Sunday, June 17, 2007

25. சிஸ்டமேட்டிக் வித்ட்ராயல் பிளான் (SWP)

நாம் போட்ட முதலீடு வளர வளர, அதன் ஒரு பகுதியை நமக்கு கொடுப்பதுதான் சிஸ்டமேட்டிக் வித்ட்ராயல் பிளான் (SWP) .

நாம் முதலீடு செய்த ஃபண்டின் NAV கூட கூட நம்முடைய முதலீடுகள் சிறப்பாக இருக்கும். இவ்வாறு நமக்கு கிடைக்கும் இலாபத்தை டிவிடெண்டாகவோ அல்லது போனஸ் பங்கலகாவோ நமக்கு கிடைக்கும்.

இவ்வாறு நமக்கு கிடைக்கும் இலாபத்தைப் பிரித்து, மாதா மாதம் நாம் குறிப்பிடும் ஒரு தொகை நமக்கு வருமாறு செய்வதுதான் சிஸ்டமேட்டிக் வித்ட்ராயல் பிளான் (SWP) .

அது சரி.. இலாபம் வந்தா நல்லதுதான். எதிர்வினையா போச்சினா....?

நல்ல கேள்வி!

அப்படி போகும் பட்சத்தில் நாம் முதலீடு செய்த தொகையில் இருந்துதான் மாதாமாதம் கொடுப்பார்கள். ஆம்! தொடர்ந்து இப்படி நடக்கும்ப்ட்சத்தில், நம் முதலீட்டுக்கே ஆபத்து வரும் ஆபாயம் உள்ளது.

அதனால கொஞ்சம் யோசித்து அதற்குபின்னே இதற்குறிய விண்ணப்பத்தை பூர்த்தி செய்யுங்கள்.

நமக்கு வரும் ஃபண்டின் statementயை தனியொரு file folderல் சேர்த்து வைத்துக் கொள்ளலாம். ஃபண்ட், பங்கு சந்தை, வங்கி முதலீடு ... இப்படி ஒவ்வொன்றுக்கும் தனி தனி கலரில் ஃபைல் வாங்கி பிரித்து வைத்துக் கொண்டால் தேவைப்படும் பொழுது எளிதாக இருக்கும்.

ஏனெனில் ஒவ்வொரு statementலும் கவனிக்க வேண்டிய சில விடயங்கள் இருக்கிறது.

1. கணக்கு எண் (Account #)

2. விலாசம் (Address)

3. மொத்த பங்கலகுகள் (Total Units)

4. அதன் மொத்த மதிப்பு (Total Value)

5. வங்கி, விலாசம் /தொலைபேசி எண் மாற்ற அதற்குரிய படிவம்

6. அடிஷனல் பர்ச்சேஸ் ரிக்வெஸ்ட் (Additional Purchase Request)

7. ரிடம்ப்ஷன் ரிக்வெஸ்ட் (Redemption Request)

8. ஸ்விட்ச் ரிக்வெஸ்ட் (Switch Request)

இதில் ஸ்விட்ச் ரிக்வெஸ்ட் (Switch Request) என்பது நம்முடைய மொத்த முதலீட்டையோ அல்லது அதில் ஒரு பகுதி பங்கலகுகளையோ வேறொரு திட்டத்துக்கு மாற்றிக் கொள்ளலாம். ஆனால், அந்த திட்டம் அதே நிறுவனம் நடத்தும் திட்டமாக இருக்க வேண்டும்.

வங்கியில் கணக்கு ஆரம்பிக்கும்பொழுது எப்படி Joint A/C என்று இருக்கிறதோ, அதே போல இதிலேயேம் உண்டு. விதி முறைகள் இரண்டிலும் ஒன்றுதான்.

0 comments: