Monday, April 30, 2007

மியூச்சுவல் ஃபண்ட் - I

எனக்கு தெரிந்ததை பகிர்ந்து கொள்கிறேன்...

முதலில், ஏன் மியூச்சுவல் ஃபண்ட்கள்?

பங்கு சந்தையில முதலீடு செய்யணும்னா...
'எந்த பங்குகளை வாங்குவது, அந்த பங்கு அல்லது கம்பெனியின் தற்போதைய நிலை, அவற்றின் எதிர்கால திட்டங்கள், நிதி நிலைமை' போன்ற பல விவரங்களை ஆய்வு செய்யணும். அப்புறம் பங்குகளை நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்வதற்கு நமக்கு நேரமும், தகவலும் தெரியணும்

'இதலாம் என்னாலமுடியுமேனா!' , நீங்க தாராளமாக பங்கு சந்தையில் முதலீடு செய்யலாம்.

'இதலாம் ஆராய்ச்சி பண்றதுக்கெல்லாம் யாருக்கு பொறுமை இருக்கு? ' -னு மனசுக்குள்ள ஒரு கேள்வி வந்துச்சுன்னா..... உங்களுக்கு மியூச்சுவல் ஃபண்ட்தான் பெஸ்ட்... ;)

இவ்வாறு அனைவரும் பங்குகளை வாங்க முடியாது என்பதால்தான் மியூச்சுவல் ஃபண்ட்களுக்கு போகவேண்டும்.

முதலில் முக்கியமான சந்தேகம்.....
மியூச்சுவல் ஃபண்ட் துறைகள் (பைனான்ஸ் [Finance] கம்பெனிகளைப் போல)" காணாமல்" போக வாய்ப்புகள் உண்டா?

ஏமாற்றிவிட்டுச் (காணாமல் போக) செல்வது சாத்தியமில்லைதான் நினைக்கிறேன். ஏன்னா... AMC (Asset Management Companies)யின் நிர்வாகப் பொறுப்பு ஒரு டிரஸ்டிடம் தான் இருக்கு. அந்த டிரஸ்-ல ஃபண்ட் மேனேஜர் (Fund Manager) மற்றும் பலர் இருப்பர். அதனால 'திவால்' ஆக வாய்ப்பில்லை.

மியூச்சுவல் ஃபண்டின் பணம் பங்குகளில்தான முதலீடு செய்யப்படுகிறது. அதனால பங்குச் சந்தையின் ஏற்ற, இறக்கத்தை வைத்து NAV (Net Asset Value)வின் மதிப்பு கூடும், குறையும். ஆக, ஒட்டு மொத்தமாக பணம் 'காலி'யாகும் வாய்ப்பு இல்லை.

சரி...இதில என்னென்ன திட்டங்கள் இருக்கு....?

சிவாஜி/எம்ஜிஆர் - கமல்/ரஜினி மாதிரி எப்பவும் இரண்டு திட்டங்கள்.
  1. குரோத் ஆப்ஷன் (Growth Option),
  2. டிவிடெண்ட் ஆப்ஷன் (Divident Option)

டிவிடெண்ட் ஆப்ஷனில்,

2a. பே அவுட் (Pay Out)

2b. ரீ இன்வெஸ்ட்மென்ட் ((Re-investment Option)

-னு உட்பிரிவு வேற இருக்குது.


சற்று விளக்க சொல்லனும்-னா ......

1. குரோத் ஆப்ஷன் (Growth Option):
இந்தத் திட்டத்தில் போட்ட பணம் தொடர்ந்து வளர்ச்சி வாய்ப்புள்ள வழிகளில் முதலீடு செய்யப்படும். அதனால் யூனிட்டின் விலை [NAV] கூடி கொண்டே செல்லும். நீண்டகால அடிப்படையில், முதலீடு நல்ல வளர்ச்சி பெறவேண்டும் என்றால் இதை தேர்வு செய்யலாம்.

நிறுத்தி, நிதானமா சிவாஜி மாதிரி ...... மெதுவாதான் வளர்ச்சி...

2a. பே அவுட் - Pay out :

'கையில காசு.. வாயில தோசை' மாதிரி...

ஒவ்வொரு குறிப்பிட்ட கால இடைவெளியில், ஒரு தொகை டிவிடெண்ட்-ஆக கிடைக்கும் (Pay Out). ஆம்.... யூனிட்டின் விலை [NAV] குறையும்.

2b.ரீ இன்வெஸ்ட்மென்ட் ((Re-investment Option) :

டிவிடெண்ட் ஆப்ஷனிலேயே, இன்னொரு வகையான ரீ& இன்வெஸ்ட்மென்ட் ஆப்ஷனில் (Re-investment Option). கொடுக்கப்படும் பணத்துக்குப் பதிலாக, அந்தப் பணம் மீண்டும் அதே யூனிட்களில் மறுமுதலீடு செய்யப்படும்.
அதிகமான யூனிட்கள் நம் கணக்கில் கிடைக்கும்.
[கமல் மாதிரி-னு சொல்லலாமா?]


எனக்கு பிடித்தது 2a - பே அவுட் (Pay out) தான். ;)

சரி... இப்ப எப்படி முதலீடு ஆரம்பிக்கலாம்?-கிறது அடுத்த பதிவில் ......

14 comments:

said...

thanks for writing this topic.

said...

நல்ல தொடர்,

முதலீடு செய்ய பணம்தான் தேடணும் :-)

இன்னும் பல இடுகைகளை எதிர்பார்க்கிறேன்.

அன்புடன்,

மா சிவகுமார்

said...

அட.. வாங்க செல்வநாயகி!

'பொறுமையா' படிச்சதுக்கு நன்றி!

said...

தயவு செய்து தொடர்ந்து எழுதுங்கள்...

அடுத்த மாதம்தான் இந்த தலைப்புல எழுதலாம்னு நெனச்சிருந்தேன்...

நல்ல வேளை நீங்க ஆரம்பிச்சிட்டீங்க....

வாழ்த்துக்கள்....

said...

இது பத்தி முன்னால நம்ம செல்லமுத்து குப்புசாமி கூட ஒரு பதிவு போட்டார்....

அதோட இனைப்பு கிடைச்சா அதையும் போடுங்க....தென்றல்

said...

வாங்க, சிவக்குமார்!

/நல்ல தொடர்/
ஏதோ அவசரத்துல எழுதின மாதிரி ஒரு உணர்வு... ஏதாவது தவறான தகவல் இருந்தா சொல்லுங்க... திருத்திக்கலாம்...

/
முதலீடு செய்ய பணம்தான் தேடணும் :-)
/
என்னங்க இப்படி சொல்லிட்டீங்க... 5000 ரூபாய் இருந்தா போதுமே..

பத்திங்களா... நீங்க போட்டு வாங்கிறீங்க... அது புரியாம நான் .... ;)

'பணம் பண்ணலாம் வாங்க'-னு தலைப்பு வைச்சிருக்கலாமோ?

said...

வாங்க பங்காளி!

/அடுத்த மாதம்தான் இந்த தலைப்புல எழுதலாம்னு நெனச்சிருந்தேன்...
/

அட..டா.. நீங்கனா இதவிட நிதானமா
உங்க சென் கதையை போல எழுதிருப்பீங்களே..!

/நல்ல வேளை நீங்க ஆரம்பிச்சிட்டீங்க....

வாழ்த்துக்கள்.... /

நன்றி-ங்க! அப்புறம்... தவறிருந்தா சொல்லுங்க!

said...

//எனக்கு பிடித்தது 2a - பே அவுட் (Pay out) தான். ;) //

ஏன் இது உங்களுக்குப் பிடிக்கிறதென்பதற்கு காரணம் என்ன? போட்டுவைத்தால் வளர்ச்சி குறைவா?

said...

நல்ல தொடர்ங்க தென்றல்...

வாழ்த்துக்கள்

said...

/இது பத்தி முன்னால நம்ம செல்லமுத்து குப்புசாமி கூட ஒரு பதிவு போட்டார்....

அதோட இனைப்பு கிடைச்சா அதையும் போடுங்க....தென்றல் /
கண்டிப்பா.... உங்களுக்கு கிடைச்சாலும் சொல்லுங்க, பங்காளி!

said...

தருமி அய்யா, வணக்கம். முதன் முதலா வந்திருக்கீங்க... அதனலாதான் 'அய்யா'-னு கூப்பிட்டேன். இனிமேல் நீங்க சொன்னதுபோல 'தருமி'-னே சொல்றேன்.... ;)

//எனக்கு பிடித்தது 2a - பே அவுட் (Pay out) தான். ;)

ஏன் இது உங்களுக்குப் பிடிக்கிறதென்பதற்கு காரணம் என்ன? போட்டுவைத்தால் வளர்ச்சி குறைவா? //

பங்கு சந்தையே ஒரு சூதாட்டம்தானே!
'பணம்' வரப்பவே எடுத்துக்கலாம்ணுதான்! இலாபம் வந்ததுக்கப்புறம் ரீ& இன்வெஸ்ட்மென்ட் ஆப்ஷனில் (Re-investment Option) தேர்வு செய்யலாம்.
ஆனா... இப்பவுள்ள 'பங்குச்சந்தை'-ல நீண்ட நாள் முதலீடு செய்தா நல்ல வளர்ச்சி கிடைக்கும்.

என்ன பிரச்சனை-னா "சரியான' நேரத்தில பணத்தை எடுக்கிறதுதான்.

said...

/நல்ல தொடர்ங்க தென்றல்...

வாழ்த்துக்கள் /

நன்றி, மங்கை!

said...

oru chutti :)

பங்கு வணிகம்: ரியல் மியூச்சுவல் 'ஃபண்ட்'கள்!!

said...

பாலா, நன்றி!