Friday, June 8, 2007

21. பங்குச்சந்தையில் - 'சிவாஜியும், தசாவதாரமும்' !!

வாழ்த்துக்கள்!!

இந்த வாரம் (ஜீன் 1-15) நாணய விகடனில், செல்லமுத்து குப்புசாமி அவர்களின் "ஷேர் மார்க்கெட் சிங்கம்!" என்ற புதிய தொடர் ஆரம்பமாகியுள்ளது. வாரன் பஃபெட்னின் பங்குச் சந்தைப் பயணத்தை பற்றி பல பயனுள்ள சுவையான தகவல்கள் கிடைக்கும் என நம்பலாம். அவருக்கு நம் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!

*******


  • இந்தியாவின் தேசிய பங்குச் சந்தை (NSE), பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கை அடிப்படையில் உலகளவில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. NSE பட்டியலிலுள்ள மொத்த நிறுவனங்கள்: 1244. முதல் இடம்: போலந்தின் வார்சாவ் பங்குச் சந்தை, இரண்டாவது இடம்: மால்டா பங்குச் சந்தை. நாஸ்டாக் (Nasdaq)லாம் நமக்கப்புறம்தான். [இந்தியா ஒளிர்கிறதோ?!]
  • 2007, மார்ச் மாதத்துடன் முடிவடைந்த ஓராண்டு காலத்தில் மும்பை பங்குச் சந்தை சுமார் 18 % வருமானமும், சீனப் பங்குச் சந்தை (சாங்காய் காம்போசிட்) 150% மேல் வருமானமும் (அள்ளிக்) கொடுத்திருக்கிறது. [எந்த அடிப்படையில் நம்முடைய பொருளாதாரத்தை, சீனாவுடன் ஒப்பிட்டு பார்க்கிறோம்னு தெரியலை?... ம்ம்ம் அவுங்க எங்க..நம்ம எங்க...?! ]
  • UTI மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் விரைவில் சிங்கப்பூர், துபாய், பக்ரைன், இலண்டன் போன்ற இடங்களில் தம்முடைய கிளைகளை துவக்க போகிறது. [சிங்கப்பூர் மற்றும் கிடேசன் பார்க் நண்பர்களுக்கு இது பழைய செய்தியாக இருக்கலாம்?!]
  • நாணய விகடனில் சிறந்த 10 பங்குகள் மற்றும் சிறந்த 10 ஈக்விட்டி டைவர்சிஃபைட் குரோத் (G) ஃபண்டுகள் பரிந்துரைத்துள்ளார்கள். [அதில் மாருதி, லீலா ஹோட்டல்ஸ் பங்குகளையும் மற்றும் சுந்தரம் Mid Cap ஃபண்டையும் சேர்த்து கொள்ளலாம்!]
  • அவிவா (Aviva Life Insurance) காப்பீடு 'அவிவா தன்விருதி' என்ற புதிய திட்டத்தை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. 80C மற்றும் 10(10D) ன்படி வரிவிலக்கு உண்டு. [இந்த திட்டத்தை பற்றி யோசிக்கலாம்!]
  • 2-3 வருட முதலீட்டின் அடிப்படையில் Meghmani Organics IPOல் முதலீடு செய்யலாம். அதிக பட்ச விலை 19 ரூபாய். குறைந்தது 350 பங்குகளாவது வாங்க வேண்டும். [ஓ.. இன்று, ஜீன் 8தான் கடைசி நாளோ? சந்தைக்கு வந்த பின் இதில் முதலீடு செய்யலாம். நல்ல முதலீடு என்பது எனது எண்ணம்]

*******

‘‘நாம் ஒருபக்கம் சம்பாதித்தால், நாம் செய்த முதலீடுகள் மறுபக்கம் சம்பாதித்துக்கொண்டே இருக்க வேண்டும். எனவே, முதலீடுகள் சிறிதாக இருந்தாலும் சரி, பெரிய அளவில் இருந்தாலும் சரி... அது வளர்ந்து வருகிறதா இல்லையா எனக் கவனித்து வரவேண்டியது அவசியம்"
-- சொன்னவர் "பஜாஜ் கேப்பிட்டல்" நிறுவனத்தின் துணைத் தலைவர் ஜார்ஜ் தாமஸ்.

*******

பங்குச்சந்தையில்: 'சிவாஜியும், தசாவதாரமும்'

ஐ.சி.ஐ.சி.ஐ. (ICICI) தன் IPOவின் மூலம் 20,000 கோடி ரூபாய் திரட்டப் போவதாக அறிவித்துள்ளது. ஒரு IPOவுக்கு இது மிகப்பெரிய தொகை.

அதேபோல சந்தைக்குள் நீண்டகால போராட்டத்துக்குப் பிறகு வரும் IPO, டி.எல்.எஃப் (D.L.F). இது கட்டுமானத்துறைக்குப் பெரிய பலமாக இருக்கும் என்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறார்கள்.

முதலில் 13,600 கோடி (136 பில்லியன்) ரூபாய் திரட்டப் போவதாக இருந்தார்கள். இப்பொழுது 9,625 கோடி ரூபாய் போதுமென்று(!) முடிவு செய்துள்ளார்கள்.

ஒரு பங்கின் விலை: Rs 500 - 550
ஆரம்ப தேதி : ஜீன் 11, 2007

கடைசி நாள்: ஜீன் 14, 2007

திரட்டப்படம் பணத்தில் 3,500 கோடி ரூபாய் இந்தியாவின் பல இடங்களில் நிலங்களை வாங்கவும், 3,400 கோடி ரூபாய் கட்டுமானத்துறை வளர்ச்சிக்கும் செலவிடபோவதாக திட்டமிட்டுள்ளார்கள்.

இப்போதைக்கு இவர்களின் வரவையே பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

@

4 comments:

said...

நல்ல குறிப்புகள் தென்றல். தொடர்ந்து தரவும்.

said...

நன்றி, கொத்ஸ்!

said...

நல்லதொரு பதிவு தென்றல்.
அப்படியே NRIஸ் இந்தியாவில் முதலீடு செய்ய இருக்கும் வழிமுறைகள், கட்டுப்பாடுகள் குறித்து தகவல் தர முடியுமா?

நான் இந்தியாவில் முதலீடு செய்யலாம் என்று icici prudential mutual fund தளத்தை மேய்ந்த போது, அது 50000 ரூபாய்க்கு மேல் முதலீடு செய்பவர்கள் கட்டாயம் PAN நம்பர் தரவேண்டும் என்கிறது. அவர்களின் கஸ்டமர் சர்வீஸ் துறையை சாட்டில் தொடர்பு கொண்ட போது அமெரிக்காவில் இருந்து இந்திய ம்யூச்சுவல் பங்குகள் வாங்க இயலாது என்று ரெப் சொன்னார். என்னதான் நடக்கிறது என்று பார்ப்போமே என்று
50000க்கு குறைவாக ஒரு ஃபண்டில் முதலீடு செய்தபோது அதற்கான அக்கவுண்ட் ஸ்டேட்மெண்ட் ஃபோலியோ நம்பர் எல்லாம் போட்டு இமெயிலில் வந்துவிட்டது.

இப்போது ப்ரச்னை என்னவென்றால் என்னுடைய NRI அக்கவுண்டில் இந்தியாவில் இருந்து ரூபாய் டிபாசிட் போட இயலாது. ஒரே ஆள் NRI & NRO ஒரே சமயத்தில் வைக்க இயலாது என்றும் அறிகிறேன். ஆகவே எதிர்காலத்தில் டிவிடண்ட் போன்றவற்றில் ப்ரச்னை வரும் என்று நினைக்கிறேன்.

இது குறித்த உங்கள் கருத்து என்ன?

said...

/நல்லதொரு பதிவு தென்றல்.
அப்படியே NRIஸ் இந்தியாவில் முதலீடு செய்ய இருக்கும் வழிமுறைகள், கட்டுப்பாடுகள் குறித்து தகவல் தர முடியுமா?/

வாங்க முகமுடி! நன்றி!

உங்களைப்போல மற்ற சில நண்பர்களும் மின் அஞ்சல் மூலமாக இதே கேள்வியை கேட்டு இருக்காங்க. கண்டிப்பாக அதைப் பற்றியும் பேசுவோம். என்னுடைய நண்பர் வங்கியில் பணிபுரிகிறார். அவரிடம் சில சந்தேகங்களை நிவர்த்தி செய்த பின் எழுதலாம் என்று இருந்தேன்.

/இப்போது ப்ரச்னை என்னவென்றால் என்னுடைய NRI அக்கவுண்டில் இந்தியாவில் இருந்து ரூபாய் டிபாசிட் போட இயலாது. ஒரே ஆள் NRI & NRO ஒரே சமயத்தில் வைக்க இயலாது என்றும் அறிகிறேன். ஆகவே எதிர்காலத்தில் டிவிடண்ட் போன்றவற்றில் ப்ரச்னை வரும் என்று நினைக்கிறேன்.

இது குறித்த உங்கள் கருத்து என்ன?/

Money2India இணையதளம் வழியாக நீங்கள் இங்கிருந்து உங்கள் அக்கவுண்டுக்கு பணம் அனுப்பலாமே?!
ICICI வங்கி இங்குள்ள Wells Fargo வங்கியுடன் tie-up வைத்துள்ளார்கள். அவர்களையும் தொடர்பு கொள்ளலாம்.

/ஆகவே எதிர்காலத்தில் டிவிடண்ட் போன்றவற்றில் ப்ரச்னை வரும் என்று நினைக்கிறேன்./

ஏன் பிரச்சனை வரும்? நேரிடையாக வங்கியின் கணக்கில் வரவு வைத்து விடுவார்கள். இப்போதைக்கு டிவிடண்ட்க்கு வரிவிலக்கும் உண்டு. அல்லது உங்களுக்கு காசோலையாக (cheque) வந்தாலும் பிரச்சனை இல்லையே!