Wednesday, January 30, 2008

டாடாவின் அடுத்த முயற்சி

டாடாவின் குட்டி மகிழுந்து(!) Nano க்கு அடுத்து மற்றுமொரு வெற்றியாக ஃபோர்ட் (Ford) மோட்டரிடமிருந்து Jaguar மற்றும் Land Rover வாங்க போகிறது. தோராயமான விலை 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இதற்கு மகேந்திரா & மகேந்திரா மற்றும் அமெரிக்காவின் தனியார் நிறுவனமான One Equity Partners LLC. வின் முயற்சி செய்தன.

1989ல் ஃபோர்ட்(Ford) நிறுவனம் Jaguar யை 2.5 பில்லியன் அமெரிக்க டாலருக்கும், 2000ல் Land Rover யூனிட்டை 2.7 பில்லியன் அமெரிக்க டாலர் கொடுத்தும் வாங்கியது. ஆனால் இந்த இரண்டு யூனிட்லும் பெரிய இலாபம் ஏதும் கிடைக்கவில்லை...

போன வருடம் 2.7 பில்லியனும், 2006ல் 12.6 பில்லியன் அமெரிக்க டாலர்களும் ஃபோர்ட் நிறுவனத்துக்கு இழப்பு. இப்பொழுது அதைதான் டாடா வாங்க முடிவு செய்துள்ளது.

ஃபோர்ட்(Ford) நிறுவனம் சாதிக்க முடியாததை டாடா சாதிக்குமா?

பி.கு: காருக்கு சரியான தமிழ் சொற்பிரயோகம்: "மகிழுந்து" .
சமீபத்தில் படித்தது !! ;)

7 comments:

said...

மகிழுந்து! அட.. இது நல்லாயிருக்கேப்பா... இனி கார்ன்னு சொல்லாமல் மகிழுந்துன்னு சொல்லப் போறேன். கல்லடி பட்டேன்னா அது உங்களுக்கும் வரும் என்பதை அன்போடு(?) சொல்லிக்கிறேன். :-)

said...

வாங்க!

ம்ம்.. இப்படியும் மிரட்டலா?
.... தமிழுக்கு வந்த சோதனை...?!

said...

//
காட்டாறு said...
மகிழுந்து! அட.. இது நல்லாயிருக்கேப்பா... இனி கார்ன்னு சொல்லாமல் மகிழுந்துன்னு சொல்லப் போறேன். கல்லடி பட்டேன்னா அது உங்களுக்கும் வரும் என்பதை அன்போடு(?) சொல்லிக்கிறேன். :-)
//
repeateyyyyyyyy

said...

தென்றல்,

டாடாவுக்கு விற்றால் அவர்களது நற்பெயர் கெடும், அவர்களால் தரமாக தயாரிக்க முடியாது எனவே விற்க மாட்டோம் என ஃபோர்ட் தலைவர் அதிகப்பிரசங்கியாக சொன்னார் அதை கவனித்தீர்களா? எப்படி இருந்த போதிலும் நட்டத்தில் ஓடுவதை வேறு யாரும் வாங்க மாட்டார்கள் கடைசியில் டாடா கைக்கு தான் வரும்.

டாடா வசம் வந்தால் இந்தியப்பாணியில் செயல்ப்பட்டு உற்பத்தி செலவைக்குறைத்து லாபம் ஈட்ட வாய்ப்புண்டு என்று போட்டிருந்தார்கள்.

மகிழுந்து என்பது சரியே, நீண்ட நாட்களாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட சொல்லே அது.

, pleasure car என்பதைத்தான் சுருக்கமாக car என்று சொல்வார்கள், எனவே முழு வார்த்தைக்கு ஏற்ற தமிழ் சொல் தானே மகிழுந்து, எனவே கல்லடிலாம் வராது தாராளமாக பயன்படுத்தலாம்.பள்ளிக்கூடக்காலங்களில் தமிழ் கட்டுரையில் அப்படித்தான் எழுதுவோம்.

said...

ப்ளெஷ்ர் கார் என்றுதான் அந்நாளில் சொன்னார்கள்.
கார், பெட்ரோல் விற்கும் விலையிலும், சாலை விதிகளை மதிக்காமல் மற்றவர்கள் ஓட்டுவதாலும் இப்போது கார் ஓட்டுவதே ப்ளெஷ்ராக இல்லை.

மகிழுந்தாம்!
யாருக்கு மகிழ்ச்சி?

சகாதேவன்

said...

So soon Nano will be introduced in N.America market?

said...

/டாடாவுக்கு விற்றால் அவர்களது நற்பெயர் கெடும், அவர்களால் தரமாக தயாரிக்க முடியாது எனவே விற்க மாட்டோம் என ஃபோர்ட் தலைவர் அதிகப்பிரசங்கியாக சொன்னார் அதை கவனித்தீர்களா? /

கவனிக்கவில்லையே, வவ்வால்!

மேலும்... இந்த இரண்டு 'மாடல்களும்' UK சந்தையில்தான் தன் முதல்கட்ட வேலையை டாடா ஆரம்பிக்க போகிறது..

/பள்ளிக்கூடக்காலங்களில் தமிழ் கட்டுரையில் அப்படித்தான் எழுதுவோம்./

அப்படியா....? ;(

வாங்க சகாதேவன்! ஏன் இவ்வள்வு சூடா இருக்கீங்க....

ரவி,
"நானோ"வை அமெரிக்க தொலைக்காட்சிகள் பயங்கரமாக நக்கல் செய்தார்கள்...

சொல்லமுடியாது... நீங்க சொன்னபடி நடந்தாலும் ஆச்சரியமில்லை...!!