Tuesday, July 10, 2007

ஐ போன் (I Phone)

ஐ-பாட் (I Pod) க்கு அப்புறம், ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த அதிரடி, ஐ போன் (I Phone) . நாம் சிவாஜிக்கும், தசரவாதாரத்திற்கும் விடிய விடிய வரிசையில் நிற்பதைப்போல, ஏகப்பட்ட எதிர்பார்ப்புடன் அமெரிக்கர்கள் இந்த ஐ-போன் வாங்குவதற்கு வரிசையில் நிற்பதை செய்திகளிலும்/நேரிலும் பார்த்து இருக்கலாம்.

இந்த வருட ஆஸ்கார் நிகழ்ச்சியின்போதுகூட 'ஹலோ (Hello)' என்ற வித்தியாசமான விளம்பரத்தின் மூலம் எல்லோரையும் 'அட' என்று ஆச்சியப்படுத்தியவர்கள்.

அப்படி என்னதான் இதில விசேசம்...?

விசைப்பலகை (Key board) கிடையாது. எல்லாமே டச் ஸ்கிரீன்தான்!! 2 மெகா பிக்சல் கேமிரா, ஒளி/ஒலி, Bluetooth னு ஏகப்பட்ட சாமாச்சாரங்கள் இருக்கு. இதன் அளவு 3.5 இஞ்ச் (8.9 செ.மீ), எடை 135 கிராம் (4.8 oz) தான். இணையதளம்/வலைப்பூ எல்லாம் 'மேயலாம்'.

'அட 3.5 இஞ்ச் தான.. இதில எந்தளவுக்கு பார்க்கமுடியும் நினைச்சிங்கனா... நீங்க கண்டிப்பா 'Demo' பாருங்க..

தற்சமயம் இரண்டு விதமான (4 GB & 8 GB) மெமரி சிப்பில் மட்டுமே வெளிவந்துள்ளது (ஐ-பாட்ல 30GB, 60GBக்கு இருக்கிறப்ப இதில அதிகமே 8GBதான்). 4 GBன் விலை $499 & 8 GBன் விலை $599 மட்டுமே! ஐ-டியூன் (I-Tunes) மூலமாகத்தான் இதை activate பண்ண முடியும்.

வெளிவந்த இரண்டே நாட்களில் 500,000 (அதாவது 160 மில்லியன் டாலர்) ஐ போன்கள் விற்று சாதனை படைத்துள்ளது. இதில் 8GB உள்ள ஐ-போன் வாங்கியவர்கள்தான் அதிகமாம். இன்றைய தேதிக்கு 200,000 விற்றிடுக்கும் என்று நம்பலாம்.

ஒரு 8GB ஐ-போன் விற்றால், ஆப்பிள் நிறுவனத்திற்கு 333 டாலர் கிடைக்குமாம்.

கை தொலைபேசி (Mobile Phone) சந்தையில் ஒரு சதவீதத்தை 'கைப்பற்றுவது'தான் அவர்களின் குறிக்கோளாம். அதாவது ஒரு வருடத்தில் 10 மில்லியன் ஐ-போன்கள் விற்க வேண்டும். அமெரிக்க சந்தையில், MP3 பிளேயர்களில் 63% பேர் ஐ-பாட் பயன்படுத்துகின்றனர் என்பது கூடுதல் தகவல்.

இப்போதைக்கு ஏடி&டி (AT&T ) நிறுவனத்துடன் மட்டும் ஒப்பந்தம் செய்துள்ளார்கள். இதனால் AT&T க்கு வருடத்திற்கு 2-3 பில்லியன் டாலர்கள் வருவாய் கிடைக்கும். இந்த வருட(2007) இறுதியில் கனடா மற்றும் Vodafone மூலமாக ஐரோப்பாவிலும் அடுத்த வருடம் மெக்சிகோ, ஆஸ்திரேலியா மற்றும் Airtel மூலமாக இந்தியாவிற்கும் வர இருக்கிறதாம். (நம்ம ஊருல விலை என்னவாம் இருக்கும்....?!)

10-12 வருடங்களுக்கு முன்னால் மைக்கேல் கோவச் (Michael Kovatch) என்பவர் தன் சொந்த தேவைக்கு iphone.com என்ற இணையதளத்தை பதிவுசெய்ய, அவரிடம் இருந்து, ஆப்பிள் நிறுவனம் 1 மில்லியன் அமெரிக்க டாலர் கொடுத்து வாங்கியுள்ளார்கள்.

4 comments:

said...

கேமராவின் தரம் நோகியாவுடன் ஒப்பிடும் போது குறைவு என்கிறார்களே அதைப்பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்

said...

வாங்க, முரளி!

சோனி (SONY) மற்றும் நோகியா (NOKIA) கைதொலைபேசியில் 3.2MP காமிரா இருக்கும் பொழுது, ஐ-போன் காமிரா 2மெகா பிக்சல்ஸ் (2MP) என்பது கொஞ்சம் "கம்மி"தான். ஆனால், மெகா பிக்சல் மட்டுமே கைதொலைபேசின் காமிரா தரத்தை நிர்ணயிக்க முடியாது. அதற்கு 5MP மேல் இருக்கும் கைதொலைபேசி காமிரா வந்தால்தான் உண்டு.

சோனி (SONY) மற்றும் நோகியா (NOKIA) நிறுவனங்கள் காமிராவை ஒரு சிறப்பு அம்சமாக விளம்பரம் செய்து கொண்டிருக்க, ஆப்பிள் அதை ஒரு 'பெரிய' விசமாகவே சொல்லவில்லை. அதற்கும்மேல் அவர்கள், ஐ-போன் மூலம் படம் பார்ப்பது, youtube, touch screen, sync, புகைபடங்கள், பாடல்கள் என்று அடுத்த கட்டத்திற்கு சென்று விட்டார்களோ என்று நினைக்க தோன்றுகிறது.

ஐ-போன் மூலம் எடுத்த புகைப்படங்களை பார்வையிட இங்கே சுட்டவும்.

said...

விரிவான ஐ-ஃபோன் மதிப்பீடுக்கு இங்கே செல்லவும்!

நன்றி, ஸ்ருசல்!!

said...

நன்றி தலைவா.