எதுவும் சொல்லிகிறமாதிரி இல்ல...
உலக சந்தை எல்லாவற்றிக்கும் நேற்று பங்கு சந்தையில் பெரிய சரிவு என்றாலும்.... நமக்கு கொஞ்சம் பெரிய அடிதான்.
மும்பை பங்கு சந்தையில் 777.29 புள்ளிகள் குறைந்து 15,350.69 புள்ளிகளில் முடிந்தது. தேசிய பங்கு சந்தை 246.65 புள்ளிகள் குறைந்து 4,625.35 புள்ளிகளில் முடிந்துள்ளது.
யுரோவுக்கு எதிரான அமெரிக்க வெள்ளியின் மதிப்பு குறைந்துள்ளது. 1 யுரோ = $ 1.56.
12 வருடங்களுக்கு பின் யென் க்கு எதிரான அமெரிக்க வெள்ளியின் மதிப்பு(ம்) 99.75 யென் ஆக குறைந்து சந்தையின் முடிவில் ஒரு அமெரிக்க வெள்ளிக்கு 100.57 யென்னில் இருக்கிறது. ஜப்பான் பொருளாதரத்தை இது மேலும் பாதிக்கலாம்...
கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றிற்கு $ 110 யை தாண்டியுள்ளது.
ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை (முதல் முறையாக) 1001 அமெரிக்க வெள்ளி என்ற புதிய சாதனையை தொட்டுவிட்டு(!), நாளின் இறுதியில் 997.10யில் இருக்கிறது. இன்னும் முதல் காலண்டு முடிவாகத நிலையில் .... இந்த வருடத்தில் மட்டும் 20% அதிகரித்துள்ளது.
இரண்டு நாட்களுக்கு முன் தினமலரில் வந்த செய்தி:
திருநெல்வேலி : ஆன்லைன் மூலம் செய்யப்படும் தங்க வியாபாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லையில் நேற்று 500க்கும் நகைப்பட்டறைகள், நகைக்கடைகள் அடைக்கப்பட்டன. தற்போது இன்டர்நெட் மூலமாக ஆன்லைனில் தங்க நகை வியாபாரம் நடந்து வருகிறது. தங்க விலை நிலையாக இல்லாமல் அதிகரித்தும், குறைந்தும் வருவதால் தங்க நகை செய்வோர் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளனர். தங்கள் தொழிலுக்கு பாதுகாப்பு தரும் விதமாக ஆன்லைன் மூலமாக செய்யப்படும் தங்க நகை வியாபாரத்திற்கு மத்திய அரசு உடனடியாக தடை விதிக்க வேண்டுமென வலியுறுத்தி நெல்லை கூலக்கடை பஜாரில் நேற்று 500க்கும் மேற்பட்ட தங்க நகை செய்யும் பட்டறைகளும், கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. அது குறித்து எம்.எல்.ஏ., க்கள், எம்.பி.,க் கள்,அமைச்சர்கள் மூலமாக மத்திய, மாநில அரசுகளிடம் வலியுறுத்த முடிவு செய்துள்ள நகை பட்டறை உரிமையாளர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடு படப்போவதாக தெரிவித்துள்ளனர்.
ம்ம்ம்..... அமெரிக்க வெள்ளியின் மதிப்பு மேலும் குறைய அதிகம் வாய்ப்புகள் இருப்பதாகவே தென்படுகிறது.
இந்திய ரூபாய் மதிப்பு அதிகரித்து வருவது பற்றி
-
*“ஒ*ரே மாதத்தில் இந்திய ரூபாய் மிக மோசமான நாணயத்திலிருந்து மிகச் சிறந்த
நாணயமாக மாறிய அற்புதம்" என்ற செய்தி இந்தியா டைம்ஸ் இணைய தளத்தில்
வெளியாகியிருந்தது...
5 years ago
8 comments:
எல்லாரும் ஆன்லைன் வர்த்தகத்தினால்தான் அவர்கள் தொழில் பாதிக்கப்படுது நினைக்கிறாங்க
//ஆன்லைன் மூலம் செய்யப்படும் தங்க வியாபாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லையில் நேற்று 500க்கும் நகைப்பட்டறைகள், நகைக்கடைகள் அடைக்கப்பட்டன.//
இது சம்பந்தமான தொழில் தான் நானும் செய்றேன்
அதை நிறுத்தினால் எனக்கு ஆப்பு சாமியோ
வால்பையன்
வால்பையன்... ;)
// ஆன்லைன் மூலம் செய்யப்படும் தங்க வியாபாரத்திற்கு .../
1) நம்ம ஊருல அந்தளவுக்கு பாதிப்பு இருக்குதா என்ன..?
2) இந்த செய்திய பார்த்திங்களா?
CLSA
Gold: Taking Off, End Of Decade Target $ 3700 an Ounce maintained
Christopher Wood, Dr. Jim Walker
Gold exhibiting little of its own characteristics in the past 2 years, moving in one direction just like any other commodity. But things are ready to change as debased currencies, dwindling Gold Supplies, unwinding of Gold Futures by Gold miners, low to negative interest rates, rising inflation and falling Stocks and Bonds force investors to shift as much as a fourth of their savings into Gold.
Buy Gold. As a panic stricken Ben demonstrated last night, the Central Bank has no answer to the problems they have created over the last 5 years but to debase their paper currencies even more. The yellow metal is the safest store of value we can all own.
The growing evidence of slowing growth is also why it is wrong to be increasing equity weightings and reducing bond allocations as a result of applying Fed model methodology. The current environment of falling bond yields and rising credit spreads is negative for equities as it is deflationary market action.
A long only asset portfolio for US dollar pension funds now includes 15 per cent in Unhedged Gold-Mining stocks and 10 per cent in Gold Bullion.
Gold Market: A Synopsis
-Duration of Last Super Cycle was 14 years (1966 to 1980).
-Base Metal Prices peaked Before Gold/Oil.
-No Major Gold Discoveries in the Current Super Cycle (2006-2016)
-Existing Mines-No Growth.
-Discovery to Permission for Mining 9 Months in 1980, Mine Permissions in 2006 upto 6 years.
-These include a Minimum One Year Environmental baseline, 3 to 5 State Permits, Federal Environmental Impact Assessment Required, Significant, Multiple Public Comment Period, 95 per cent probability of legal challenge.
The Global Situation-Anarchy On The Way
-Iraq/Al Qaeeda War
-Oil $ 102 a barrel.
-Falling US Dollar
-Growing Current Account Deficits
-Gold $ 675 an Ounce to $ 960 an Ounce.
Gold Price Target By The End Of The Decade Maintained at $ 3700 per ounce equivalent to roughly Rs 4625 per gram, against the current MCX Gold at Rs 1225 per gram.
//நம்ம ஊருல அந்தளவுக்கு பாதிப்பு இருக்குதா என்ன..? //
என்ன இப்படி சொல்லிபுட்டிங்க!
நம்ம ஊர் பெண்களுக்கு புருசன விட தங்க்கத்த தான ரொம்ப பிடிக்கும்!
இந்த விலையேற்றம் அவர்களுக்கு அதிர்ச்சி தராதா என்ன?
வால்பையன்
/என்ன இப்படி சொல்லிபுட்டிங்க!
நம்ம ஊர் பெண்களுக்கு புருசன விட தங்க்கத்த தான ரொம்ப பிடிக்கும்!/
வால்பையன்.... ம்ம்ம்.. பேருக்கு ஏத்த மாதிரிதான் கேள்வி கேக்கிறீங்க...;)
நான் கேக்க நினைச்ச கேள்வி..
நம்ம மக்களுக்கு தங்கத்த நேரில பார்த்தாதான ஒரு திருப்தியே வரும் ..
ஆன்லைன் மூலம் செய்யப்படும் தங்க வியாபாரத்திற்கு நம்ம ஊருல எந்தளவுக்கு பாதிப்பு இருக்கு?
முதலீடுனு எத்தனை பேரு தங்கம் வாங்குறோம்?
திரு தென்றல் அவர்களுக்கு!
நான் சிங்கப்பூரில் பனியாற்றுகிறேன்.எனக்கும் பங்குசந்தையில் முதலீடு செய்யும் ஆர்வம் வெகுநாளாகவே இருந்துவருகிறது.தயவு செய்து குறிப்புதாருங்கள் நான் இங்கிருந்தே முதலீடு செய்யலாமா? முதலீடு செய்வதற்கு,குறைந்தது எவ்வளவு முதலீடு செய்யலாம். இதைபற்றிய அடிப்படை புத்தகம் ஏதேனும் இருந்தால் அறியதாருங்கள். தென்றலிடம் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.உங்கள் மின்னஞ்ஜல் முகவரி தெரியாததால்,பின்னோட்டம் மூலம் கேட்கிறேன்.
எனது மின்னஞ்ஞல் முகவரி
rsankar20@gmail.com
வாங்க, தென்றல்sankar!
தாமத்திற்கு மன்னிக்கவும். (உங்க பேரை சொல்லியாவது இந்த பக்கம் வரமுடிந்ததே..!!)
சிங்கப்பூரில் இருந்தே முதலீடு செய்யலாம்!
பரஸ்பர நிதி (Mutual funds) மூலம் 100 ரூ லிருந்தே முதலீடு செய்யலாம்.
Anbu(parasparfund@gmail.com) என்ற வலைபதிவர் உங்க ஊருதான்! அவருடைய வலைப்பூ: http://parasparfund.blogspot.com
http://panguvaniham.wordpress.com தினமும் கவனியுங்கள். அப்புறம் சுதாகர், சாமான்யன் Siva(stocksiva.blogspot.com), மங்களூர் சிவா ... நண்பர்களின் வலைப்பூ பாருங்கள்!
பங்குவணிகம் தொடர்பான தமிழ் புத்தகங்கள் இங்கே...
http://panguvaniham.wordpress.com/2008/03/29/
என்னுடைய மின்னஞ்சல்:nanayam2007@gmail.com
Good Luck!!
Post a Comment