருந்ததால் இதைச் சொல்ல நேர்ந்தது. அது உங்களின் பார்வைதான் என்றாலும் இவ்வாறு சொல்ல நேர்ந்தது.
// அப்போதும் இப்போதும் எப்போதும் ஒரே பாடம் தான் பேராசை பெரு நஷ்டம்.//
உணமைதான்.
நன்றி!
தென்றல்,
//முதன் முதலில் உங்க பதிவை படித்த பொழுது 'கல்வெட்டு' என்று 'அறிமுகம்' ஆனதாக நினைவு! பின்பு 'கல்வெட்டு என்ற பலூன் மாமா'வாக சில பின்னூட்டம் பார்த்ததால் வந்த சந்தேகம். //
கல்வெட்டும் , பலூன்மாமா பதிவும் தனித்தனியாக இருந்தது. புது பிளாக்கருக்கு மாறிய போது ஒரே gmail account -ல் எல்லாம் வந்துவிட்டது.
தென்றல் எங்க ரொம்ப நாளா பார்க்கவே முடியலை...ரெம்பபபப பிஸியா..:-))... இல்லை குட்டி பாப்பா கிட்டவே உக்கார்ந்துட்டு இருக்கீங்களா..
விசாரிப்புக்கு நன்றி, மங்கை!
வேலையின் காரணமாக மாற்றம், புது இடம் / வேலை, அலைச்சல் ...
அப்புறம் நீங்கள் குறிப்பிட்டதுபோல இரண்டு குட்டி தேவதைகளுடன்னு... நேரம் சரியாக இருக்குது!
சமீபத்தில்தான், 'ஆண்களுக்கு வரும் மசக்கை' லிருந்து ' தில்லி- Crime Capital' வரை பதிவுகளை பார்த்தேன். பின்னூட்டம்தான் போடவில்லை!
@ பலூன் மாமா
ஐயா
// யூலிப்பை ம்யூச்சுவல் பண்டுடன் ஒப்பிட வேண்டாம் யூலிப்பை வேறு நிறுவனத்தின் யூலிப்புடன் ஒப்பிட வேண்டும் என சொல்லிவிட்டு தாங்கள் குபேரா சிட் பண்டு, அனுபவின் தேக்கு மரம், புளிய மரம் வளர்ப்பு போன்றவற்றுடன் ஒப்பிட்டு இதற்கு அது பரவாயில்லை என சொல்வது சரியா??. //
நிச்சயம் தவறுதான்.
//
வாதம் ஆரோக்யமாக இருக்க வேண்டும் என்பதற்காக கேட்டதுதான் அது. மற்றபடி வேற எதுவும் இல்லை.உங்களின் baloonmama.net சூப்பர்.
//
ULIP என்பது ஓர் ஃப்ராட் திட்டம். என்று சொல்லப்பட்டு இருந்ததால் இதைச் சொல்ல நேர்ந்தது. அது உங்களின் பார்வைதான் என்றாலும் இவ்வாறு சொல்ல நேர்ந்தது.
//
Concept of Insurance, Functioning of Insurance எல்லாம் படித்ததால், மற்றும் அத்துறையில் இருக்கும் சிலர் தொடர்பு இருந்ததாலும், இன்சுரன்ஸ் மற்றும் இன்வ்ஸ்மெண்ட் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்ற ஆதங்கத்தாலும் Fraud என்று சொல்லியிருப்பேன்.
Fraud என்பது தகாத வார்த்தையாக இருந்திருக்கலாம் ஆனால் எனக்கு இன்னும் சரியான வார்த்தை கிடைக்கவில்லை.
இதற்கு ஏ.வி.எஸ் ஐயா அவர்களின் பின்னூட்டம் ஒன்றே போதும்.
மூன்று வருடம் கட்டினால் போதும் 30 வருடத்திற்கு காப்பீடு கிடைக்கும் இவ்வளவு ரிட்டன் கிடைக்கும் அவ்வளவு கிடைக்கும் என wrong guidence வேறு.
அவங்க ஒரு ரிட்டர்ன்ஸ் சார்ட் எல்லாம் காட்டுவாங்க கண்டிப்பா நிறைய பேர் பாத்திருப்பீங்க LIC யும் இதற்கு விதி விலக்கு அல்ல (இவங்களும் சார்ட் காட்டறாங்களே).
மூன்று வருட 'bull run'ல் நல்ல வருமானம் ஈட்டி தர முடியாதவர்கள் 'bear pahse' or 'sideway movement' நீடித்தால் என்ன செய்வார்கள்??
தென்றல் இடம் குடுத்திருக்கார் நிறைய பேசலாம். என்ன தென்றல் சரிதானே..
மங்களுர் சிவா
அருமையான .... தெளிவான விளக்கம், சிவா!
இதில் எனக்கு 'நேரிடையான' அனுபவம் இல்லாததால்.... ஏவிஎஸ், நீங்கள், கல்வெட்டு கருத்துக்களை கவனித்து வருகிறேன்.
//தென்றல் இடம் குடுத்திருக்கார் நிறைய பேசலாம். என்ன தென்றல் சரிதானே..//
கண்டிப்பாக சிவா! மற்றவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புவோம்!
மங்களூர் சிவா,
//மூன்று வருட 'bull run'ல் நல்ல வருமானம் ஈட்டி தர முடியாதவர்கள் 'bear pahse' or 'sideway movement' நீடித்தால் என்ன செய்வார்கள்??//
நிச்சயம் இது ஒரு Market Risk உள்ள திட்டம்தான் அதில் எந்த மாற்றமும் இல்லை. காப்பீடு+பங்கு வணிகம் என்று கலந்து கட்டி வந்து இருக்கும் இந்த திட்டம் இந்திய சந்தை இன்னும் 20 வருடங்களுக்கு ஏறுமுகமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் ஒரு குறைந்த பட்ச இலாப அட்டவணையின் பேரில் கவர்ச்சியாய் விளம்பரப்படுத்தப் படுகிறது.
காப்பீட்டுத் துறையில் உள்ள பல option களில் இது அதிக risk உள்ளது என்று சொல்லலாம். ஆனால் மியூட்ச்சுவல் பண்ட் போல முதலீட்டுடன் நேரடியாக ஒப்பிட தகுதியில்லாதது என்பது என் கருத்து.
நீங்கள் முன்னரே சொன்னபடி அதிக இலாப ஆசை உள்ளவர்களுக்கு இது ஒரு தூண்டில்.
Making money on the internet is easy in the undercover world of [URL=http://www.www.blackhatmoneymaker.com]blackhat seo world[/URL], It's not a big surprise if you have no clue about blackhat marketing. Blackhat marketing uses not-so-popular or not-so-known methods to build an income online.
Post a Comment