Wednesday, September 26, 2007

17000 !!

கடந்த சில நாட்களாக மும்பை பங்கு மார்க்கெட்டில் சென்செக்ஸ் 16 ஆயிரத்திற்கும் 17 ஆயிரத்திற்கும் இடையே இருந்து வந்த நிலையில், இன்று 17 ஆயிரம் புள்ளிகளையும் தாண்டி சாதனை படைத்துள்ளது.

இன்று காலை பங்கு வர்த்தகம் ஆரம்பித்த உடனேயே அதாவது காலை 9.57 க்கே சென்செக்ஸ் 113 புள்ளிகள் உயர்ந்து 17 ஆயிரத்தை தாண்டி 17,013 புள்ளிகளாகி விட்டது.

16 ஆயிரமாக இருந்த சென்செக்ஸ் 17 ஆயிரம் ஆக உயர்வதற்கு ஆறு நாட்களே ஆகி உள்ளது.

இந்த உயர்வுக்கு பெரும் பங்கு வகித்தது ரிலையன்ஸ் குரூப்தான்.

ரிலையன்ஸ் - 256 பாயின்டுகள், பார்தி - 99 பாயின்டுகள், எல் அண்டு டி - 79 பாயின்டுகள், ஐ.சி.ஐ.சி.ஐ.வங்கி - 67 பாயின்டுகள் உயர்ந்துள்ளன.

கடந்த 5 நாட்களில் மட்டும் வெளிநாட்டு மூலதனம் 14,639 கோடி ரூபாய் இந்தியாவுக்குள் வந்துள்ளது.

மும்பை பங்கு வர்த்தகம் போலவே தேசிய பங்கு வர்த்தகத்திலும் உயர்வே காணப்பட்டது. அங்கும் 25 புள்ளிகள் உயர்ந்து 4964 புள்ளிகளாக இருந்தது.

நன்றி: தினமலர்

17 ஆயிரத்தை தாண்டிய பங்குசந்தை நவம்பர் மாத இறுதிக்குள், 18 ஆயிரம் புள்ளிகளை தாண்டும் எனவும் மேலும் விரைவில் 25 ஆயிரம் புள்ளிகளையும் தொடலாம் என்ற கருத்து நிலவுகிறது. ம்ம்ம்ம்.......பார்க்கலாம்!!

GOOD: Banks, Capital Goods, Oil & Gas
BAD: Pharma
UGLY: IT

1 comments:

said...

நல்லது நடக்கட்டும்..

சூர்யா
சென்னை