Tuesday, July 31, 2007

35. வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் இந்திய பங்குசந்தையில் முதலீடு செய்ய....

சில நண்பர்கள் தனிமடல் மூலமாகவும் பதிவின் மறுமொழி மூலமாகவும் குறிப்பாக அமெரிக்காவில் வசிக்கும் நண்பர்கள் ..... இந்திய பங்கு சந்தையில் எவ்வாறு முதலீடு செய்வது என்ற கேள்வி கேட்டிருந்தார்கள்.

ICICI வங்கியில் வேலை செய்யும் என் நண்பர் ஒருவரிடம் இதைப் பற்றி குறிப்பிட்ட பொழுது அவர் Regional Sales Manager for NRI servicesல் இருக்கும் நண்பரை அறிமுகப்படுத்தி வைத்தார். அவர் கூறியது...

'அமெரிக்கா/கனடாவில் வசிக்கும் வெளிநாட்டு இந்தியர்கள் NRE கணக்கின் மூலமாக இந்திய பங்குச்சந்தையில் நேரிடையாக முதலீடு செய்ய முடியாது. இப்பொழுது பல வங்கிகள் அமெரிக்கா டாலருக்கு நல்ல வட்டி தருகிறது. வேறொரு கணக்கை ஆரம்பித்து அந்த வாய்ப்பினை பயன் படுத்திக் கொள்ளலாம்.

மேலும் , இப்பொழுதைக்கு ULIP (Unit Linked Insurance Product) மூலமாகத்தான் இந்திய பங்குச்சந்தையில் முதலீடு செய்ய முடியும்.'

UK, ஜெர்மனி போன்ற நாட்டில் வசிக்கும் வெளிநாட்டு இந்தியர்களுக்கு இந்த பிரச்சனை இல்லை. இந்திய பங்குச்சந்தையில் முதலீடு செய்வது எளிதானது என்ற எண்ணுகிறேன்.

UK, ஜெர்மனி போன்ற நாட்டில் வசிக்கும் இந்திய நண்பர்கள் இந்திய பங்குச்சந்தையில் நேரிடையாக முதலீடு செய்ய ஆர்வம் இருப்பின் ICICIல் பணிபுரியும் நண்பரின் தொலைபேசி எண் அல்லது அவரின் மின் அஞ்சல் முகவரி வேண்டுமெனில் nanayam2007@gmail.com என்ற முகவரிக்கு மின் அஞ்சல் அனுப்புங்கள்.

சரி... ULIPனா என்ன? அது நல்லதா... ? இலாபமானதா...??

அதற்கும் மியூச்சுவல் திட்டத்துக்கும் என்ன வித்தியாசம்..... என்பதை எனக்கு தெரிந்ததை அடுத்த பதிவில் சொல்கிறேன்..

4 comments:

said...

தகவலுக்கு நன்றிங்க!

said...

மேலும் எழுதுங்க. Pros and Cons சேர்த்து எழுதுனீங்கன்னா மிகவும் பயனளிப்பதா இருக்கும். நல்லது.

said...

சிங்கப்பூர்/மலேசியாகாரர்களை விட்டு விட்டீர்கள்.
3 1/2 மணி நேரம் தானே.. வந்து பண்ணீட்டு போங்க என்று சொல்கிறீர்களா?
:-))

said...

வாங்க இந்த வார சூப்பர் ஸ்டார் (நட்சத்திரம்) "இளா"!

/காட்டாறு said...
மேலும் எழுதுங்க. Pros and Cons சேர்த்து எழுதுனீங்கன்னா.../

சரிங்க!

@ வடுவூர் குமார்...

வாங்க அண்ணாச்சி!