அமெரிக்க டாலரின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சி அடைந்து வருகிறது. இதனால், இந்திய ஏற்றுமதியாளர்கள் குறிப்பாக தமிழக ஏற்றுமதியாளர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு ஏன் கூடுகிறது என்பதை நாம் உணர்ந்திருந்தால் சிறிது அபாயத்தை தடுத்திருக்கலாம். அதிக லாபம் அடைய வேண்டும் என்ற நோக்கமும் ஒரு காரணம்.
சென்ற வருடம் வரை ஆடை தயாரிப்பாளர் நான்கு லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கு இந்திய ரூபாய் மதிப்பில் வரும் சரக்கை அப்போதைய அமெரிக்க டாலரில் கூறும்போது 10,000 டாலர் என்று கூறி வியாபாரம் செய்வார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த சரக்கை இரண்டு மாதத்திற்குள் அனுப்ப வேண்டும் என்றும், சரக்கு அனுப்பிய பின்பு தான் பணம் வரும். இது போன்ற சமயங்களில் அவர் இறக்குமதியாளருடன் போட்ட ஒப்பந்தத்தின்படி கிடைக்கப் போகும் 10,000 டாலருக்கு 4,55,000 பக்காவாக கிடைக்க வகை செய்யுமாறு வங்கியுடன்ஒரு பார்வர்டு கான்ட்ராக்ட் போடலாம்.
அதாவது வங்கியில் எனக்கு இந்த தேதியில் அல்லது இந்த மாதத்தில் 10,000 டாலர் வரப் போகிறது என்று கூறினால் வங்கி அவருக்கு இவ்வளவு ரூபாய் தருவதாக ஒத்துக் கொள்ளும் (அந்த தினத்தில் டாலரின் மதிப்பு எப்படி இருந்தாலும்) டாலரின் மதிப்பு காலம் காலமாக கூடி வந்துள்ளதால், ஏற்றுமதியாளர்கள் அப்படி பார்வர்ட் கான்ட்ராக்ட் போடாமல் டாலர் வரும் தினம் என்ன மதிப்பு இருக்கிறதோ அதை வாங்கிக் கொள்ளலாம் என்று இருந்து விடுகிறார்கள். இது தான் பலரை தற்போது நஷ்டப்படுத்துகிறது.ஆனால், தற்போது இருக்கும் சூழ்நிலை சிறிது வேறுபட்டுள்ளது.
அதாவது டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு கூடியுள்ளதால் பல வெளிநாடுகளில் இருந்து நம்மிடம் சரக்குகள் வாங்காத அபாயம் ஏற்பட்டுள்ளது. அதாவது முன்பு ஒரு டாலர் விலை சொல்லிய சட்டையை, தற்போது ஏற்றுமதியாளர் ஒரு டாலர் 15 சென்ட் என்று சொல்ல வேண்டிய நிலை. ஆதலால், வேறு நாடுகளில் உள்ள ஏற்றுமதியாளர் சிறிது விலை குறைவாக கூறினால் அவரிடம் வாங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆதலால் பல ஆர்டர்கள் வராமல் போகும்.என்ன இருந்தாலும் டாலரின் மதிப்பு ரூ. 40க்கு கீழ் வராது என்ற எண்ணம் பல ஏற்றுமதியாளர்களுக்கு இருந்து வந்தது. ஆனால், சென்ற வாரம் ரூ.40க்கும் கீழேயும் சென்று ஏற்றுமதியாளர்களை கதிகலங்கச் செய்து விட்டது.குறையும் டாலரின் மதிப்பு எல்லாரையும் பாதித்துள்ளதா?
இந்தியாவில் பல ஏற்றுமதி பொருட்கள், இறக்குமதியை நம்பி உள்ளது. அதுபோன்று இறக்குமதியை நம்பி இருக்கும் ஏற்றுமதியாளர்களுக்கு அதிகம் பாதிப்பு இல்லை. ஏனெனில், அவர்களின் இறக்குமதி செலவும் தற்போது பெருமளவில் குறைந்து உள்ளதே, அதனால் தான் (குறிப்பாக வைரம், தங்கம், ஏற்றுமதியாளர்கள்). மற்றபடி எல்லா இறக்குமதியாளர்களுக்கும் இந்த வருடம் முழுவதும் பண்டிகை காலம் தான். குறிப்பாக அரசாங்கத்தின் ஆயில் கம்பெனிகளுக்கு அவர்களின் ஆயில் இறக்குமதி செலவுகள் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளன.இந்தியாவில் இருந்து வெளிநாடு சுற்றுலா செல்பவர்களுக்கு செலவுகள் குறையும்.ஏன்?
வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் அதிக அளவில் இந்தியாவிற்கு பணம் அனுப்புகிறார்கள். ஏன் அவர்கள் அங்கே வைத்துக் கொள்ளலாமே என்று நினைக்கிறீர்களா?
அங்கு அதிகம் வட்டியோ, வருமானமோ கிடைக்காதது தான் காரணம்.ண பங்குச் சந்தைக்கு வெளிநாட்டுப் பணம் அதிக அளவில் வருகிறது. இது ஒரு முக்கியமான காரணம். இந்தியப் பங்குச் சந்தை, தற்சமயம் வளர்ச்சிப் பாதையில் இருப்பதால் இங்கு முதலீடு செய்து அதிக வருமானம் ஈட்டலாமே என்ற எண்ணம் தான்.சமீபத்தில் முடிவடைந்த அரசாங்க வெளியீடான பவர் கிரிட் கார்ப்பரேஷனில் முதலீடு செய்ய வெளிநாட்டு கம்பெனிகள் 400 கோடி டாலர்களை இந்தியாவிற்கு கொண்டு வந்தது. இதுபோல புதிய வெளியீடுகளில் முதலீடு செய்யவும், செகண்டரி மார்க்கெட்டில் முதலீடு செய்யவும் பல மில்லியன் டாலர்கள் இந்தியாவிற்குள் வருகிறது. இந்த அதிகப்படியான வரத்து டாலர் மதிப்பை குறைக்கிறது.உங்கள் ஊருக்கு ஒரு நாளைக்கு ஐந்து லோடு தக்காளி போதும் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஆனால், ஒரு நாளில் பத்து லோடு தக்காளி வந்தால் விலை என்ன ஆகும். நேற்றைய விலையை விட பாதியாகும் அல்லவா? அதே போலத்தான், டாலர் சந்தையும், தேவைக்கு அதிகமாக டாலர் உள்ளே வர வர, அதன் மதிப்பு வீழ்ச்சி அடைகிறது.
ஏன் அரசாங்கம் தலையிடவில்லை?
முன்பெல்லாம் டாலரின் மதிப்பு குறையும் போதெல்லாம் ரிசர்வ் வங்கி மார்க் டாலர்களை வாங்கும். டாலரின் மதிப்பு தூக்கும். ஏற்றுமதியாளர்கள் காப்பாற்றப்பட்டு வந்தனர். அதே சமயம் ஒவ்வொரு முறை டாலர் மதிப்பு கூடும் போதும் அரசாங்கம் பெட்ரோல் விலையை கூட்டி வந்தது. இது பண வீக்கத்தை ஏற்படுத்தியது. பண வீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக ரிசர்வ் வங்கி தற்போது டாலர் மார்க்கெட்டில் நுழைவதே இல்லை. இதனால், ஆண்டு ஆரம்பத்தில் ஆறு சதவீதமாக இருந்த பண வீக்கம் தற்போது 3.23 சதவீதமாக இந்த வாரம் குறைந்துள்ளது. பண வீக்கம் குறைந்துள்ளதே என்று பையை எடுத்துக் கொண்டு கடைக்கு சென்று பொருட்கள் வாங்கச் சென்றால், கடைகளில் விலைகள் குறையவே இல்லை. முன்பெல்லாம் மூன்று ரூபாய் எடுத்துக் கொண்டு சென்றால் பை நிறையக் காய்கறி வாங்கி வருவாராம் எனது அப்பா. இப்போதும் அதே மூன்று ரூபாய்க்கு பை நிறைய வாங்கி வரலாம். ஆனால், சட்டைபையின் பை நிறைய.
ஒரே ஒரு மன நிறைவுவேறு பல நாடுகளிலும் இதுபோல டாலருக்கு எதிரான அவர்கள் நாட்டின் கரன்சியின் மதிப்பும் கூடி வருவதால் அது நமக்கு ஒரு பெரிய மன நிறைவு தரும் விஷயம். இந்தியாவில் ஏற்றுமதி முழுமையாக பாதிக்கவில்லை. இல்லாவிடில் 11 சதவீத இந்திய ரூபாய் உயர்வுக்கு நமது ஏற்றுமதி பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கும்.
ரூபாய்க்கு எதிராக மற்ற முக்கியமான கரன்சிகளின் மதிப்பு எப்படியுள்ளது?
யூரோ 56.580, பிரிட்டிஷ் பவுண்ட் 81.15, சுவிஷ் பிராங் 36.06, ஜப்பான் யென் 34.59, கனடா டாலர் 40.05.
மற்ற கரன்சிகள் ரூபாய்க்கு எதிராக சிறிது கூடியுள்ளது. (கடந்த ஒன்பது மாத நிலவரத்தை வைத்து பார்க்கும் போது).
மற்ற நாடுகளில் டாலருக்கு எதிரான அவர்கள் நாட்டின் கரன்சி மதிப்பு எப்படி உள்ளது?
சிங்கப்பூர் 5.7 சதவீதமும் , மலேசியா 5.3 சதவீதமும் ,சீனா 5.6 சதவீதமும் , ஜெர்மனி 11.2 சதவீதமும் , சிலி 3.1 சதவீதமும் , தாய்லாந்து 16.7 சதவீதமும் , கனடா 11.4 சதவீதமும் , பிரேசில் 14.8 சதவீதமும் , கொரியா 3.6 சதவீதமும் , இந்தியா 11.3 சதவீதமும் , போலந்து 13.7 சதவீதமும் , யூ.கே. 8.8 சதவீதமும் , ஹங்கேரி 15.6 சதவீதமும் ,
ஆஸ்திரேலியா 14.3 சதவீதமும் கரன்சி மதிப்பு கூடியுள்ளது . மேலும் தைவான் 1.2 சதவீதமும் , அர்ஜெண்டினா 3.9 சதவீதமும் , மெக்சிகோ 0.3 சதவீதமும் , தென் ஆப்ரிக்கா 2.4 சதவீதமும் , ஹாங்காங் 0.0 சதவீதமும் கரன்சி மதிப்பு குறைந்துள்ளது.
அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் யார்?
*சாப்ட்வேர் ஏற்றுமதியாளர்கள்.
* கார்மென்ட் ஏற்றுமதியாளர்கள்.
*விவசாய விளை பொருட்கள் ஏற்றுமதியாளர்கள்.
*லெதர் பொருட்கள் ஏற்றுமதியாளர்கள்.
*கைவினைப்பொருட்கள் ஏற்றுமதியாளர்கள்.
*மற்றும் இறக்குமதியை நம்பி இருக்காத எல்லா துறையைச் சேர்ந்த ஏற்றுமதியாளர்களும்.
ஏற்றுமதியாளர்கள் என்ன செய்ய வேண்டும்
*உங்கள் கம்பெனியின் அநாவசிய செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும்.
*உள்நாட்டில் நீங்கள் வாங்கும் பொருட்கள் எதையாவது இறக்குமதி செய்ய முடியுமா என்று பார்க்க வேண்டும். அப்படி முடிந்தால் அதை கட்டாமல் இறக்குமதி செய்து உபயோகிக்க வேண்டும். அப்படியானால் அடக்க விலை குறையும்.
*பார்வர்ட் கான்ட்ராக்ட் கட்டாயம் போட வேண்டும் (மிகச் சமீபத்தில் டாலரின் மதிப்பு ரூ.42 வரை சென்றது. அப்போதெல்லாம் ஏற்றுமதியாளர்கள் பார்வர்ட் கான்ட்ராக்ட் போட மனது வரவில்லை. இன்னும் கூடும் என்று எதிர்பார்த்து காத்திருந்தார்கள்)
*ஏற்றுமதி பொருளுக்கான விலை வேறு கரன்சியில் நிர்ணயிக்க முயல வேண்டும். அதாவது யூரோ, பிரிட்டிஷ் பவுண்ட் போன்ற கரன்சிகளில். இந்திய ரூபாய்க்கு எதிராக யூரோ, பிரிட்டிஷ் பவுண்ட் ஆகிய கரன்சிகள் வலுவாகவே இருக்கிறது.
*நீங்கள் உங்களது ஏற்றுமதிக்கான பணத்தை ரூபாயாகவும் பெறலாம் (இதை அரசாங்கம் அனுமதிஅளித்துள்ளது). உங்களது சரக்குகளை இறக்குமதி செய்யும் இறக்குமதியாளர் ஒத்துக் கொள்ளும் பட்சத்தில் அவ்வாறு செய்யலாம்.
அரசாங்கம் என்ன செய்துள்ளது?
தொடர்ந்து வீழும் டாலரின் மதிப்பு அரசாங்கத்தின் தூக்கத்தை தொலைத்து விட்டது என்று தான் கூற வேண்டும். அரசாங்கத்தின் அந்நியச் செலாவணி கையிருப்பின் மதிப்பு (இந்திய ரூபாயில்) மிக அதிகமாக வீழ்ந்துள்ளது.
டாலரின் மதிப்பு ரூ. 40க்கு கீழே சென்றதும், ரிசர்வ் வங்கி டாலர் மதிப்பை தூக்கி நிறுத்த பல புதிய முயற்சிகளை எடுத்தது.
*தனிப்பட்ட நபர்கள் வெளிநாடுகளில் முதலீடு செய்ய இருந்த உச்ச வரம்பான 1,00,000 டாலரை, 2,00,000 டாலராக உயர்த்தியுள்ளது. அதாவது நீங்கள் 2,00,000 டாலர் வரை வெளிநாடுகளில் பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாம். வீடு வாங்கலாம், வங்கிகளில் போட்டு வைக்கலாம். மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்யலாம்.
*இந்திய கம்பெனிகள் வெளிநாடுகளில் இருந்து வாங்கியுள்ள கடன்களை திருப்பி செலுத்த 500 மில்லியன் டாலர்கள் வரை யாருடைய அனுமதியும் பெற வேண்டாம்.
*இந்திய மியூச்சுவல் பண்டுகள் வெளிநாடுகளில் முதலீடு செய்ய உச்ச வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.
இதுபோன்ற நடவடிக்கைகளினால் டாலர் மதிப்பு கூடும் என்று ரிசர்வ் வங்கி எதிர்பார்க்கிறது.
இதனால் பலன்கள் இருக்குமா?
அதிகப்படியான டாலர் நாட்டின் உள்ளே வருவதால், பலன்கள் குறைவாகவே இருக்கும்.
இந்திய முதலீடுகளே அதிகம் வருவாயைத் தருவதால் ஏன் வெளிநாட்டில் முதலீடு செய்ய வேண்டும் என்ற எண்ணம் தான் காரணம்.இந்த வருடம் கடந்த ஒன்பது மாதங்களில் மட்டும் 1100 கோடி டாலர்கள் பங்கு சந்தை முதலீட்டிற்காக வந்துள்ளது. கடந்த முழு வருடத்திலேயே 900 கோடி டாலர்கள் தான் வந்திருந்தது. இதிலிருந்து என்ன தெரிகிறது? இந்திய சந்தை முதலீட்டிற்கு பிரகாசமாக உள்ளது என்று.
அரசாங்கம் என்ன செய்ய வேண்டும்?
அரசாங்கம் சில சலுகைகளை கொடுத்திருந்தாலும் அது யானைப் பசிக்கு சோளப் பொரி தான். இந்தியா மக்கள் தொகை அதிகம் உள்ள நாடு. ஏற்றுமதியை நம்பி பல லட்சக்கணக்கான மக்கள் உள்ளனர். ஆதலால், இன்னும் சிறிது சலுகைகளை அதிகப்படுத்தி ஏற்றுமதியை ஊக்கப்படுத்த வேண்டும். கொடுத்துள்ள 1400 கோடி சலுகை போதாது என்று ஏற்றுமதியாளர்கள் கூறி வருகின்றனர்.இந்த வருட ஏற்றுமதி குறியீடான 16000 கோடி டாலரை அடைய முடியுமா என்பது ஒரு பெரிய கேள்விக்குறி தான்?
நன்றி: தினமலர்
இந்திய ரூபாய் மதிப்பு அதிகரித்து வருவது பற்றி
-
*“ஒ*ரே மாதத்தில் இந்திய ரூபாய் மிக மோசமான நாணயத்திலிருந்து மிகச் சிறந்த
நாணயமாக மாறிய அற்புதம்" என்ற செய்தி இந்தியா டைம்ஸ் இணைய தளத்தில்
வெளியாகியிருந்தது...
5 years ago
12 comments:
நன்றாக புரியும்படி கொடுத்துள்ளார்கள்.
நன்றி உங்களுக்கும்,தினமலருக்கும்.
Forward Contract பற்றி தெரிந்துகொள்ள முடிந்தது.
ஆமாம்ங்க! கொஞ்சம் பெரிய கட்டுரைதான்.. ஆனால் புரியும்படியாக எளிமையாக சொல்லிருந்தார்.
//யூரோ 56.580, பிரிட்டிஷ் பவுண்ட் 81.15, சுவிஷ் பிராங் 36.06, ஜப்பான் யென் 34.59, கனடா டாலர் 40.05.//
one yen value is lesser than one rupee!
one indian rupee= 3.08 yen!
இந்திய வர்த்தகர்கள் டாலர் விலை ஏறும் எனவே பிற்காலத்தில் அதிக லாபம் கிடைக்கும் என இது நாள் வரைக்கும் முன் ஒப்பந்தம் போடாமல் இருந்தார்கள் ஆனால் தற்போது அதனாலேயே அடி வாங்கியுள்ளார்கள்.
மேலும் இந்திய உற்பத்தியாளர்கள் ஆர்டர் கிடைத்தால் போதும் என தலையாட்டிக்கொண்டு ஓடிப்போய் வாங்கும் வெளி நாட்டினருக்கு சாதகமாகவே ஒப்பந்தம் போட்டுக்கொள்வது, எங்கே நாம் எதாவது நிபந்தனை விதிக்க போய் ஆர்டர் வேறு ஒருவருக்கு போய் விடுமோ எனப்போட்டி மனப்பான்மையினால் தங்களுக்கு பாதுக்காப்பாக ஒப்பந்தம் போட தவறிவிட்டார்கள்!
//இதுபோல புதிய வெளியீடுகளில் முதலீடு செய்யவும், செகண்டரி மார்க்கெட்டில் முதலீடு செய்யவும் பல மில்லியன் டாலர்கள் இந்தியாவிற்குள் வருகிறது. இந்த அதிகப்படியான வரத்து டாலர் மதிப்பை குறைக்கிறது.உங்கள் ஊருக்கு ஒரு நாளைக்கு ஐந்து லோடு தக்காளி போதும் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஆனால், ஒரு நாளில் பத்து லோடு தக்காளி வந்தால் விலை என்ன ஆகும். நேற்றைய விலையை விட பாதியாகும் அல்லவா? அதே போலத்தான், டாலர் சந்தையும், தேவைக்கு அதிகமாக டாலர் உள்ளே வர வர, அதன் மதிப்பு வீழ்ச்சி அடைகிறது.//
டாலரின் மதிப்பு குறைய காரணம் அது உள்ளே வரும் அளவினால் என்பது சரியல்ல, அப்படி எனில் டாலரின் மதிப்பு இந்திய ரூபாய்க்கு எதிராக மட்டும் தான் குறைய வேண்டும் ஆனால் மற்ற எல்லா நாடுகளின் பணத்திற்கு எதிராகவும் டாலரின் மதிப்பு குறைந்துள்ளது!
காரணம் டாலரின் வாங்கும் திறன், குறைந்துள்ளது அமெரிக்காவிலும் , உலக சந்தையிலும்! எனவே தான் டாலரின் மதிப்பை அமெரிக்காவே திருத்தியுள்ளது. அதனை நாம் திருத்த முடியாது!
அதே நேரத்தில் இந்தியாவின் உற்பத்தி அதிகரித்து ருபாயின் வாங்கும் திறன் அதிகரித்துள்ளது! எனவே தான் டாலர் மதிப்பு இந்திய ரூபாய்க்கு எதிராகவும் குறைகிறது.
இந்திய ரிசர்வ் வங்கி டாலர் வாங்கினால் டாலர் மதிப்பு சரிவை கட்டுப்படுத்தும் என்பது எப்படி உலக அளவில் செயல்படும். அதற்கு வாய்ப்பே இல்லை!
டாலர் மதிப்பை தூக்கி நிறுத்த அமெரிக்க ரிசர்வ் வங்கி தான் அதிக டாலர்களை மீண்டும் வாங்க வேண்டும்.
அது எப்படி நடக்கும் எனில் உலக அளவில் டாலர் வைத்திருப்பவர்களை அமெரிக்க வங்கிகளில் டெபாசிட் செய்ய சொல்லும், மேலும் அமெரிக்க நிறுவனங்களில் முதலீடு செய்ய ஊக்குவிக்கும். ஆனால் சமிபகாலமாக அப்படி அமெரிக்க அரசினால் வெளி நாட்டுக்கு போன டாலரை திரும்ப முதலீடாக பெற இயலவில்லை. ஏன் எனில் உலக அளவில் அமெரிக்க பொருளாதாரத்தை தற்போது வளரும் பொருளாதாரமாக பார்க்கவில்லை. அதனால் தான் பல நாட்டினரும் அதிகம் தங்கம் வாங்கி அதில் முதலீடு செய்கிறார்கள்.
அதை விட இன்னொரு காரணம் இருக்கிறது அமெரிக்க ஈடுபடும் போர் நடவடிக்கைகளுக்கான செலவீனங்களை சமாளிக்க அதிகப்படியாக டாலரை அச்சடித்து பண புழக்கத்தில் விட்டு இருக்கிறது , அதன் பின்விளைவைத்தான் அமெரிக்கா அனுபவிக்கிறது!
அமெரிக்க டாலர், கச்சா எண்ணை விலை, தங்கம் விலை இவை எல்லாம் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்த ஒன்று!
தங்கம், கச்சா எண்ணை உற்பத்தி அதிகரித்து விலைக்குறைந்தால் தானாகவே டாலர் மதிப்பு உயரும்!
ஆனால் கச்சா எண்ணை, தங்கம் விலை மேலே தான் செல்கிறது. அமெரிக்க அரசு அவ்வபோது "opec" நாடுகளை மிரட்டி கச்சா விலையை குறைக்கவே பார்க்கும் , தற்போது அதன் பாட்சா பலிக்கவில்லை!
தெளிவான விளக்கத்திற்கு நன்றி, வவ்வால்!
//மேலும் இந்திய உற்பத்தியாளர்கள் ஆர்டர் கிடைத்தால் போதும் என தலையாட்டிக்கொண்டு ஓடிப்போய் வாங்கும் வெளி நாட்டினருக்கு சாதகமாகவே ஒப்பந்தம் போட்டுக்கொள்வது...//
இது IT துறைக்கும் அப்படியே பொருந்தும். ஒரு மணி நேரத்துக்கு 100+ டாலர்கள் இருந்ததை CTS, Infosys, Wipro, Satyam, TCS, HCL ....போன்ற 'நம்மவர்கள்' 35,40 டாலர்கள்வரை போட்டி போட்டுக் கொண்டு குறைத்து கொண்டு இருந்தார்கள்.. இருக்கிறார்கள்!!
ஒரு ரகசியத்தை சொல்லுங்க..வவ்வால்..
இயற்கை வளம், விவசாயம், வரலாறு, பொருளாதாரம் .. இப்படி "TR" மாதிரி இருக்கிறீங்களே.... ('சகலகலா வல்லவன்'னு சொல்ல வந்தேன்..) எப்படிங்க!!?
வாழ்த்துக்கள்!
எனக்கென்னவோ வவ்வால் அவர்கள் சொல்வது போல் ஈராக் யுத்தத்தின் பொருளாதார விளைவுகளே டாலரின் வீழ்ச்சிக்கு காரணம் எனத் தோன்றுகிறது.மற்றும் தங்க தாதாக்களும்,எண்ணை ஷேக்குகளும் கூட்டு நண்பர்களே. முன் ஒப்பந்தம் என்ற புதிய தகவலுக்கு நன்றி.
தென்றல்,
நன்றி!
கேள்விப்பட்டதுண்டு போட்டி போட்டு மலிவாக வேலை செய்வது , ஆனால் மென்பொருள் துறையும் பனியன் கம்பெனி போல அடித்து பிடித்து சரண் அடைவார்கள் என்பது ரொம்ப கொடுமை.
ஆனா T.R கூட ஒப்பிட்டதிற்கு என்னை நாளு அடி அடித்து இருக்கலாம்! :-(
எல்லாம் கேள்வி ஞானம் தான் , இன்னும் நான் தெரிந்து கொள்ள வேண்டியது நிறைய இருக்கு அதுக்குள்ள இப்படி சொல்லிட்டிங்களே!
நட்டு,
அமெரிக்க பல மொள்ளமாரித்தனங்களை செய்து வரும் நாடு, ஒரு ஆங்கில கட்டுரையில் படித்த டாலர் சமாச்சாரம் தான் லேசாக சொன்னேன், முழுதும் சொல்லவில்லை.
டாலரை வைத்து அமெரிக்கா ஆடும் ஆட்டம் பயங்கரம்.
உதாரணமாக நம் நாட்டில் ஏன் ருபாய் நோட்டு அடிக்கிறாங்க, அதை பண பரிவர்த்தனைக்கு பயன்படுத்தி நாம் பொருட்களை வாங்க தானே!
ஒரு நாடு எப்படி, எந்த அளவுக்கு பணம் அச்சடிக்கும் எனப்பார்த்தால் , ஒரு நாட்டின் ரிசர்வ் வங்கியில் உள்ள தங்கத்தின் இருப்புக்கு ஏற்ற மதிப்பில் தான் நோட்டு அச்சடிக்கலாம்! இந்த தங்கத்தின் அளவு என்பது உத்தேசமாக அந்நாட்டின் பொருளாதாரத்தின் அளவுக்கு இருக்கும்.
அப்படி தான் அமெரிக்காவும் நோட்டு அச்சடிக்க வேண்டும், ஆனால் அதன் டாலரை உலக அளவில் இருக்கும் பல நாடுகளும் வாங்கி வங்கியில் கை இருப்பாக வைத்துகொள்கின்றன , அப்படி எனில் அமெரிக்காவில் புழங்க டாலர்?
இங்கே தான் அமெரிக்கா அடித்து ஆடுகிறது.இப்படி பல நாடுகளும் டாலரை பூட்டி வைத்துக்கொள்வதால் , அமெரிக்கா உண்மையில் எவ்வளவு மதிப்பில் டாலர் அடிக்கலாம் என யாரும் சரியாக கணக்கிட முடியாது என்பதால் அமெரிக்காவிற்கு பணம் தேவை என்றால் அச்சு அடித்து கொள்ளும்!
சர்வதேச அளவில் வேறு ஒரு நாணயம் சர்வதேச பணப்பரிவர்த்தனைக்கு வந்து விட்டால் போதும் அமெரிக்காவிற்கு பலத்த அடி விழும்! தற்போது அதனால் தான் ஈரோ வை ஐரோப்பிய நாடுகள் முன்னிறுத்துகின்றன.
ஈரோ முன்னுக்கு வந்து விட்டால் இது வரை டாலர் வாங்கி அடுக்கிய நாடுகள் எல்லாம் அதனை வெளியில் தள்ளி விடும் அப்படி நடந்தால் என்ன ஆகும்?
நீங்களே பதிலை கண்டு பிடியுங்கள்!
வாங்க, நட்டு! ;)
வவ்வால்,
//ஆனா T.R கூட ஒப்பிட்டதிற்கு என்னை நாளு அடி அடித்து இருக்கலாம்! :-( //
என்னங்க.. "சகலகலா வல்லவன்" சொன்னதால 'கமல்' ரேஞ்சுக்குனு எடுத்துகலாமே?!
//இங்கே தான் அமெரிக்கா அடித்து ஆடுகிறது.இப்படி பல நாடுகளும் டாலரை பூட்டி வைத்துக்கொள்வதால் .... , //
(உலக நாடுகளுக்கு அமெரிக்காவின் நெருக்கடியும்தாண்டி, ) இந்த நிலை விரைவில் மாறும் சாத்தியகூறுகள் இருக்கிறது...
//ஈரோ முன்னுக்கு வந்து விட்டால் இது வரை டாலர் வாங்கி அடுக்கிய நாடுகள் எல்லாம் அதனை வெளியில் தள்ளி விடும் அப்படி நடந்தால் என்ன ஆகும்?
//
இதனால் நமக்கும் (இந்தியா) பாதிப்பு வருமே?!
அப்படியென்றால், இந்த நாடுகள் எல்லாம் டாலர் விலை உயர வேண்டும் என்று முயற்சி எடுக்கும்தானே?
ஒரு இடைசெருகல் கேள்வி:
ஜப்பான் நாட்டின் பொருளாதார வளர்ச்சி மிகவும் வியக்கதக்கது. அதனுடைய GDP - அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்த நிலையில் இருக்கிறது. ஆனால் அதனுடைய யென் மதிப்பு மட்டும் எப்படி மற்ற நாட்டின் கரன்சியைவிட குறைந்துள்ளது... ஈரோ, டாலர்க்கு அடுத்து யென் மதிப்பு தானே கூடியிருக்க வேண்டும். ஏன் அவ்வாறு இல்லை?!
GDPயைப் பொறுத்து அந்த நாட்டின் கரன்சிமதிப்பு உயர வேண்டும்தானே?!
//இதனால் நமக்கும் (இந்தியா) பாதிப்பு வருமே?!
அப்படியென்றால், இந்த நாடுகள் எல்லாம் டாலர் விலை உயர வேண்டும் என்று முயற்சி எடுக்கும்தானே?//
கண்டிப்பாக உலக நாடுகள் அனைத்திற்கும் பிரச்சினை தான் ஆனால் என்ன இது ஒரே நாளில் நடக்கபோவது இல்லை எனவே சிறிது சிறிதாக வேறு ஒரு நாணயத்தை அன்னிய செலவாணி இருப்பாக வைத்துக்கொள்ள ஆரம்பித்து விடுவார்கள்.
வர்த்தகம் நடைப்பெறும் நாடுகளிடையே உள்ள ஒப்புதலைப்பொறுத்தே அது மாறும். இப்போ வலை குடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணை வாங்கும் போது அவன் டாலர் கேட்பதால் தான் இந்தியாவிற்கு அதிக டாலர் தேவைப்பட்டது. ஈரோ கேட்டா நாம் அதை தான் வாங்கி இருப்பு வைப்போம்.
உலக நாடுகள் எல்லாம் டாலரில் இருந்து மாறிவிட்டால் அமெரிக்க டாலரின் மதிப்பு இப்போது இருப்பதில் பாதி கூட வராது ஏன் எனில் அவர்கள் உலக அளவில் புழக்கத்தில் விட்டு இருப்பது அவர்கள் பொருளாதார மதிப்பை விட அதிகம்!
உலக நாடுகள் ஓரளவு தான் முயற்சி செய்யும் எத்தனையோ செல்வாக்கான நாடுகள் தேவைக்கு மட்டும் டாலர் வைத்து இருப்பார்கள் மற்றபடி எல்லாம் அவர்கள் பணம் தான் இருக்கும். அவர்கள் எல்லாம் டாலரை வேண்டாம் என்று சொல்லிவிட்டால். நாம் மட்டும் வைத்திருந்து என்ன பயன் அதனைக்கொண்டு வெங்காயம் கூட வாங்க முடியாது! எனவே தொடர்ந்து டாலர் விழும் என கண்டுபிடித்தால் எல்லா நாடுகளும் பங்கு சந்தையில் சரிவு வரும் போது எல்லாரும் கிடைத்த விலைக்கு விற்று தள்ளுவது போல டாலரை தள்ளி விடுவார்கள்! டாலர் மதிப்பு என்பதும் பங்கு பத்திரம் போன்றது தான்! அதிகம் கற்பனை மதிப்பு!
//ஜப்பான் நாட்டின் பொருளாதார வளர்ச்சி மிகவும் வியக்கதக்கது. அதனுடைய GDP - அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்த நிலையில் இருக்கிறது. ஆனால் அதனுடைய யென் மதிப்பு மட்டும் எப்படி மற்ற நாட்டின் கரன்சியைவிட குறைந்துள்ளது... ஈரோ, டாலர்க்கு அடுத்து யென் மதிப்பு தானே கூடியிருக்க வேண்டும். ஏன் அவ்வாறு இல்லை?!
GDPயைப் பொறுத்து அந்த நாட்டின் கரன்சிமதிப்பு உயர வேண்டும்தானே?!//
கூட வேண்டும் , அதே போல ஜப்பானின் நாணய மதிப்பு கூடி தான் இருக்கிறது.
ஜப்பான், ரஷ்யா, இத்தாலி போன்ற நாடுகள் ஆரம்பத்திலேயே அவர்களின் அடிப்படை ரூபாய் அலகினை குறைந்த மதிப்பில் தான் வைத்திருக்கிறார்கள்.
உதாரணமாக நம்ம நாட்டில் 50 காசுக்கு பதிலா நோட்டு அடித்து வைத்துக்கொண்டு அது தான் அடிப்படை ரூபாய் என்று சொல்வது போல.
உதாரணமாக 10 ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய ஒரு ரூபாய்க்கு ஜப்பானிய யென் கிட்ட தட்ட 10 தர வேண்டும் என இருந்தது , இப்போது அது 3.08 என்ற அளவுக்கு ஆகிவிட்டதே அதன் மதிப்பு உயர்வதை தான் காட்டுகிறது.
விலைவாசி ஏன் உயர்கிறது ?
நமது ரூபாயின் வாங்கும் திறன், 1947 இருந்ததை விட இப்போது சுமார் 160 மடங்கு குறைந்துள்ளது. அதாவது 1947 இன் ஒரு ரூபாய் இன்று 160 ருபாய்க்கு சமம். இதற்கு முக்கிய காரணம், அரசு நோட்டடித்து செலவு செய்ய்வதே ஆகும்.
சாதரணமாக பொருட்க்களுக்கான தேவை அதிகரிக்கும் போது அல்லது உற்பத்தி குறையும் போது, விலை ஏறுகிறது. மாற்றாக, புழக்கத்தில் இருக்கும் பணத்தின் அளவு மிக அதிகமானால் பணவீக்கம் ஏற்படுகிறது ; அதாவது அரசாங்கம் ரூபாய் நோட்டுகளை அச்சடித்து செலவு செய்யும் போதும் விலைவாசி ஏறும்.
மத்திய பட்ஜட்டில் பல விதமான செலவுகளால், இப்போது ஆண்டுக்கு சுமார் 1.6 ல்ட்சம் கோடி துண்டு விழுகிறது. இதில், அரசாங்கம் ஒரு 70 ஆயிரம் கோடி கடன் வாங்குகிறது. மிச்ச்திற்க்கு (சுமார் 90,000 கோடி ரூபாய்) நோட்டடித்து செல்வு செய்கிறது. பணவீக்க்ம் உருவாகி விலைவாசி ஏறுகிறது. மிக அதிகமான ரூபாய் நோட்டுகள் மிக குறைவன எண்ணிக்கையில் உள்ள பொருட்க்களை துரத்தும் போது பொருட்க்களின் விலை ஏறுகிறது. புதிதாக உற்ப்பத்தி செய்ய முடியாத பண்டங்களான நிலம், ரியல் எஸ்டேட் போன்றவை மிக அதிகமாக விலை ஏறுகிறது.
வட்டி விகிதம், விலைவாசி உயர்வின் விகிததை ஒட்டியே மாறும். வட்டி என்பது, பணத்தின் வாடகையே. பணத்தின் மதிப்பு குறைய குறைய, வட்டி விகிதம் அதற்கேற்றாற் போல் உயரும். கந்து வட்டி விகிதம் பல மடங்கு அதிகரிக்க இதுவே காரணம்.
1930களில் காந்தியடிகள் கதர் இயக்கத்திற்காக வங்கியிலிருந்து 5 சதவித வட்டிக்கு கடன் வாங்க முடிந்தது. அன்றய பணவீக்கமும், விலைவாசி உயர்வும் அப்படி இருந்தன. பற்றாகுறை பட்ஜெட்களின் விலைவாக 1950 முதல் 1990கல் வரை பணவீக்கமும். விலைவாசியும், வட்டிவிகிதமும் தொடர்ந்து ஏறின.
ஊதியம் போதாதால், தொழிளாலர்கள் மற்றும் ஏழைகள் மிகவும் பாதிப்படைகிறார்கள். ஏழைகள், தங்கள் குழந்தைகளை தொழிலாளர்களாக அனுப்புகின்றனர். அதிக வட்டி விகிததில், கந்து வட்டிக்கு கடன் வாங்க வேண்டிய நிலை. கூலி / சம்பள் உய்ரவு கேட்டு போராட வேண்டிய நிலை. அதனால் உற்பத்தி செலவு அதிகரித்து, விலைவாசி மேலும் உயர்கிறது. சம்பளம் போதாமல் அரசாங்க ஊழியர்கள் லஞ்சம் வாங்க முற்படுகின்றனர்.
ஜெர்மனி போன்ற நாடுகள் பணவீக்கதை மிகவும் கட்டுபடுத்தி விலைவாசியை ஒரே அளவில் வைத்துள்ள்ன. அதனால் அங்கு சுபிட்சம் பொங்குகிறது. இங்கோ வறுமை வாட்டுகிறது. எவ்வளவு சம்பாதித்தாலும் போதவில்ல்லை.
அரசின் வெட்டி செலவுகளுக்காக, பொது மக்கள் விலைவாசி உயர்வு என்ற மறைமுக வரியை சுமக்க வேண்டியுள்ளது. ஆனால் அடிப்படை பொருளாதார அறிவு இல்லாத இடதுசாரிகளோ தொழில் அதிபர்களையும், முதலாளிகளையும் காரணமாக சொல்கின்றனர்.
லார்டு கீய்யினஸ் சொன்னது : "..ஒரு நாட்டின் ஒழுக்கதையும், உயர்ந்த குணத்தைய்யும் அழிப்பதற்க்கு சிறந்த வழி என்ன்வென்றால், அந்நாட்டின் நாணய மதிப்பை வெகுவாக சீரழிப்பது மூலம்...." ; நாம் அதற்கு நல்ல எடுத்துக்காட்டு. இதை என்று உணர்வோம் ?
http://nellikkani.blogspot.com/
விலைவாசி ஏன் உயர்கிறது ?
நமது ரூபாயின் வாங்கும் திறன், 1947 இருந்ததை விட இப்போது சுமார் 160 மடங்கு குறைந்துள்ளது. அதாவது 1947 இன் ஒரு ரூபாய் இன்று 160 ருபாய்க்கு சமம். இதற்கு முக்கிய காரணம், அரசு நோட்டடித்து செலவு செய்ய்வதே ஆகும்.
சாதரணமாக பொருட்க்களுக்கான தேவை அதிகரிக்கும் போது அல்லது உற்பத்தி குறையும் போது, விலை ஏறுகிறது. மாற்றாக, புழக்கத்தில் இருக்கும் பணத்தின் அளவு மிக அதிகமானால் பணவீக்கம் ஏற்படுகிறது ; அதாவது அரசாங்கம் ரூபாய் நோட்டுகளை அச்சடித்து செலவு செய்யும் போதும் விலைவாசி ஏறும்.
மத்திய பட்ஜட்டில் பல விதமான செலவுகளால், இப்போது ஆண்டுக்கு சுமார் 1.6 ல்ட்சம் கோடி துண்டு விழுகிறது. இதில், அரசாங்கம் ஒரு 70 ஆயிரம் கோடி கடன் வாங்குகிறது. மிச்ச்திற்க்கு (சுமார் 90,000 கோடி ரூபாய்) நோட்டடித்து செல்வு செய்கிறது. பணவீக்க்ம் உருவாகி விலைவாசி ஏறுகிறது. மிக அதிகமான ரூபாய் நோட்டுகள் மிக குறைவன எண்ணிக்கையில் உள்ள பொருட்க்களை துரத்தும் போது பொருட்க்களின் விலை ஏறுகிறது. புதிதாக உற்ப்பத்தி செய்ய முடியாத பண்டங்களான நிலம், ரியல் எஸ்டேட் போன்றவை மிக அதிகமாக விலை ஏறுகிறது.
வட்டி விகிதம், விலைவாசி உயர்வின் விகிததை ஒட்டியே மாறும். வட்டி என்பது, பணத்தின் வாடகையே. பணத்தின் மதிப்பு குறைய குறைய, வட்டி விகிதம் அதற்கேற்றாற் போல் உயரும். கந்து வட்டி விகிதம் பல மடங்கு அதிகரிக்க இதுவே காரணம்.
1930களில் காந்தியடிகள் கதர் இயக்கத்திற்காக வங்கியிலிருந்து 5 சதவித வட்டிக்கு கடன் வாங்க முடிந்தது. அன்றய பணவீக்கமும், விலைவாசி உயர்வும் அப்படி இருந்தன. பற்றாகுறை பட்ஜெட்களின் விலைவாக 1950 முதல் 1990கல் வரை பணவீக்கமும். விலைவாசியும், வட்டிவிகிதமும் தொடர்ந்து ஏறின.
ஊதியம் போதாதால், தொழிளாலர்கள் மற்றும் ஏழைகள் மிகவும் பாதிப்படைகிறார்கள். ஏழைகள், தங்கள் குழந்தைகளை தொழிலாளர்களாக அனுப்புகின்றனர். அதிக வட்டி விகிததில், கந்து வட்டிக்கு கடன் வாங்க வேண்டிய நிலை. கூலி / சம்பள் உய்ரவு கேட்டு போராட வேண்டிய நிலை. அதனால் உற்பத்தி செலவு அதிகரித்து, விலைவாசி மேலும் உயர்கிறது. சம்பளம் போதாமல் அரசாங்க ஊழியர்கள் லஞ்சம் வாங்க முற்படுகின்றனர்.
ஜெர்மனி போன்ற நாடுகள் பணவீக்கதை மிகவும் கட்டுபடுத்தி விலைவாசியை ஒரே அளவில் வைத்துள்ள்ன. அதனால் அங்கு சுபிட்சம் பொங்குகிறது. இங்கோ வறுமை வாட்டுகிறது. எவ்வளவு சம்பாதித்தாலும் போதவில்ல்லை.
அரசின் வெட்டி செலவுகளுக்காக, பொது மக்கள் விலைவாசி உயர்வு என்ற மறைமுக வரியை சுமக்க வேண்டியுள்ளது. ஆனால் அடிப்படை பொருளாதார அறிவு இல்லாத இடதுசாரிகளோ தொழில் அதிபர்களையும், முதலாளிகளையும் காரணமாக சொல்கின்றனர்.
லார்டு கீய்யினஸ் சொன்னது : "..ஒரு நாட்டின் ஒழுக்கதையும், உயர்ந்த குணத்தைய்யும் அழிப்பதற்க்கு சிறந்த வழி என்ன்வென்றால், அந்நாட்டின் நாணய மதிப்பை வெகுவாக சீரழிப்பது மூலம்...." ; நாம் அதற்கு நல்ல எடுத்துக்காட்டு. இதை என்று உணர்வோம் ?
----------------------------
கருப்பு பணத்தின் லீலைகள்
வருமான வரி, விற்பனை வரி மற்றும் இதர வரிகளின் சுமை மிக அதிகம். அதனால் மிகப் பெரும்பான்மையோர் வரி ஏய்ப்பு செய்கின்றனர். வரி வலையிருந்து தப்பும் பணம் கருப்பு பணமாகிறது. வரி ஏய்ப்புக்கு துணை போகும் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் லஞ்சமாகப் பெறும் பணமும் இக்கருப்பு பொருளாதாரதில் சேர்கிறது.
கருப்பு பணத்தை பாதுகாக்க குறுக்கு வழிகள் உள்ளன. பிணாமி நபர்களிடம் கொடுத்தல், ரியல் எஸ்டெட், பஸ் ரூட், மற்றும் பல இடங்களில் பதுக்குவார்கள்.
காஞ்சி மடம் சீரழிந்தது கருப்பு பண நன்கொடைகளால்தான். அவ்வகையில் வரும் பணம் கணக்கில் வராததால், நிர்வாகிகளால் இஷ்டம் போல் செலவு செய்ய முடிந்தது. விளைவுகளை நாடறியும்..
தொழில் கூட்டாளிகளை, நிர்வாகதில் இருக்கும் கூட்டாளி ஏமாற்றுதல் ; காசாளர் மற்றும் நிர்வாகிகள் கடை பணத்தை திருடுதல் போன்றவை பெருக முக்கிய காரணம், பெரும்பாலும் வியாபரம் கருப்பில் நடப்பதால்.. மொத்ததில் நேர்மை குறைந்து திருட்டுதனம் நாடு முழுவதும் பரவி விட்டது.
கல்வி நிறுவனங்கள், அரசியல், சினிமா, ரியல் எஸ்டெட், பஸ் ரூட், நகை வியாபாரம், கந்து வட்டி, விபச்சாரம் போன்றவைகளில் கருப்பு பணம் விளையாடுகிறது. யாரும் கவலை படுவதுமில்லை, பயப்படுவதுமிலை.
வரி ஏய்ப்பு செய்யும் மக்கள், கொஞ்ச் கொஞ்சமாக அனைத்து சட்டங்களையும் மீற முற்படுகின்றனர். அதனால், அனைத்து துறைகளிலும் நேர்மை வெகுவாக குறைகின்றது. அனைத்து வகை வரிகளின் விகித்தை வெகுவாக குறைத்தால் மட்டுமெ நிலமையை சீராக்க முடியும். அதற்கு அரசின் வெட்டி செலவுகளை கடுமையாக குறைக்க வேண்டும். நடக்கற காரியமா ? சொல்லுங்கள் ?
http://nellikkani.blogspot.com/
செறிவான விளக்கத்திற்கு மிக்க நன்றி, வவ்வால் & KR அதியமான்!!
//ஜப்பான், ரஷ்யா, இத்தாலி போன்ற நாடுகள் ஆரம்பத்திலேயே அவர்களின் அடிப்படை ரூபாய் அலகினை குறைந்த மதிப்பில் தான் வைத்திருக்கிறார்கள்.
உதாரணமாக நம்ம நாட்டில் 50 காசுக்கு பதிலா நோட்டு அடித்து வைத்துக்கொண்டு அது தான் அடிப்படை ரூபாய் என்று சொல்வது போல.
உதாரணமாக 10 ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய ஒரு ரூபாய்க்கு ஜப்பானிய யென் கிட்ட தட்ட 10 தர வேண்டும் என இருந்தது , இப்போது அது 3.08 என்ற அளவுக்கு ஆகிவிட்டதே அதன் மதிப்பு உயர்வதை தான் காட்டுகிறது.//
ம்ம்ம்ம்.... இங்கு எல்லாமே டாலரின் அடிப்படையில் கணக்கிடுவதால்,
தற்பொழுது, ஒரு யென் = 0.008526 $. அதாவது (கிட்டத்தட்ட) 120 யென் = 1 டாலர். இதுக்கு நம்ம ரூபாயே (~ 40) பரவாயில்லையே!
Post a Comment