Thursday, May 24, 2007

இணையத்தில் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களின் தரம் தெரிந்து கொள்ள

ஆரம்பத்தில் ஏஜண்ட்டிடம், 'எந்த திட்டம் சிறந்தது?' னு கேட்கிறதுல எனக்கு ஒரு சலிப்பு இருந்தது மட்டுமில்லை.... ஒவ்வொருவரின் தேவைக்கேற்ப எந்த திட்டத்தில முதலீடு செய்யலாம்கிற அளவுகோலும் மாறும் இல்லையா?

சரி... கண்டிப்பாக இணையதளங்களில் நமக்கு தேவையான தகவல்கள் இருக்கும் நம்பிக்கைல Googleலே வாழ்க்கை ஆவதற்குமுன்னாள் தேடினது......

அப்படி கண்டுபிடித்து..... மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களில் சிலபேர் நண்பர்கள் ஆனதுக்கபுறம் அவர்கள் மூலமும் சில இணையதளங்கள் அறிமுகம் ஆனது.

அதபத்திதான் இங்க...

இந்த மியூச்சுவல் ஃபண்ட்களின் தரத்தை ஆராய்ந்து.... அக்கு வேறா..ஆணி வேறா..... தருவதற்கென்றே சில தர மதிப்பீடு நிறுவனங்கள் இருப்பது தெரிய வந்தது...

அதில் எனக்கு தெரிந்தது...

1. CRISIL (Credit Rating Information Services of India)

2. Value Research Online

க்ரைசில்(CRISIL) நிறுவனம் மியூச்சுவல் ஃபண்ட்களைப் பற்றிய மதிப்பீடு மட்டுமில்லாமல் Credit Rating, Fund Rating , Fund Rankings பல வகையான சேவைகளை தர்றாங்க.

இவர்கள் மியூச்சுவல் ஃபண்ட்களை ஐந்து விதமாக பார்க்கிறாங்க... இதற்கு சி.பி.ஆர் (C.P.R - Composite Performance Ranking ) பெயர்.

CRISIL CPR~1: இதுவரை நல்ல வருமானம் கொடுத்துள்ள நல்ல திட்டம் இந்த வகையைச் சார்ந்தவை. இப்பொழுது நடைமுறையில் உள்ள ஃபண்ட்களில் முதல் பத்து தரமானவைகளை இங்கு பார்க்கலாம்.

CRISIL CPR~2 : இந்த வகையில் வருபவை - நல்ல திட்டங்கள்.... நம்பிப் பணம் போடலாம். ஆனால் நடைமுறையில் உள்ள ஃபண்ட்களில் அடுத்த 20% தரத்தில் உள்ளவை.

CRISIL CPR~3: பரவாயில்லை....... சராசரியான இரகம் என்றால் இந்த மூன்றாவது வகையில் வரும். அடுத்த 40% ஃபண்ட்கள் இந்த மத்திய தரவரிசையில் வரும்.

CRISIL CPR~4: சுமாரான ரகங்கள். இதுல வர ஃபண்ட்களை விட்டு ஒதுங்கியே இருப்பது ரொம்ப நல்லது. சராசரியை விட கீழான 20% ஃபண்ட்கள் இந்த தரவரிசையில் வரும்.

CRISIL CPR~5: படு சுமார்! 'துஷ்டனைக் கண்டா தூற விலகு'கிற வகையை சார்ந்தவை. கடைசி 10% ஃபண்ட்கள் இவை.

'இதுபோல தினமுமா அறிவிக்கிறாங்களா?' இல்லை... காலாண்டுக்கு ஒரு முறை, பங்குகளின் தரத்தைப் பிரித்து இந்த இணையதளத்தில் அறிவிக்கின்றனர்.

இப்ப போய் பாத்திங்கனா, 2007 மார்ச் மாதத்தில் ஆராய்ந்த ஃபண்ட்களின் தர வரிசை விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம். [அந்த இணைய தளத்திற்கு சென்று, இடது பக்கத்தில் உள்ள Fund Rankings - CPR யை கிளிக் செய்யுங்கள்.]

இவர்கள் N.F.O லாம் கணக்குல எடுத்துக்க மாட்டாங்க. குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளாவது நடைமுறையில் உள்ள திட்டமாக இருக்கிறத மட்டும்தான் ஆராய்வாங்க...

ஆராய்ச்சினா? எந்த மாதிரி..?

இப்போதைக்கு இந்த இணைய தளத்தில போய் நீங்க கொஞ்சம் ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருங்க.... இதோ வந்துறேன்....

3 comments:

said...

ஒஹோ! இப்படியெல்லாம் இருக்கா?
உங்க பதிவை படிக்கும் போதே அந்த சந்தேகம் வந்தது,நல்லவேளை சுட்டியை கொடுத்தீங்க.உபயோகமாக இருக்கும்.

said...

நல்லதொரு பதிவு. குழப்பங்கள் ஓரளவுக்கு தீர்ந்தது

said...

மிக்க மகிழ்ச்சி, குமார் & மஞ்சூர் ராசா!