ஒவ்வொரு முறையும், 'இதை சொல்ல மறந்துட்டோமே' என்று நினைவுக்கு வருவது. அதனால, நினைவில் இருக்கும் பொழுதே அதைப் பற்றி பேசிவிடலாம்.....
மியூச்சுவல் ஃபண்ட்லிருந்து பங்குச் சந்தையை பற்றி தெரிந்து கொண்டு அதில் முதலீடு பண்ணலாம். அப்படிதான் எனக்கு பங்குச் சந்தையின் "அறிமுகம்" கிடைத்தது.
மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களில் இருந்து நமக்கு மூன்று மாதங்களுக்கொருமுறை அறிக்கை அனுப்புவார்கள். அந்த திட்டங்களை பற்றிய முழு விவரங்கள் இருக்கும்.... குறிப்பாக எந்தந்த பங்குகளை எவ்வளவு சதம்வீதம் வாங்கியிருக்கிறார்கள், அரசு கடன் பத்திரத்தில் முதலீடு இருக்குமெனில் அது எத்தனை சதம்வீதம் போன்ற தகவல்கள் இருக்கும். நீங்கள் Value Research Online இணையதளத்திலும் இதை கவனித்திருக்கலாம்.
மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் அனுப்பும் அறிக்கைகளில் அவர்கள் எந்ததெந்தப் பங்குகளில் எவ்வளவு முதலீடு செய்திருக்கிறார்கள் என்பதை கவனிக்க ஆரம்பித்தேன்... அந்த பங்குகளை என்னுடைய 'Watch List'ல் சேர்த்து தினமும் அந்த பங்கின் ஏற்ற இறக்கங்களை கவனித்து வந்தேன். சில நாட்கள்/மாதங்களுக்குபின் அந்த பங்கின் விலை குறையும் பொழுது சில பங்குகளை வாங்கினேன்.
இதில் சில பிரச்சனைகள் இருப்பதை பின்பு தெரிய வந்தது....
அதாவது அவர்களின் அறிக்கைகள் நம் கைக்கு கிடைக்கும்பொழுது பங்கு சந்தையின் சூழ்நிலை மாறியிருக்கலாம். நிறுவனங்கள் பங்குகளை வாங்கும்பொழுது ..... மொத்தமாக (Bulk) வாங்குவார்கள். அதனால் அவர்கள் வாங்கிய விலை வேறாக இருக்கும்.
ஆனால் மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தின் மேலாளர் பின்பற்றும் 'ஒழுக்கமான' முதலீடு கொள்கையை நாம் கற்று கொள்ளலாம்தானே! எந்த அடிப்படையில் பங்குகளைத் தேர்ந்து எடுக்கிறார்கள், எந்த செக்டார் பங்குகளுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது போன்ற விஷயங்களை தெரிந்து கொள்ள முடியும்.
உதாரணத்திற்கு....
SBIயின் Magnum Global ஃபண்டை எடுத்துக் கொள்வோம். ஐந்து நட்சத்திரமுள்ள Equity Diversifyed வகையின் கீழ்லுள்ள நல்ல திட்டம். அதாவது இந்த ஃபண்டின் Portfolio Summary யை கவனித்தால்...
இவர்களின் முதல் ஐந்து பங்குகள்:
Infotech Enterprises, Shree Cement, Thermax, Bharat Earth Movers, Jai Prakash Associates
மற்றும்
எந்தந்த செக்டார்லில் அதிக சதவீதம் முதலீடு என்று கவனித்தால்
என்ஜினியரிங்(14.43%), கட்டுமானத்துறை (13.90%), தொழில் நுட்பத்துறை(8.90%) போன்ற செக்டார்களில் உள்ள பங்குகளில் அதிகம் முதலீடு செய்துள்ளார்கள்.
சரி.. அப்படினா... நேரிடையாவே பங்குசந்தைல முதலீடு பண்ணலாமே? எதுக்கு மியூச்சுவல் ஃபண்ட்ல் முதலீடு செய்யணும்கிற கேள்வி நமக்கு [அடிக்கடி] வரலாம்.
பங்குச் சந்தையின் 'கரடி' முகத்தின்போதும் நமக்கு நஷ்டம் அதிகமாக இருக்கும். ஆனால், அப்படிபட்ட சூழ்நிலையில் மியூச்சுவல் ஃபண்டில் அந்த நஷ்டம் ஓரளவு குறையும். நல்ல திட்டத்தின்கீழ் உள்ள மியூச்சுவல் ஃபண்ட்டாக இருந்தால், பங்குச் சந்தையின் வீழ்ச்சியைவிட பங்கலகின் நிகர சொத்து மதிப்பின் (N.A.V) வீழ்ச்சி குறைவாகத்தான் இருக்கும்......... இருக்கு வேண்டும்.! அப்பொழுதுதான் அது நல்ல திட்டம்!!
மீண்டும் மீண்டும் நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியது: பங்குச் சந்தையின் தாக்கம் மியூச்சுவல் ஃபண்ட்களிலும் பிரதிபலிக்கும். ஆனால், திட்டத்தைப் பொறுத்தும், ஃபண்ட் மேலாளரின் நிர்வாகத் திறனைப் பொறுத்தும் அளவு மாறுபடும்.
இந்தியா ஜி.டி.பி வளர்ச்சி புள்ளிவிபரத்தில் குளறுபடி - அம்பலப்படுத்தும்
அரவிந்த் சுப்பிரமணியன்
-
இந்தியாவின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன்
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி புள்ளிவிபரங்கள் தவறு என்று நிறுவும்
ஆய்வுக் கட்டுர...
5 years ago
2 comments:
பக்கத்து பையனை பார்த்து காப்பி அடிக்கிற மாதிரி இருக்கு.
கோச்சுக்காதீங்க ...
சும்மா விளையாட்டுக்குத்தான்.:-))
கொஞ்சம் யோசிச்சு பார்த்தா,ஆஹா இப்படியும் ஒரு வழி இருக்கா என்று ஆச்சரியத்துடன் பார்க்கவேண்டி இருக்கு.
வாங்க, குமார் அண்ணாச்சி!
/பக்கத்து பையனை பார்த்து காப்பி அடிக்கிற மாதிரி இருக்கு./
யாரும் கேள்வி கேட்க மாட்டாங்க! ஏன்னா நாம 'விளையாடுறது' நம்ம பணத்தை வைச்சில...!
Post a Comment