நன்றி!
ஆமா... இந்த blog, தொடர்(!) லாம் சும்மா எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமதான் எட்டிப் பார்த்தது. 'பின்னூட்டம் மட்டுமே போடலாம்'-கிற எண்ணங்களில் வந்த பல பதிவர்களில் நானும் ஒருவன். (பராசக்தி வசனம்-லாம் பேச மாட்டேன்.... பயப்படாதீங்க......)
மியூச்சுவல் ஃபண்ட் தொடர் பத்தி எந்த வித திட்டமும் இல்லாம.... எனக்கு தெரிந்தத, படித்ததை, மியூச்சுவல் ஃபண்ட் கம்பெனி-யில் (நமக்கு கணிப்பொறி-ல தான் வேலைனாலும் கம்பெனி business flowல் இருந்த ஆர்வமாக இருக்கலாம்.. ) வேலை பார்த்த பொழுது கத்துகிட்ட விசயங்களும் ... அப்புறம் பங்குச் சந்தையில் 'அடி'பட்ட அனுபவமும் இதை எழுத காரணமாக இருக்கலாம்.
'சரி.. ஏதோ எழுதிறான்... ஒரு வார்த்தை சொல்லிட்டு போலாம்'-னு நினைச்சாங்களோ என்னமோ ...
பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் சொன்ன - செல்வநாயகி, பங்காளி, தருமி, Boston Bala, CVR, Elanoraj, மணிகண்டன், வடுவூர் குமார், ஆழியூரான், காட்டாறு, ...
எப்பவும் சூடா எழுதிற சூடான தமிழன்...ம்ம்.... உண்மைத் தமிழன்
வலைசரத்தில் குறிப்பிட்ட மங்கை,
அக்கறையா வந்து விளக்கமளித்த மா. சிவகுமார், ஜோசப் சார்....
தனிப்பட்ட முறையில், 'நல்லா இருக்கு'... (!)... 'ஒண்ணும் புரியலை' -னு (?) - மின் அஞ்சல் மூலமாக கருத்து சொன்ன அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள் பல...
தேன்கூடு, தமிழ் வெளி, தமிழ் பதிவுகள்.... துறை சார்ந்த பதிவுகள்-னு தனியாக 'பட்டா' போட்டு தெரியவைத்த தமிழ் மணத்துக்கும் நன்றி!
நாம சொல்றதும்... 'நாலு' பேருக்கு புரிஞ்சிருக்கு-னு நினைக்கிறப்ப சந்தோஷமாதான் இருக்கு.
அதுக்கும் மேல...எனக்கு மகிழ்ச்சியானது.... இதன் வழியாக கிடைத்த நட்பு. முற்றிலும் நான் எதிர்பாரதது.
தனிப்பட்ட முறையில்... நட்புடனும், உரிமையுடனும் சில நண்பர்கள் இது சம்பந்தமாக கேட்ட கேள்விகளுக்கு எனக்கு தெரிந்த வரை Google மேல பாரத்தை போட்டு... விளக்கம் தர முயற்சி செய்கிறேன்....குட்டுவதற்கும் இங்க ஆள் இருக்காங்க என்கிற எண்ணத்தில்....
மீண்டும் ஒரு முறை நன்றி! வணக்கம்!!
இந்தியா ஜி.டி.பி வளர்ச்சி புள்ளிவிபரத்தில் குளறுபடி - அம்பலப்படுத்தும்
அரவிந்த் சுப்பிரமணியன்
-
இந்தியாவின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன்
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி புள்ளிவிபரங்கள் தவறு என்று நிறுவும்
ஆய்வுக் கட்டுர...
5 years ago
16 comments:
நான் முதல்ல இருந்து படிக்கறேன்...
மியூச்சுவல் ஃபண்டைவிட நமக்கு Day Trading தான் ஃபேவரைட்.. அதனால தான் :-)
நமக்குள்ளே எதுக்குங்க இந்த பெரிய வார்த்தையெல்லாம்.
நீங்க பாட்டுக்கு எழுதுங்க. நாங்க பாட்டுக்குப் படிச்சுக்கிட்டு இருப்போம்.
உங்க ப்ளொக் தலைப்பு எனக்கு ரொம்பப் பிடிச்சுப் போச்சுங்க.
தென்றல்! உங்க பதிவு தலைப்பு ஜோரா இருக்குமா,பார்த்து உடனே ஓடிவருவேன் ,,ஆனா இதெல்லாம் வீட்ல எஜமானர்(கன்னடத்துல கணவர்!!)தான் கவனிச்சிப்பார்..எங்கிட்ட கையெழுத்துமட்டும் வாங்கிப்பார்!! நம்பிக்கைல நானும் ஒண்ணூம் கேக்காத அப்பாவி(!) மனைவி.எதுக்கு சொல்லவரேன்னா உங்க பதிவுக்குப் பின்னூட்டம்நான் போடாத காரணம் இதான்...நல்லாத்தானே எழுதறீங்க நிறைய வேற விஷயங்களும் எழுதுங்களேன்.
பின்னூட்டம் எல்லாம் போட்டு ஊக்குவிக்கலைன்னாக்கூட உங்க நன்றியை மனப்பூர்வமா ஏத்துக்கறேன். ஹிஹி...
நன்றி சொல்லியதற்கு நன்றி.
உங்களை எனக்கு முன் பின் தெரியாது,இருந்தாலும் ஏதோ ஒரு சொடுக்கில் உங்களிடம் மாட்டிக்கிட்டேன்.:-))
14.2.07 ஆனந்தவிகடனில் "பணம் செய்ய விரும்பு"(நாகப்பன் - புகழேந்தி) தொடரில் நீங்கள் சொன்ன பல விஷயங்கள் 100% அப்படியே வந்துள்ளதே!!
விபரம் கொடுத்தது நீங்களா?
முடிந்தால் பாருங்கள்.
வாங்க, பாலாஜி!
/மியூச்சுவல் ஃபண்டைவிட நமக்கு Day Trading தான் ஃபேவரைட்.. /
நீங்க ஏன் 'ஒரே நாளில் பணக்காரர் ஆவது எப்படி?'-னு ஒரு 'தொடர்' எழுத கூடாது ;)
/நமக்குள்ளே எதுக்குங்க இந்த பெரிய வார்த்தையெல்லாம்.
நீங்க பாட்டுக்கு எழுதுங்க. நாங்க பாட்டுக்குப் படிச்சுக்கிட்டு இருப்போம்./
என்னை மாதிரியா நீங்களும்..? எப்படி உங்க 'நியூஸிலாந்து, ப்ரிஸ்பேன்' பார்த்துட்டு/படிச்சிட்டு ஒண்ணும் சொல்லாம வரேனே.. அதுமாதிரியா....?!
வாங்க..ஷைலஜா!
/நல்லாத்தானே எழுதறீங்க நிறைய வேற விஷயங்களும் எழுதுங்களேன்.
/
அப்புறமா... 'ஏண்டா சொன்னோம்'-னு வருத்தப்பட கூடாது...?!
/பின்னூட்டம் எல்லாம் போட்டு ஊக்குவிக்கலைன்னாக்கூட உங்க நன்றியை மனப்பூர்வமா ஏத்துக்கறேன். ஹிஹி...
/
;)
'வெளிநாடு'ல வேலை முடிஞ்சி, 'தாயகம்' திருப்பியாச்சா-ங்க?
உங்களை எனக்கு முன் பின் தெரியாது,இருந்தாலும் ஏதோ ஒரு சொடுக்கில் உங்களிடம் மாட்டிக்கிட்டேன்.:-))/
சிங்கை வரப்ப சந்திச்சிட்டா போச்சி..:)
/விபரம் கொடுத்தது நீங்களா?/
குமார் அண்ணாச்சி....இதலாம் ரொம்ப ஓவர்!
விவரம் கிடைத்தது அவர்களிடம் இருந்தா-னு கேட்டா... அது ஓரளவு உண்மை...
நான் இங்கிருந்து கிளம்புவதற்குள் வந்திடுங்க..
வரவேற்கிறோம்.
//நமக்குள்ளே எதுக்குங்க இந்த பெரிய வார்த்தையெல்லாம்.
நீங்க பாட்டுக்கு எழுதுங்க. நாங்க பாட்டுக்குப் படிச்சுக்கிட்டு இருப்போம்.///
அதே..அதே...:-)
மியூச்சுவல் ஃபண்ட் பற்றி நீங்க தர விவரங்களுக்காக நாங்க தாங்க உங்களுக்கு நன்றி சொல்லனும்.
நன்றி!
நன்றியெல்லாம் வேண்டாம் தென்றல். எங்களுக்கு புரியிற மாதிரி எளிமையா எழுதுறீங்க. நாங்க எப்படீநன்றி சொல்லுறது இதுக்கு. தொடர்ந்து எழுதுங்க.
மிக்க நன்றி, Delphine, மங்கை, மணிகண்டன் & காட்டாறு!
நன்றி கெடந்துட்டுப் போகுது கழுத... எளிமையா புரியுற மாதிரி எழுதுறீங்க.. தொடர்ந்து பொருளாதார விஷயங்களை எழுதுங்க. வாழ்த்துக்கள்.
Post a Comment