Wednesday, April 2, 2008

ஆறாவது மத்திய ஊதியக் குழு

ஆறாவது மத்திய ஊதியக் குழு (Sixth Central Pay Commission) தலைவர் நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் சமீபத்தில் பரிந்துரைத்துள்ளது... மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பள திட்டம் மட்டுமல்ல .........

* அரசு அமைப்புகளை தனியார் நிறுவனங்களுக்கு போட்டியாக எடுத்துச் செல்லுதல்
* அரசு அமைப்புகளை நவீன மயமாக்குவதல்
* வளர்ந்து வரும் பொருளாதார சூழ்நிலைக்கு ஏற்ப மத்திய அரசு அமைப்புகளின் செயல்திறனை உயர்த்துவதற்கான வழிமுறைகள்
* உண்மையிலேயே மக்களுக்கான சேவை செய்யும் அமைப்புகளாக நிறைவேற்றக்கூடிய திட்டங்கள் .... என்று பல!

இந்த ஆணையத்தின் மற்ற உறுப்பினர்கள்:

1.பேராசிரியர். ரவீந்திர தோலாக்கியா
2.ஜெ.எஸ் மாத்தூர்
3. சுசமா நாத்

ஆறாவதுமத்திய ஊதியக் குழு
தன் பணியை ஆரம்பித்த நாள்: 5 அக்டோபர் 2006
அரசாங்கத்திடம் சமர்ப்பித்த நாள்: 24 மார்ச் 2008

கிட்டதட்ட16 மாதங்கள்.

பக்கம் பக்கமாக தனது பரிந்துரைகளை வைக்கும் முன்னால், ஆறாவது மத்திய ஊதியக் குழு எடுத்த சில நடவடிக்கைகள் பாராட்டுக்குறியது. அதில் முதல் கட்டமாக ...

பொதுமக்கள், அரசு ஊழியர்கள் என்று பல தரப்பட்ட நிலையில் உள்ளவர்களிடம் கருத்து சேகரிப்பு.
'எப்பவுமே மக்கள்தான அரசாங்கத்துக்கிட்ட கேள்வி கேக்குறாங்க நாம ஏன் மக்கள்கிட்ட கேள்வி கேட்டு அவுங்க கருத்தை பதிவு பண்ண பண்ணலாம்' என்ற எண்ணத்தினாலயோ .... அவர்கள் மக்கள்கிட்ட கேட்ட கேள்விகளின் தொகுப்பு இங்க...


உதாரணத்திற்கு சில கேள்விகள்:

1. தனியார் மற்றும் பொது நிறுவனங்களின் ஊதியத்துடன் அரசு தரும் ஊதியத்தை ஒப்பிடலாமா?

2. ஊதிய உயர்வு எந்த அடிப்படையில் எப்படி இருக்கணும்னு நினைக்கிறீங்க?

3. அரசு அலுவலகங்களில் நேரம் தவறாமையை எப்படி அமல்படுத்தலாம்?

4. அரசு அலுவலகங்களில் நிர்வாகத்திறன் வளர உங்களுடைய யோசனைகள்...?


இப்படி பதில் சொல்வதற்கான கடைசி நாள், 31 டிசம்பர் 2006 னு சொல்லி.... அப்படி சொன்ன பதில்கள் இங்க இருக்கு...


பரிந்துரைகளில் ஒரு சிலது மட்டும்....


* நர்சுகள், ஆசிரியர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினருக்கான சம்பளத்தை உயர்த்த வேண்டும்.

* வாரத்தில் ஐந்து நாள் வேலை என்பது தொடர வேண்டும். மூன்று நாட்கள் மட்டுமே தேசிய விடுமுறை நாட்களாக இருக்க வேண்டும்.

* கெஜட்டில் அறிவிக்கப்பட்டுள்ள மற்ற விடுமுறை நாட்களை ரத்து செய்ய வேண்டும். கட்டுப்படுத்தப்பட்ட விடுமுறை நாட்களிலும் மாற்றங்கள் கொண்டு வர வேண்டும்.

* திறமையாக பணியாற்றுவோருக்கு, தற்போது வழங்கப்படும் 2.5 சதவீத சம்பள உயர்வுக்கு பதிலாக 3.5 சதவீத சம்பள உயர்வு வழங்கலாம்.

* அனைத்து பரிந்துரைகளையும் மொத்தமாக அமல் செய்ய வேண்டும்; குறிப்பிட்ட பகுதிகளை மட்டும் அமல் செய்தால் பல முரண்பாடுகளும் நிச்சயமற்ற நிலைகளும் உருவாகும்.

* இந்த பரிந்துரையின் மூலம் 2008 09ம் ஆண்டில் 12,561 கோடி செலவாகும். அறிக்கையில் குறிப்பிட்டுள்ள பல்வேறு நடவடிக்கைகள் மூலம் ரூ.4,586 கோடி மிச்சமாகும்.

* மொத்தத்தில் இந்த பரிந்துரைகளை அமல்செய்வதன் மூலம் 2008 09ல் மொத்தம் ரூ.7,975 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கூடுதலாக நிலுவைத் தொகையை வழங்குவதன் மூலம் ரூ.18,060 கோடி ஒரே முறை செலவாக இருக்கும்.

2 comments:

Anonymous said...

இது குறித்து நான் எழுதியவை
http://payanangal.blogspot.com/search/label/%E0%AE%86%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%8A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81

ஆறாவது ஊதியக்குழு

said...

சுட்டிக்கு நன்றி, புருனோ!