Monday, June 4, 2007

மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களின் தரங்களைப் பற்றி சொல்லும் மற்றொரு இணையதளம்: "வேல்யூ ரிசர்ச் ஆன்லைன்"

மியூச்சுவல் ஃபண்ட்களின் தரங்களைப் பற்றி சொல்லும் மற்றொரு இணையதளம் "வேல்யூ ரிசர்ச் ஆன்லைன்".

'மதன் திரைப்பார்வையில்' இறுதியில் இரண்டு நட்சத்திரம், மூன்று நட்சத்திரம் என்று குறிப்பிடுவது போல [மதன் எல்லா குப்பை படங்களுக்கும் மூன்று நட்சத்திரம்தான் போடுவார்கிறது வேற கதை..] இந்த இணைய தளம் மியூச்சுவல் ஃபண்ட்களைத் தரம் பிரித்து நட்சத்திர குறியிடுகளை பயன்படுத்துகிறார்கள். அதனால், நமக்கு மிக எளிமையாக புரிந்து கொள்ள முடிகிறது. ஒரு திட்டம் எத்தனை நட்சத்திரங்கள் பெற்றிருக்கிறது என்பதைப் பார்த்தாலே நமக்கு எளிதில் புரிந்து விடும் - அது முதலீடு செய்வதற்கு ஏற்றதா இல்லையாயென்று....

ஏறக்குறைய 500 (அதற்கும் மேலேயும் இருக்கலாம்) மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை தரம்பிரித்து தங்கள் இணையதளத்தில் வெளிடுகிறார்கள். ‘மியூச்சுவல் ஃபண்ட் இன்சைட்’ என பத்திரிகையிலும் வெளிடுகிறார்கள். நாம் ஏற்கனவே அறிந்ததைப் போல http://www.valueresearchonline.com/ என்ற இணைய தளத்தில் இலவசமாகவே பதிவு செய்துகொள்ளலாம். மின் அஞ்சல் மூலமாக மாதம் ஒரு முறை நமக்கு விவரங்களை அனுப்பி வைக்கிறார்கள்.

சமீபத்தில் சந்தைக்கு வந்த ஃபிடலிட்டி, ஏ.பி.என் ஆம்ரோ, கோட்டக், பாரத ஸ்டேட் வங்கி, டாடா போன்ற பிரபல திட்டங்களில் இவர்கள் இன்னும் தரம் பிரிக்கவில்லை. ஏன்?

குறைந்தபட்சம் நடைமுறைக்கு வந்து மூன்று ஆண்டுகளாவது ஆகியிருக்கவேண்டும் . இந்த குறைந்தபட்ச காலக் கெடுவுக்குப் பின் அவை மதிப்பிடப்பட்டு இந்த இணையதளத்தில் நட்சத்திர குறியிடு தரம் வழங்கப்படுகிறது.


***** (5 நட்சத்திரம்) - அருமையான திட்டங்கள் == CRISIL CPR~1

**** ( 4 நட்சத்திரம்) - நல்ல திட்டங்கள் == CRISIL CPR~2
..............
.............

* ( 1 நட்சத்திரம்) - படு சுமார் == CRISIL CPR~5

இதை நினைவில் வைத்துகொண்டால் திட்டங்களை பார்த்தவுடன் முடிவு செய்ய எளிமையாக இருக்கும்.

முதலீட்டாளர்களுக்கு முக்கியமான செலவுகள்.....

நுழைவுக் கட்டணம் (Entry Load) மற்றும் வெளியேறும்போது கொடுக்கும் கட்டணம் (Exit Load).

இவைகளையும் தங்களுடைய மதிப்பீட்டில் கணக்கில் எடுத்துக்கொள்கிறார்கள் என்பது முக்கியமான விசயம்.

இதைப்போல மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களின் P.E. Ratio மற்றும் PB Ratio [Price to Book Value Ratio] வும் வெளியிடுகிறார்கள் என்பது கூடுதல் சிறப்பு.

P.E. Ratio: . அதாவது ஒரு பங்கலவு (unit) விலையோடு அதன் மீதான வருமானத்தை ஒப்பிட்டுப் பார்ப்பது.

PB Ratio [Price to Book Value Ratio]: ஒரு பங்கலவு (unit) மதிப்போடு அதன் புத்தக மதிப்பை ஒப்பிட்டுப் பார்ப்பது.

குறிப்பு: வரவேற்போம்...!

‘அமிழ்து’ என்பவர் தன் பங்குசந்தை அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்ள புதிதாய் ஒரு வலைப்பூவினை ஆரம்பித்துள்ளார். அவருக்கு நம் வாழ்த்துக்களும், நல்வரவும்....

7 comments:

said...

"ஏ.பி.என் ஆம்ரோ"- இது இருக்கே!

said...

என்னவோ போங்க,பண விஷயத்தில் இவ்வளவு இருக்கு என்று திருகிவிட்டீங்க.
என்ன நடக்கபோவுதோ!!
நன்றிகள் பல.

said...

நல்லா விவரமா சொல்லிட்டு வர்றீங்க தென்றல்....கலக்குங்க...

தெனமும் படிக்கறேன்...பின்னூட்ட சோம்பேறித்தனம்.:-)))

said...

வாங்க குமார் அண்ணாச்சி!

/"ஏ.பி.என் ஆம்ரோ"- இது இருக்கே! /

அனைத்து நிறுவனங்களின் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை பற்றிய தகவல் இந்த இணைய தளத்தில் இருக்கும். ஆனால் சந்தைக்கு வந்து மூன்று ஆண்டுகளுக்குப் பின் ஃபண்டின் தரத்தைப் பற்றிய நட்சத்திர குறியீடுகளை வெளியிடுவார்கள்.

உதாரணத்திற்கு: "ABN AMRO Opportunities" திட்டத்தை கவனித்தீர்களென்றால், "Fund Rating
Not Rated" என்று குறிப்பிட்டு இருப்பார்கள்.

said...

/நல்லா விவரமா சொல்லிட்டு வர்றீங்க தென்றல்....கலக்குங்க.../

நன்றி, பங்காளி!

said...

மேலும் இந்த இணையதளத்தைப் பற்றிய சில தகவல்கள்:

இந்த இணைய தளத்திற்கு சென்றால், இடது பக்கத்தில் 'TOOLBOX ' என்றிருப்பதை கவனித்திருப்பீர்கள்.
அதில்,
My Portfolio
My Watchlist
Fund Selector
Fund Compare
Fund Ranking

என்று நமக்கு பயனுள்ள பல தகவல்கள் உள்ளது.

சமீபத்தில் சில சேவைகளை சேர்த்துள்ளார்கள். விவரங்களுக்கு இங்கே

வாரத்திற்கொரு முறை ஃபண்டின் நிலவரங்களை தெரிந்து கொள்ள e-fundline ல் இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம்.

said...

ஆகா... தென்றல் நீங்களே எல்லாத்தையும் புட்டு புட்டு வைக்கிறீங்களே...! நானும் முயற்சி பண்ணுறேன்... :)

வாழ்த்துக்கு மிக்க நன்றி தென்றல்!