Wednesday, May 23, 2007

NRI & PIO- ஒரு விளக்கம்

இந்திய குடிமகள்(ன்) [ம்ம்....இந்திய பாஸ்போர்ட் வைத்திருக்கும் நபர்னு சொல்லலாமா..], வேலையின் காரணமாகவோ அல்லது சுற்றுலாவிற்காகவோ ஆறு மாதம் (182 நாட்கள்) காலம் இந்தியாவில் இல்லையென்றால் நீங்கள் NRI [Non-Resident Indian] - வெளிநாட்டில் வாழும் இந்தியர்.

வெளிநாட்டு குடிமகள்(ன்)** [அல்லது வெளிநாடு பாஸ்போர்ட் வைத்திருக்கும் ஒருவர்], இந்திய பாஸ்போர்ட் வைத்திருந்தவர் அல்லது

அவரின் பெற்றோர்கள் (அ) தாத்தா-பாட்டி ஒரு காலத்தில் இந்திய குடிமக்கள் அல்லது

மனைவியோ (அ) கணவனோ இந்திய குடிமகள்(ன்)

--- இதில் ஏதாவது ஒன்று உறுதியாகும் பட்சத்தில் நீங்கள் PIO [Person of Indian Origin].

[** பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, ஆப்கானிஸ்தான், சீனா, இரான், நேபாள், பூட்டான் நாடுகளைத் தவிர்த்து. ]

PIOஆக இருக்கும் பட்சத்தில் விவசாய நிலங்கள், பண்ணை வீடுகள் தவிர்த்து இந்தியாவில் மற்ற நிலங்களை வாங்கலாம், விற்கலாம். ஏற்கனவே விவசாய நிலங்கள், பண்ணை வீடுகள் அவர்கள் பேரில் இருந்தால் இந்திய குடியுரிமையுள்ளவருக்கு விற்கலாம் அல்லது அன்பளிப்பாக கொடுக்கலாம்.

11 comments:

said...

சரி இதெல்லாம் ஒரு வால் மாதிரி Tag தான்.
இந்த இரட்டை குடியுரிமையில் அப்படி என்ன பிரச்சனை வரும்,ஏன் சில நாடுகள் இதை வழங்க முன்வருவதில்லை?(ஸிங்கப்பூர் உட்பட)

said...

தென்றல்

சுருக்கமா
NRI/PIO பற்றி ஆறு வித்தியாசம் சொல்லியிருக்கீங்க. நன்றி!

//ஆறு மாதம் (182 நாட்கள்) காலம் இந்தியாவில் இல்லையென்றால் நீங்கள் NRI//

அதாவது, இந்தக் கணக்கு 183ஆம் நாளில் இருந்து தொடங்குமா?
இல்லை...
கண்டிப்பாக நான் 182 நாட்கள் வெளிநாட்டில் தான் இருக்கப் போகிறேன் என்று தெரிந்து விட்டால்,
முதல் நாளில் இருந்தே தொடங்குமா?

said...

குமார்,

சில நாடுகளுக்கு பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சனைகள் இருக்கலாம் (சிங்கப்பூர் உட்பட)...

ஆனால் இந்த திட்டத்தில் நம் அரசாங்கம் (அதிகாரிகளும்) கையாண்ட விதம் மிகவும் மோசம் என்பது என் எண்ணம்.

இரட்டை குடியுரிமை அமுல்படுத்திய தேதியிலிருந்து இன்றுவரை ஒரு தெளிவான திட்டம் இல்லை. இந்திய தூதரகம் சென்றோ அல்லது இணையதளம் மூலமோ இதைப் பற்றி கேள்வி கேட்டால் நம்மையும் குழப்பி அவர்களையும் குழப்பி ஒரு வரியில்தான் விடை கிடைக்கும்....

பொதுவாகவே ஒரு தகவலுக்காக இந்திய தூதரகம் சென்று வந்தால் அவர்கள் நடந்து கொள்ளும் விதமும்...நம்மை நடத்தும் விதமும் இருக்கிறதே...... ஒரு மோசமான அனுபவமாகதான் பலருக்கும் இருக்கும் என்று நினைக்கிறேன்.

எனது அனுபவங்களையே ஒரு (சோக) தொடராக எழுதலாம்... ;(

said...

KRS,

Technicalஆன கேள்விதான்!

அரசின் விளக்கத்தின்படி, 183ஆம் நாளில் இருந்துதான் தொடங்க வேண்டும். ஆனால்....

வங்கியில் NRI கணக்கு ஆரம்பிக்க வேண்டும் என்று வைத்துக் கொள்வோம்...

வெளிநாடு சென்ற 10-15 நாட்களில்கூட முறையான ஆவணங்களை அனுப்பி NRI(E) கணக்கு ஆரம்பித்து விடலாம். இப்பொழுது Technicalஆக அவர் இன்னும் NRI இல்லை. ஆனால் NRI கணக்குள்ளது...... ?@# .

இதுநடைமுறை உண்மை!

உங்களை(யும்) குழப்பவில்லையே? :)

said...

நன்றி...

said...

PIO தகுதி அவ்வளவு எளிதானதல்ல!

அதற்காக மனு செய்ய வேண்டும் பெரும் தொகை கட்டணமாக கொடுக்க வேண்டும். குறிப்பிட்ட சில நாடுகளின் குடிமகன்களுக்குத்தான் கிடைக்கும்.

said...

/குறிப்பிட்ட சில நாடுகளின் குடிமகன்களுக்குத்தான் கிடைக்கும்./

பிரபு ராஜதுரை,
நீங்கள் குறிப்பிடுவது OCI - Overseas Citizen of India என்று எண்ணுகிறேன்.

PIO அட்டை வாங்குவது எளிதுதான்.

பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, ஆப்கானிஸ்தான், சீனா, இரான், நேபாள் மற்றும் பூட்டான் நாட்டின் குடிமக்கள் PIO அட்டைக்கு விண்ணபிக்க முடியாது. அதிலும் பாகிஸ்தான், பங்களாதேஷ் நாட்டை தவிர்த்து மேலே குறிப்பிட்ட மற்ற நாட்டவர்கள் OCI அட்டைக்கு விண்ணபிக்கலாம்.

மேலும் PIO பற்றிய சில தகவல்கள்...

- நான்கு தலைமுறை (இந்தியர்கள்)கள் இதற்கு தகுதியானவர்கள்.

- PIO அட்டை - இந்தியா செல்வதற்கான அனுமதி சீட்டு(!). 15 வருடத்திற்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும்.

- இதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதனுடன், [பெரியவர்களுக்கு] அமெரிக்க $310 (~ ரூ. 15,000/-)ம், 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு அமெரிக்க $155 (~ ரூ. 7,500/-)ம் கட்டி விண்ணப்பிக்க வேண்டும். [முதலில் $1000 இருந்தது.....!!].

- ஓட்டு போடமுடியாது(இந்தியாவுலதாங்க)!

- முதன் முறை மட்டும் நீங்கள் 180 நாட்களுக்கு மேல் இந்தியாவில் தங்கினால், அருகேயுள்ள காவல்நிலையத்தில் பதிவு செய்ய வேண்டும். Ministry of Home Affairs என்ற இணைய தளத்திற்கு சென்று தேவையான தகவல்களை தெரிந்து வைத்து கொள்ளுதல் நலம். ஏனெனில் காவல்துறையினருக்கு நீண்டதொரு விளக்கம் அளிக்க பயன்படலாம்... பயன்படும்.

said...

I stand corrected. Thank you

said...

மேலும் தகவல் இங்கே!

said...

Hi,

Can you please explain me on how to contact Shasthri Bhavan or a Police station to register the stay more than 180 days in India with PIO Card. My Kids have PIO Card and stayed now in India for more than 180 days, but I could not get any information on Registration Procedure. Also I am not sure on where this registration information will be stored and how Indian Government will track this information. Please let me know if you have details.

Thanks, Vasikar Nagarajan
vasikar@yahoo.com

said...

நாகராஜன்,

மாவட்ட தலைமையகத்திலுள்ள
'Foreigners registration officer'யை தொடர்பு கொள்ளுங்கள். அவர்களுக்கு தெரிந்திருக்கலாம்!

இல்லையெனில், சென்னையிலுள்ள சாஸ்திரி பவனுக்கு நேரிடையாக சென்றால் தகவல்கள் 'கிடைக்கலாம்'!

முகவரி:
Chief Immigration Officer,
Bureau of Immigration,
Shastri Bhavan Annex,
No. 26 Haddows Road,
Chennai -600 006

வாழ்த்துக்கள்!!

பி.கு: உங்களுக்கு கிடைக்கும் தகவல்களை பகிந்துகொண்டால் மற்றவர்களுக்கும் பயனளிக்கும். நன்றி!