Friday, June 1, 2007

மியூச்சுவல் ஃபண்ட்களின் தரம் ஆராய்ந்தல் பற்றி...

CRISIL இணையதளம் பயனுள்ளதாக இருந்தது என மின் அஞ்சலின் மூலமாகவும் மறுமொழி சொன்ன அன்பர்களுக்கு என் நன்றிகள்.. மற்றும் CRISIL இணையதளத்துக்கும்!

முதல் பகுதி இங்க...

சரி... ஆராய்ச்சினா எந்த மாதிரி? கீழ் உள்ள பட்டியல் - சிலவைகள் மட்டும் எளிமை படுத்தி....

  • ஒப்பீட்டு பங்குகளைத் தேர்வு செய்யும்போது, மற்ற ஃபண்ட்களைக் காட்டிலும் நல்ல லாபம் தரக்கூடியதாக இருக்கிறதா...?
  • பங்குச் சந்தை ஏற்ற இறக்கங்களில் இந்த திட்டங்களின் NAV கூடுகிறதா, குறைகிறதா? இலாப, நஷ்டம் எப்படி?
  • ஃபண்ட் திட்டத்திலுள்ள பங்குகள் என்னைன்ன துறைகளில் இருக்கிறது, அதன் செயல் பாடுகள் எப்படி?
  • ஃபண்டின் முதலீடு தரம் - உதாரணத்திற்கு அரசு கடன் பத்திரங்களின் அடிப்படையில் இருக்கும் பட்சத்தில் அதன் தரம் எப்படி?
  • ஃபண்டின் மொத்த சொத்து மதிப்பு என்ன ?

இதுபோல காரணங்களை அடிப்படையாக வைத்துதான் ஃபண்டின் தரத்தை முடிவு செய்வார்கள்.

ஆம்... நீங்கள் எண்ணியது போலவே....

ஃபண்ட் மேலாளர்களுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும். அவர்கள் முதலீடு செய்ததில் எது சரி, தவறு என்று 'ஓரளவு' தெரிந்து கொள்ள முடியும்.

இதலாம் எதுக்கு நாம் தெரிஞ்சுக்கணும்? CRISIL எந்த மாதிரி ஃபண்ட்களின் தர வரிசை படுத்துறாங்கனு (ஓரளவு) புரிஞ்சிகிட்டா எந்தளவு இதை நம்பி முதலீடு செய்யலாம்கிற காரணம் ஒருபுறம் இருந்தாலும்...... நமக்கே ஒரு அறிமுகம் அல்லது தெளிவு கிடைக்க ஒரு வாய்ப்பு என்ற நம்பிக்கையிலும்தான்...

1 comments:

said...

CRISI வலைப்பக்கம் முதல் முறை போகும் போது கண்ணை கட்டி காட்டில் விட்ட மாதிரி இருந்தது.இதற்கு முன் உள்ள பதிவில் நீங்கள் கொடுத்த சுட்டியில் உள்ள பக்கத்துக்கு போன போது தான் புரிந்தது--- ஓரளவு.
மீண்டும் போய் பார்க்கவேண்டும்.