Tuesday, June 12, 2007

23. சிஸ்டமேட்டிக் டிரான்ஸ்ஃபர் பிளான் (Systematic Transfer Plan - STP) & சிஸ்டமேட்டிக் வித்ட்ராவல் பிளான் (Systematic Withdrawal Plan-SWP)

மியூச்சுவல் ஃபண்டில் போட்ட பணத்தை திரும்ப பெறுவது பற்றி இன்னும் கொஞ்சம் விவரமா பார்ப்போமா? ஆனா, இது கொஞ்சம் வேற மாதிரி....

கவர்ச்சிகரமான பிளான்களாம் இருக்கு.

1. சிஸ்டமேட்டிக் டிரான்ஸ்ஃபர் பிளான் (Systematic Transfer Plan - STP)

2 சிஸ்டமேட்டிக் வித்ட்ராவல் பிளான் (Systematic Withdrawal Plan - SWP)

சிஸ்டமேட்டிக் டிரான்ஸ்ஃபர் பிளான் (Systematic Transfer Plan - STP) ல ஒரே திட்டத்தில் பணத்தைப் வைக்காமல், அதை வேறு திட்டங்களில் முதலீடு செய்வது. இப்படி முதலீடு செய்வதற்கு என்ட்ரி லோடு (Entry Load) லாம் கிடையாது. (அட..!)

போன வாரம் பார்த்தோமே... சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (SIP) மாதிரிதான் இதுவும். SIPல நம் வங்கியின் கணக்கிலிருந்து பணம் போகும். இதில் ஒரு திட்டத்திலிருந்து மற்றொரு திட்டத்துக்குப் பணம் போகிறது. இதற்கும் ஒரு விண்ணப்பத்தைப் பூர்த்திசெய்து கொடுக்க வேண்டும்.

'எதுக்காக ஒரு திட்டத்திலிருந்து மற்றொரு திட்டத்திற்கு முதலீடு பண்ணணும்?'னு யோசிக்கிறீங்களா...

உதாரணம் சொன்ன புரியலாம்.... N.F.O.ல மூலமா ஒரு திட்டத்தில முதலீடு பண்றோம் வைச்சிக்குங்க. ஆனா, நாம எதிர்பார்த்த மாதிரி அந்த திட்டம் இலாபம் தரலை... இந்த எஸ்.டி.பி (STP)ன் வழியாக ஒரு குறிப்பிட்ட தொகையை எடுத்து நல்ல இலாபமுள்ள திட்டங்களில் முதலீடு செய்யலாம்.

எஸ்.ஐ.பி (SIP) மாதிரி பங்குச்சந்தையின் ஏற்றம், இறக்கம் எதிலும் சாராமல் முதலீடு செய்ய முடியும். நீண்டகால அடிப்படையில் இந்த முதலீட்டின் அளவு சராசரியாக இருக்கும்.

N.F.O.வின் போது ஒரு பங்கலகின் (unit) மதிப்பு பத்து ரூபாய். அது வளர்ந்து 15 ரூபாயாக வளர்ந்திருக்கிறது. இந்த STPன் மூலம் ஆயிரம் ரூபாயை எடுத்து மற்றொரு திட்டத்துக்கு மாற்ற வேண்டும் என்று வைத்துக் கொள்வோம். இப்போது, 100 (1000 / 10) பங்கலகுகள் எடுப்பதற்குப் பதிலாக 67 (1000 / 15) பங்கலகுகள் விற்றாலே போதுமானது.

இதில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது, முதலில் நாம் பணம் போட்டிருக்கும் திட்டத்தில் உள்ள பங்கலகின் ஒரு பகுதியை விற்றுத்தான் நாம் சொல்லும் புது திட்டங்களில் பங்கலகுகள் வாங்குவார்கள். அதனால் அவர்கள் விற்கும் பொழுது நம் திட்டத்தின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது.

SWPயைப் பத்தி அடுத்ததில்..... :)

5 comments:

said...

"பங்கு" - மூன்றெழுத்து மாதிரி
STP & SWP....ஒரே 3 எழுத்தா இருக்கே?
நல்ல விபரங்கள்.

said...

பயனுள்ள தகவல்கள்
தருகிறீர்கள். நன்றி
எம்விஎம்

said...

பயனுள்ள தகவல்கள்
தருகிறீர்கள். நன்றி
எம்விஎம்

said...

பயனுள்ள தகவல்கள்
தருகிறீர்கள். நன்றி
எம்விஎம்

said...

வாங்க, அண்ணாச்சி!

"எல்லா இடத்திலேயும்" நீங்கதான் முதலா இருக்கீங்க... எப்படிங்க?!
(மீண்டும்) நன்றி!

மது மற்றும் மாலதிக்கும் நன்றிகள்!