கொஞ்சம் கொஞ்சமா ... 20 நாள்கள், 30 நாள்கள்னு மேல வந்து புதிய சிகரத்தை தொட்ட நம் பங்குச்சந்தை ஒரே நாளில்... இல்ல.. இல்ல சில மணி நேரங்களில் அதல பாதளத்தில் இருக்கிறது (இதை எழுதும் பொழுது....). 2000 புள்ளிகள் வரை சரிந்திருக்கிறது....[~ 15888]. கஷ்டப்பட்டு சிறிது சிறிதாக சேர்ந்து வந்த லாபங்கள் அனைத்தும் ஒரே நாளில் காணாமல் போய்விட்டன...Ground Zero!!
இதற்கு முன்னர் 2006-ம் ஆண்டு மே 18-ம் தேதி ஒரே நாளில் 826 புள்ளிகள் சரிந்ததுதான் மிகப் பெரிய சரிவாகும். அதையும் மிஞ்சி விட்டோம்.
அதேபோன்று முதலீட்டாளர்களுக்கு இன்று ஒரே நாள் வர்த்தகத்தில் ஏற்பட்ட இழப்பு மட்டும் 6,63,975 கோடி ரூபாயாகும். அதேபோன்று கடந்த வாரத்தில் ஐந்து வர்த்தக தினங்களில் முதலீட்டாளர்களுக்கு ஏற்பட்ட இழப்பு 5,21,310 கோடி ரூபாய்!! இதுதான் மரண அடிகிறதோ..?
நேற்று (சனவரி 21) மும்பை பங்குச் சந்தை (Dalal St) மட்டுமில்லாமல், எல்லா பங்கு சந்தையும் பெரும் வீழ்ச்சியை சந்தித்தது. ஜப்பான் 4.4%, ஹாங்காங் 5.5%, பிரிட்டன் 5.5%, பிரான்ஸ் 6.8%,, ஜெர்மனி 7.2%, அமெரிக்கா 3.6%, கனடா, ஆஸ்திரேலியா என நமக்கு தெரிந்த எல்லா பங்கு சந்தைக்கும் பெரிய அடிதான். ஆனால் நமக்குதான் 7 சதவீதம் அளவு விழுந்து ஒரு பெரிய அடியைத் தந்தது. (அதுக்கூட பரவாயில்லை என்று சொல்லக்கூடிய அளவு இன்று, [செவ்வாய்] 15% வரை கீழே போனது)
அமெரிக்க பங்குச்சந்தை சரிவுக்காவது ஏதோ 'நம்பக்கூடிய' நமக்கு புரியக்கூடிய காரணங்களான - ஃபெடரல் வங்கி, டெபாசிட்டுக்கான வட்டி விகிதத்தை மேலும் குறைக்க முடிவு, recession பயம், sub-prime பிரச்சனை... இதையும் தாண்டி "பெரிதான வரவேற்பு பெறாத" புஷ் அறிவித்த 145 பில்லியன் டாலர் வரி விலக்கு திட்டம்னு ஒரு பட்டியல் போடுறாங்க...
ஆனல் நம் பங்குச்சந்தையோ ... அடிப்படை நன்றாக இருக்கிறது, GDPயும் நம்பிக்கை தரும்படியாகவே இருக்கிறது. நம் மன்மோகன் சிங்கும், ப.சியும் அதே நம்பிக்கையை வலியுத்துகிறார்கள். அப்புறம் ஏன் இப்படி ஒரு சரிவு?
உலக பங்குச்சந்தையில் ஏற்பட்ட சரிவு அதன் தாக்கம் நம் பங்குச்சந்தையில் எதிரொலிக்கிறதா .. இல்லை .. பயத்தின் காரணமாக சிறு முதலீட்டாளர்கள் தங்களது பங்குகளை மிக அதிக அளவில் விற்றதன் காரணமாக ....... ஒன்றும் புரியவில்லை.
ஆனால் இவ்வளவு சோகத்திற்கும் பின் சில நம்பிக்கைகள் இருக்கதான் செய்கிறது.... சிறு முதலீட்டாளர்கள் பங்கு சந்தையில் நுழைய சரியான தருணம்....என்ன "கொஞ்சம்" பொறுமையும், நிதானமும் தேவை..
- இன்னும் சில நாட்கள் இது போல இருக்கலாம் என்று சில கணிப்புகள்...
- பங்குச் சந்தைக்குள் வெளிநாட்டு நிறுவனங்களும், மியூச்சுவல் பண்டுகள், நிதி நிறுவனங்கள் ஆகியவை சந்தைக்கு மறுபடி வர வாய்ப்புகள்.....
இந்த நேரத்தில் நாம் என்ன செய்யலாம்...அல்லது என்ன கற்றுக் கொள்ளலாம்?
- அமெரிக்கா பங்குச்சந்தையின் வரலாற்றின் படி பார்த்தால், பொதுவாக காளையின் ஓட்டம் 10-12 ஆண்டுகள் இருக்கும் என்றும், அதன்படி பார்த்தால் நம் பங்குச்சந்தைக்கு இன்னும் 'ஒளிமயமான எதிர்காலம்' இருக்கிறது என்றும் ஒரு சாரரின் கருத்து.
- சிறிய முதலீட்டாளர்கள் முதலீடு முழுவதும் பங்குச் சந்தையில் போடாமல், எவ்வளவு எடுக்க முடியுமோ அவ்வளவு மட்டும் முதலீடு செய்யலாம்.
- கம்பெனிகளை நன்கு தெரிந்து முதலீடு செய்யலாம்.
- நல்ல கம்பெனிகள் கீழே சென்றாலும் மேலே வந்துவிடும். அதனால் அந்த மாதிரியான பங்குகளை தேர்வு செய்யலாம்.
- அதிக லாபம் கண்ட பங்குகளை சிறிது விற்கலாம்.
- நல்ல பங்குகள் குறைந்த விலைக்கு கிடைத்தால், சிறிது அளவில் வாங்கலாம்.
வாழ்க்கையே நம்பிக்கைலதான இருக்குது ! நம்புவோம்!!
11 comments:
ஆமாம்.வாழ்க்கையே நம்மிக்கைலதான் இருக்கு.
>>>கஷ்டப்பட்டு சிறிது சிறிதாக சேர்ந்து வந்த லாபங்கள் அனைத்தும் ஒரே நாளில் காணாமல் போய்விட்டன>>>>>
what small gains are you talking about? When SENSEX gained 1000 points in a matter of a few days, did anyone bother to analyze it rationally? What one needs is a Asset Allocation Plan based on individual's risk tolerance levels and stick to it. Trying to time the market only get your fingers burnt.
//
Trying to time the market only get your fingers burnt.
//
அனானி அண்ணா,
நான் கொஞ்சம் பணம் கைல வெச்சிகிட்டு ரொம்பா நாள் தவம் இருக்கிற மாதிரி மார்க்கெட் விழட்டும்னு இருந்தேன் இதுவும் டைமிங் த மார்கெட்தான் நேத்தும் இன்னைக்கும்தான் வாங்கியிருக்கேன்!
பாப்போம்!!
Siva,
Good luck on your purchase. But I still feel that if you committ yourself to a Systematic Investment Plan you'll come out much ahead in the long run.
அனானி,
சிஸ்டெமேடிக்கா முதலீடு செய்யலாம் தான். ஆனா, 2,3 மாசத்துகொரு முறை இப்படி சந்தை அருமையான ஒரு வாய்ப்பு கொடுக்கும்போது எதுக்குங்க விடணும்?
நவம்பர்,டிசம்பர்லேயே எல்லாருக்கும் தெரியுமே - சந்தை விழும்னு
Excuse me for replying in English.
By waiting for the market to fall and waiting in the sidelines, you'll also miss a lot of days when the market goes up substantially. How / When do you determine the market has already peaked? By looking at the P/E? When SENSEX reached 10000 (only a few months ago) a lot of people said the market has already peaked. If you had waited then for the market to fall you'd have lost 6000 point gain (even after the recent fall). To give you an example based on American stock market, take the 10-year period between 1997 - 2006. There were about 2500 trading days. If you were fully invested (not waiting for the market to fall) in the S&P 500 Index, your annual gain would have been 8.5%. But if you had missed the top 20-days of gain, your annual gain would have come down to -0.4%. We all think we understand the market completely. But even mutual fund managers with all their access to data and analyzing tools, struggle to beat the market index.
Sorry about the long post.
- Ravi
இரவி,
நீங்க சொல்றது எல்லாம் பத்திரிக்கை செய்திகளில் அடிக்கடி வந்து கொண்டிருப்பதுதான்
.
இப்படி எடுத்துக்கொள்ளுங்கள்.
ஜனவரி 1,2007 - லிருந்து ஜனவரி 1,2008 வரைக்கும் ஓண்ணாந்தேதி ஒரு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கினை வாங்குவாதாக வச்சிக்கிங்க.இந்த மாதிரி சந்தை "மரண அடி" வாங்கினப்புரம் பங்குகளின் மதிப்பு எவ்ளோ இருக்குன்னு பாருங்க.
பிப்ரவரி 2007,ஏப்ரல் 2007,ஜூன் 2007,ஜூலை 24,ஆடஸ்ட் 17,18,அக்டோபர் 17,
நவம்பர் 9, இப்போ ஜனவரி 21,22 வரைக்கும் அதே ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கினை வாங்குவாதாக வச்சிக்கிங்க.
இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை பாருங்க.
பங்குச் சந்தையில் நேரடியா ஈடுபட முடியாதவங்க பேசாம பரஸ்பர நிதில பணத்தை போட்டு நிம்மதியா இருக்கலாம்.அதுல ஓவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை சிஸ்டமேடிக் முறையில் நீங்க சொல்றமாதிரி பணத்தை போட்டுட்டு இருக்க வேண்டியதுதான்.
<==Sorry about the long post.==>
ஐயையே, எங்களுக்கு இந்த மாதிரி நீளமான பின்னூட்டம்தான் வேணும்.
வாங்க, ரவி!
//<==Sorry about the long post.==>
ஐயையே, எங்களுக்கு இந்த மாதிரி நீளமான பின்னூட்டம்தான் வேணும்.
//
அதான.... ;)
உங்கள் சேவையைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை. நன்றி
வாங்க தமிழ்நெஞ்சம்! நன்றி!
நம்ம வலைப்பூவுல 'நீங்களும் படிக்கலாம்'கிற தலைப்பின்கீழ் இருக்கிற நண்பர்களின் வலைப்பூவை பார்த்தீங்களா...அங்கேயும் பயனுள்ள பல தகவல்கள்...
Post a Comment