Wednesday, May 16, 2007

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு - 6

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு - 5
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு - 4
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு - 3
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு - 2
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு - 1





டெப்ட் ஃபண்ட் ல் வருமானம் கம்மியாக கிடைத்தாலும், அதிலுள்ள பிக்ஸட் மெச்சூரிட்டி பிளான் [Fixed Maturity Plan - FMP] மற்றும் ‘லிக்விட் ஃபண்ட்'ல் நல்ல வருமானம் கிடைக்கும்.



பிக்ஸட் மெச்சூரிட்டி பிளான் [FMP]: இது ஒரு closed-end டெப்ட் ஃபண்ட். 3 அல்லது 5 வருட கால வரைமுறை உண்டு. FD போல குறிப்பிட்ட வருடத்திற்கு பணத்தை எடுக்காமல் இருந்தால் நல்லது.

வங்கியின் FD விட நல்ல திட்டம். FDல் வரிபோக 6 சதவீதம் கிடைக்குமென்றால், இந்த திட்டங்களில் 9 சதவீதம் வரை கிடைக்கு வாய்ப்பு உள்ளது.

நம் தேவைக்கு ஏற்ப முதலீடு செய்ய இதில் 3 மாதம், 6 மாதம் அல்லது 1 வருடம் என பல கால அளவுகளில் முதலீடு செய்யலாம்.

அதிக வருமான வரி (33.99% slab) கட்டுபவர்களுக்கு மேலே சொன்ன இரண்டு திட்டங்களும் சிறந்ததாகும்.

வட்டி விகிதம் அதிகமாக இருக்கும் இந்த கால கட்டத்தில், கில்ட் ஃபண்ட் போன்ற திட்டங்களை தற்சமயம் தவிர்ப்பது நல்லது.

வரிச் சேமிப்பை அடிப்படையாகக் கொண்ட திட்டம் ஈ.எல்.எஸ்.எஸ் [E.L.S.S - Equity Linked Saving Schemes]. இந்த திட்டத்தில் கிடைக்கும் டிவிடெண்ட்(Dividend)க்கும் மட்டுமல்லாமல், இத்திட்டத்தில் முதலீடு செய்யும் ஒரு லட்ச ரூபாய் வரை வரி விலக்கு உண்டு.

ஆமாம்.. ரொம்ப கவர்ச்சிகரமான திட்டம்தான்.



இந்த மாதிரி (வரி சேமிப்புத்) திட்டங்களில் முதலீடு செய்த பணத்தை மூன்றாண்டுகளுக்கு வெளியில் (lock-in period) எடுக்கமுடியாது.

இதுபோன்ற நீண்டகால முதலீடுகள்தான் நாட்டின் அடிப்படை கட்டமைப்புத் திட்டங்களில் பயன்படுத்தப்படுகின்றது. நாட்டின் வளர்ச்சியில் முக்கியப் பங்கு இருப்பதால்தானோ என்னமோ, இதில் செய்யப்படும் முதலீடுகளுக்கு வரிச்சலுகை தருகிறது நம் அரசாங்கம்.

இதில் கவனிக்ககூடிய மூன்று திட்டங்கள் **:



i. Franklin India Taxshield



ii. HDFC Tax Saver



iii Prudential ICICI Tax Plan



(இந்த மூன்று திட்டங்களை உங்கள் portfolio tracker மூலமாகவும் கவனித்து முதலீடு செய்யலாம்.)



சரி... ஒரு சின்ன கணக்கோட முடிச்சிக்கலாம்.



நீங்க வருமான வரி கட்ட வேண்டிய தொகை ரூ. 20,000 ம் வைச்சிக்குங்க.



ELSS திட்டத்துல ரூ.10,000 முதலீடு பண்ணிருந்தீங்கனா..... ரூ.2,000 சேமிக்கலாம். எப்படி?



ELSSக்கு 20% rebate உண்டு. 10,000 ரூ-ல 20% = ரூ. 2,000/-



நீங்க வரி கட்ட வேண்டிய ரூ. 20,000யில இருந்து ரூ 2,000 கழிச்சா கிடைப்பது ரூ. 18,000. இந்த தொகை மட்டும் வரி கட்டினா போதும்.



முதலில் குறிப்பிட்டதுபோல, இத்திட்டத்தில் முதலீடு செய்யும் ஒரு லட்ச ரூபாய் வரை வரி விலக்கு உண்டு.



இப்பொழுதே திட்டம் போட்டு முதலீடு செய்தால், சேமிப்புக்கும் வழி வகுக்கும், வருமான வரியும் ["நமீதா போல"] கம்மியா .......... "கட்டலாம்".





நன்றி: http://www.appuonline.com

6 comments:

said...

எல்லாம் சரிதான்,இதை வீட்டுக்கார அம்மாவிடம் காட்டி ஏதாவது செய்யலாம் என்று பார்த்தால் கடைசியாக "நமீதா" போட்டு "கட்டலாம் என்று போட்டுடீங்க.
என்ன நடக்கப்போகுதோ... ஆண்டவன் விட்ட வழி.:-))
அதற்கு கீழே கொடுத்துள்ள விபர படம் விபரமாக உள்ளது.

said...

//இதுபோன்ற நீண்டகால முதலீடுகள்தான் நாட்டின் அடிப்படை கட்டமைப்புத் திட்டங்களில் பயன்படுத்தப்படுகின்றது. //

அரிய கருத்தையும் சேர்த்ததற்கு நன்றி.

NRI மக்களுக்கு உதவும் முதலீடுகளையும் எழுதலாமே?

said...

என் தோழி phone பண்ணி ஒண்ணும் புரியலை-னு சொன்னா.

நீங்களாவது அந்த படம் விவரமா இருக்கு சொன்னிங்களே... நன்றி, குமார்!

/கடைசியாக "நமீதா" போட்டு../
படம்லாம் போடலைல.. அதனால தைரியமா உங்க வீட்டுக்கார அம்மாகிட்ட சொல்லுங்க...

said...

வாங்க-ங்க! நன்றி, காட்டாறு!

/NRI மக்களுக்கு உதவும் முதலீடுகளையும் எழுதலாமே?
/
NRI மக்கள் இந்தியாவில முதலீடு பண்றதயா சொல்றீங்க... ஆன் லைன் கணக்கு தொடங்கி அப்புறம் .. இதே போலதான...

கேள்வியை சரியா புரிஞ்சிக்கலனா, மறுபடியும் கொஞ்சம் விளக்கமா கேளுங்களேன்..please...

said...

தென்றல்...

நல்லா போகுது தொடர்....

மேலே கொடுத்துள்ள இனைப்புகளில் பகுதி 3க்கு பகுதி 2க்கான இனைப்பை கொடுத்திருக்கிறீர்கள்.கவனியுங்கள்.

said...

நன்றி,பங்காளி!

/பகுதி 3க்கு பகுதி 2க்கான இனைப்பை கொடுத்திருக்கிறீர்கள்.கவனியுங்கள்./

சரி செய்துட்டேன்! நன்றி!