Thursday, June 14, 2007

24. ஆசியாவிலேயே முதல் மிகப் பெரிய, அதி நவீன மருத்துவமனை


  • தபால் துறையின் 'Speed Post' கட்டணத்தை 40 % குறைத்துள்ளது. இதனால் தபால்துறைக்கு 1400 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும். போன வருடம்தான், கொரியர் நிறுவனங்களின் போட்டியை சமாளிக்க 50% குறைக்கப்பட்டது. [வரும் வாடிக்கையாளர்களை கொஞ்சம் சிரித்த முகத்துடன் சேவை செய்ய ஆரம்பித்தாலே, இலாபத்திற்கான முதல் முயற்சியாக இருக்கும்.]

  • ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை GDP [Gross Domestic Product] மூலமாக கணக்கிடுவார்கள். வரும் நாட்களில், நம் நாட்டின் பொருளாதாரம் 10 சத வீத வளர்ச்சி அடைய வாய்ப்பு உள்ளதாக சொல்கிறார்கள். [மகிழ்ச்சியான செய்திதான்! ஆனா, இப்பொழுது இருக்கிற அரசியல் சூழ்நிலையில உண்மையிலேயே இது சாத்தியமானு தெரியலை. டாக்டர். மன்மோகன் சிங், ப.சி மாதிரி மக்கள் ரொம்பவே எதிர்பார்க்கிற team இருந்தும், ஒண்ணும் பெரிசா பண்ண மாட்டேங்கிறாங்க! விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் அவலம் நம் நாட்டில் மட்டுமே நடக்கும்!]

  • உலகம் முழுவதும் விவசாயத் துறையில் 13 கோடிக்கும் அதிகளவில் குழந்தைத் தொழிலாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். ஐந்து வயதில் இருந்தே, குழந்தைகள் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். வரும் 2016ம் ஆண்டுக்குள், உலகம் முழுவதும் குழந்தைத் தொழிலாளர்களே இல்லாத நிலையை ஏற்படுத்த சர்வதேச அமைப்புகள் திட்டமிட்டுள்ளன. [தீப்பெட்டி, பட்டாசு தொழில்சாலைகளில் வேலை செய்யும், எங்க ஊரு குழந்தை தொழிலாளர்களையும் சேர்த்தா.....?].

  • தைவானில் உள்ள தாய்பேவில், "கம்ப்யூடெக்' என்ற நிறுவனம், ஒன்பதாயிரம் ரூபாய்க்கு (~ $200) மடி கணினி (Laptop Computer) யை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. [ஒன்னு வாங்கினா, ஒன்னு இலவசம்னு கொஞ்சம் நாள்ல சொன்னலானும் சொல்லுவாங்க!]

  • 300 படுக்கை வசதியுள்ள மிகப் பெரிய, அதி நவீன மருத்துவமனையை அப்போலோ மருத்துவமனை ஹைதராபாத்தில் கட்ட திட்டமிட்டுள்ளது. அதற்கு 'Apollo Health City' என்ற பெயரிட்டு உள்ளார்கள். 33 ஏக்கர் நிலம் - 11 மாடி கட்டிடம் - 100 கோடி ரூபாய் முதலீடு போன்ற மெகா திட்டம் உள்ளதாம்.
  • DLF IPO வந்த இரண்டே நாட்களில் சிறு முதலீட்டாளர்கள் 'எதிர்பார்த்ததை விட' அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர்.

*************

"மனிதர்கள் காலில் போட்டுக்கொள்ளும் செருப்புகளும் பூட்ஸ்களும் ஏர்-கண்டிஷன் செய்யப்பட்ட கடைகளில் விற்கப்படுகின்றன; வேளாண்துறையில் விளையும் தானியங்கள், பருப்பு வகைகள், பழங்கள், காய்கறிகள் போன்றவை மண்டிகளிலும், வெயிலும் தூசும் நிரம்பிய சந்தைகளிலும், வீதிகளிலும் கோணியைப் பரப்பி விற்கப்படுகின்றன"

-- ரயில்வே துறை அமைச்சர் லாலு பிரசாத் யாதவ்

**************

RDல் முதலீடு செய்திருந்தால்..... எத்தனை மாதங்கள், எவ்வளவு வட்டி ஆகியவற்றைப் பொறுத்து கணக்கிட்டு கொடுக்கும் ஒரு எளிதான கருவி ( tool) :

RD Calculator

நம் அனைவருக்கும் பயன்படும் எனற நம்பிக்கையில்...

@

8 comments:

said...

திரு லாலு சொன்னதை மிகவும் தீவிரமாக யோசிக்கவேண்டும்.நமது தானியங்களை முறைப்படி சேமித்து வைக்ககூடிய இடங்கள் அவ்வளவாக நம்மிடம் இல்லை.
கலந்து கட்டி கொடுத்துள்ளீர்கள்...கடைசியாக கொடுத்த கால்குலேட்டர் இலவசமா?

said...

//வரும் வாடிக்கையாளர்களை கொஞ்சம் சிரித்த முகத்துடன் சேவை செய்ய ஆரம்பித்தாலே, இலாபத்திற்கான முதல் முயற்சியாக இருக்கும்.]//

உண்மைதான் ,ஒரு முறை பதிவு தபால் அனுப்ப சென்று வரிசையில் நின்றேன் சரியாக நான் கவுண்டரில் கை வைக்கும் போது லன்ஞ் என்று ஒரு அட்டையை எடுத்து வைத்து விட்டு கிளம்பினார்கள்,என் தபாலை வாங்கிக்கொண்டு போகலாமே , என்றதற்கு கடுமையான முகத்துடன் அப்புறம் வா என்றார்கள்,ஒரு குட்டிக்கலாட்டவே செய்யும் படி ஆகிவிட்டது.யாரிடம் வேண்டும் என்றாலும் போய் புகார் செய்துக் கொள்ளுங்கள் என்று அலட்சியமாக போய் விட்டார்கள்.புகாரும் செய்து பார்த்தேன் அப்படி இருந்தும் தோல்வி தான் எனக்கு,அரசு ஊழியர் என்ன செய்ய முடியும் என்று ஆணவம் அவர்களுக்கு. ஒரு கூட்டம் கூடி வேடிக்கைப் பார்த்தது தான் மிச்சம்.

//வேளாண்துறையில் விளையும் தானியங்கள், பருப்பு வகைகள், பழங்கள், காய்கறிகள் போன்றவை மண்டிகளிலும், வெயிலும் தூசும் நிரம்பிய சந்தைகளிலும், வீதிகளிலும் கோணியைப் பரப்பி விற்கப்படுகின்றன"//

குளிரூட்டப்பட்ட ரிலையன்ஸ் ஃப்ரெஷ்களில் விற்கிறார்கள் வேளாண் பொருள்களை அதை தான் மூட சொல்லி போறாடுகிறார்களே அப்புறம் ஏன் இந்த ஆதங்கம்.

//டாக்டர். மன்மோகன் சிங், ப.சி மாதிரி மக்கள் ரொம்பவே எதிர்பார்க்கிற team இருந்தும், ஒண்ணும் பெரிசா பண்ண மாட்டேங்கிறாங்க! விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் அவலம் நம் நாட்டில் மட்டுமே நடக்கும்!]//

கொலை செஞ்சவன் ஒளிய தெரியாம தலையாரி வீட்டில் போய் பதுங்கினானாம், அது போல தற்கொலைக்கு காரண கர்த்தாகிட்டேவே கேள்வி கேட்குறிங்க ,அந்த ரெண்டு பொருளாதார பிலிகள் போட்ட திட்டங்கள் தான் விவசாயிகளுக்கு வில்லங்கமே!.

said...

வாங்க, குமார் அண்ணாச்சி்!

/கடைசியாக கொடுத்த கால்குலேட்டர் இலவசமா?/

:)

said...

/கலந்து கட்டி கொடுத்துள்ளீர்கள்.../

வார இறுதியினால, இப்படி...
ம்ம்... மிக்சர் சாப்பிடுவோம்ல அதுமாதிரி... ;)
['taste' இல்லனா சொல்லிடுங்க! ;)]

said...

வாங்க, வவ்வால்!

உங்கள் அனுபவத்தை பகிர்ந்தமைக்கு நன்றி!

நம் ஒவ்வொருவருக்கும் இதுபோல 'கசப்பான அனுபங்கள்' இருக்கும். [அதனாலகூட ரொம்ப பேரு வேற ஊருல போய் settle ஆயிடுறாங்களோ??]

/அது போல தற்கொலைக்கு காரண கர்த்தாகிட்டேவே கேள்வி கேட்குறிங்க/

;(

said...

//300 படுக்கை வசதியுள்ள மிகப் பெரிய, அதி நவீன மருத்துவமனையை அப்போலோ மருத்துவமனை ஹைதராபாத்தில் கட்ட திட்டமிட்டுள்ளது. அதற்கு 'Apollo Health City' என்ற பெயரிட்டு உள்ளார்கள். 33 ஏக்கர் நிலம் - 11 மாடி கட்டிடம் - 100 கோடி ரூபாய் முதலீடு போன்ற மெகா திட்டம் உள்ளதாம்.// வசதியற்றவர்களுக்கும் ஏழைகளுக்கும் எப்போதும் போல் தர்ம ஆஸ்பத்திரியே கதிதான். இது பணக்காரர்களுக்காக உண்டாக்கிய திட்டமாக இருக்கலாம்(?). அமெரிக்கா ஐரோப்பா ஆகிய நாடுகளில் இருந்து மருத்துவ சுற்றுலா வந்து வெள்ளையர்கள் குறைந்த செலவில் நல்ல மருத்துவம் பார்த்து செல்வார்கள் என நம்பலாமா? காத்தவராயண்கள் முனியாண்டிகள் வேண்டுமானால் கக்கூஸ் கழுவ மட்டும் உள்ளே போகலாம்!

said...

கொஞ்சம் சிரித்த முகத்துடன் சேவை செய்ய - தென்றல், எங்க ஊரு போஸ்டாபீசுல எல்லாருமே 50+ அவங்க எந்த முகத்துல சேவை செஞ்சாலும் ஒன்னுதான். எட்டணாவுக்கு போஸ்ட்கார்டு போட்டா காஷ்மீர் வரைக்கும் போகுது. மக்களுக்கு அரசின் சலுகைகளை பயன்படுத்திக்கொள்ள தெரிவதில்லை

said...

வாங்க, மாசிலா & செல்வேந்திரன்.!

/எட்டணாவுக்கு போஸ்ட்கார்டு போட்டா காஷ்மீர் வரைக்கும் போகுது. மக்களுக்கு அரசின் சலுகைகளை பயன்படுத்திக்கொள்ள தெரிவதில்ல/

உண்மைதான்! ஆனா, இதேபோல் பல செய்திகளை, சலுகைகளை மக்களுக்கு எடுத்துச் சென்றதா?

தேர்தல் நேரத்தில, 'உங்க வீட்டில பாலும், தேனும் ஓடும்'னு 'கட்சி' பணத்தில் சொல்றவங்க.... ஆட்சிக்கு வந்ததும் மக்களுக்கு உள்ள வசதியை.... பண்ற நல்ல விசயத்தை சொல்லி ஒரு விழிப்புணர்வு கொண்டுவரலாம்!

மக்களையே குறைசொல்லி என்ன பயனென்று தெரியவில்லை?!