`அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு தான்' என்பது பங்குச் சந்தைக்கு வெகுவாக பொருந்தும். கடந்த வாரத்தில் மட்டும் 1,500 புள்ளிகள் குறைந்துள்ளது. இதை வாய்ப்பாக கருதலாம்.
இந்திய பங்குச் சந்தை அடிப்படை நன்றாக உள்ளது. கம்பெனிகள் நன்கு செயல்படுகின்றன.
கடந்த ஒரு வாரமாக டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு வலுவிழந்து உள்ளதால், சாப்ட்வேர் பங்குகளின் விலைகள் கூடியுள்ளன. எனவே, நல்ல `ஏ' குரூப் பங்குகளை தேர்ந்தெடுத்து வாங்குங்கள். 100 சதவீதம் லாபம் எதிர்பார்க்காமல், 20 முதல் 30 சதவீதம் லாபம் எதிர்பார்த்து முதலீடு செய்பவர்களுக்கு பங்குச் சந்தை ஏமாற்றாது.
பங்குச் சந்தை மேடு, பள்ளங்கள் நிறைந்தது தான். அதில், பங்கு வாங்கி வெற்றி பெறுவது என்பது சிரமமான காரியமே. சந்தை மேலேயே சென்று கொண்டு இருக்கையில் (அதாவது ரோடுகளில் ஒரு இறக்கம் வரும் போது, வண்டியை நாம் மிதிக்காமலேயே வேகமாகச் செல்லுமே அது போலத்தான்) நாம் மகிழ்ச்சியாக இருக்கிறோம். அதே சமயம், மேடு வரும் போது வருத்தப்படுகிறோம். `இரவும் வரும் பகலும் வரும் உலகம் ஒன்று தான்' என்ற பாடலை பாடியபடி பங்குச் சந்தையை அணுக கற்றுக் கொள்ளுங்கள்; நன்றாக பயணிக்கலாம். முடியாதவர்கள் வங்கிகளில் பணத்தை டெபாசிட் செய்து கவலைப்படாமல் இருக்கலாம்.
அடுத்த வாரம் எப்படி இருக்கும்:
நல்ல காலாண்டு முடிவுகள் குறைந்து வரும் பணவீக்கம் என இருந்தும், அடுத்த வாரம் பங்குச் சந்தையின் போக்கு செபி எடுக்கப் போகும் முடிவுகளை பொறுத்தே அமையும்.
----
நன்றி: தினமலர்
சாதனைகள்... சோதனையாகி வேதனையானது தான் மிச்சம் - சேதுராமன் சாத்தப்பன்
இந்திய ரூபாய் மதிப்பு அதிகரித்து வருவது பற்றி
-
*“ஒ*ரே மாதத்தில் இந்திய ரூபாய் மிக மோசமான நாணயத்திலிருந்து மிகச் சிறந்த
நாணயமாக மாறிய அற்புதம்" என்ற செய்தி இந்தியா டைம்ஸ் இணைய தளத்தில்
வெளியாகியிருந்தது...
5 years ago
2 comments:
பங்குச்சந்தையில் முதலீடு செய்யுறது, ரோலர்கோஸ்டர்ல போற மாதிரிதான்..ஏறும், எறங்கும். ஆனாலும், கொஞ்சம் மூளை இருந்தா கில்லி மாதிரி விளையாடலாம்.
வீர சுந்தர் சொல்வது உண்மைதான்! மூளை இருந்தால் பிழைக்கலாம்!
Post a Comment