Sunday, June 24, 2007

28. நிரந்தர கணக்கு எண்: பான் (PAN) அட்டை - சில குறிப்புகள்

வரும் ஜூலை 1, 2007 ம் தேதி முதல், மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் முதலீடு செய்வதற்கு, நிரந்தர கணக்கு எண் (PAN-Permanent Account Number ) குறிப்பிட வேண்டும். அதைப் பற்றி பங்காளியின் வர்த்தகத்தில் மியூச்சுவல் பண்ட் முதலீடு இனி குறையுமா? என்று குறிப்பிட்டு இருந்தார்.

இப்பொழுது நடைமுறையில் பங்குச் சந்தை முதலீடு மற்றும் வங்கியில் 50,000 ரூபாய் மேலே பரிமாற்றம் இருந்தால் நிரந்தர கணக்கு எண் (PAN) குறிப்பிட வேண்டும் என்பது கட்டாயம். அடுத்த மாதம் முதல் மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் 1 ரூ முதலீடு என்றாலும் நிரந்தர கணக்கு எண் (PAN)னை குறிப்பிட வேண்டும்.

டீமேட் (Demat) கணக்குத் துவங்குவதற்கு நிரந்தர கணக்கு எண் - பான் அட்டை அவசியம் என்பது நமக்கு தெரியும். இந்த நிரந்தர கணக்கு எண் பத்து இலக்கம் கொண்டது. உ.தா: AABPS1205E.

வருமான வரி கட்டுபவர்கள் அனைவரும் நிரந்தர கணக்கு எண்ணை குறிப்பிட வேண்டும். அமெரிக்காவில் Social Security Number ரைப் போல நமக்கு PAN.

UTI வங்கியின் குறிப்பிட்ட கிளைகளின் மூலமோ, இதற்கென படிவத்தை பூர்த்திசெய்து கொடுத்தால், சில நாட்களில் நிரந்தர கணக்கு எண் நம் வீட்டிற்கு அனுப்பி வைப்பார்கள்.

அந்த விண்ணபத்துடன் இணைக்க வேண்டியவை:

1. ஒரு பாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோ
2. வீட்டு முகவரிக்கான ஆதாரத்தின் நகல்

இவை இரண்டையும் வைத்து விண்ணப்பத்தை சரியாக பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.

ஆன்லைன் மூலமும் விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே விண்ணப்பித்து இருந்தால் அல்லது உங்கள் நிரந்தர கணக்கு எண் (PAN) மறந்து விட்டது என்றாலோ இங்கு சென்று நம் எண்ணை தெரிந்து கொள்ளலாம்.

இதற்கான செலவு 60 ரூபாய் மற்றும் இதற்குரிய வரி.

நாம் விண்ணப்பித்து 5 - 15 நாட்களுக்குள் நமக்கு கிடைத்து விடும். ஒரு மாதத்திற்கும் மேல் வரவில்லையென்றால் கீழ் கண்ட முகவரிக்கு மின் அஞ்சல் மூலமாகவோ தொலை பேசியின் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம்.

மின் அஞ்சல் முகவரி: pan@incometaxindia.gov.in
இணையதள முகவரி: http://www.incometaxindia.gov.in/

தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 0124-2438000 or 95124-2438000 from NCR)

மேலே குறிப்பிட்ட இணையதளத்தில் படித்தது ... [No Comments.. ! ] :

25. Who can apply on behalf of non-resident, minor, lunatic, idiot, and court of wards?

Section 160 of IT Act, 1961 provides that a non-resident, a minor, lunatic, idiot, and court of wards and such other persons may be represented through a Representative Assessee. In such cases, application for PAN will be made by the Representative Assessee.

3 comments:

said...

நல்ல உபயோகமான தகவல்..

said...

அனைவருக்கும் பயன்படும் உபயோகமான படைப்பு - வாழ்த்துக்கள்

said...

வாங்க, சந்தோஷ் & அன்பே சிவம்(@ராஜா)! நன்றி!