1) சேமிப்பை கைவிடாதீர்கள்
சேமிப்பைக் குறைக்காமல் செலவுகளைக் கட்டுப்படுத்த முயற்சி செய்யுங்கள். சேமிப்பையும் இதுபோன்ற நேரத்தில் தங்கமாகச் சேர்ப்பதுதான் சரியானதாக இருக்கும்.
2) பெட்ரோல் செலவை மிச்சப்படுத்துங்கள்
முடிந்தவரையில் பொது வாகனங்களைப் பயன்படுத்துங்கள். சொந்த வாகனங்களைப் பயன்படுத்தும்போதும் தனித்தனியே போகாமல் நேரத்தைத் திட்டமிட்டுக் கொண்டு ஒரே வாகனத்தில் செல்வதால் பெட்ரோல் செலவை மிச்சப்படுத்தலாம்.
3) ஓட்டல் பில் வேண்டாமே
மாதத்துக்கு நான்கு தடவை குடும்பத்துடன் வெளியில் ஓட்டலுக்குச் சாப்பிடச் செல்வது வழக்கம் என்றால், அதை இரண்டு தடவையாகக் குறைத்துக் கொள்ளலாம்.
4) வீட்டுக் கடனை மாற்றுங்கள்
வீட்டுக் கடன் வாங்கியவராக இருந்தால் உங்கள் வங்கியின் மாறுபடும் வட்டிவிகிதம் என்னவென்பதைப் பாருங்கள். 11 சதவிகிதத்துக்கு மேல் இருந்தால் உடனடியாக 9.50% வட்டிவிகிதம் உள்ள வங்கிக்கு உடனடியாக மாறுவதன் மூலம் கணிசமான தொகையை மிச்சப்படுத்தலாம். அல்லது கணிசமான தொகை கையில் இருந்தால், அதைக்கொண்டு கடனில் ஒருபகுதியை அடைத்துவிடலாம். கழுத்தை நெறிக்கும் கடன் தவணையில் இருந்து தப்பமுடியும்.
5) எண்ணெய் குறையுங்கள்
ஆரோக்கியத்துக்கும் பட்ஜெட்டுக்கும் நல்லது. அதேபோல விரைவில் கெட்டுப்போகாத பருப்பு வகைகளை மொத்த விலைக்கடையில் வாங்குவது லாபகரமானது.
6) செல்போன் பில்லை கவனியுங்கள்
சுருக்கமாகப் பேசி முடிப்பது, தகவல்களைச் சொல்ல எஸ்.எம்.எஸ்-ஐ பயன்படுத்துவது போன்ற நடவடிக்கைகளால் செல்போன் செலவை நன்றாகவே குறைக்கமுடியும்.
7) மின்சாரத்தை மிச்சப்படுத்துங்கள்
அதிக மின்சாரம் குடிக்கும் பொருட்களை தேவையான அளவுக்கு மட்டும் பயன்படுத்துவதன் மூலம் மின்சாரச் செலவைக் குறைக்கலாம்.
8) கிரெடிட் கார்டை சரியாகப் பயன்படுத்துங்கள்
கிரெடிட் கார்டு மூலம் வாங்கும் பொருட்களுக்கு, குறிப்பிட்ட நாட்களுக்குள் பணத்தைச் செலுத்தும்பட்சத்தில் வட்டி எதுவும் கிடையாது. இந்த வசதியைப் புத்திசாலித்தனமாகவும், கவனமாகவும் பயன்படுத்தினால் நல்ல லாபம் உண்டு. நம் சேமிப்புப் பணத்துக்குக் கிடைக்கும் குறைந்தபட்சமான 3.5% வருமானம் லாபமான ஒன்றுதானே!
9) பார்ட்டைம் வேலை
இல்லத்தரசிகளும் டியூஷன் போன்ற பகுதிநேர வேலை செய்வதன் மூலம் குடும்பச் சுமையைப் பகிர்ந்துகொள்ள முடியும்.
[நன்றி: நாணய விகடன்]
இந்திய ரூபாய் மதிப்பு அதிகரித்து வருவது பற்றி
-
*“ஒ*ரே மாதத்தில் இந்திய ரூபாய் மிக மோசமான நாணயத்திலிருந்து மிகச் சிறந்த
நாணயமாக மாறிய அற்புதம்" என்ற செய்தி இந்தியா டைம்ஸ் இணைய தளத்தில்
வெளியாகியிருந்தது...
5 years ago
2 comments:
நல்ல பதிவு.
வீட்டுக்கடனும், க்ரெடிட் கார்டும் இல்லை. மற்றவைகள் பின்பற்றி வருகிறேன். பார்ப்போம்.
//மற்றவைகள் பின்பற்றி வருகிறேன். //
Great, Siva!!
கடன் அட்டையை 'சரியான' முறையில் பயன்படுத்தினால் நன்மையே! என்ன...மனக்கட்டுப்பாடு ரொம்ப முக்கியம்!!
ம்ம்ம்.../"The only 'Colourful' blog.."/
அது சரி..;)
Post a Comment