மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு - 4
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு - 3
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு - 2
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு - 1
' ஏஜண்ட்-டை பார்த்துட்டு வந்தாச்சா?'
'ம்ம்... இப்ப அதோட NAV மதிப்பை எப்படி தினமும் கவனிக்கிறது? தினமும் செய்திதாள்களில் பார்க்கலாம். வேற ஏதாவது வழி இருக்கிறதா... ...?'
இதுக்கு ஒரு எளிய வழி இருக்கு....
'ஆன் ஃலைன் டிரேடிங் (on-line trading). ஏஜண்ட் யை போய் பார்க்காம, நம்மளே மியூச்சுவல் ஃபண்ட் வாங்கலாம்... விக்கலாம். என்ன ஏஜண்ட் பண்ற "வேலை"ய நம்ம செய்யணும். எந்த மியூச்சுவல் ஃபண்ட் அதிக லாபம் தரக் கூடியது, எதில நீண்ட நாள் முதலீடு செய்யலாம்? போன்றவைகள்....
அதுவும் ரொம்ப எளிதுதான். '
ICICI Direct, Sharekhan, India Bulls .... போன்றவைகள் ஆன் ஃலைன் டிரேடிங் (on-line trading) வசதியை செய்கிறது. இதில ஒரு கணக்கு ஆரம்பிக்கணும். தனிப்பட்ட முறையில் ICICI Direct-ல் எனக்கு திருப்தில்லை. கமிசனும் கொஞ்சம் அதிகம்.
ஆன் ஃலைன் டிரேடிங் (on-line trading) கணக்கு ஆரம்பிச்சிட்டீங்கனா தினமும் NAV மதிப்பை கவனிக்க முடியும். அது போக ஒவ்வொரு ஃபண்ட் பத்தியும் பல விதத்தில 'ஆராய்ச்சி' பண்ணின தகவலும் கிடைக்கும்.
'நான் முதலீடு செய்றதே இரண்டோ, மூணோ ஃபண்ட்கள்தான். அதுக்குபோய் கமிசனும், வருடம் வருடம் ஒரு தொகையும் குடுக்கனுமா? வேற ஏதாவது வழி இருக்கா...'
நல்ல கேள்வி. அதுக்கும் வழி இருக்கு. Portfolio Tracker.
1. Money Control
2. Value Search Online
3. Rediff Business
மேலே குறிப்பிட்ட ஏதேனும் ஒரு வலைதளங்களில் ஒரு கணக்கு துவங்குங்க (இப்போதைக்கு இலவசம்தான்) . நம்ம வாங்கின, வாங்கப்போற மியூச்சுவல் ஃபண்ட்யை குறிப்பிடுங்க. தினமும் இதில மியூச்சுவல் ஃபண்ட் வளர்ச்சியைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
சரி.. இப்ப மத்த ஃபண்ட்களைப் பத்தி பார்க்கலாமா?
இதுவரை பார்த்த மூன்று ஃபண்ட்களும் நேரிடையா பங்குச் சந்தையில முதலீடு செய்வாங்க. அதனால பங்குச் சந்தையின் தாக்கம் இருக்கும்.
இன்னும் கொஞ்சம் பாதுகாப்பானது-னா அது ‘டெப்ட் ஃபண்ட்' (Debt Fund). அதேபோல் அரசு கடன் பத்திரங்களில் மட்டுமே முதலீடு செய்யும் திட்டம், 'கில்ட் ஃபண்ட்' (Gilt Fund). கடன் சந்தையில் முதலீடு செய்யும் திட்டம் 'லிக்விட் ஃபண்ட் ' (Liquid Fund).
வருமானம்.... ? கொஞ்சம் குறைவாகவே இருக்கும்.
ஆனா, நாம் முதலீடு செய்த தொகை ரொம்பவே பாதுகாப்பாக இருக்கும். வங்கிகளில் போடும் ஃபிக்சட் டெபாசிட்டுகளுக்கு (Fixed Deposit) பதிலாக இது போன்ற ஃபண்ட்களை கவனத்தில் கொள்ளுதல் நல்லது. இன்னொரு முக்கியமான விசயம்-னா இந்த தொகைக்கு வரிச் சலுகையும் உண்டு.
இந்த திட்டங்களில் இருக்கும் கவனிக்கதக்க மூன்று ஃபண்ட்கள் **:
'கில்ட் ஃபண்ட்' (Gilt Fund):
---------------------------------
1.Escorts Mutual Fund Unclaimed Dundee Sovereign Trust (7.28%)
2.Birla Sun Life - G-Sec Short Term (7.19%)
3.ICICI Prudential Gilt Fund (Investment) (7.15%)
'லிக்விட் ஃபண்ட் ' (Liquid Fund):
---------------------------------------
1. Franklin Templeton Fixed Tenure Fund - Series 4 (8.54%)
2. Birla Fixed Term Plan - Series H (8.51%)
3. Tata Fixed Horizon Fund Series 3 Plan G (8.46%)
இது மூத்த குடிமக்களுக்கு (senior citizen) ஏற்ற ஃபண்ட்கள்.
என் நண்பர் கேட்ட கேள்விக்கு பதிலான வருமான வரி விலக்குள்ள ஃபண்ட்-களையும், ஈ.எல்.எஸ்.எஸ் திட்டம் (ELSS - equity linked savings scheme) பத்தியும் அடுத்ததில் பார்க்கலாம்.
** இந்த மியூச்சுவல் ஃபண்ட்-களாம் இன்றைய தேதிக்கு நல்ல முதலீடு. நாளை மாறலாம்...?
இந்திய ரூபாய் மதிப்பு அதிகரித்து வருவது பற்றி
-
*“ஒ*ரே மாதத்தில் இந்திய ரூபாய் மிக மோசமான நாணயத்திலிருந்து மிகச் சிறந்த
நாணயமாக மாறிய அற்புதம்" என்ற செய்தி இந்தியா டைம்ஸ் இணைய தளத்தில்
வெளியாகியிருந்தது...
5 years ago
3 comments:
** இந்த மியூச்சுவல் ஃபண்ட்-களாம் இன்றைய தேதிக்கு நல்ல முதலீடு. நாளை மாறலாம்...?
இதானே வேண்டாம் என்கிறது.
இத்தனை நாள் தூக்கி வைத்துவிட்டு "விட்டுடுவேன் " பயமுடுத்திகிறீர்களே!! ஞாயமா?
கையை அரிக்க ஆறம்பித்துவிட்டது.முயன்றுவிடவேண்டியது தான்.
ஆரம்பித்துவிட்டது- ஸ்பெல்லிங் மிஸ்டேக்.
மன்னிக்கவும்.
/இதானே வேண்டாம் என்கிறது.
இத்தனை நாள் தூக்கி வைத்துவிட்டு "விட்டுடுவேன் " பயமுடுத்திகிறீர்களே!! ஞாயமா?
கையை அரிக்க ஆறம்பித்துவிட்டது.முயன்றுவிடவேண்டியது தான்./
:) !
தொலைக்காட்சியில் மியூச்சுவல் ஃபண்ட் விளம்பரம் பார்த்திருக்கதானே!! 'அருமையான திட்டம்; உங்களுக்காகவே உருவாக்கப்பட்டது....'னு கவர்ச்சிகரமா சொல்லுவாங்க. sentimentஆ கூட விளம்பரம்கூட இருக்கும். ஆனா, விளம்பரம் முடியறப்ப, ஒரு பத்து பக்கத்தை 10 வினாடியில வேகமா வாசிப்பானுங்க. ஒண்ணும் புரியாது... நாம கவனிக்கிறதும் கிடையாது.. அதுல என்ன சொல்லவருவாங்கனா, 'மியூச்சுவல் ஃபண்ட் பங்குச் சந்தையின் மாற்றங்களுக்கு உட்பட்டது... குறைந்தபட்ச முதலீடு எவ்வளவு, entry load, exit load -னு ' ஒரு பெரிய கத சொல்வாங்க. சொல்றதலாம் உண்மைதான். அத நிறுத்தி நிதானமா சொன்னாங்கனா, உடனே வாங்கனும் நினைக்கிறவங்களும் கொஞ்சம் யோசிப்பாங்க!
இப்ப இருக்கிற நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்வது நன்றே!
வாழ்த்துக்கள்!!
Post a Comment