Wednesday, September 3, 2008

பங்குச்சந்தை - சில தகவல்கள்

* BSE - ஆசியாவிலே மிகப் பழமையான பங்குச்சந்தை.

* Sensitive Index என்பதுதான் SENSEX.

* 15 விநாடிகளுக்கு ஒரு முறை SENSEX (Index Calculation) கணக்கிடப்படுகிறது.

* SENSEXல் மிகப்பெரிய 30 நிறுவனங்களே உள்ளது. NIFTYல் 50 நிறுவனங்கள்!! எப்படி இந்த நிறுவனங்களை தேர்வு செய்கிறார்கள்..வழிமுறைகள் இங்கே!

* சென்செக்ஸ் கணக்கிடும்பொழுது "Free-float Market Capitalization" முறையை பயன்படுத்திகிறார்கள்.அதாவது அந்த 30 நிறுவனங்களின் பெரும் தலைகளின் பங்குகளை (CEO, CFO, VP...) கணக்கில் எடுத்துக் கொள்ள மாட்டார்கள். மாறாக தினமும் வர்த்தகம் ஆகும் பங்குகளே கணக்கில்வரும்.

* 2-3 வருடங்களிலேயே [2003 - 2006]  300 சதவீதத்துக்கும் மேலே இலாபத்தை ஈட்டி தந்த பங்குச்சந்தை SENSEX. உலகவரலாற்றிலேயே இது ஒரு சாதனை!  (இப்ப எதுக்கு இந்த பழைய கதை ...அதுவும் சரிதான்..!!)

* ஒவ்வொரு நாளின் கடைசி சில மணிநேரங்களில் நடக்கும் வர்த்தக்தின் சராசரியே சென்செக்ஸ் ன் closing value.

4 comments:

said...

மீ தி பர்ஸ்ட்டு

said...

one small question. What is difference between BSE and NSE.

said...

ஆஹா..சிவா..இங்கேயுமா!!

said...

வாங்க, தியாகராஜன்!

NSE - National Stock Exchange (தேசிய பங்குச் சந்தை). 1994ல் ஆரம்பிக்கப்பட்டது. இதில 50 பேரு நாட்டாமை (பெரிய நிறுவனங்கள்)ங்க! பெரிய நாட்டாமை ரிலையன்ஸ்!!

குறியீடு (Index) Nifty (National Index Fifty) & Nifty Jr.

The only exchange to trade GOLD ETFs (exchange traded funds) in India.

இதில் உறுப்பினராகி வியாபரம் செய்யணும்னா 2 கோடியாவது வேணும்.தினசரி வர்த்தகம் சில ஆயிரம் கோடிகள்!!

BSE - Bombay Stock Exchange (மும்பை பங்குச் சந்தை). 1875ல் ஆரம்பிக்கப்பட்டது. இதில 30 பேரு நாட்டாமைங்க! குறியீடு SENSEX (Sensitive Index).

இதில A, B1,B2....Z என பல குரூப் உள்ளது. A கிரேட், B கிரேட் மாதிரிதான்..! மிக அதிக வர்த்தகம் செய்யப்படும் பங்குகள் A குரூப்களில் வரும். வாங்கவும், விற்கவும் ஆள் இருப்பாங்க. இப்படி கொஞ்சம் கொஞ்சமா தகுதி இழக்கும் பங்குகள் Z குரூப்ல வந்து நிற்கும். இந்த குரூப்ல உள்ள பங்குகளை வாங்கவோ..விக்கவோ ஆள் இருக்காது.

இதுபோல இந்தியாவில 20-22 பங்குச்சந்தைங்க இருக்கு... சென்னை, கோவை, கல்கத்தா....முழுப் படியல் இங்கே!

அப்புறம்... உங்க பதிவுல பன்ச் டயலாக் பார்த்தேன்...


//ஆங்கில‌த்துல‌ எனக்கு பிடிக்காத‌ ஒரே வார்த்தை Process.//


அருமை..! ;) அதுவும் இந்த SOX கொடுமை இருக்கே.....