என்னதான் ஒரு பக்கம் அமெரிக்க அதிபர் (அமெரிக்கா) பொருளாதாரம் நல்ல நிலையில் இருக்கிறதுனு (எல்லாருக்கும் தெரிந்த) பொய்யை சொல்லி கொண்டிருந்தாலும்...... பொருளாதார வல்லுநர்கள். அமெரிக்கா ரிசர்வ் வங்கி வட்டி விகித குறைப்பு, அமெரிக்காவின் GDP வளர்ச்சி (2.2%) இருந்து எந்தவொரு சமானியனும் எளிதில் கூறிவிட முடியும்.
சரி....வருட கடைசியினால் எல்லாரும் டாப் 10 சொல்ற மாதிரி... சில கணிப்புகள் (நான் பார்த்ததில், படித்ததில்,கேட்டதில்.....)
1.அமெரிக்காவின் GDP: 2002ல் 1.6 சதவீதமும், 2003ல் 1.9 சதவீதமும் இருந்தது. அதேபோல் 2008ன் முதல் பாதி 1.3% ஆகவும் இரண்டாவது பாதி 2.7%க்கு உயரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
2. உலக பொருளாதாரம், எண்ணைய் விலை, ஈரோவின் மதிப்பு போன்றவைகள் ஐரோப்பாவுக்கு 2008 சாதகமான வருடமாக அமையலாம்.
3. சீனாவின் 2008ன் GDP 10.8% (இந்த வருடம் 11.5 % !!) ஆகவும்.. குறிப்பாக, ஆகஸ்டில் சீனாவில் நடக்கும் ஒலிம்பிக்குபின் சீனாவிம் பொருளாதாரம் சிறிது சரிய வாய்ப்புள்ளது. நமது GDP 8.5% வரை போகலாம்.
4. உலக சந்தையில் கச்சா எண்ணைய் விலை குறைய வாய்ப்பில்லை. குறைந்தபட்சமாக(!) $75 டாலர்வரை போகலாம்.
5. கச்சா எண்ணையில் விலை உயர்வின் தாக்கம், இந்த வருடத்தைபோல் அமெரிக்காவின் பொருளாதாரம் மோசமாக இருக்காது.
6.அமெரிக்கா ரிசர்வ் வங்கி மேலும் வட்டி விகிதத்தை குறைக்கும். சனவரி கடைசி வாரத்தில் ஒரு 50 புள்ளிகளும், மார்ச்சில் 25 புள்ளிகளும் குறைக்க வாய்ப்புள்ளது.
7.அமெரிக்காவின் ரியல் எஸ்டேட் சந்தை (மேலும்) கடுமையான விலை சரிவை சந்திக்க வாய்ப்புள்ளது.
8. டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு உயரும் [ஒரு டாலருக்கு 36ரூ ??! ] . அதேபோல் ஜப்பான், சீனா, கனடா டாலரின் மதிப்பும் உயரும்.
இந்திய ரூபாய் மதிப்பு அதிகரித்து வருவது பற்றி
-
*“ஒ*ரே மாதத்தில் இந்திய ரூபாய் மிக மோசமான நாணயத்திலிருந்து மிகச் சிறந்த
நாணயமாக மாறிய அற்புதம்" என்ற செய்தி இந்தியா டைம்ஸ் இணைய தளத்தில்
வெளியாகியிருந்தது...
5 years ago
4 comments:
உபயோகமான தகவல்கள்.
சிறப்பான கட்டுரை , பகிர்வுக்கு நன்றி
அமெரிக்காவில் தேர்தல் வர இருப்பதால், அமெரிக்க பொருளாதாரம் அதிகமாக பாதிக்க வாய்ப்புகள் குறைவு. எண்ணைய் விலை அதிகரித்தாலும், டாலருக்கு சர்வதேச மார்க்கட்டில் தேவை அதிகரிக்கும். எனவே அமெரிக்கா உள்நாட்டு சந்தையில் வட்டி விகிதத்தை குறைக்க வழி உள்ளது. அதனால் அமெரிக்க பொருளாதாரம் மேலும் பலம் பெற வாய்ப்புள்ளது.
இந்த பதிவில் டாலர்-பெட்ரோல் தொடர்பு பற்றி எழுதியுள்ளேன்.
http://tamilfuser.blogspot.com/2007/09/blog-post.html
Post a Comment