Thursday, June 21, 2007

27. மல்டிபர்பஸ் தேசிய அடையாள அட்டை [Multipurpose National Identity Card]

  • அமெரிக்காவில் ஸ்டேஷனரி மற்றும் அலுவலகங்களுக்கு தேவையான பொருட்களை விற்பனை செய்துவரும் Staples மற்றும் Office Depot நிறுவனங்கள் இந்தியாவில் தன்னுடைய கிளையைப் ஆரம்பிக்க உள்ளது. Office Depot இதற்கான ஃபிரான்ச்சைஸ் உரிமைக்காக பேச்சு வார்த்தை நடத்தி கொண்டிருக்க , Staples நிறுவனம் Pantaloon நிறுவனத்துடன் 50-50 joint venture க்கு சம்மதம் அளித்துள்ளது.

ஏற்கனவே Pantaloon CEO கிஷோர் பியானி (Kishore Biyani) Starbucks மற்றும் Burger King நிறுவனத்துடன் பேச்சு வார்த்தை வெற்றிகரமாக முடிந்து இந்தியாவில் இவர்களும் கூடிய விரைவில் தங்களுடைய கிளையை ஆரம்பிக்க உள்ளார்கள். [Pantaloon ஷோ ரூம் க்கு போனால் Starbucks Coffeeயுடன், Burger Kingல் இரவுச் சாப்பாட்டுக்கு Burger வாங்கிக்கொண்டு வீட்டுக்கு திரும்பலாம். எல்லாவற்றிக்கும் .... ஒரு சில 'காந்தி நோட்டுகள் மட்டும்' தான் வேண்டும்!!!.]

  • போன வருடம், வருமானவரித் துறையில் நடந்த மீட்டிங்கில் இனிப்பு,காரம், காபிக்கு ஏற்பட்ட செலவு மட்டும் 1363 கோடி ரூபாயாம். [அது சரி...!?]
  • சென்னை அருகே ஜீவி பட நிறுவனம் 50 கோடி ரூபாய் செலவில் 100 படுக்கை அறைகள் கொண்ட ஹோட்டல்கள், 10 திரையரங்குகள் என கட்ட திட்டமிட்டுள்ளது. மேலும், வெளிநாட்டு இந்தியர்களுக்காக குறிப்பிட்ட தொகை செலுத்தினால் இணையதளத்திலும் திரைப்படங்களை பார்க்கலாம். [இரண்டாவது வெற்றி தருமா எனபது சந்தேகமே...!?]
  • திருப்பூர் ஆண்டுக்கு பத்தாயிரம் கோடி ரூபாய் அந்நியச் செலாவணியை ஈட்டி தருகிறது. டாலர் வீழ்ச்சியால், 10 முதல் 15 சதவீதம் வரை திருப்பூர் ஏற்றுமதியாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு உடனடியாக சீரான நடவடிக்கை எடுக்காவிட்டால், லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்களின் வேலை கேள்விக்குறியாகும்மாம்.
  • 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து இந்திய குடி மக்களுக்கும் "மல்டிபர்பஸ் தேசிய அடையாள அட்டை(Multipurpose National Identity Card (MNIC)" திட்டத்தை அமல்படுத்த உள்ளது. 2002ல் வாஜ்பாய் தலைமையலான அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. குடும்ப அட்டை தகவல்கள், தேர்தல் அடையாள அட்டையிலுள்ள தகவல்கள், வங்கி தகவல்கள், வேலை பார்க்கும் இடம்..... இது போல ஒருவரைப் பற்றிய பல தகவல்களை இந்த ஒரே அட்டையின் மூலம் தெரிந்து கொள்ளமுடியும். இந்த அட்டையில் 16 KB திறன் கொண்ட Micro Chip இருக்குமாம்.
    முதலில் 12 மாநிலங்களில் அறிமுகப் படுத்த உள்ளது. இதில் தமிழ்நாடும் உண்டு.

~~~~~~~~

"முதலீட்டிலிருந்து லாபம் பார்த்து எப்போது வெளியே வர வேண்டும் என்பதைக் கண்டறிய வேண்டும் முதலீட்டின் மதிப்பு அதிகமாகி கொண்டே வருவதால் ஒரு பயனும் இல்லை. அவற்றை இலாபமாக்கும்போது மட்டுமே அதன் பலனை அனுபவிக்க முடியும்."

-- ஜோதிமணி, தலைவர், கேன் பாங்க் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம்

"சிறப்பு வேளாண் மண்டலங்களை நிறுவுவதற்கு, அதிகமான விவசாய சக்தி, நீர் ஆதாரமுள்ள நிலங்கள் மற்றும் மானாவாரி நிலங்களைக் கண்டுபிடிக்க வேண்டும். ஒருங்கிணைந்த திட்டம், தொழில்நுட்பம், சேவை, உள்கட்டமைப்பு, உற்பத்தி அடிப்படையிலான வணிகம் போன்ற ஒருங்கிணைந்த திட்டங்களை, விவசாய சங்கங்கள், கிராம சபைகளின் மூலமாகவும், தனியார் நிறுவனங்களின் மூலமாகவும் இங்கே அறிமுகப்படுத்தப்பட வேண்டும். தனித்தனியாக உற்பத்தி செய்யப்படும் பொருட்களை ஒரே இடத்தில் விற்பனை செய்வதற்கு வசதியாக பொது சேவை மையங்களும் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்."

-- எம்.எஸ்.சுவாமிநாதன்

@

0 comments: