இப்ப ICICI Direct இணைய வழி (on-line)ல கூட மியூசுவல் ஃபண்ட் திட்டங்களுக்கு நட்சத்திர குறியீடு போடுகிறார்கள். பரவாயில்லை...!
ஃபண்ட்களில் முதலீடு பண்ணியாச்சி. எந்தந்த இணையதளம் பயனுள்ளதாக இருக்கும் என்று நாம் தெரிந்தகொண்டபின், நாம் முதலீடு செய்த ஃபண்ட்களில் எவ்வாறு திட்டமிட்டு (மீண்டும்) முதலீடு செய்யலாம்?
உதாரணத்துக்கு, பங்கலகு (unit) விலை குறைவாக இருக்கும்போது 1000 ரூபாய்க்கு முதலீடு செய்தால் அதிகம் கிடைக்கும். அதேசமயம் விலை அதிகமாக இருக்கும்போது குறைவானவைகளே கிடைக்கும். இல்லையா?
விளைவு...? சந்தை வீழ்ச்சியின்போது நம் கணக்கின் மதிப்பில் அதிக பாதிப்பு இருக்காது. அந்த நேரத்தில் இன்னும் பங்கலகு வாங்கி நம் முதலீட்டை அதிகப் படுத்தி கணக்கின் மதிப்பை கூட்டியிருக்க வேண்டும்.
அதற்கு நமக்கு உதவுவதுதான் எஸ்.ஐ.பி(S.I.P) என்ற சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் ப்ளான். பொதுவாக சந்தையில் விலை குறையும் பொழுது ஒரு பொருளை வாங்குவது நல்லது. அதுதான் புத்திசாலித்தனமும்கூட! அதுதான் மியூசுவல் ஃபண்ட் திட்டங்களுக்கும் பொருந்தும்.
அதாவது ஒழுங்காகத் திட்டமிட்டு முதலீடு செய்ய நமக்கு வழிசொல்லும் திட்டம்தான் எஸ்.ஐ.பி (S.I.P) . மாதாமாதம் முதலீடு செய்வதற்கென ஒரு சிறு தொகையை ஒதுக்கினால் போதும். அது 500 ரூபாயாகக்கூட இருக்கலாம். சமீபத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் 100 ரூபாய்கூட [சரவண பவனில் ஒரு அளவுசாப்பாடு !!?] எஸ்.ஐ.பில் முதலீடு செய்யலாம் என்று 'கவர்ச்சி'கரமாக்கியுள்ளது.
சரி.. இந்த திட்டத்தால் என்ன பயன்?
பங்குச் சந்தை அல்லது மியூசுவல் ஃபண்ட் திட்டங்களில் நம் அனைவரின் ஆசையே 'மிகக் குறைந்த விலையில் வாங்கி, அதிகமான விலைக்கு விற்க வேண்டும்' என்பதுதானே?! இது எப்படி சாத்தியம்? எப்படி தெரிந்து கொள்வது?
'இதுதான் குறைந்தபட்ச விலை என்றோ அல்லது இதுதான் இலாபமானது ... இதற்கு மேல் ஏறவே ஏறாது' என்றோ நம்மில் யாராலும் கணிக்க முடியாது! [ வாரன் பஃபெட் (Warren Buffett) போன்ற பெரிய பெரிய 'தலை'களுக்கே கண்ணைக் கட்டிக்கொண்டு வரக்கூடியது..@#!]
அதனால்தான் எஸ்.ஐ.பி (S.I.P) திட்டம் மிகவும் பயன்கூடியது.
ஏற்கெனவே நாம் முதலீடு செய்த திட்டங்கள் அல்லது புதிதாக சந்தைக்கு வரும் ஏதாவது ஒரு நல்ல திட்டத்தை தேர்ந்தெடுத்து அதில் முதலீடு செய்யலாம்.
இதற்கு ஒரு படிவம் உண்டு. அந்த படிவத்தில்,
- எந்த திட்டம்
- மாதாத்திற்கொரு முறையோ, காலாண்டுக்கு ஒருமுறையோ ... நம் வசதியைப் பொறுத்து எவ்வளவு பணம் மற்றும்
- வங்கி விவரங்கள்
நிரப்பி கொடுத்தால் போதும். நாம் குறிப்பிட்ட முறையில் நேரடிடையாக நம் வங்கி கணக்கிலிருந்து குறிப்பிட்ட திட்டங்களின் பங்கலகு நம் கணக்கில் கிடைக்கும்.
அன்றைய தேதியின் பங்கலகின் விலையை [NAV] பொறுத்து நாம் குறிப்பிட்ட ரூபாய்கான பங்கலகு நம் கணக்கில் வரவு வைத்துவிடுவார்கள். அந்த திட்டத்தின் NAVயைப் பொறுத்து .... ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப நம் கணக்கின் (முதலீடு) மதிப்பும் இருக்கும்.
சிறுக சிறுகச் சேமித்து வாழ்க்கையை வளமாக்குவோம்! சிறுதுளி பெரு வெள்ளம் தானே!!
0 comments:
Post a Comment