Saturday, July 12, 2008

புதிய முறையில் பணவீக்க கணக்கீடு!

  
மத்திய அரசு தற்போது பணவீக்கத்தை கணக்கிடும் முறைக்கு பதிலாக புதிய முறையை அறிமுகப்படுத்த உள்ளது.

மொத்த விலை குறீயீட்டு எண்ணை கணக்கிடும் இந்தப் புதிய முறை டிசம்பர் மாதத்தில் வெளியிடப்படும்.

தற்போது 1993-94ஆம் ஆண்டில் இருந்த விலையை அடிப்படையாகக் கொண்டு பொருட்களின் விலை உயர்ந்துள்ளதா, குறைந்துள்ளதா என்று கணக்கிடப்படுகிறது. இனி 2004-05 ஆம் ஆண்டின் விலைகள் அடிப்படையில் பணவீக்கம் கணக்கிடப்படும்.

தற்போது 435 தொழில் துறை பொருட்களின் விலைகளை இந்த கணக்கீட்டிற்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. இனி 980 தொழில் துறை உற்பத்தி பொருட்களின் விலையின் அடிப்படையில் பணவீக்கம் கணக்கிடப்படும்.

இதே போல் தற்போது 1,918 பொருட்களுக்கு பதிலாக, 6 ஆயிரம் பொருட்களின் விலைகளின் அடிப்படையில் கணக்கிடப்படும்.

பணவீக்கம் பற்றிய தகவல் வாரத்திற்கு ஒரு முறைக்கு பதிலாக, மாதத்திற்கு ஒரு முறை வெளியிடப்படும்.

அதே நேரத்தில் விவசாய விளைபொருட்கள், மற்ற அத்தியாவசிய பொருட்களின் விலை மாற்றம் குறித்த தகவல்கள் வாரத்திற்கு ஒரு முறை வெளியிடப்படும் என்று தெரிகிறது.

[நன்றி: வெப்துனியா]

1 comments:

said...

இந்தியாவில் பணவீக்கத்தை கணக்கிடும் முறையே தவறானது நுகர்வோர் விலையை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் மொத்த வியாபாரிகளிடம் விலைகளை பெற்று தயாரிக்கப்படுவதாக நாணயம் விகடனில் படித்தேன்.


சிறிது நாள் முன் தொலைகாட்சியில் பார்த்த ஒரு பேட்டியில் தற்போது அறிவிக்கப்படும் பணவீக்கமானது போனவருடம் இந்த வாரத்தில் (last year this week) எடுக்கப்பட்ட விவரங்களை அடிப்படையாக கொண்ட பணவீக்கம் என தெரிவித்தார்கள்!

என்ன எழவோ :(