எப்பொழுதாவது சாட்டில் வரும் நான், இன்று (மங்களூர்) சிவா வந்து 'ஹலோ' சொல்ல நலம் விசாரிப்புக்கு பின்..... ஒரு பெரிய 'குண்டை தூக்கி' போட்டார். 'பங்குச்சந்தை 1500 புள்ளிகள் அடி'னு சொல்ல......... தட்டச்சு பிழையோனு நினைச்சி 'என்னது' கேக்க... 'ஆமாங்க... பங்குச்சந்தை வேலையை ஒரு மணி நேரம் நிறுத்தி வைச்சிருக்காங்க'னு சொல்லிட்டு அப்புறமா பார்க்கலாம்னு போயிட்டாரு...
... அடி விழும்னு எதிர்பார்த்ததுதான்.. ஆனா... இந்தளவுக்கு விழும்னு எதிர்பார்க்கலை...
சரினு CNBC TV 18 பார்க்க.... இந்திய பங்குச்சந்தைக்கு ஒரு கருப்பு தினம்தான்.
இந்தளவுக்கு புள்ளிகள் சரிய என்ன காரணம்...
நமது பங்குச்சந்தைக்கு அன்னிய நிறுவன முதலீட்டாளர்களின் (FII) பணம் வரும் வழிகளில் ஒன்றான Participatory notes [P-Notes] மீது கட்டுப்பாடுகளை விதிக்கலாமா என SEBI ஒரு proposal கொண்டு வருவதாக இருக்கிறது.
சரி.... முதல் (பெரிய) ஐந்து அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் யாரு..
அ) மோர்கன் ஸ்டான்லி (Morgan Stanley)
ஆ) மெரில் லின்ச் (Merrill Lynch Capital Markets Espana)
இ) சிட்டி குரூப் (Citigroup Global Markets)
ஈ) கோல்ட்மேன் சாக் (Goldman Sachs)
உ) CLSA மெர்சண்ட் (CLSA Merchant Bankers)
பின் நமது நிதி அமைச்சர், ப.சி சில விசயங்களை 'தெளிவு படுத்த' (...said that the Sebi move was to moderate capital flow through PNs and there is no reason to panic. Sebi has taken a good decision in the interest of long term investors and capital markets)... ..
அதற்குபின் 10:55க்கு ஆரம்பித்த பங்குச்சந்தையில் 'கொஞ்சம்' ஆறுதலான செய்தியை பார்க்க முடிந்தது.
SEBI இதை சில நாட்களுக்கு முன் அறிவித்திருந்தால் இந்தளவுக்கு அடி விழுந்திருக்காது என்றே தோன்றுகிறது.
நான் தினமும் படித்துவரும் பங்காளியின்(!!) பங்குவர்த்தகம் பார்த்த பொழுது அவருக்கு ஒரு பூச்செண்டு கொடுக்க வேண்டும் என்றே தோன்றியது... அவருடைய இந்த பதிவில் அவருடைய அனுபவம் தெரிந்தது... துல்லியமான கணிப்பு!!
தவறாமல்..தினமும் வணிக குறிப்புகொடுக்கும் அவருக்கு ஓ.. ஓ..ஓ....!!
இந்திய ரூபாய் மதிப்பு அதிகரித்து வருவது பற்றி
-
*“ஒ*ரே மாதத்தில் இந்திய ரூபாய் மிக மோசமான நாணயத்திலிருந்து மிகச் சிறந்த
நாணயமாக மாறிய அற்புதம்" என்ற செய்தி இந்தியா டைம்ஸ் இணைய தளத்தில்
வெளியாகியிருந்தது...
5 years ago
12 comments:
SENSEX SMARTLY RECOVERED NEARLY 1400 POINTS FROM THE DAY LOW.
SMALL INVESTORS BE CATIOUS , STAY AWAY FROM INDEX STOCKS AND MOVE TO QUALITY MIDCAPS WHICH IS NOT AFFECTED MUCHLY BY THIS BULL RUN & COLLAPSE.
தென்றல்...
இத்தனை புகழ்ச்சிக்கு அந்த ஆள் தகுதியே இல்லாதவர்...
ச்சின்ன பையனை ஓவராய் புகழ்கிறீர்கள்...ஹி..ஹி....
மெய்யாலுமே நீங்கதான் நல்லா எழுதீட்டு வர்றீங்க...வாழ்த்துக்கள் நண்பரே!
http://mangalore-siva.blogspot.com/2007/10/marketcrash-how-to-handle.html
இரண்டாம் சொக்கன்
http://mangaloresiva.blogspot.com/
ஒரு எட்டு இதயும் பாருங்க. என்னைய ச்சின்ன பையன்னு சொன்னதுக்கு தாங்க்ஸ்ங்னா
சிவா...
ச்சின்ன பையன்னு சொன்னது பங்குவணிகத்தை...
உங்களையல்ல...
நன்றி சிவா!
இரண்டாம் சொக்கன்...
ஏங்க...'பங்காளி'யா அறிமுகமாகி... 'மாயாவி'யாய் வந்து முதல்...இரண்டாம்..மூன்றாம்.. சொக்கனாய் வந்து நல்லாவே குழப்புறீங்க...
//ச்சின்ன பையனை ஓவராய் புகழ்கிறீர்கள்...ஹி..ஹி....
//
உங்க சிரிப்பே உங்களை 'காட்டி'குடுத்திருச்சி...!!;)
பேருந்துல போறப்ப... வசந்த பவன்ல சாப்பிடுறப்ப... எப்படி பதிவு போடுறதுனு உங்ககிட்டதாங்க கத்துக்கணும்...
மதுரையோ..சென்னையோ வந்தா பூச்செண்டோட உங்களை பார்க்கவறேன்..
இரண்டு நாட்களுக்கு முன் தினமலரில் வந்த செய்தி....
"மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 19,000 புள்ளிகளை கடந்ததையொட்டி பங்கு முதலீட்டாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். இதனை தொடர்ந்து மேலும் பல முதலீட்டாளர்கள், பங்கு சந்தையில் குவிந்தவண்ணம் உள்ளனர். சென்செக்ஸ் மேலும் 1000 புள்ளிகளை 2-3 நாட்களில் தொடும் என இதன் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிப்பதால் தீபாவளிக்குள் பல முதலீட்டாளர்கள் கோடீஸ்வரன் ஆகிவிடுவார்கள் என்ற கருத்தும் நிலவுகிறது. பங்குசந்தையில் அக்டோபர்-15. நிலவரப்படி 6மில்லியன்டி-மேட் அக்கவுண்ட்களும், மொத்த பங்குமுதலீட்டாளர்களின் முதலீடு ரூ.58,29,886.46 கோடியும் இருக்கிறது. இது மேலும் கூடும் என கருதப்படுகிறது. "
ஒண்ணும் சொல்றதுக்கில்ல..
ஹி..ஹி என்னை மறந்துடிங்களே நான் கூட சீக்கிரம் ஒரு சரிவு வரும்னு சொன்னேன்ல, நான் செபி சரியான கட்டுப்பாடு விதிக்கலையானு கேட்டதை நீங்க ப.சி. கிட்டே சொல்லித்தானே அந்த p.N க்கு கட்டுப்பாடு வைக்க ஏற்பாடு நடந்துச்சு, அதை எல்லாம் சொல்லவே ...இல்லை!
வெளில சொல்லாம இதே போல நான் குடுக்கிற ஐடியாவ எல்லாம் ப.சிக்கு சொல்லி நல்லது நடக்க ஏற்பாடு செய்யுங்க!
//ஹி..ஹி என்னை மறந்துடிங்களே நான் கூட சீக்கிரம் ஒரு சரிவு வரும்னு சொன்னேன்ல, //
வாங்க வவ்வால்!
நீங்களும் சொன்னீங்க(?!).. ஆனா.. என்னைக்கு நடக்கும்தான் சொல்ல 'மறந்துட்டீங்க'.. அதனால உங்களுக்கு (இந்த முறை)ஒரே ஒரு பூ மட்டும்!!
அ) Participatory notes [P-Notes] - பங்கேற்புப் பத்திரங்கள்
ஆ) What is Participatory Notes?
இ) செபி கிளப்பிய பிரச்னை என்ன? -சேதுராமன் சாத்தப்பன்
இந்திய பங்குச் சந்தையில் நேரடியாக நுழைய விரும்பாத வெளிநாட்டு நிதி அமைப்புகள், வெளிநாட்டின் பெரிய முதலீட்டாளர்கள், வெளிநாட்டு முதலீடு நிறுவனங்கள்(எப்.ஐ.ஐ.,)வழியாக நுழைவது சகஜம். இவர்களுக்காக எப்.ஐ.ஐ., இந்திய புரோக்கர்கள் மூலமாக பங்குகள் வாங்கும். அவ்வாறு வாங்கும் போது வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பற்றிய விவரங்கள் இந்திய புரோக்கர்களுக்கு தெரியாது. இந்திய புரோக்கர், பங்குகளை வாங்கியவுடன் எப்.ஐ.ஐ., மூலம் வாங்கியதற்கு அத்தாட்சியாக ஒரு `பார்ட்டிசிபெட்டரி நோட்' கொடுப்பார். இது போன்ற சூழ்நிலையில் பங்குச் சந்தைக்கு வந்துள்ள வெளிநாட்டு முதலீடுகள் எந்த முறையில் வந்துள்ளது என்று கண்டுபிடிப்பது சிரமம். அந்தப் பணம் எவ்வளவு நாட்கள் பங்குச் சந்தையில் இருக்கும் என்றும் சொல்ல முடியாது.
கடந்த 2004ம் ஆண்டு இது போல `பார்ட்டிசிபெட்டரி நோட்' கொடுக்கும் எப்.ஐ.ஐ., 14 இருந்தன. தற்போது அவை 34 ஆக உயர்ந்துள்ளது. இந்தாண்டு மட்டும் இதுவரை பங்குச் சந்தையில் வந்துள்ள வெளிநாட்டு முதலீடுகள் 68,000 கோடி ரூபாய். இதில் பெரும்பகுதி மும்பை பங்குச் சந்தை 15,000 புள்ளிகளை தாண்டியவுடன் வந்துள்ளது. இதில் பெரிய அளவு `பார்ட்டிசிபெட்டரி நோட்' மூலமாக வந்துள்ளது. இதுவும், வெளிநாட்டு பண வருகையால் ரூபாய் வலுவாகிக் கொண்டு வந்ததும், அரசுக்கு கவலையளிக்க கூடியதாக இருந்தது. அதனால் தான் இதற்கு சிறிது கெடுபிடிகளை கொண்டு வர `செபி' நினைத்தது. `பார்ட்டிசிபெட்டரி நோட்' மூலமாக பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களை செபி அமைப்பில் பதிவு செய்து கொள்ள செய்யலாமா? என்பது போன்ற கட்டுப்பாடுகள் தான்.
செபி அமைப்பின் தலைவர் தாமோதரன் நேற்று வெளியிட்ட அறிக்கை பங்குச் சந்தையை மீட்டது. டாலருக்கு எதிராக ரூபாய் வலுவிழந்தது. இதனால், பங்குச் சந்தையில் சாப்ட்வேர் பங்குகளின் விலைகள் கூடியது. ரிலையன்ஸ் கம்பெனியின் பங்குகள் 2,300 ரூபாய்க்கு கீழேயும் சென்று முடிவில் 2,700 ரூபாயை தொட்டது. நேற்று சரிவை பயன்படுத்தி பங்குச் சந்தையில் தைரியமாக முதலீடு செய்துள்ளவர்கள் அதிர்ஷ்டசாலிகள் தான்.
பார்லி கூட்டு குழு விசாரணை தேவை: பா.ஜ., கருத்து : `பங்குச் சந்தையில் நேற்று மிகப்பெரிய சரிவால் முதலீட்டாளர்களுக்கு நான்கு லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து பார்லிமென்ட் கூட்டு கமிட்டியின் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என பாரதிய ஜனதா கட்சி கூறியுள்ளது.
இது குறித்து பாரதிய ஜனதா கட்சி செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜாவ்தேகர் கூறியதாவது:பங்குச் சந்தை நல்ல நிலையில் சென்று கொண்டு இருந்த போது, நேரமற்ற நேரத்தில் `செபி' தலைவர் தெரிவித்த கருத்தால் நேற்று பங்குச் சந்தையில் மிகப் பெரிய சரிவு ஏற்பட்டது. இதனால், முதலீட்டாளர்களுக்கு நான்கு லட்சம் கோடி ரூபாய்க்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் எல்லாம் முடிந்த பிறகு, அது வரை காத்திருந்தது போல் நிதி அமைச்சர் சிதம்பரம் விளக்கம் அளிப்பதன் அவசியம் ஏன். இந்த விளக்கத்தை முதலிலேயே தெரிவித்து இருக்கலாமே. இந்த சரிவை பயன்படுத்தி குறிப்பிட்ட சிலர் பயன் அடைந்துள்ளனர். முக்கிய கொள்கை முடிவுகளை `செபி' வெளிப் படுத்தியதன் மூலம் தள்ளாட்டம் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் பொறுப்பற்ற தன்மையாலும், `செபி'யின் முந்திரிக்கொட்டைதனமான கருத்தாலும் சிறு முதலீட்டாளர்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.இதற்கு எல்லாம் விடை தெரிய பார்லிமென்ட கூட்டுக் குழு விசாரணையில் தான் தீர்வு கிடைக்கும்.இவ்வாறு பிரகாஷ் ஜாவ்தேகர் கூறினார்.
நன்றி: தினமலர்
அது(panguvaniham.wordpress.com)தினச் செய்தியென்றால்,இது வாரந்திர அறிக்கையா? தொடரட்டும் உமது பணி.
//
அது வரை காத்திருந்தது போல் நிதி அமைச்சர் சிதம்பரம் விளக்கம் அளிப்பதன் அவசியம் ஏன்
//
FINANCE MINISTER SHOULD NOT BE A MARKET DICTATOR. IT IS NOT GOOD FOR MARKET.
WHATEVER GOES UP WILL COME DOWN.
Post a Comment