Monday, April 30, 2007

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு - 2

மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யவதற்கு முன் ....
மியூச்சுவல் ஃபண்ட் சம்பந்தமான சில முக்கியமான வார்த்தைகளை தெரிந்து கொள்ளலாம்.....

1. அசெட் மேனேஜ்மென்ட் கம்பெனி ~ Asset Management Companies (AMC) - மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை வெளியிடும் கம்பெனிகள். உதாரணத்துக்கு ரிலையன்ஸ் (Reliance), SBI, HSBC, ஃப்ராங்க்ளின் டெம்பிள்டன் ...... மியூச்சுவல் ஃபண்ட் நிர்வகிப்பர்கள். இந்த ஏ.எம்.சி\யின் நிகர சொத்து மதிப்பு 10 கோடி ரூபாய்க்குமேல்(!) இருக்கவேண்டும் என்று செபி வலியுறுத்தியுள்ளது.

2. நிகர சொத்து மதிப்பு ~ Net Asset Value (NAV) : ஒவ்வொரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களின் அன்றாட நிகர சொத்து மதிப்பு(என்.ஏ.வி). அத்திட்டத்தின் கீழ் உள்ள மொத்த யூனிட்களால் வகுத்தால், அதுதான் ஒரு யூனிட்டின் நிகர சொத்து மதிப்பு. [இந்த NAV மதிப்பை, அதே நாள் இரவு எட்டு மணிக்குள் இந்தியாவில் உள்ள அனைத்து மியூச்சுவல் ஃபண்ட்களின் கூட்டமைப்பான ‘ஆம்ஃபி'யின் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று செபி வலியுறுத்தியுள்ளது. The Hindu Business Line, Economic Times போன்ற தினசரிகளில் ஒவ்வொரு மியூச்சுவல் ஃபண்ட் NAV (ஒரு யுனீட்டின் விலை)யும் தினமும் வெளியாகும். ]

3. 'நியூ ஃபண்ட் ஆஃபர்' (New Fund Offer/N.F.O.) : மியூச்சுவல் ஃபண்ட் திட்ட யூனிட் வெளியீட்டை முதன் முதலில் பொதுமக்களுக்கு விற்க வரும்போது குறிப்பிடுவது.

4. என்ட்ரி லோட் (Entry Load): ஆரம்ப கட்டத்தில் மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தினுள் நுழைவதற்கான முதலீட்டுக் கட்டணம். 'நியூ ஃபண்ட் ஆஃபர்' (New Fund Offer/N.F.O.) ன் பொழுது இந்தக் கட்டணம் இருக்காது.

5. எக்ஸிட் லோட் (Exit Load): ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்திலிருந்து வெளியேற நினைக்கும்போது, அதற்குச் செலுத்த வேண்டியிருக்கும் கட்டணம்.

சரி... இப்ப விசயத்துக்கு வருவோம் ....
மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய ....

1. பான் கார்டு (PAN CARD) **

2. தெரிந்த மியூச்சுவல் ஃபண்ட் ஏஜென்ட் (Agent) உதாரணத்துக்கு.... கார்வி (Karvy), UTI

3. துவக்கத்தில் குறைந்தபட்ச முதலீடு 5,000 ரூபாய். பின்னர் மாதாமாதமோ அவ்வப்போதோ 1,000 ரூபாய் அல்லது அதன் மடங்குகளில் முதலீடு செய்யலாம்.

அவ்வளவுதான்! Done. Best Of Luck !!

தருமி அவர்கள் சொன்னது போல, "இதான் எனக்குத் தெரியுமே"! அப்படிகிறீங்களா..?

சரி....எந்த மியூச்சுவல் ஃபண்ட்-ல முதலீடு செய்றது, ஏஜென்ட் -கிட்டபோய் என்ன கேட்கிறது?, மியூச்சுவல் ஃபண்டில் மாதாந்திர வருமானத் திட்டம் (MIP) எதுவும் இருக்கா? குறுகியகால முதலிடுகள் (Fixed Matured Plan), Systametic Investment Plan ............. இப்படி எனக்கு தெரிந்ததை அடுத்த பதிவில்....

** மியூச்சுவல் ஃபண்டில் ஒவ்வொரு விண்ணப்பத்திற்கும் 50 ஆயிரத்துக்கும் மேல் முதலீடு செய்தால் மட்டுமே பான் கார்ட் எண் தேவை. வேற வேற நாள்-ல வெவ்வேறு விண்ணப்பங்கள் மூலம் குறைந்த தொகையை முதலீடு செய்தால் பான்கார்ட் அவசியம் இருக்காது. ஏன் இந்த 50 ஆயிரம் ரூபாய்க்கு மேலனா பான் கார்ட் தேவை? ஏன்னா.....வருமான வரி கட்டணும்னா பான் கார்ட் தேவை... நம்ம 50 ஆயிரம் ரூபாய் "முதலீடு" செய்றோம்னா நம்ம வருமான வரி கட்டக்கூடிய ஆளாத்தான இருப்போம்...அதனாலதான் பான் கார்டு அவசியம்.

** ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தால், விண்ணப்பத்தோடு நம் அடையாள அட்டை மற்றும் விலாசத்துக்கான சான்றின் நகல் (Address Proof) ஒன்றை இணைக்க வேண்டும். எப்பொழுதும் பணத்தை ஏஜென்ட் (Agent) ரொக்கமாகச் (Cash) கொடுக்க கூடாது. எப்பொழுதும் கிராஸ் செய்யப்பட்ட காசோலை (Cheque) அல்லது டி.டி (DD) மூலமாகத்தான் பணத்தைச் செலுத்தவேண்டும். [நமக்கும் ஒரு record இருக்கும் இல்லையா!] விண்ணப்ப படிவத்தில் வங்கியின் எம்.ஐ.சி.ஆர் (M.I.C.R) கோட் எண் ணைக் குறிப்பிட வேண்டும்.
[எம்.ஐ.சி.ஆர் (M.I.C.R) கோட் எண்ணா செக்கின் (Cheque) கீழே, செக் நம்பருக்குப் பக்கத்தில் இருக்கும் ஒன்பது இலக்க எண்].

எதுக்கு இந்த எம்.ஐ.சி.ஆர் (M.I.C.R) கோட் எண்?

நாம் முதலீடு செய்யும் மியூச்சுவல் ஃபண்டில் டிவிடெண்ட் கொடுக்கும்பட்சத்தில் அந்த தொகையை நேரடியாக நம் வங்கிக் கணக்கில் transfer செய்து விடுவார்கள். வங்கிக்கு போற வேலை மிச்சம்.

9 comments:

said...

நல்லா வருது தென்றல்....தைரியமா அடிச்சி ஆடுங்க....

said...

உங்கள் பதிவில் இதைப் பற்றி குறிப்பிட்டதுக்கு நன்றி, பங்காளி!

said...

//... you want to see a miracle, Son?" "Yes" "BE THE MIRACLE"//

தொடர் சுறுசுறுப்பாக போகிறது. miracle உருவாக்கத்தை ஆரம்பித்து விட்டீர்கள்.

உங்கள் படைப்பு பலருக்கும் பலனளிக்கும் ஒன்றாக இருக்கப் போகிறது.

அன்புடன்,

மா சிவகுமார்

said...

/.... பலருக்கும் பலனளிக்கும் ஒன்றாக இருக்கப் போகிறது.
/

... இருந்தால் மிக்க மகிழ்ச்சியே!

நீங்கள், பங்காளி போன்றவர்கள் கொடுக்கும் ஊக்கத்திற்கு நன்றி! :)

said...

மிக நல்ல முயற்சி
வாழ்த்துக்கள்!! :-)

said...

Its Good One ..

said...

உங்கள் வாழ்த்துக்கு நன்றி, CVR!

நன்றி, Elanoraj!

said...

ஆமாம் உங்க பக்கத்தை என் வலைப்பதிவில் சுட்டி கொடுத்தால் கோச்சிப்பீங்களா?:-))
ஏனென்றால் என் பக்கத்துக்கு வருபவர்கள் கம்மி,அப்படியும் மீறி வருபவர்களுக்கு உபயோகமாக இருக்குமே,என்ற எண்ணம் தான்.

said...

/ஆமாம் உங்க பக்கத்தை என் வலைப்பதிவில் சுட்டி கொடுத்தால் கோச்சிப்பீங்களா?:-))
/

'நாலு பேருக்கு நல்லது நடக்கும்னா எதுவுமே தப்பில்ல' (சே..இன்னும் "நாயகன்" பதிப்பு-ல இருந்து வெளிய வரலை!)

நன்றி, குமார்.

ஆமா, இப்படிலாம் கேட்கணுமா? நான்பாட்டுக்கு மத்தவங்க வலைப்பதிவு சுட்டியை என்னுடைய வலைதளத்தில கொடுத்திருக்கேன்.. ம்ம்ம்...!