Showing posts with label Freddie Mac. Show all posts
Showing posts with label Freddie Mac. Show all posts

Wednesday, July 16, 2008

Bear Stearns, Fannie Mae & Freddie Mac, IndyMac: தொடரும் சோகங்கள்

Bear Stearns  தொடர்ந்து Fannie Mae (FNM)  & Freddie Mac (FRE) ம் பொருளாதார சுனாமியால் தத்தளித்து கொண்டிருக்கிறது...



FNM & FRE ஒரு வகையான சோகம்ன்னா, Bear Stearns அதவிட கொடுமை.



85 வருட அனுபவம். ஐந்தாவது பெரிய வங்கி.. போன வருடம் (வரை) அமெரிக்க பங்குச்சந்தையில் ஒரு பங்கின் விலை $ 170 என நல்ல நிலையில் இருந்தது.



ஒரே வருடத்தில் வங்கியை இழுத்து மூடும் அளவுக்கு நிலமை பரிதாபமானது. ஒரு பங்கின் விலை $2 னாலும் பரவாயில்லை என JP Morgan னிடம் 'பேரம்' பேச... இறுதியில் JP Morgan 'பெருந்தன்மையாக' $10 என வாங்கியது. இவர்களுக்கு பக்கபலமாக அமெரிக்க அரசாங்கம் இருந்தது.



Beat Stearns, Fannie Mae & Freddie Mac வரிசையில்... IndyMac. ஒரு காலத்தில் $50வரை இருந்த IndyMacகின் பங்கு, இந்த வாரம் 10 cent! வாடிக்கையாளர்கள் தாங்கள் போட்ட பணத்தை எடுக்க காலை 5 மணிக்கெல்லாம் வரிசையில் காத்திருந்தார்கள்.



ஒரு வங்கி FDIC (Fedral Deposit Insurance Corp.) ல் member னா நாம் போட்ட பணத்திற்கு $100,000 வரைக்கும் இன்சூரன்ஸ் உண்டு. IRS (Individual Retirement Accounts) கணக்குனா $250,000 வரைக்கும் பாதுகாப்பு உண்டு.



உதாரணத்துக்கு IndyMac மாதிரி ஒரு வங்கியில $120,000 சேமிப்பு இருக்குனு வைச்சுக்குவோம். அந்த வங்கி திவால் ஆயிடுச்சினா  நமக்கு  $100,000 வரைக்கும் நமக்கு கிடைக்கும் வாய்ப்புண்டு.



மேலும் விரிவான விவரங்கள் இங்கே...