@
Recession பயம் மற்றும் Citigroup Incன் காலாண்டு முடிவு அமெரிக்கா பங்குச் சந்தையில் பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தி இருக்கிறது.
இன்று (சனவரி 15, 2008) முடிந்த பங்குச்சந்தையில் DOW 277 புள்ளிகளும் (2.17 %), NASDAQ 60 புள்ளிகளும் (2.45) இழந்திருக்கிறது.
கடந்த காலாண்டு முடிவில் Citigroup Inc கிட்டதட்ட 10 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்பு என்று கணக்கு காட்டியுள்ளது. அந்த குழுமத்தின் 196 வருட வரலாற்றில் இது ஒரு பெரிய அடி.
இந்த ஆண்டு (2008) பத்து நாட்களில் (trading days), DOW 5.76 சதவீதமும், S&P 500 5.95 சதவீதமும், NASDAQ 8.85 சதவீதமும் இழப்பை சந்தித்து இருக்கிறது.
பங்குவணிகம் அவருடைய பதிவில் குறிப்பிட்டதை மீண்டும் நினைவுபடுத்த விரும்புகிறேன்..
"அமெரிக்க சந்தைகளில் ஏற்பட்டுள்ள பின்னடைவுகள் மேலும் பெரிய அளவில் தொடராமலிருக்க அமெரிக்க பெஃடரல் வங்கி உடனடியாய் நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. மேலும் வட்டி விகிதங்கள் குறைக்கப்படும் பட்சத்தில் பெருமளவு முதலீட்டாளர்கள் சந்தையினை விட்டு வெளியேற வாய்ப்பிருக்கிறது…. அவ்வாறு நிகழும் பட்சத்தில் அவர்களின் அடுத்த இலக்கு ஆசிய சந்தைகளாய்த்தான் இருக்கும்….இதனை எதிர்பார்த்தே அடிப்படை வலுவான பங்குகளை வாங்கிச்சேர்க்க வலியுறுத்துகிறேன்."
@
அனில் அம்பானியின் ரிலையன்ஸ் பவர் நிறுவனம், பொதுப் பங்குகளை வெளியிட உச்ச நீதிமன்றத்தின் அனுமதியுடன் இன்று (சனவரி 15, 2008) வெளியாகியுள்ளது. இந்திய பங்கு வரலாற்றில் மிகப்பெரிய பங்கு (அப்படியா!!) வெளியிடப்பட்ட ஒரு மணி நேரத்திலேயே 6 மடங்கு பங்குகளுக்கு மனு செய்யப்பட்டு விட்டது.
பங்கின் விலை: 405 ரூ - 450 ரூ
ஆரம்ப நாள்: சனவரி 15, 2008
கடைசி நாள்: சனவரி 18, 2008
26 கோடி பங்குகள் வெளியீடு மூலம் ரூ.11 ஆயிரத்து 700 கோடி (2.97 பில்லியன் அமெரிக்க டாலர்) திரட்ட ரிலையன்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
ரிலையன்ஸ் பவர் நிறுவனம், நாட்டின் பல மாநிலங்களில் மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்காக இந்த நிதியை திரட்டுகிறது.
- 7 coal based projects - 14,620 MW
- 2 gas bsed - 10,280 MW from KG basin
- 4 Hydroelectric projects – 3300 MW
இதுவரை 10.52 மடங்கு இந்த பங்குக்கு மனு செய்யப்பட்டு விட்டது. இன்னும் மூன்று நாட்கள் இருக்கிறது. புதிய சாதனை தொட்டு விடுமோ?!
@
பணவீக்கம் 3.5 சதவிகிதமாக நீடிப்பு
2007-ல் பணவீக்கம் 5 சதவிகிதமாக இருக்கும் என ரிசர்வ் வங்கி கணித்திருந்தது நமக்கு நினைவிருக்கலாம். ஆனால், ஆண்டில் தொடக்கத்தில் எதிர்பார்த்தது போல் இல்லையென்றாலும், ஆண்டின் இறுதியில் (டிசம்பர் 8, 2007) 3.65 சதவிகிதமாக குறைந்தது.
நாட்டின் பண வீக்கம் டிசம்பர் மாதம் 29-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், எவ்வித மாற்றமும் இன்றி 3.50 சதவீதமாக இருக்கிறது. 2006ம் ஆண்டின் இதே காலக்கட்டத்தில் இருந்ததைவிட (5.89 சதவீதம்) 'திடமாகவே' இருக்கிறது.
ஆனால் வரும் நாட்களில் எண்ணெய்ப் பொருட்களின் விலை மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வினால் இதே நிலைமை நீடிக்குமா என்பது சந்தேகமே!
@
லாபத்தை குவிக்கும் பரஸ்பர நிதி முதலீடு
சென்ற வருடம் பங்குச் சந்தையில் நேரடியாக மூதலீடு செய்ததை விட, பரஸ்பர நிதி நிறுவனங்கள் மூலமாக செய்த மூதலீட்டிற்கு அதிக வருவாய் கிடைத்திருப்பது ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.
அதாவது மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 47.1 சதவீதமும், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 54.8 சதவீதமும் அதிகரித்துள்ளது. ஆனால் 152 பரஸ்பர நிதிகளின் வருவாய், பங்குச் சந்தை குறியீட்டு எண்களின் வருவாயை விட அதிகமாக உள்ளது என ' வேல்யூ ரிசர்ச் ' என்ற பங்குச் சந்தை ஆய்வு நிறுவனத்தின் ஆய்வில் இருந்து தெரிய வந்துள்ளது.
2007 ஆம் ஆண்டில் 209 பரஸ்பர நிதிகளில், 13 முதலீடு திட்டங்களில் முதலீடு செய்யும் யூனிட்டுகளை வாங்கியவர்களின் முதலீட்டின் மதிப்பு 90 முதல் 112 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
வரி சேமிப்புடன், பங்குச் சந்தை மற்றும் நிதிச் சந்தையில் முதலீடு செய்யும் 209 பரஸ்பர நிதி திட்டங்களில், 57 திட்டங்கள் மட்டுமே சென்செக்ஸ், நிஃப்டி குறியீடுகளை விட குறைவான வருவாய் கிடைத்துள்ளது.
இந்த ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 209 பரஸ்பர நிதி திட்டங்களில் 139 திட்டங்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமாக வருவாய் கிடைத்துள்ளதும் தெரிய வந்துள்ளது.
[நன்றி: வெப்துனியா]
@@@
1 comments:
47 மடங்கு பங்குகளுக்கான பணம் செலுத்தப்பட்டிருந்தது.
11 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே திரட்ட இருந்த ரிலையன்ஸ் பவர் நிறுவன பங்குகள் 47 மடங்கு விற்குள்ளதால் ரூ.4,84,227 கோடி வந்துள்ளது.
22.80 கோடி பங்குகளை மட்டுமே விற்க இருந்த நிலையில இன்று பகல் ஒரு மணி வரை 1,076 கோடி பங்குகளுக்கு பணம் செலுத்தப்பட்டிருக்கிறது. இது 47.20 மடங்கு அதிகம்.
இன்று 18 ம் தேதி தான் கடைசி நாள் என்பதால் இன்றும் அதிக அளவில் பணம் செலுத்தப்படும் என்று நம்பப்படுகிறது.எனவே மாலை 3 மணிக்குள் முடித்து விடுவதாக இருந்தது இப்போது கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே இன்று இரவு 11 மணி அளவில் தான் முடிவான நிலவரம் தெரியும் என்று சொல்லப்படுகிறது.
ஒரு கம்பெனியின் பங்குகளை கேட்டு இந்த அளவுக்கு பணம் செலுத்தப் பட்டிருப்பது இந்திய பங்கு சந்தை வரலாற்றில் இதுவே முதன் முறை.
மேலும் 2006 - 07 ஆண்டில் இந்திய அரசாங்கத்தால் வசூலிக்கப்பட்ட மொத்த நேரடி வரி ( டைரக்ட் டாக்ஸ் ) ரூ.2,30,091 கோடி தான்.
ஆனால் இதைவிட அதிகமாக இன்று மதியம் வரை ரிலையன்ஸ் பவர் நிறுவன பங்குகளை கேட்டு வந்த பணமோ 4,84,227 கோடி ரூபாய். இது இன்னும் அதிகரிக்க உள்ளது.
இது இந்திய கேபிடல் மார்க்கெட் வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத நிலை.
[நன்றி: தினமலர்]
Post a Comment