Tuesday, May 8, 2007

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு - 4

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு - 3
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு - 2
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு - 1

நாம் ஏற்கனவே அறிந்தது போல பங்குச் சந்தையைப் பொறுத்தே மியூச்சுவல் ஃபண்ட்-ன் இலாப, நஷ்டம் அமையும். அதிக பாதிப்பு இல்லாமல் இருக்க, நாம் தேர்ந்தெடுக்கும் திட்டத்தில் மிகவும் கவனமாக இருக்கவேண்டும்.

எவ்வாறு கவனமாக இருப்பது..? அதற்கு, சில விசயங்களை தெரிந்து கொள்ளுதல் நலம்.

நான் சென்ற பகுதியில் குறிப்பிட்டது போல முதலில் என்னன்ன திட்டங்கள் இருக்குனு பார்க்கலாம்.

ரொம்ப போரடிக்காம, சுருக்கமா சொல்ல முயற்சி பண்றேன்.....

1. செக்டோரல் ஃபண்ட் (Sectoral Fund)

2. டைவர்சிஃபைடு ஃபண்ட் (Diversified Fund)

3. பாலன்ஸ்டு ஃபண்ட் (Balanced Fund)

4. டெப்ட் ஃபண்ட் (Debt Fund)

5. கில்ட் ஃபண்ட் (Gilt Fund)

6. லிக்விட் ஃபண்ட் (Liquid Fund)

7. ஈ.எல்.எஸ்.எஸ் திட்டம் (ELSS - equity linked savings scheme)

செக்டோரல் ஃபண்ட் (Sectoral Fund)ல ஏதாவது ஒரு துறையில் மட்டுமே பங்குகளை முதலீடு செய்வாங்க...உதாரணத்துக்கு....
  • டெக்னாலஜி (IT) துறைனா - Infosys, TCS, Satyam ...
  • ஆட்டோ (Auto)னா - Maruthi, Tata, Mahindra.... மாதிரி
  • வங்கித்துறை (Banking)னா - SBI, ICICI, IOB....

இப்படி ஒரே மாதிரியான துறைகளில மட்டுமே பங்குகளை வாங்குவாங்க.

இந்த திட்டத்தில் இருக்கும் கவனிக்கதக்க மூன்று ஃபண்ட்கள் ** :

1. DSP ML Technology.com (42.19%)

2. SBI Magnum Sector Funds Umbrella-IT (34.66%)

3. Birla Sun Life - New Millenium Fund (32.95%)

ஆமா....ரிஸ்க் அதிகம். அதேபோல், வருமான வாய்ப்பும் அதிகம்.

"சரி.... அப்ப.... எல்லாத் துறை பங்குகளிலும் முதலீடு செய்யும் பண்ட் இருக்கா?"

ஆமாங்க ...அதான் டைவர்சிஃபைட் ஃபண்ட் (Diversified Fund)

பல வேறு துறைகளில் ஈடுபட்டுள்ள பல நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்வது. உதாரணத்துக்கு.... Infosys, Maruthi, Tata, SBI..... இப்படி எல்லா துறைகளிலும் பங்குகளை வாங்குவாங்க.

இந்த திட்டத்தில் இருக்கும் கவனிக்கதக்க மூன்று ஃபண்ட்கள் **:

1. Reliance NRI Equity Fund (22.22%)

2. Birla Sun Life - Frontline Equity Fund (20.76%)

3. DBS Chola Opportunities Fund (20.48%)

ரிஸ்க் குறைவு, வருமானம் பரவாயில்லாம இருக்கும்!

பங்குச் சந்தையில் முதலீடு செய்யுறதே ரிஸ்க்தான். அந்த ரிஸ்க்கை குறைக்க நம்ம பணத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியை உத்தரவாதமான கடன் பத்திரங்களில் முதலீடு செய்வது பாலன்ஸ்டு ஃபண்ட் (Balanced Fund) திட்டம்.

இந்த திட்டத்தில என்ன நல்லதுனா, பங்குச் சந்தையில இருந்தும் வருமானம் இருக்கும்.... பாதுகாப்பான கடன் பத்திரங்கள் மூலம் வருமானம் இருக்கும்.

இந்த திட்டத்தில் இருக்கும் கவனிக்கதக்க மூன்று ஃபண்ட்கள் **:

1. Equity - Balanced Fund (16.99%)

2. Birla Sun Life 95 Fund (9.82%)

3. FT India Balanced Fund (9.06%)

இது நல்ல திட்டமா தெரியுதா?

என்னது... ஏஜெண்ட்-யை பார்க்க கிளம்பிட்டீங்கள்ளா? சரி...சரி.. மற்ற ஃபண்ட்களை அப்புறம் பார்க்கலாம்.

** இந்த மியூச்சுவல் ஃபண்ட்-களாம் இன்றைய தேதிக்கு நல்ல முதலீடு. நாளை ...?

4 comments:

said...

சாமி,இதைப்படிக்க காசு கொடுக்க வேண்டாம் தானே?:-))
அட்டகாசமாக இருக்கு...தொடர்.தொடருங்கள்.
பலருக்கு பயன் தரும் விஷயங்கள்.

said...

//சாமி,இதைப்படிக்க காசு கொடுக்க வேண்டாம் தானே?:-))//

ஏனுங்க... நானே எனக்கு தெரிஞ்சத, படித்தத ... மியூச்சுவல் ஃபண்ட் கம்பெனில் வேலை செய்த பொழுது கற்றுக் கொண்டதை வைச்சி தானுங்க சொல்லிக்கிட்டு இருக்கேன்...

கிண்டல் ஏதும் பண்ணலைங்கலண்ணா...?

மீண்டும் வாங்க, குமார் அண்ணாச்சி!

உற்சாகன வார்த்தைகளுக்கு நன்றிகள்!!

said...

உண்மையாவே ரொம்ப பயனுள்ளதா இருக்கு. அதுவும் முதன்முதலா வருமான வரி விண்ணப்பத்தை வாங்கி வச்சுகிட்டு, அதை தவிர்க்க,எந்த மியூச்சுவல் ஃபண்ட்டில் முதலீடு செய்யலாம்னு யோசிச்சுகிட்டிருக்கிற சமயத்துல உங்க கட்டுரை கண்ணுல பட்டுச்சு. நிஜமா நல்லாயிருக்கு.. தொடர்ந்து எழுதுங்க.. வாழ்த்துக்கள்.

said...

நன்றி, ஆழியூரான்!

/..வருமான வரி விண்ணப்பத்தை வாங்கி வச்சுகிட்டு.../
இப்பயேவா... இதலாம் வருச கடைசில தான பார்க்கணும் ;)

அப்புறம்-ங்க..
ரவுடி பிரேமா... படிச்சிட்டு என்ன சொல்றது தெரியாம இருக்கேன்.. உண்மை சம்பவம்தான் முதலே guess பண்ணிணேன்... (ஓ..இத அங்க வந்து சொல்லிருக்கணுமோ?!)