Friday, May 4, 2007

கேரன்டி, வாரன்டி...?

கேரன்டி (Guaranty)-கிற வார்த்தை U.K. வில் அதிகம் பயன் படுத்திகிறார்கள். அவங்க பயன்படுத்திற வார்த்தை எதுவும் அமெரிக்காவுல பயன்படுத்த மாட்டடங்களே.. இவுங்க புதுசா கண்டுபிடிப்பாங்க.... ;)
.. வாரன்டி (warranty) என்பது அமெரிக்காவில் உபயோப்படுத்தும் வார்த்தைப் பிரயோகம்.


இன்றைய நடைமுறையில் வித்தியாசம் என்னென்னா..

குளிர்சாதரண பெட்டி வாங்க போறோம்-னு வைச்சிக்குங்க...

கடைக்காரர் ஒரு வருடம் 'கேரண்டி'-யும், மூன்று வருடம் 'வாரண்டி'-யும் இருக்குனு சொல்றாரு.


குளிர்சாதரண பெட்டி வாங்கி ஒரு வருடத்திற்குள்
பழுதானால் உதிரிபாகத்தை இலவசமாக மாற்றிக் கொடுப்பார்கள். அதுதான் கேரன்டி.


அதுவே, ஒரு வருடத்திற்கு அப்புறம் மூன்று வருடத்திற்குள் பழுதடைந்தால், உதிரி பாகத்துக்கான விலையை வாங்கிக்கொண்டு சேவையை மட்டும் வழங்குவார்கள். இது 'வாரன்டி'.

வாரன்டி வருடமும் முடிந்ததுனா பழுதுபார்க்கிற சேவைக்கும் கட்டணம் உண்டு.

பொதுவாக கேரன்டியை விட, வாரன்டி கொஞ்சம் கூடுதலான வருடங்களாகவே இருக்கும்.

9 comments:

said...

இடைக் காலத்தில் இது ஒரு குழப்பமாகவே இருந்தது. இப்போதெல்லாம் காரண்டியுடன் விற்பனை குறைந்து விட்டதாகப் படுகிறது. எல்லாவற்றுக்கும் வாரண்டிதான் கண்ணில் படுகிறது.

அன்புடன்,

மா சிவகுமார்

said...

கருத்துக்கு நன்றி, சிவகுமார்!

கேரண்டி அதிக வருடங்கள் இருந்தால்தான் நுகர்வோர்களான, 'நமக்கு' நல்லது இல்லையா?

said...

நாணயமான கருத்து...:-))

அசத்துங்க...

said...

சமீபத்தில் (நான் அவர் இல்லை) தி.நகரில் ஒரு மின் அரிசி சமைப்பான் வாங்கியபோது கடை சிப்பந்தி கூட இந்த மாதிரி விளக்கம் கொடுத்தார்.

said...

வாங்க, வடுவூர் குமார்!

/தி.நகரில் ஒரு மின் அரிசி சமைப்பான் வாங்கியபோது../

ஓ..electric rice cooker-யை சொல்லுதீங்களா? நன்றி, குமார்!

இன்றைக்கு, ஒரு புது வார்த்தைய கத்துக்கிட்டேன்... பயன்படுத்த முடியுமா-னு தான் தெரியல?

said...

நல்ல விளக்கம் தென்றல். ரொம்ப நாளைக்கு இதோட வித்தியாசம் தெரியாம இருந்தது.

said...

மணிகண்டன்,

அதுவும் 'இங்க' குறிப்பா கார் வாங்கும்போது, Manufactuer வாரண்டி, Dealer வாரண்டி (உதாரணத்துக்கு: 5 years/100,000 miles) னு நம்மளை குழப்பிவானுங்க பாருங்க...தலையே சுத்தும்..?@#$@!

மார்கெட்டிங்-ல இவுனுங்களை அடிச்சிக்க ஆளே கிடையாது-னு தோணும்...

said...

தெளிவுபடுத்தினதுக்கு நன்றி தென்றல்

said...

வாங்க, மங்கை!

வலைசரத்தில் குறிப்பிட்டதற்கு மீண்டும் ஒரு முறை நன்றி!