இதுவரை அமெரிக்க வரலாற்றில் 'திவாலாகி'யுள்ள மிகப்பெரிய நிறுவனங்கள்:
1. Lehman Brothers (சொத்து மதிப்பு: $639 billion )
போன வருடம் 100 $ஆக இருந்த இந்த நிறுவனத்தின் பங்கின் விலை, போனவாரம் 20 $ க்கு வந்து இப்பொழுது 20 காசுக்கு (!) (cent) மூச்சு முட்டிக்கொண்டு இருக்கிறது.
2. MCI Worldcom ($103.9 billion)
3. Enron ($63.4 billion)
4. Conseco ($61.4 billion)
5. Texaco ($35.9 billion)
6. Financial Corp. of America ($33.9 billion)
7. Refco ($33.3 billion)
8. Global Crossing ($30.2 billion)
9. Pacific Gas and Electric ($29.8 billion)
10. United Air lines ($25.2 billion). இந்த நிறுவனம் திவாலானது டிசம்பர் 2002ல்! ஒரு தவறான செய்தியால் போனவாரம் நடந்த கூத்து!
****
150 வருட பழமை வாய்ந்த நிறுவனம் மற்றும் அனுபவம் எல்லாம் கதைக்கு ஆகவில்லை! 12 மாதங்களுக்கு முன் 100 $ மதிப்புள்ள பங்கின் விலை இன்று 10 சென்ட்க்குகூட வாங்க ஆளில்லை!
* மோர்கன் ஸ்டான்லி (Morgan Stanley) வகோவியா (Wachovia) வங்கியுடன் இணைய நேரம் பார்த்து கொண்டிருக்கிறது.
* வரும் நாட்களில் WaMu (Washington Mutual) - Wells Fargo, JPMorgan Chase அல்லது HSBC வங்கியுடன் இணையலாம்.
* AIG யைக் காப்பாற்ற 85 பில்லியன் (8500 கோடி) டாலரை கடனாக வழங்க அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி முன்வந்துள்ளது.
** இந்தியாவில், AIG நிறுவனத்துடன் இணைந்து டாடா நிறுவனம் நடத்தும் இன்சூரன்ஸ் திட்டத்திற்கு பாதிப்பு எவ்வளவு என்பது இனி தான் தெரியும்
* லேமென் பிரதர்ஸ்க்கு - பிரிட்டனின் பார்ஸ்லேஸ் வங்கி ......
** திவாலான லேமென் பிரதர்ஸ் வங்கிக்கு, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, ரூ. 300 கோடிக்கு மேல் கடன் கொடுத்துள்ளதால், நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதனால், அந்த வங்கிகளின் நிர்வாகிகள், பங்குகளை விற்கின்றனர் என பரவிய செய்தியால், அந்த வங்கிப் பங்குகள் சரிந்தன.
** லேமென் பிரதர்ஸ் வங்கி, இந்தியாவில் ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் ஏராளமாக முதலீடு செய்ததைத் திரும்ப பெறும் என்ற வதந்தி நிலவியதால், தொடர்ந்து ரியல் எஸ்டேட் துறை பங்குகள் சரிவை சந்தித்து வருகின்றன.
** ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, லேமென் பிரதர்ஸ் வங்கியில் செய்த முதலீட்டால் ரூ.250 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்ற செய்தியால், எஸ்.பி.ஐ., பங்கு விலை ரூ.56 வரை நேற்று சரிந்தது.
* மெரில் லிஞ்சை பேங்க் ஆப் அமெரிக்கா 50 பில்லியன் டாலருக்கு ($) வாங்கிக்கொள்வதாக சொல்லியிருக்கிறது.
தொடர்புள்ள இணைப்புகள்;
0 comments:
Post a Comment