பத்து ரூபாய்னாலும் சரி பத்தாயிரம் ரூபாய்னாலும் சரி - திட்டமிட்டு செலவு செய்தால் சேமிக்க வழியுண்டு.
என் அப்பாவுக்கு இப்பொழுதும் தினமும் வரவு-செலவு எழுதும் பழக்கம் உண்டு. நான் ஆச்சரியப்பட்ட பல விசயங்களில் இதுவும் ஒன்று. இன்னும் எனக்கு நினைவில் இருக்கிறது ..... தூர்தர்ஷன் (ஆங்கில) செய்திகள் முடிந்தவுடன் அம்மா அப்பாவுக்கு வரவு-செலவு கணக்கு கொடுக்க வேண்டும். எங்களுக்கு நினைவில் இருப்பதை அம்மாவுக்கு சொல்வோம்....... (மளிகை சாமான் கணக்கு, ஊருக்கு போனால் ஆகும் செலவு என்று...) இப்படி அம்மாவை அப்பாவிடமிருந்து பல முறை 'காப்பாற்றி' இருக்கிறோம்!!.
10 காசு tally ஆகும்வரை கணக்கு துல்லியமாக இருக்க வேண்டும் அப்பாவுக்கு. இன்னும் அதே துல்லியம்தான்...!
சரி ... இப்ப எதுக்கு சொந்த கதை அப்படிகிறீங்களா.....?!
நாம் முதலீடு செய்யும்........[பல கோடிகள் புரளும்] மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் நிர்வாகத்தை பற்றி தெரிந்து கொண்டால் நல்லதுதானே?!
மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களில் பல குழுக்கள் உள்ளது. அப்புறம்....பல கோடிகளை வைத்து நிர்வாகம் பண்றதுகிறது அவ்வளவு எளிதானதா என்ன?
1. ட்ரஸ்ட் (Trust)
2. ஏ.எம்.சி. (AMC - Asset MAnagement Company)
3. திட்ட மேலாளர் அல்லது சி.ஐ.ஓ (CIO - Chief Investment Officer)
4. கஸ்டடியன் (Custodian)
5. ரெஜிஸ்டிரார் அண்ட் ட்ரான்ஸ்ஃபர் ஏஜென்ட் (Register and Transfer Agent)
6. டிஸ்ட்ரிப்யூட்டர்ஸ் (Distributers)
1. ட்ரஸ்ட் (Trust):
நாம் முதலீடு செய்யும் அல்லது திட்டங்களின் கீழ் திரட்டப்படும் பணம் மற்றும் அதன் சொத்துக்கள் அனைத்தும் இந்த ட்ரஸ்ட் பொறுப்பில் வரும். இதில் மூன்றில் இரண்டு பங்குக்கு மேல் இந்த மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் சாராத வெளி ஆட்கள்தான் இருக்க வேண்டும். நம் சார்பாக.... திட்டத்தில் வரும் நிதி நிர்வாகத்தில் ஏதும் பிரச்சனை இல்லாமல் கொண்டு செல்வது இவர்களின் பொறுப்பு.
2. ஏ.எம்.சி. (AMC அசெட் மேனேஜ்மென்ட் கம்பெனி) :
தினமும் புது புது பெயரில் கவர்ச்சிகரமான திட்டங்களை அறிமுகப் படுத்துதல், திட்டமிட்டபடி பங்குகள் அல்லது கடன் பத்திரங்களில் முதலீடு செய்தல் போன்ற தினசரி வேலைகளை பார்த்துக் கொள்ளவது இவர்களுடைய கடமை.
செபி (SEBI) யின் வலியுறுத்தலின் பேரில், ஏ.எம்.சி-யின் (நிகர) சொத்து மதிப்பு 10 கோடி ரூபாய்க்குமேல் இருக்கவேண்டும். இதில் இருப்பவர்கள் மிகவும் திறமையான, நேர்மையானவர்களாக இருப்பார்கள். சும்மா... மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் 'அவர்கள்' ஆளை தேர்ந்தெடுக்க முடியாது. இந்த அமைப்பும் செபியின் அனுமதி பெறவேண்டும்.
3. திட்ட மேலாளர் அல்லது சி.ஐ.ஓ (CIO - Chief Investment Officer) :
ஏ.எம்.சி அமைப்பால் தேர்ந்தெடுக்கப்படும் இவர் திட்டத்தின் முதலீடு, செயல்பாடுகளை முழுமையாகக் கண்காணிக்க வேண்டும். இவரின் நிர்வாக திறமையை பொறுத்தே 'நம் பங்கலகின்' மதிப்பு கூடும்.. குறையும்...
4. கஸ்டடியன் (Custodian) :
திட்டங்களிலிருந்து திரட்டப்பட்ட நிதி, அதைக்கொண்டு வாங்கப்பட்ட பங்குப் பத்திரங்கள், கடன் பத்திரங்கள் எல்லாம் இவர் பொறுப்பில்தான் இருக்கும். திட்ட மேலாளர் சொல்வதை 'அப்படியே' செய்ய வேண்டும்.. கேள்விகள் ஏதும் கேட்காமல்...
5. ரெஜிஸ்டிரார் அண்ட் ட்ரான்ஸ்ஃபர் ஏஜென்ட் (Register and Transfer Agent):
நமக்கு வரும் காலாண்டு/முழு ஆண்டு அறிக்கைகள் மற்றும் திட்டங்களின் செயல்பாடு சம்பந்தமான தகவல்கள் போன்றவற்றை நமக்கு அனுப்புவது இவர்களின் பொறுப்பு.
6.டிஸ்ட்ரிப்யூட்டர்ஸ் (Distributers) :
Film Distributers மாதிரிதான்... ஆனால் அதைவிட 'பொறுப்பு' அதிகம்.
பல மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் திட்டங்களை நமக்கு [முதலீட்டாளர்களுக்கு] சொல்வது....பின் அந்த திட்டத்தில் முதலீடு செய்ய உதவுவது இவர்களின் தலையாய வேலை.
இதில் பலவற்றுக்கும் செபியின் வரைமுறை உள்ளது. அந்த நிபந்தனையின் பேரிலேயே தேர்தெடுக்க படவேண்டும்.
இந்திய ரூபாய் மதிப்பு அதிகரித்து வருவது பற்றி
-
*“ஒ*ரே மாதத்தில் இந்திய ரூபாய் மிக மோசமான நாணயத்திலிருந்து மிகச் சிறந்த
நாணயமாக மாறிய அற்புதம்" என்ற செய்தி இந்தியா டைம்ஸ் இணைய தளத்தில்
வெளியாகியிருந்தது...
5 years ago
3 comments:
Nice...பயனுள்ள தகவல்கள். கலக்குங்க....
தென்றல்
நல்ல முயற்சி
தொடருங்கள்...
வாங்க பங்காளி & மாயன்!
Post a Comment