என் நண்பர் ஒருவர், 'மியூச்சுவல் ஃபண்ட்-ல போடுவதற்கு பதிலாக Fixed Deposit [FD]ல போடலாமே. இப்பலாம் 9....10....11 சத வீதம் வரை வட்டி குடுக்கிறதா விளம்பரம் குடுக்கிறாங்களே?'.
நல்ல கேள்விதான்... எதுக்கு ரிஸ்க் எடுத்து மியூச்சுவல் ஃபண்ட்-ல போட்டுகிட்டு. Fixed Deposit [FD]ல போட்டா பணமும் பாதுகாப்பா இருக்கும். உறுதியா நல்ல வட்டியோட நம்ம பணம் கையில கிடைக்கும்.
உண்மைதான். இப்பலாம் வங்கிகளும் சினிமா விளம்பரத்துக்கு இணையாக விளம்பரங்கள் கொடுத்து வாடிக்கையாளர்களை 'பிடிக்க' ஏகப்பட்ட உத்திகள். ஒரு ஃபோன் பண்ணினா போதும்... வங்கில இருந்தே வீட்டுக்கு வந்து நமக்கு 'சேவை' செய்ய தயாராக இருக்கிறார்கள். நாம வங்கிக்குகூட போக வேண்டாம்...
என் நண்பர் கேட்ட கேள்விக்கு பதிலை ஒரு சின்ன கணக்கு போட்டு பார்த்தா எளிமையா புரியும்-னு நினைக்கிறேன்....
இதில நாம கவனிக்க மறந்தது இரண்டு விசயங்கள்:
1. கிடைக்கும் வட்டிக்கு வருமான வரி கட்ட வேண்டும்.
2. பண வீக்கம்
உதாரணத்துக்கு, ஒரு வருடத்திற்கு, ஒரு இலட்ச ரூபாயை [Rs. 1,00,000] Fixed Deposit [FD]ல பத்து சதவீத வட்டில போடுறோம்-னு வைச்சுக்குங்க....
FD தொகை : Rs. 1,00,000 ; 1 வருட வட்டி 10%: Rs. 10,000 (+) .
கிடைக்ககூடிய தொகை: Rs. 1,10,000 [1,00,000+ 10,000 ]
வட்டிக்கு 30% வருமான வரி: Rs. 3,000 (-)
கழித்தால், கிடைக்ககூடிய தொகை: Rs. 1,07,000 [1,10,000 - 3,000 ]
பணவீக்கம் 5% of 1,10,000 = Rs. 5,350 (-)
கழித்தால், கிடைக்கும் தொகை: Rs. 1,01,650 [ 1,07,000 - 5,350 ]
கணக்கு சரியா..?
ஆக... Fixed Deposit-ல போட்டா ஒரு வருடத்திற்குபின் நமக்கு கிடைப்பது 1,01,650 ரூபாய். அதாவது 1,650 ரூபாய்தான் அதிகம்.
அப்ப... மேலே சொன்ன இரண்டு விசயங்கள் இல்லாம முதலீடு பண்ண முடியுமா? பண வீக்கத்தை தடுக்க முடியாது. ஐந்து சதவீதகிறது கொஞ்சம் கூடலாம்... குறையலாம். அதை தவிர்க்க முடியாது.
ஆனா, வருமான வரி கட்டாமா வேறு திட்டங்கள்-ல முதலீடு பண்ண வழி இருக்கா?
இருக்கு.....!
இந்திய ரூபாய் மதிப்பு அதிகரித்து வருவது பற்றி
-
*“ஒ*ரே மாதத்தில் இந்திய ரூபாய் மிக மோசமான நாணயத்திலிருந்து மிகச் சிறந்த
நாணயமாக மாறிய அற்புதம்" என்ற செய்தி இந்தியா டைம்ஸ் இணைய தளத்தில்
வெளியாகியிருந்தது...
5 years ago
15 comments:
அம்மாடியோவ்!!இப்படித்தான் கணக்கு போடனுமா?
மர மண்டைக்கு புரிகிற மாதிரி சொல்லிட்டீங்க,அடுத்த பதிவுக்கு காத்திருக்கேன்.
ஏனுங்க தென்றல், பணவீக்கம் நாம் FD போடுற பணத்துல இல்லையா. போடும் பணம் + வட்டி என்று சொல்லியிருக்கீங்க. இது சரியா? நான் இவ்வளவு நாள் FD போடும் பணத்துக்கு தான் பணவீக்கம் என்று நினைத்தேன். :(
வாங்க, வடுவூர் குமார்!
உங்க புகைபடத்தை பார்த்து பயந்து இருந்தேன். கமல்-நிரோஷா ஒரு படத்தில நடிச்சிடுப்பாங்களே ... அதுல வர கமல் மாதிரி...... [பின்னூட்டம்கூட போடலைனா பார்த்துக்கேங்களேன்... ;) ]
இப்ப வேற புகைப்படம் இருக்கு? என்னை மாதிரி வேற யாராவது சொன்னாங்களா என்ன ? :)
ஐயோ இப்படியரு கணக்கு இருக்கா? இதுவரைக்கும் யாருமே சொல்லலியே.. இப்பத்தான் நான் கேள்விப்படுறேன்.. அப்புறம் ஆட்டத்தைத் தொடருங்க.. இதையாவது கேட்போம்..
அட.... வாங்க, காட்டாறு!
/பணவீக்கம் நாம் FD போடுற பணத்துல இல்லையா. போடும் பணம் + வட்டி என்று சொல்லியிருக்கீங்க. இது சரியா?/
நானும் அப்படிதான் நினைச்சேன்-ங்க!
வங்கியில் பணிபுரியும் என் நண்பரிடம் கேட்டேன். அவர் சொன்ன விளக்கம்தான் இது. வேணும்-னா, நம்ம ஜோசப் சார் ,
சிவக்குமார் அவர்களிடம் ஒரு வார்த்தை கேக்குறேன்?!
தென்றல்,
வங்கி வைப்பு நிதியைப் பற்றிக் கணக்குப் போட்டு விட்டீர்கள், மியூச்சுவல் ஃபண்டில் என்ன நடக்கும்?
ஆனந்த விகடனில் 'பணம் செய்ய விரும்பு' தொடரில் அழகாக விளக்கியிருந்தார்களே!
வங்கியில் போடும் போது ரிஸ்க் குறைவு, வருமானமும் குறைவு, பங்குச் சந்தையில் போடும் போது ரிஸ்க் அதிகம், சரியாக போனால் வருமானமும் அதிகம்.
அதாவது, வங்கியில் 10% வட்டி கிடைத்தால் நன்றாக நிர்வகிக்கப்படும் மியூச்சுவல் ஃபண்டில் 15%, 20% என்று வளர்ச்சி இருக்கும்.
அன்புடன்,
மா சிவகுமார்
நன்றி, சிவகுமார்!
காட்டாறு ஒரு சந்தேகம் கேட்டுந்தாங்களே.. எது சரி-னு தெரியுமா?
/ஆனந்த விகடனில் 'பணம் செய்ய விரும்பு' தொடரில் அழகாக விளக்கியிருந்தார்களே!
/
2,3 வாரமா பார்க்கலை.. நினைவுபடுத்தியதற்கு நன்றி!
வாங்க, உண்மைத் தமிழன்!
/இதையாவது கேட்போம்../
இப்ப நடக்கிற கூத்தை பார்த்திட்டு,
ரொம்ப நொந்து போய் இருக்கீங்களா?
மனசு கஷ்டமாகதான் இருக்குது..;(
என்னங்க தென்றல்,அது டச்சப் பண்ண புகைப்படம்.:-))
நீங்க சொன்னமாதிரி யாரும் சொல்லவில்லை.அவ்வளவு பெரிய மீசையெல்லாம் வைத்தால் இங்கு வேலை கிடைப்பது கூட கஷ்டமாகிவிடக்கூடும்.:-))
நீங்களே பின்னூட்டம் போடலாம் என்கிற போது நான் எழுதுவதையே "இங்கு" நிறுத்திவிட்டேன்.
பல நல்ல தகவல்களை கொடுத்துள்ளீர்கள்,மீண்டும் நன்றி.
காட்டாறு,
பணவீக்கம் என்பது பொதுவான விலை ஏற்றத்தால் பணத்தின் மதிப்புக் குறைவதைக் குறிக்கிறது. பண வீக்கம் அதிகமாக அதிகமாக வட்டி வீதம் அதிகமாகும் என்பதுதான் இரண்டுக்கும் தொடர்பு.
வங்கி வட்டி பண வீக்கத்தை விட அதிகமாக இருந்தால்தான் ஆதாயம் இருக்கும்.
அன்புடன்,
மா சிவகுமார்
நீங்க சொன்னமாதிரி யாரும் சொல்லவில்லை.அவ்வளவு பெரிய /மீசையெல்லாம் வைத்தால் இங்கு வேலை கிடைப்பது கூட கஷ்டமாகிவிடக்கூடும்.:-))/
ஓ... அப்படியா? ம்ம்..
/நீங்களே பின்னூட்டம் போடலாம் என்கிற போது நான் எழுதுவதையே "இங்கு" நிறுத்திவிட்டேன்./
நான் தவறா ஏதும் சொல்லையே?
அடிக்கடி வாங்க, குமார்! உங்க பதிவுகளைலாம் பார்க்க google reader உபயோகமா இருக்கு! நன்றி!
விளக்கத்திற்கு நன்றி, சிவகுமார்!
/பண வீக்கம் அதிகமாக அதிகமாக வட்டி வீதம் அதிகமாகும் என்பதுதான் இரண்டுக்கும் தொடர்பு.
/
ம்ம்ம்.. interestingஆ இருக்கே! இதைப் பற்றி சுட்டியிருந்தால் சொல்லுங்கள், சிவகுமார்!
நன்றி சிவக்குமார். நன்றி தென்றல்.
தென்றல்...
உங்களுடைய வாதம் ஓரளவுக்கு சரி என்றாலும் அதை அவ்வளவு எளிதாக முடிவு செய்துவிட முடியாது.
மா.சிவக்குமார் அவர்கள் கூறியதுபோல வங்கிகள் அளிக்கும் வட்டி விகிதம் பணவீக்க விகிதத்தை விடவும் கூடுதலாக இருக்கும் பட்சத்திலேயே லாபம் இருக்கும் என்பது சரிதான்.
ஆனால் கடந்த ஐந்தாண்டுகாலமாக வங்கிகள் அளிக்கும் குறைந்தபட்சம் வட்டி விகிதமும் அப்போதைய பணவீக்க விகிதமும் ஏறக்குறைய ஒன்றாகவே இருந்து வருகின்றன.
வங்கியிலிருந்து கிடைக்கும் மொத்த வட்டியும் வரிக்கு உள்ளாவதில்லை. அதாவது நீங்கள் வருமான வரி செலுத்துபவராக இருந்தால் வங்கியிலிருந்து கிடைக்கும் வட்டியில் ரூ.3000 வரை வரியிலிருந்து விலக்கு உண்டு. இதற்கு மேல் உங்களுடைய வட்டித் தொகை இருந்தால் மட்டுமே வங்கிகள் வரியை பிடித்தம் செய்கின்றன. அதாவது வட்டி விகிதம் 10% ஆக இருக்கும் பட்சத்தில் ரூ.30,000/- வரை வைப்பு நிதியில் வைக்கலாம். நீங்கள் அளித்துள்ள மாதிரியில் ரூ.10000/- வரி செலுத்த தேவையில்லை. ரூ.7000/-க்கு மட்டுமே வரி செலுத்த வேண்டியிருக்கும்.
பணவீக்கத்தின் விகிதம் 5.50% என்றால் அதை அப்படியே வட்டி விகிதத்திலிருந்து குறைத்துவிட வேண்டும் என்பது சரியல்ல.
உதாரணத்திற்கு உங்களுடைய பணத்தை வங்கியில் வைத்திராமல் வீட்டிலேயே வைத்திருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அப்போது உங்களுடைய ரூ.30000/- வருட இறுதியில் ரூ.28,350/- ஆக குறைந்துவிடும். வங்கியில் இட்டால் பணவீக்கத்தை கணக்கில் எடுத்துக்கொண்டாலும் ரூ.31,350/- ஆக உயர்ந்துவிடும். ஆக வீட்டிலிருப்பதற்கும் வங்கியிலிருப்பதற்கும் வித்தியாசம் ரூ.3,000/- அத்துடன் உங்களுடைய வங்கி டெப்பாசிட் பாதுகாப்பானது. எப்போது வேண்டுமானாலும் திருப்பி எடுத்துக்கொள்ளவும் வாய்ப்பளிக்கிறது.
சரி.. வங்கியிலிருப்பதை விட நிதிநிறுவனங்கள் நடத்தும் ம்யூச்சுவல் ஃபண்டில் இடுகிறீர்கள். நன்றாக நிர்வாகம் செய்யும் நிறுவனங்களுடைய பராமரிப்பில் இருக்கும் திட்டங்கள் நிச்சயம் வங்கிகள் அளிக்கும் வட்டியை விட நல்ல வருமானத்தை அளிக்கின்றன. ஆனால் அதில் எவ்வித நிச்சயமும் இல்லை. உங்களுடைய முதலீடு கூடலாம், குறையலாம். எதிர்பாராத கடுமையான பங்கு சந்தை சரிவால் உங்களுடைய மொத்த முதலீட்டையுமே இழந்துவிடக்கூடிய வாய்ப்பும் உள்ளது. நீங்கள் என்னதான் விவரமுள்ளவர்கள் என்றாலும் நிறுவனங்கள் நடத்தும் பல திட்டங்களில் எது சிறந்ததென தெரிவு செய்வது அத்தனை எளிதல்ல.
மிகவும் விரிவான விளக்கத்திற்கு நன்றி, ஜோசப் சார்!
லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வர்றீங்க... ;)
(தலைவரு சொன்னா கை தட்றாங்க.. நம்ம சொன்னா 'முதுகை' தட்றாங்க... ம்ம் ;( )
/அத்துடன் உங்களுடைய வங்கி டெப்பாசிட் பாதுகாப்பானது. எப்போது வேண்டுமானாலும் திருப்பி எடுத்துக்கொள்ளவும் வாய்ப்பளிக்கிறது.
/
ம்ம்..என் அப்பாவும் இததான் சொன்னாங்க!
Post a Comment