ஜீலை, 6, 2007 வெள்ளியன்று இந்திய பங்குச்சந்தை 15,000 புள்ளிகள் என்ற புதிய எல்லையை எட்டியுள்ளது.
ஜீலை 1990ல் முதன் முறையாக இந்திய பங்குச்சந்தை நான்கு இலக்கை (1001 !)க்கை எட்டியது.
இந்திய பங்குச்சந்தையின் பொற்காலமான 2003ம் ஆண்டில் 3 மாதங்களில் காளை பாய்ச்சலாக 3000 புள்ளிகலிருந்து 4000 பிடித்தது(67 வேலை நாட்களில்- trading sessions). அதை தொடர்ந்து அடுத்த மூன்று மாதங்களில் 5000 புள்ளிகளை தாண்டியது(இந்த முறை 54 வேலை நாட்களிலேயே!!).
2004ம் ஆண்டும் நல்ல ஆண்டாகவே ஆரம்பமானது, 6000 புள்ளிகளுடன்! அதற்கு தேவைப்பட்டது 43 வேலை நாட்கள் மட்டுமே!!.
ஆனால் 7,000 புள்ளிகளை தொட கொஞ்சம் சிரமப்பட்டது. 370 வேலை நாட்கள் அதாவது 2005ம் ஆண்டுதான மெதுவாக 7,000த்தை எட்டியது. பின்பு அதே ஆண்டில் 8000.... 9000 புள்ளிகள் என்று விறு விறுவென்று மேலே ஏறியது.
2006ம் ஆண்டில் ஐந்திலகத்தை 10,000 எட்டியது. ஆச்சரியபடக்கூடிய வகையில், 29 வேலை நாட்களில் 11,000 புள்ளிகளுக்கு சென்றது. மற்றது இதுவரை நாம் பார்த்து கொண்டிருப்பதுதான்....
இப்பொழுது சற்று விரிவாக...
ஜீலை, 1990: முதன் முதலில் இந்திய பங்குச்சந்தை 1000 புள்ளிகளை 'பிடித்தது'.
ஜனவரி, 1992: அப்பொழுதைய நிதித்துறை அமைச்சர் மன்மோகன்சிங்கின் 'பொருளதார கொள்கை'யினால் 2,000 புள்ளிகளை எட்டியது. (நன்றி: அன்றைய பிரதமர், திரு. நரசிம்ம ராவ்!)
பிப்ரவரி, 1992: எளிதாக 3000 புள்ளிகளை தாண்டியது. மன்மோகன்சிங்கின் 'market--friendly Budget' ஒரு காரணமாக இருக்கலாம்.
மார்ச், 1992: ஹர்சத் மேத்தா "வருகை"! 4,000 புள்ளிகளுக்கு கொண்டு சென்ற பெருமை அவருக்கே!! அதற்குபின் இந்திய பங்குச்சந்தைக்கு பிடித்தது சனி! 'சனி எத்தனையாவது இடத்தில்' போன்ற விவரங்களுக்கு சுப்பையா ஐயாவை தொடர்பு கொள்ளவும் ;)
அக்டோபர், 1999: முதன் முதலில் பா.ஜா.க மற்றும் கூட்டணி கட்சிகளின் ஆட்சி. தட்டு தடுமாறி 5,000 புள்ளிகளை பிடித்து கொஞ்சம் மூச்சு வாங்கியது!
பிப்ரவரி, 2000: இப்பொழுதுதான் தகவல் தொடர்புதுறை மாபெரும் வளர்ச்சி! 'கணிப்பொறி'னு சொன்னாலே '5 வருட அனுபவம்னு போட்டு' அமெரிக்காவில் வேலை மற்றும் இந்தியாவில் வளர்ச்சி... 6,000 புள்ளிகளை பிடித்தது.
ஜீன், 2005: IPCL, அம்பானி, RIL, Reliance Energy, Reliance Capital என்ற வார்த்தைகளை அதிகம் செய்திதாள்களில் இடம்பிடித்தது. விளைவு, பங்குச்சந்தை 7,000 புள்ளிகளை எட்டியது.
செப்டம்பர், 2005: 8,000 புள்ளிகள்!
நவம்பர், 2005: 9,000 புள்ளிகள். வெளிநாடுகளில் இருந்து முதலீட்டார்கள் படையெடுத்த கால கட்டம். சிறு முதலீட்டார்கள் அதிகம் கவனம் பெற்றது... இப்பொழுதுதான்!
பிப்ரவரி, 2006: 10,000 புள்ளிகள் பிடித்து சாதனை!
மார்ச், 2006: அடுத்த மாதத்திலேயே 11,000 புள்ளிகள் பிடித்து .... 'சந்திரமுகி'யை தாண்டிய 'சிவாஜி'யைபோல... ;) சாதனை!
ஏப்ரல், 2006: 12,000 புள்ளிகள் எட்டியது!
அக்டோபர், 2006: அதே ஆண்டில், 13,000 புள்ளிகளை பிடித்தது... (முரட்டுக்)காளை பாய்ச்சலில்!
டிசம்பர், 2006: 36(!) நாட்களில் 14,000 புள்ளிகள்!
ஜீலை, 6 2007: இரண்டு வாரங்களுக்கு முன்பு வெற்றிகரமாக 15,000 புள்ளிகளை பிடித்து இன்னும் மேலே செல்ல வாய்ப்புள்ளது!
இந்த ஆண்டு இறுதிக்குள் 17,500 புள்ளிகளை தொடும் என்ற 'கணிப்பு' உள்ளது!
உங்க கணிப்பு என்ன?
இந்திய ரூபாய் மதிப்பு அதிகரித்து வருவது பற்றி
-
*“ஒ*ரே மாதத்தில் இந்திய ரூபாய் மிக மோசமான நாணயத்திலிருந்து மிகச் சிறந்த
நாணயமாக மாறிய அற்புதம்" என்ற செய்தி இந்தியா டைம்ஸ் இணைய தளத்தில்
வெளியாகியிருந்தது...
5 years ago
2 comments:
தெரியாத நிறைய விசயங்களை சொல்லி உள்ளீர்கள். தொடரட்டும் உமது பணி
வாங்க முரளி! நன்றி!!
Post a Comment