Monday, May 21, 2007

மியூச்சுவல் ஃபண்டில் போட்ட பணத்தைத் எப்படி திரும்பப் பெறுவது ?

சரி... மியூச்சுவல் ஃபண்டில முதலீடு செய்த பணத்தை நமக்கு தேவையான நேரத்தில் பணத்தை எப்படி திரும்பப் பெறுவது ?

இரண்டு வழி இருக்கிறது.

ஆன்லைனில் வாங்கிருந்தா விற்பது எளிது. இ.சி.எஸ் (Electronic Clearing Service) எனப்படும் எலெக்ட்ரானிக் கிளியரிங் முறையில் எந்த கமிஷன் இல்லாமல் பணத்தைத் நம்முடைய வங்கி கணக்கின மூலம் திரும்பப் பெறலாம்.

மற்றொரு வழி.... இப்போலாம் எல்லா நகரங்களில் மியூச்சுவல் ஃபண்ட்களின் கிளை அலுவலகங்கள் வர ஆரம்பித்துள்ளன. அவர்களை அணுகியனால் மூன்று நான்கு நாட்களில் நமக்கு பணம் கிடைக்கும்.

நான் முதன் முதலில் ... மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்த பொழுது செக் கொடுத்து கொஞ்ச நாட்கள் கழித்துதான் அந்த யூனிட்கள் கிடைத்தன.

உதாரணத்துக்கு, ரூ10,000/- செக் கொடுக்கும் போது ஒரு யூனிட்டின் விலை ரூ20/- என்று வைத்துக் கொள்ளுங்கள். கணக்கின்படி 500 யூனிட்கள் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருப்போம். ஆனால், யூனிட்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட பொழுது 500 யூனிட்களைவிட கம்மியாகதான் கிடைத்தது.

குறைவாக கிடைத்துக்கு ஒரு காரணம் Entry Load. மற்றொரு காரணம், கொடுத்த செக்கை அவர்கள் வங்கியில் கொடுத்து , பணம் சம்பந்தப்பட்ட மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் 'கையில்' கிடைத்தால்தான் நமக்கு யூனிட்களை ஒதுக்கீடு செய்வார்கள். இந்த இடைப் பட்ட காலத்தில் நாம் விரும்பிய மியூச்சுவல் ஃபண்ட்களின் நிகர சொத்து மதிப்பு (NAV) குறையலாம் அல்லது கூடலாம்.

அப்ப பணம் செலுத்திய அன்றே நமக்கு யூனிட் கிடைக்கவேணும்-னா, டிமாண்ட் டிராஃப்ட்டாக (DD) கொடுக்கலாம். இல்லையென்றால், ஆன்லைனில் வாங்கலாம்.

இன்னொரு குழப்பமும் எனக்கு இருந்தது... ‘N.F.O. வின் மூலம் வெளியிடும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தை வாங்குவதா இல்லை புழக்கத்தில் உள்ள திட்டத்தில் முதலீடு செய்யலாமா? எதுல நல்ல லாபம் கிடைக்கும்?'

ஏன்னா... புதிய வெளியீடு-னா, 10 ரூபாய் மதிப்புக்கு யூனிட்கள் கிடைக்கும். புழக்கத்தில் உள்ள திட்டத்தின் யூனிட் என்றால், அதன் NAV மதிப்புபை பொருத்து நமக்கு யூனிட்கள் கிடைக்கும்.

என்னுடைய அனுபத்தின்படி, ரொம்ப பெரிய வித்தியாசம்லாம் இல்லை. ஏன்?

இரண்டிலுமே நம் பணத்தை பங்கு சந்தையில்தான் முதலீடு செய்யப்போறாங்க. அதனால பங்குசந்தை வளர்ச்சியைப் பொறுத்துதான நாம் முதலீடு பண்ணிய திட்டங்களின் யூனிட்கள் வளர்ச்சி இருக்கும். அதனால மியூச்சுவல் ஃபண்ட் மேனஜர் எடுக்கும் முடிவுதான், அந்த திட்டம் இலாபமோ, நஷ்டமோ அடையும்.

ஆனா, நடப்பில் உள்ள திட்டம்-னா ‘கடந்த கால வரலாறு', அதனுடைய வளர்ச்சி எப்படினு தெரிஞ்சி முதலீடு பண்ணலாம். N.F.O. திட்டதில் அப்படி இருக்க வாய்ப்பில்லை என்பதால் முடிவெடுப்பதில் கொஞ்சம் ரிஸ்க் இருக்கத்தான் செய்கிறது.

எந்தந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்யலாம்? அதனோட rating-லாம் எப்படி தெரிஞ்சிக்கலாம்-கிறதை அடுத்ததில் .......

6 comments:

said...

மற்றும் ஒரு நல்ல தகவல்.
நன்றி

said...

நன்றாக எழுதுகிறீர்கள் இதில் கருத்துச் சொல்லும் அளவுக்கு எமக்கு இதுபற்றிய அறிவு போதாது இதில் தான் கற்கவே ஆரம்பித்திருக்கிறேன்

said...

பயனுள்ள பதிவு.தொடர்ந்து எழுதுங்கள்.

said...

@வடுவூர் குமார்
வாங்க, குமார்! 'தலைவரு' மாதிரி லேட்டா வராம... கரெக்டா வர்றீங்க பாருங்க.. ரொம்ப நன்றிங்க!

@மஞ்சூர் ராசா
உங்களுடைய சந்தைப் படுத்துதல் என்றால் என்ன? நல்லா சொல்லிருக்கீங்க...

இப்பலாம் எழுதுறதில்லையே, ஏனோ?

@தமிழ்பித்தன்
உங்க பேர் மட்டும் இல்லங்க....
உங்களைப் பற்றி ...
'தமிழ் மீது பித்தானாலும் முத்தாகி பின் அதற்கோர் சொத்தாவேன்'
-னு சொல்லிருக்கீங்க பாருங்க... ரொம்ப பிடிச்சிருக்கு ..!

@ஆழியூரான்
நன்றி!

said...

நடைமுறை வழிகளை எளிமையாக விளக்குகிறீர்கள், நன்றி.

முற்றிலும் கொடும் தமிழில் செயற்கையாக எழுதுவதைத் தவிர்க்க தமிங்கிலிஷ் உதவினாலும் சில இடங்களில் புழக்கத்தில் உள்ள தமிழ் சொற்கள் உறுத்தாது என்று தோன்றுகிறது:

1. செக் - காசோலை
2. டிமாண்ட் டிராஃப்டு - வரைவோலை
3. ஆன்லைன் - இணைய வழி
4. மேனேஜர் - மேலாளர்

இவற்றைத் தவிர நீங்கள் பெரிதும் பயன்படுத்தும் மியூச்சுவல் ஃபண்ட், யூனிட் போன்றவற்றுக்கும் கலைச் சொல்லாக்கிப் பயன்படுத்தினால் தமிழ் வளம் பெறும்.

கலைச் சொல் புழக்கத்துக்கு சுஜாதா அவர்களின் வழிகாட்டல் படித்தது:

முதலில் ஆங்கிலச் சொல்லைக் குறிப்பிட்டு அடைப்பில் தமிழ்ச் சொல்லைப் புகுத்துங்கள். யூனிட் (பங்கலகு)

சில இடங்களுக்குப் பிறகு, தமிழ் சொல்லைப் பயன்படுத்தி ஆங்கிலம் அடைப்புக்குள் போய் விட வேண்டும். பங்கலகு (யூனிட்)

வாசகர்களுக்குப் பழகிப் போன பிறகு ஆங்கிலத்தை உதிர்த்து விடலாம். பங்கலகு.

அன்புடன்,

மா சிவகுமார்

said...

கண்டிப்பாக முயற்சி செய்கிறேன்,சிவகுமார்!

ஆலோசனைக்கு மிக்க நன்றி!